சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:         (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் அந்நகரில்
அந்நகரில்    
12.210   12 st/nd Thirumurai   Song # 327   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அந்நகரில் அவ்வண்ணம்
அமர்ந்துறையும் நாளின்கண்
மன்னுதிரு மாற்பேறு
வந்தணைந்து தமிழ்பாடிச்
சென்னிமிசை மதிபுனைவார்
பதிபலவுஞ் சென்றிறைஞ்சித்
துன்னினார் காஞ்சியினைத்
தொடர்ந்தபெருங் காதலினால்.
12.280   12 st/nd Thirumurai   Song # 325   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அந்நகரில் வாழ்வாரும்
அடியவரும் மனமகிழ்ந்து
பன்னெடுந்தோ ரணமுதலாப்
பயிலணிகள் பலஅமைத்து
முன்னுறவந் தெதிர்கொண்டு
பணிந்தேத்தி மொய்கரங்கள்
சென்னியுறக் கொண்டணைந்தார்
சினவிடையார் செழுங்கோயில்.
12.280   12 st/nd Thirumurai   Song # 890   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அந்நகரில் அமர்ந்தங்கண் இனிது மேவி
ஆழிபுடை சூழ்ந்தொலிக்கும் ஈழந் தன்னில்
மன்னுதிருக் கோணமலை மகிழ்ந்த செங்கண்
மழவிடையார் தமைப்போற்றி வணங்கிப் பாடிச்
சென்னிமதி புனைமாட மாதோட்டத்தில்
திருக்கேதீச் சரத்தண்ணல் செய்ய பாதம்
உன்னிமிகப் பணிந்தேத்தி அன்பரோடும்
உலவாத கிழிபெற்றார் உவகை யுற்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 893   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அந்நகரில் இனிதமர்வார் அருகு சூழ்ந்த
பதிகளில்நீ டங்கணர்தங் கோயில் தாழ்ந்து
மன்னுதிருத் தொண்டருடன் மீண்டு சேர்ந்து
மன்னவனும் மங்கையருக் கரசி யாரும்
கொன்னவில்வேற் குலச்சிறையார் தாமுங் கூடிக்
குறைகழல்கள் பணிந்துகுறை கொண்டு போற்றச்
சென்னிவளர் மதியணிந்தார் பாதம் போற்றிச்
சிரபுரத்துச் செல்வர்இனி திருந்த நாளில்.
12.280   12 st/nd Thirumurai   Song # 927   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அந்நகரில் அடியார்கள்
எதிர்கொள்ள புக்கருளிக்
கொன்னவிலுங் கூற்றுதைத்தார்
குரைகழல்கள் பணிந்தேத்தி
மன்னியமர்ந் துறையுநாள்
வாகீச மாமுனிவர்
எந்நகரில் எழுந்தருளிற்
றென்றடியார் தமைவினவ.
12.410   12 st/nd Thirumurai   Song # 8   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
அந்நகரில் பாரளிக்கும்
அடலரச ராகின்றார்
மன்னுதிருத் தில்லைநகர்
மணிவீதி யணிவிளக்கும்
சென்னிநீ டநபாயன்
திருக்குலத்து வழிமுதலோர்
பொன்னிநதிப் புரவலனார்
புகழ்ச்சோழர் எனப்பொலிவார்.
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000