சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் அண்ண
அண்ணல்     அண்ணலை     அண்ணிக்கும்     அண்ணலது     அண்ணலவன்     அண்ணலார்     அண்ணலைக்     அண்ண     அண்ணா     அண்ணலா     அண்ணாமலை,     அண்ணாவும்     அண்ணாமலை     அண்ணாமலையான்    
1.094   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அண்ணல் ஆலவாய் நண்ணினான் தனை
எண்ணியே தொழ, திண்ணம் இன்பமே.

2.039   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அண்ணாமலை, ஈங்கோயும், அத்தி முத்தாறு
அகலா முதுகுன்றம், கொடுங்குன்றமும்
கண் ஆர் கழுக்குன்றம், கயிலை, கோணம்
பயில் கற்குடி, காளத்தி, வாட்போக்கியும்,
பண் ஆர் மொழி மங்கை ஓர்பங்கு உடையான்
பரங்குன்றம், பருப்பதம், பேணி நின்றே,
எண்ணாய், இரவும் பகலும்! இடும்பைக்
கடல் நீந்தல் ஆம், காரணமே.

3.064   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அண்ணாவும் கழுக்குன்றும் ஆய மலை அவை வாழ்வார்
விண்ணோரும் மண்ணோரும் வியந்து ஏத்த அருள் செய்வார்
கண் ஆவார், உலகுக்குக் கருத்து ஆனார், புரம் எரித்த
பெண் ஆண் ஆம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

6.051   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அண்ணாமலை அமர்ந்தார்; ஆரூர் உள்ளார்; அளப்பூரார்; அந்தணர்கள் மாடக்கோயில்
உண்ணாழிகையார், உமையாளோடும்; இமையோர் பெருமானார்; ஒற்றியூரார்;
பெண்ணா கடத்துப் பெருந் தூங்கானை-மாடத்தார்; கூடத்தார்; பேராவூரார்
விண்ணோர்கள் எல்லாம் விரும்பி ஏத்த வீழிமிழலையே மேவினாரே.

8.107   8 st/nd Thirumurai   Song # 18   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
அண்ணாமலையான் அடிக் கமலம் சென்று இறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித் தொகை வீறு அற்றால்போல்,
கண் ஆர் இரவி கதிர் வந்து கார் கரப்ப,
தண் ஆர் ஒளி மழுங்கி, தாரகைகள் தாம் அகல,
பெண் ஆகி, ஆண் ஆய், அலி ஆய், பிறங்கு ஒலி சேர்
விண் ஆகி, மண் ஆகி, இத்தனையும் வேறு ஆகி,
கண் ஆர் அமுதமும் ஆய், நின்றான் கழல் பாடி,
பெண்ணே! இப் பூம் புனல் பாய்ந்து ஆடு' ஏல் ஓர் எம்பாவாய்!

10.103   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே.

10.103   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரி
தெண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்
எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே. 

10.103   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம்
எண்ணிலி கோடி தொகுத்திடு மாயினும்
அண்ணல் அறைந்த அறிவறி யாவிடில்
எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே. 

10.314   10 st/nd Thirumurai   Song # 27   திருமூலர்   திருமந்திரம்  
அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர்
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக்
கண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும்
அண்ணலைக் காணில் அவன்இவன் ஆகுமே. 

10.402   10 st/nd Thirumurai   Song # 18   திருமூலர்   திருமந்திரம்  
அண்ணல் இருப்ப தவளக் கரத்துளே
பெண்ணினல் லாளும் பிரானக் கரத்துளே
எண்ணி இருவர் இசைந்தங் கிருந்திடப்
புண்ணிய வாளர் பொருளறி வார்களே.

10.512   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
அண்ணலை வானவர் ஆயிரம் பேர்சொல்லி
உன்னுவர் உள்மகிழ்ந் (து) உள்நின் றடிதொழக்
கண்ணவன் என்று கருது மவர்கட்குப்
பண்ணவன் பேரன்பு பற்றிநின் றானே.

10.516   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
அண்ணிக்கும் பெண்பிள்ளை அப்பனார் [கொட்டத்தில்
எண்ணிக்கும் ஏழேழ் பிறவி உணர்விக்கும்
உண்ணிற்ப வெல்லாம் ஒழிய முதல்வனைக்
கண்ணுற்று நின்ற களியது வாமே.

10.517   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
அண்ணலை நாடிய ஆறு சமயரும்
விண்ணவ ராக மிகவும் விரும்பியே
முண்ணின் றழியும் முயற்றில ராதலின்
மண்ணின் றொழியும் வகைஅறி யார்களே.

10.721   10 st/nd Thirumurai   Song # 15   திருமூலர்   திருமந்திரம்  
அண்ணல் உடலாகி அவ்வனல் விந்துவும்
மண்ணிடை மாய்க்கும் பிராணனாம் விந்துவும்
கண்ணம் கனலிடைக் கட்டிக் கலந்தெரித்(து)
உண்ணில் அமிர்தாகி யோகிக் கறிவாமே.

11.011   11 st/nd Thirumurai   Song # 4   நக்கீரதேவ நாயனார்   திருவலஞ்சுழி மும்மணிக்கோவை  
அண்ணலது பெருமை கண்டனம் கண்ணுதற்
கடவுள் மன்னிய தடம்மல்கு வலஞ்சுழிப்
பனிப்பொருட் பயந்து பல்லவம் பழிக்கும்
திகழொளி முறுவல் தேமொழிச் செவ்வாய்த்
திருந்திருங் குழலியைக் கண்டு
வருந்திஎன் உள்ளம் வந்தஅப் போதே.

11.034   11 st/nd Thirumurai   Song # 65   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி  
அண்ணல் மணிவளைத் தோளரு
காசனி சண்பையன்ன
பெண்ணி னமிர்தநல் லாள்குழல்
நாற்றம் பெடையொடுபூஞ்
சுண்ணந் துதைந்தவண் டே!கண்ட
துண்டுகொல்? தூங்கொலிநீர்த்
தண்ணம் பொழிலெழிற் காசினி
பூத்தமென் தாதுகளே.

12.000   12 st/nd Thirumurai   Song # 3   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
அண்ணல் வீற்றிருக் கப்பெற்ற தாதலின்
நண்ணு மூன்றுல குந்நான் மறைகளும்
எண்ணில் மாதவஞ் செய்யவந் தெய்திய
புண்ணி யந்திரண் டுள்ளது போல்வது.
12.000   12 st/nd Thirumurai   Song # 278   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
அண்ணலவன் தன்மருங்கே
அளவிறந்த காதலினால்
உண்ணிறையுங் குணநான்கும்
ஒருபுடைசாய்ந் தனவெனினும்
வண்ணமலர்க் கருங்கூந்தல்
மடக்கொடியை வலிதாக்கிக்
கண்ணுதலைத் தொழுமன்பே
கைக்கொண்டு செலவுய்ப்ப.
12.080   12 st/nd Thirumurai   Song # 8   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
அண்ணலார் நிகழும் நாளில்
ஆனிலை யடிக ளார்க்குத்
திண்ணிய அன்பு கூர்ந்த
சிவகாமி யாண்டா ரென்னும்
புண்ணிய முனிவ னார்தாம்
பூப்பறித் தலங்கல் சாத்தி
உண்ணிறை காத லோடும்
ஒழுகுவார் ஒருநாள் முன்போல்.
12.100   12 st/nd Thirumurai   Song # 17   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
அண்ணலைக் கையில் ஏந்தற்
கருமையால் உரிமைப் பேரும்
திண்ணன்என் றியம்பும் என்னத்
திண்சிலை வேட ரார்த்தார்
புண்ணியப் பொருளா யுள்ள
பொருவில்சீர் உருவி னானைக்
கண்ணினுக் கணியாத் தங்கள்
கலன்பல வணிந்தா ரன்றே.
12.100   12 st/nd Thirumurai   Song # 164   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
அண்ணலார் திருக்கா ளத்தி  
அடிகளார் முனிவ னார்க்குத்
திண்ணனார் பரிவு காட்டத்  
திருநய னத்தில் ஒன்று
துண்ணென உதிரம் பாய  
இருந்தனர் தூரத் தேஅவ்
வண்ணவெஞ் சிலையார் கண்டு
வல்விரைந் தோடி வந்தார்.
12.190   12 st/nd Thirumurai   Song # 63   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
அண்ண லாரருள் வெள்ளத்தை நோக்கி
அங்க யற்கண்ணி தம்பெரு மான்மேல்
விண்ணெ லாங்கொள வரும்பெரு வெள்ளம்
மீது வந்துறும் எனவெருக் கொண்டே
உண்ணி லாவிய பதைப்புறு காதல்
உடன்தி ருக்கையால் தடுக்கநில் லாமை
தண்ணி லாமலர் வேணி யினாரைத்
தழுவிக் கொண்டனள் தன்னையே ஒப்பாள்.
12.190   12 st/nd Thirumurai   Song # 108   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
அண்ண லார்அன்பர் அன்பேமுன் ஆர்த்தன
தண்ண றுஞ்செழுந் தாதே துகளன
வண்ண நீள்மணி மாலையே தாழ்வன
எண்ணில் குங்குமச் சேறே இழுக்கின.
12.210   12 st/nd Thirumurai   Song # 115   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அண்ணல் அருந்தவ வேந்தர்
ஆனைதம் மேல்வரக் கண்டு
விண்ணவர் தம்பெரு மானை
விடையுகந் தேறும் பிரானைச்
சுண்ணவெண் சந்தனச் சாந்து
தொடுத்த திருப்பதி கத்தை
மண்ணுல குய்ய வெடுத்து
மகிழ்வுட னேபாடு கின்றார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 313   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அண்ணா மலைமேல் அணிமலையை
ஆரா அன்பின் அடியவர்தங்
கண்ணார் அமுதை விண்ணோரைக்
காக்கக் கடலில் வந்தெழுந்த
உண்ணா நஞ்சம் உண்டானைக்
கும்பிட் டுருகுஞ் சிந்தையுடன்
பண்ணார் பதிகத் தமிழ்பாடிப்
பணிந்து பரவிப் பணிசெய்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 368   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அண்ண லேஎனை ஆண்டுகொண்
டருளிய அமுதே
விண்ணி லேமறைந் தருள்புரி
வேதநா யகனே
கண்ணி னால்திருக் கயிலையில்
இருந்தநின் கோலம்
நண்ணி நான்தொழ நயந்தருள்
புரிஎனப் பணிந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 84   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அண்ணல் அணைந்தமை கண்டு
தொடர்ந்தெழும் அன்பாலே
மண்மிசை நின்ற மறைச்சிறு
போதகம் அன்னாரும்
கண்வழி சென்ற கருத்து
விடாது கலந்தேகப்
புண்ணியர் நண்ணிய பூமலி
கோயிலின் உட்புக்கார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 160   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அண்ண லார்தமக் களித்தமெய்ஞ்
ஞானமே யானஅம் பலமுந்தம்
உண்ணி றைந்தஞா னத்தெழும்
ஆனந்த வொருபெருந் திருக்கூத்தும்
கண்ணில் முன்புறக் கண்டுகும்
பிட்டெழுங் களிப்பொடுங் கடற்காழிப்
புண்ணி யக்கொழுந் தனையவர்
போற்றுவார் புனிதரா டியபொற்பு.
12.280   12 st/nd Thirumurai   Song # 231   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அண்ண லார்திரு வரத்துறை
அடிகளை வணங்கி
நண்ணு பேரரு ளால்விடை
கொண்டுபோய் நடங்கொண்
டுண்ணி றைந்தபூங் கழலினை
உச்சிமேற் கொண்டே
வெண்ணி லாமலர் நித்திலச்
சிவிகைமேற் கொண்டார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 431   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அண்ண லார்திரு வாவடு
துறையமர்ந் தாரை
உண்ணி லாவிய காதலி
னால்பணிந் துறைந்து
மண்ணெ லாம்உய வந்தவர்
போந்துவார் சடைமேல்
தெண்ணி லாஅணி வார்திருக்
கோழம்பஞ் சேர்ந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 970   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அண்ணா மலைஅங் கமரர்பிரான்
வடிவு போன்று தோன்றுதலும்
கண்ணால் பருகிக் கைதொழுது
கலந்து போற்றுங் காதலினால்
உண்ணா முலையாள் எனும்பதிகம்
பாடித் தொண்ட ருடன்போந்து
தெண்ணீர் முடியார் திருவண்ணா
மலையைச் சென்று சேர்வுற்றார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 87   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அண்ணலா ரடிகள் மறக்கினுநாம
அஞ்செழுத் தறியவெப் பொழுதும்
எண்ணிய நாவே யின்சுவை பெருக
இடையறா தியம்புமென் றிதனைத்
திண்ணிய வுணர்விற் கொள்பவர் மற்றுப்
பற்றிலேன் எனச்செழுந் தமிழால்
நண்ணிய அன்பிற் பிணிப்புற நவின்றார்
நமச்சிவா யத்திருப் பதிகம்.
12.290   12 st/nd Thirumurai   Song # 200   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அண்ணல் தொடர்ந்தா வணங்காட்டி
ஆண்ட நம்பி யெழுந்தருள
எண்ணில் பெருமை ஆதிபுரி
இறைவ ரடியா ரெதிர்கொள்வார்
வண்ண வீதி வாயில்தொறும்
வாழை கமுகு தோரணங்கள்
சுண்ண நிறைபொற் குடந்தூப
தீப மெடுத்துத் தொழவெழுங்கால்.
12.290   12 st/nd Thirumurai   Song # 233   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அண்ண லார்முன் பலவும்அவர்
அறிய வுணர்த்திப் புறத்தணைந்தே
எண்ண மெல்லாம் உமக்கடிமை
யாமா றெண்ணும் என்னெஞ்சில்
திண்ண மெல்லா முடைவித்தாள்
செய்வ தொன்று மறியேன் யான்
தண்ணி லாமின் னொளிர்பவளச்
சடையீர் அருளும் எனத்தளர்வார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 353   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அண்ணலார் அருளிச் செய்யக்
கேட்டஆ ரூரர் தாமும்
துண்ணென நடுக்க முற்றே
தொழுதுநீ ரருளிச் செய்த
வண்ணமும் அடியா ளான
பரவையோ மறுப்பாள் நாங்கள்
எண்ணஆர் அடிமைக் கென்ப
தின்றறி வித்தீ ரென்று.
12.290   12 st/nd Thirumurai   Song # 395   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அண்ணலார் அருளிச் செய்து
நீங்கஆரூரர் தாமும்
விண்ணவர் தம்பி ரானார்
ஏவலால் விரைந்து செல்வார்
கண்ணிய மனத்தின் மேவுங்
காதலாற் கலிக்கா மர்க்குத்
திண்ணிய சூலை தீர்க்க
வருந்திறஞ் செப்பி விட்டார்.
12.360   12 st/nd Thirumurai   Song # 68   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
அண்ணல் திருமுன் பணைந்திறைஞ்சி
அன்பர் மொழிவார் அடியேன்பால்
நண்ணி நீரிங் கமுதுசெய
வேண்டு மென்று நான்பரிவு
பண்ணி னேனாய்ப் பசித்தருளத்
தாழ்த்த தெனினும் பணிசமைத்தேன்
எண்ணம் வாய்ப்ப எழுந்தருள
வேண்டும் என்றுஅங்கு எடுத்துரைப்பார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list