சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் அன்ன
அன்னம்     அன்னிய     அன்னத்தில்     அன்ன     அன்னையும்     அன்னத்தே     அன்னவிம்     அன்னையையும்     அன்னே     அன்னவர்     அன்னையே!     அன்னது     அன்னே,     அன்னமாய்    
1.130   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அன்னம் மலி பொழில் புடை சூழ் ஐயாற்று எம்பெருமானை, அம் தண் காழி
மன்னிய சீர் மறை நாவன்-வளர் ஞானசம்பந்தன்-மருவு பாடல்
இன் இசையால் இவைபத்தும் இசையுங்கால், ஈசன் அடி ஏத்துவார்கள்
தன் இசையோடு அமருலகில் தவநெறி சென்று எய்துவார், தாழாது அன்றே!

2.102   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அன்ன மென் நடை அரிவையோடு இனிது உறை அமரர்தம்
பெருமானார்,
மின்னு செஞ்சடை வெள் எருக்கம்மலர் வைத்தவர், வேதம்
தாம்
பன்னும் நன்பொருள் பயந்தவர் பரு மதில் சிரபுரத்தார்; சீர்
ஆர்
பொன்னின் மா மலர் அடி தொழும் அடியவர்
வினையொடும் பொருந்தாரே.

2.115   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அன்னம் கன்னிப்பெடை புல்கி, ஒல்கி அணி நடையவாய்,
பொன் அம்காஞ்சி மலர்ச்சின்னம் ஆலும் புகலூர்தனுள்
முன்னம் மூன்றுமதில் எரித்த மூர்த்தி திறம் கருதுங்கால்,
இன்னர் என்னப் பெரிது அரியர்; ஏத்தச் சிறிது எளியரே.

2.120   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அன்னம் அன்ன(ந்) நடைச் சாயலாளோடு, அழகு எய்தவே
மின்னை அன்ன சடைக் கங்கையாள் மேவிய காரணம்
தென்னன், கோழி எழில் வஞ்சியும் ஓங்கு செங்கோலினான்,
மன்னன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் மாயமே!

2.121   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அன்னம் தாவும் அணி ஆர் பொழில், மணி ஆர் புன்னை
பொன் அம் தாது சொரி பாதிரிப்புலியூர் தனுள்
முன்னம் தாவி அடிமூன்று அளந்தவன், நான்முகன்,
தன்னம் தாள் உற்று உணராதது ஓர் தவ நீதியே.

5.001   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும்; மேலும், இப் பூமிசை
என் அன்பு ஆலிக்கும் ஆறு கண்டு, இன்பு உற
இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே

6.022   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அன்னம் ஆம் பொய்கை சூழ் அம்பரானை, ஆச்சிராம(ந்) நகரும் ஆனைக்காவும்,
முன்னமே கோயிலாக் கொண்டான் தன்னை, மூ உலகும் தான் ஆய மூர்த்தி தன்னை,
சின்னம் ஆம் பல் மலர்கள் அன்றே சூடிச் செஞ்சடைமேல் வெண்மதியம் சேர்த்தினானை,-
கன்னி அம்புன்னை சூழ் அம் தண்
நாகைக்காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.

7.014   7 st/nd Thirumurai   Song # 2   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
அன்னையே! என்னேன்; அத்தனே! என்னேன்; அடிகளே அமையும் என்று இருந்தேன்;
என்னையும், ஒருவன் உளன் என்று கருதி, இறை இறை திரு அருள் காட்டார்;
அன்னம் ஆம் பொய்கை சூழ்தரு பாச்சிலாச்சிராமத்து உறை அடிகள்
பின்னையே அடியார்க்கு அருள் செய்வது ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .

7.036   7 st/nd Thirumurai   Song # 11   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
அன்னம் சேர் வயல் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரை
மின்னும் நுண் இடை மங்கைமார் பலர் வேண்டிக் காதல் மொழிந்த சொல்
மன்னு தொல் புகழ் நாவலூரன்-வன்தொண்டன்-வாய்மொழி பாடல் பத்து
உன்னி இன் இசை பாடுவார், உமை கேள்வன் சேவடி சேர்வரே.

7.041   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
அன்னம் மன்னும் வயல் சூழ் கச்சூர் ஆலக்கோயில் அம்மானை
உன்ன முன்னும் மனத்து ஆரூரன்-ஆரூரன் பேர் முடி வைத்த
மன்னு புலவன், வயல் நாவலர் கோன், செஞ்சொல் நாவன், வன்தொண்டன்
பன்னு தமிழ் நூல் மாலை வல்லார் அவர் என் தலைமேல் பயில்வாரே .

8.103   8 st/nd Thirumurai   Song # 8   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
அன்னது ஒன்று அவ்வயின் அறிந்தோன் காண்க!
பரமன் காண்க! பழையோன் காண்க!
பிரமன், மால், காணாப் பெரியோன் காண்க!
அற்புதன் காண்க! அநேகன் காண்க!
சொல் பதம் கடந்த தொல்லோன் காண்க!

8.107   8 st/nd Thirumurai   Song # 7   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
அன்னே, இவையும் சிலவோ? பல அமரர்
உன்னற்கு அரியான், ஒருவன், இரும் சீரான்,
சின்னங்கள் கேட்ப, சிவன் என்றே வாய் திறப்பாய்;
தென்னா என்னா முன்னம், தீ சேர் மெழுகு ஒப்பாய்;
என்னானை, என் அரையன், இன் அமுது, என்று எல்லோமும்
சொன்னோம் கேள், வெவ்வேறாய்; இன்னம் துயிலுதியோ?
வன் நெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்,
என்னே துயிலின் பரிசு?' ஏல் ஓர் எம்பாவாய்!

9.013   9 st/nd Thirumurai   Song # 1   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட
    அங்ஙனே பெரியநீ சிறிய
என்னையாள் விரும்பி என்மனம் புகுந்த
    எளிமையை என்றும்நான் மறக்கேன்
முன்னம்மால் அறியா ஒருவனாம் இருவா
    முக்கணா நாற்பெருந் தடந்தோள்
கன்னலே தேனே அமுதமே கங்கை
    கொண்டசோ ளேச்சரத் தானே.
9.024   9 st/nd Thirumurai   Song # 2   திருவாலியமுதனார்   திருவிசைப்பா  
அன்ன நடையார் அமுத
   மொழியார் அவர்கள் பயில்தில்லைத்
தென்னன் தமிழும் இசையும்
   கலந்த சிற்றம் பலந்தன்னுள்
பொன்னும் மணியும் நிரந்த
   தலத்துப் புலித்தோல் பியற்கிட்டு
மின்னின் இடையாள் உமையாள்
   காண விகிர்தன் ஆடுமே.
10.509   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
அன்னிய பாசமும் ஆகும் கருமமும்
முன்னும் அவத்தையும் மூலப் பகுதியும்
பின்னிய ஞானமும் பேதாதி பேதமும்
தன்னொடுங் கண்டவர் சன்மார்க்கத் தோரே.

10.721   10 st/nd Thirumurai   Song # 29   திருமூலர்   திருமந்திரம்  
அன்னத்தில் விந்து அடங்கும் படிகண்டு
மன்னப் பிராணனாம் விந்து மறித்திட்டு
மின்னொத்த விந்துநா தாந்தத்து விட்டிட
வன்னத் திருவிந்து மாயும்கா யத்திலே.

10.721   10 st/nd Thirumurai   Song # 30   திருமூலர்   திருமந்திரம்  
அன்னம் பிராணன்என்(று) ஆர்க்கும் இருவிந்து
தன்னை அறிந்துண்டு சாதிக்க வல்லார்க்குச்
சொன்னமுமாம் உருத்தோன்றும் எண்சித்தியாம்
அன்னவ ரெல்லாம் அழிவற நின்றதே.

10.727   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
அன்னம் இரண்டுள ஆற்றங் கரையினில்;
துன்னி இரண்டும் துணைப்பிரியா; தன்னந்
தன்னிலை அன்னம் தனிஒன்(று);அ தென்றக்கால்
பின்ன மடஅன்னம் பேறணு காதே. 28,

10.829   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
அன்ன துரியமே ஆத்தும சுத்தியும்
முன்னிய சாக்கிரா தீதத் துறுபுரி
மன்னு பரம்காட்சி யாவ(து) உடன்உற்றுத்
தன்னின் வியாத்தி தனி உப சாந்தமே.

10.927   10 st/nd Thirumurai   Song # 9   திருமூலர்   திருமந்திரம்  
அன்னையும் அத்தனும் அன்புற்ற தல்லது
அன்னையும் அத்தனும் ஆர்அறி வார்என்னை?
அன்னையும்அத்தனும் யானும் உடன் இருந்(து)
அன்னையும் அத்தனும் யான்புரந் தேனே.

11.008   11 st/nd Thirumurai   Song # 37   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
அன்னத்தே ஏறி அயன்வலப்பால் கைபோதக்
கன்னவிலும் திண்டோள் கருடன்மேல் மன்னிய

11.037   11 st/nd Thirumurai   Song # 6   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
அன்னம் துயில்இழப்ப அம்சிறைசேர் வண்டினங்கள்
துன்னும் துணைஇழப்பச் சூழ் கிடங்கின் மன்னிய

12.000   12 st/nd Thirumurai   Song # 14   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
அன்ன தன்திருத் தாழ்வரை யின்னிடத்து
இன்ன தன்மையன் என்றறி யாச்சிவன்
தன்னை யேயுணர்ந் தார்வம் தழைக்கின்றான்
உன்ன ருஞ்சீர் உபமன் னியமுனி.
12.000   12 st/nd Thirumurai   Song # 23   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
அன்ன வன்பெயர் ஆலால சுந்தரன்
முன்னம் ஆங்கொரு நாள்முதல் வன்தனக்கு
இன்ன வாமெனு நாள்மலர் கொய்திடத்
துன்னி னான்நந் தனவனச் சூழலில்.
12.000   12 st/nd Thirumurai   Song # 60   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
அன்னம் ஆடும் அகன்றுறைப் பொய்கையில்
துன்னும் மேதி படியத் துதைந்தெழும்
கன்னி வாளை கமுகின்மேற் பாய்வன
மன்னு வான்மிசை வானவில் போலுமால்.
12.000   12 st/nd Thirumurai   Song # 88   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
அன்ன தொல்நக ருக்கர சாயினான்
துன்னு செங்கதி ரோன்வழித் தோன்றினான்
மன்னு சீர்அந பாயன் வழிமுதல்
மின்னும் மாமணிப் பூண்மனு வேந்தனே.
12.100   12 st/nd Thirumurai   Song # 126   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
அன்னவிம் மொழிகள் சொல்லி  
அமுதுசெய் வித்த வேடர்
மன்னனார் திருக்கா ளத்தி  
மலையினார்க் கினிய நல்லூன்
இன்னமும் வேண்டு மென்னும்  
எழுபெருங் காதல் கண்டு
பன்னெடுங் கரங்கள் கூப்பிப்  
பகலவன் மலையில் தாழ்ந்தான்.
12.160   12 st/nd Thirumurai   Song # 12   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
அன்ன வடிவும் ஏனமுமாய்
அறிவான் இருவர் அறியாமே
மன்னும் புகலூர் உறைவாரை
வர்த்த மான வீச்சுரத்து
நன்னர் மகிழ்ச்சி மனங்கொள்ள
நாளும் பூசை வழுவாமே
பன்னும் பெருமை அஞ்செழுத்தும்
பயின்றே பணிந்து பரவினார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 279   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அன்ன வண்ணம் எழுந்தருளி
அணித்தே காட்சி கொடுப்பார்போல்
பொன்னின் கோயில் ஒன்றெதிரே
காட்டி அதனுட் புக்கருளத்
துன்னுந் தொண்டர் அம்மருங்கு
விரைந்து தொடரப் போந்தபடி
மன்னும் புகலி வள்ளலார்
தாமுங் கேட்டு வந்தணைந்தார்.

12.210   12 st/nd Thirumurai   Song # 353   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அன்ன நாடுக டந்து கங்கை
அணைந்து சென்று வலங்கொளும்
மின்னு வேணியர் வார ணாசி
விருப்பி னோடு பணிந்துடன்
பின்ன ணைந்தவர் தம்மை அங்கண்
ஒழிந்து கங்கை கடந்துபோய்
மன்னு காதல்செய் நாவின் மன்னவர்
வந்து கற்சுரம் முந்தினார்.

12.210   12 st/nd Thirumurai   Song # 361   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அன்ன தன்மையர் கயிலையை
அணைவதற் கருளார்
மன்னு தீந்தமிழ் புவியின்மேற்
பின்னையும் வழுத்த
நன்னெ டும்புனல் தடமும்ஒன்
றுடன்கொடு நடந்தார்
பன்ன கம்புனை பரமரோர்
முனிவராம் படியால்.
12.230   12 st/nd Thirumurai   Song # 2   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அன்ன தொன்மைத் திருப்பதிக்கண்
அதிபர் மிழலைக் குறும்பனார்
சென்னி மதியம் வைத்தவர்தம்
அடியார்க் கான செய்பணிகள்
இன்ன வண்ணம் என்றவர்தாம்
உரையா முன்னம் எதிரேற்று
முன்னம் உவந்து செய்வாராய்
முதிரும் அறிவின் பயன்கொள்வார்.
12.260   12 st/nd Thirumurai   Song # 22   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அன்ன தன்மையில் அமர்ந்தினி
தொழுகும்அந் நாளில்
மன்னு பூந்தராய் வருமறைப்
பிள்ளையார் பெருமை
பன்னி வையகம் போற்றிட
மற்றவர் பாதம்
சென்னி வைத்துடன் சேர்வுறும்
விருப்பினிற் சிறந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 370   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அன்ன தன்மையில் அப்பதி
யினில் அமர்ந் தருளி
மின்னு செஞ்சடை விமலர்தாள்
விருப்பொடு வணங்கிப்
பன்னும் இன்னிசைப் பதிகமும்
பலமுறை பாடி
நன்னெ டுங்குல நான்மறை
யவர்தொழ நயந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 475   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அன்னையையும் அத்தனையும் பிரிந்து நின்னை
அடைவாக உடன்போந்தேன் அரவால் வீடி
என்னையுயிர் விட்டகன்றாய் யான்என் செய்கேன்
இவ்விடுக்கண் தீர்க்கின்றார் யாரும் இல்லை
மன்னியசீர் வணிகர்குல மணியே யானும்
வாழேன்என் றென்றயர்வாள் மதியினாலே
சென்னியிளம் பிறையணிவார் கோயில் வாயில்
திசைநோக்கித் தொழுதழுதாள் செயலொன் றில்லாள்.
12.280   12 st/nd Thirumurai   Song # 833   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அன்ன ஆதலில் ஆதியார் தாளடைந்
தின்ன கேட்கவே ஏற்றகோட் பாலவும்
12.290   12 st/nd Thirumurai   Song # 74   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அன்னே யுன்னை யல்லால்யான்
ஆரை நினைக்கேன் எனவேத்தித்
தன்னே ரில்லாப் பதிகமலர்
சாத்தித் தொழுது புறம்பணைந்து
மன்னும் பதியில் சிலநாள்கள்
வைகித் தொண்ட ருடன்மகிழ்ந்து
பொன்னிக் கரையி னிருமருங்கும்
பணிந்து மேல்பாற் போதுவார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 369   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அன்னவர் முன்னும் பின்னும்
மருங்கும் அணைவெய்த
மின்னிடை யார்பால் அன்பரை
உய்க்கும் விரைவோடும்
சென்னியில் நீடுங் கங்கை
ததும்பத் திருவாரூர்
மன்னவ னார்அம் மறையவ
னார்பால் வந்துற்றார்.
12.310   12 st/nd Thirumurai   Song # 24   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அன்ன வண்ணம் ஆரூரில்
அமணர் கலக்கங் கண்டவர்தாம்
சொன்ன வண்ண மேஅவரை
12.440   12 st/nd Thirumurai   Song # 4   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
அன்ன வகையால் திருத்தொண்டு
புரியும் நாளில் அங்கொருநாள்
மன்னு மனையில் அமுதுசெய
வந்த தொண்டர் தமையெல்லாம்
தொன்மை முறையே அமுதுசெயத்
தொடங்கு விப்பார் அவர்தம்மை
முன்னர் அழைத்துத் திருவடிகள்
எல்லாம் விளக்க முயல்கின்றார்.
12.460   12 st/nd Thirumurai   Song # 5   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
அன்ன தாகிய ஆண்மைத் திருப்பணி
மன்னு பேரு லகத்தில் வலியுடன்
பன்னெ டும்பெரு நாள்பரி வால்செய்து
சென்னி யாற்றினர் செந்நெறி யாற்றினர்.
12.720   12 st/nd Thirumurai   Song # 49   சேக்கிழார்   வெள்ளானைச் சருக்கம்  
அன்ன தன்மையில் இருவரும்
பணிந்தெழுந் தருள்தலை மேற்கொண்டு
மன்னும் வன்தொண்டர் ஆலால
சுந்தர ராகித்தாம் வழுவாத
முன்னை நல்வினைத் தொழில்தலை
நின்றனர் முதற்சேரர் பெருமானும்
நன்மை சேர்கண நாதராய்
அவர்செயும் நயப்புறு தொழில்பூண்டார்.
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 30 Dec 2025 15:34:57 +0000