சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் அணங்
அணங்கோடு     அணங்கற்ற     அணங்குறை     அணங்     அணங்கமர்     அணங்கனைய     அணங்கினும்     அணங்கே     அணங்கு    
1.038   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அணங்கோடு ஒருபாகம் அமர்ந்து
இணங்கி அருள் செய்தவன் ஊர் ஆம்
நுணங்கும் புரிநூலர்கள் கூடி
வணங்கும் மயிலாடுதுறையே.

4.049   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அணங்கு உமை பாகம் ஆக அடக்கிய ஆதிமூர்த்தி;
வணங்குவார் இடர்கள் தீர்க்கும் மருந்து; நல் அருந்தவத்த
கணம் புல்லர்க்கு அருள்கள் செய்து, காதல் ஆம் அடியார்க்கு என்றும்
குணங்களைக் கொடுப்பர் போலும்-குறுக்கை வீரட்டனாரே.

5.038   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அணங்கு பாகத்தர், ஆரண நால்மறை
கணங்கள் சேர் கடவூரின் மயானத்தார்;
வணங்குவார் இடர் தீர்ப்பர், மயக்கு உறும்
பிணம் கொள் காடர் - பெருமான் அடிகளே.

10.311   10 st/nd Thirumurai   Song # 65   திருமூலர்   திருமந்திரம்  
அணங்கற்ற மாதல் அருஞ்சனம் நீவல்
வணங்குற்ற கல்விமா ஞான மிகுதல்
சிணுங்குற்ற வாயர்தம் சித்தி தாம்கேட்டல்
நுணங்கற் றிருத்தல்கால் வேகத்து நுந்தலே.

11.007   11 st/nd Thirumurai   Song # 7   சேரமான் பெருமாள் நாயனார்   திருவாரூர் மும்மணிக்கோவை  
அணங்குறை நெடுவரை அருமைபே ணாது
மணங்கமழ் தெரியல் சூடி வைகலும்
விடுசுடர் நெடுவேல் முன்னடி விளக்காக்
கடுவிசைக் கான்யாற்று நெடுநீர் நீந்தி
ஒருதனி பெயரும் பொழுதில் புரிகுழல்
வான்அர மகளிர்நின் மல்வழங் ககலத்
தானாக் காத லாகுவர் என்று
புலவி உள்ளமொடு பொருந்தாக் கண்ணள்
கலைபிணை திரியக் கையற வெய்தி
மெல்விரல் நெரித்து விம்மி வெய்துயிர்த்து
அல்லியங் கோதை அழலுற் றாஅங்
கெல்லையில் இருந்துயர் எய்தினள் புல்லார்
திரிபுரம் எரிய ஒருகணை தெரிந்த
அரிவை பாகத் தண்ண லாரூர்
வளமலி கமல வாள்முகத்
திளமயிற் சாயல் ஏந்திழை தானே.

11.032   11 st/nd Thirumurai   Song # 51   நம்பியாண்டார் நம்பி   கோயில் திருப்பண்ணியர் விருத்தம்  
அணங் காடகக்குன்ற மாதற
ஆட்டிய வாலமர்ந்தாட்
கிணங்கா யவன்தில்லை யெல்லை
மிதித்தலு மென்புருகா
வணங்கா வழுத்தா விழாவெழும்
பாவைத் தவாமதர்த்த
குணங்காண் இவளென்ன வென்றுகொ
லாம்வந்து கூடுவதே.

11.034   11 st/nd Thirumurai   Song # 39   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி  
அணங்கமர் யாழ்முரித்(து) ஆண்பனை
பெண்பனை யாக்கி,அமண்
கணங்கழு வேற்றிக் கடுவிடந்
தீர்த்துக் கதவடைத்துப்
பிணங்கலை நீரெதி ரோடஞ்
செலுத்தின, வெண்பிறையோ(டு)
இணங்கிய மாடச் சிரபுரத்
தான்தன் இருந்தமிழே.

12.210   12 st/nd Thirumurai   Song # 24   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அணங்கனைய திலகவதி
யார்தம்மை யாங்கவர்க்கு
மணம்பேசி வந்தவரும்
வந்தபடி அறிவிப்பக்
குணம்பேசிக் குலம்பேசிக்
கோதில்சீர்ப் புகழனார்
பணங்கொளர வகல்அல்குல்
பைந்தொடியை மணம்நேர்ந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1111   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அணங்கினும் மேம்படும் அன்னம் அன்னவள்
பணம்புரி யரவரைப் பரமர் முன்பணிந்
திணங்கிய முகில்மதில் சண்பை யேந்தலை
வணங்கியே நின்றனள் மண்ணு ளோர்தொழ.
12.290   12 st/nd Thirumurai   Song # 217   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அணங்கே யாகும் இவள்செய்கை
அறிந்தோர் பேச அஞ்சுவரால்
வணங்கும் ஈசர் திறமன்றி
வார்த்தை யறியாள் மற்றொன்றும்
குணங்க ளிவையா மினியிவள் தான்
குறித்த படியே ஒற்றிநகர்ப்
பணங்கொ ளரவச் சடையார்தம்
பாற்கொண் டணைவோம் எனப்பகர்வார்.
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 30 Dec 2025 15:34:57 +0000