சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் அரச
அரசு     அரசுடன்     அரசுமாய்     அரசினை     அரசுகொள்     அரசியல்     அரசிய     அரசனாங்     அரசர்குலப்     அரசனது     அரசறிய     அரசரு     அரசருளிச்     அரச     அரசிலியில்     அரசர்க்     அரசரவர்     அரசனும்     அரசர்    
1.055   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரசு அளிக்கும் அரக்கன் அவன்தனை
உரை கெடுத்து, அவன் ஒல்கிட
வரம் மிகுத்த எம் மாற்பேற்று அடிகளைப்
பரவிடக் கெடும், பாவமே.

10.610   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
அரசுடன் ஆலத்தி ஆகும்அக் காரம்
விரவு கனலில் வியன்உரு மாறி
நிரவிய நின்மலந் தான்பெற்ற நீத
ருருவம் பிரம உயர்குல மாமே. 11,

11.022   11 st/nd Thirumurai   Song # 24   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருவந்தாதி  
அரசுமாய் ஆள்விக்கும் ஆட்பட்டார்க் கம்மான்
அரசுமாம் அங்கொன்றும் மாலுக் கரசுமான்
ஊர்தி எரித்தான் உணருஞ் செவிக்கினியன்
ஊர்தி எரித்தான் உறா.

11.033   11 st/nd Thirumurai   Song # 71   நம்பியாண்டார் நம்பி   திருத்தொண்டர் திருவந்தாதி  
அரசினை யாரூ ரமரர்
பிரானை அடிபணிந்திட்
டுரைசெய்த வாய்தடு மாறி
யுரோம புளகம்வந்து
கரசர ணாதி யவயவங்
கம்பித்துக் கண்ணருவி
சொரிதரு மங்கத்தி னோர்பத்த
ரென்று தொகுத்தவரே.

12.000   12 st/nd Thirumurai   Song # 67   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
அரசுகொள் கடன்கள் ஆற்றி 
மிகுதிகொண் டறங்கள் பேணிப்
பரவருங் கடவுட் போற்றிக் 
குரவரும் விருந்தும் பண்பின்
விரவிய கிளையுந் தாங்கி 
விளங்கிய குடிகள் ஓங்கி
வரைபுரை மாடம் நீடி 
மலர்ந்துள பதிகள் எங்கும்.
12.050   12 st/nd Thirumurai   Song # 2   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
அரசியல் நெறியின் வந்த
அறநெறி வழாமல் காத்து
வரைநெடுந் தோளால் வென்று
மாற்றலர் முனைகள் மாற்றி
உரைதிறம் பாத நீதி
ஓங்குநீர் மையினின் மிக்கார்
திரைசெய்நீர்ச் சடையான் அன்பர்
வேடமே சிந்தை செய்வார்.
12.050   12 st/nd Thirumurai   Song # 22   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
அரசிய லாயத் தார்க்கும்
அழிவுறுங் காத லார்க்கும்
விரவிய செய்கை தன்னை
விளம்புவார் விதியி னாலே
பரவிய திருநீற் றன்பு 
பாதுகாத் துய்ப்பீர் என்று
புரவலர் மன்று ளாடும்
பூங்கழல் சிந்தை செய்தார்.
12.080   12 st/nd Thirumurai   Song # 36   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
அரசனாங் கருளிச் செய்ய
அருகுசென் றணைந்து பாகர்
விரைசெய்தார் மாலை யோய்நின்
விறற்களிற் றெதிரே நிற்குந்
திரைசெய்நீர் உலகின் மன்னர்
யாருளார் தீங்கு செய்தார்
பரசுமுன் கொண்டு நின்ற
இவரெனப் பணிந்து சொன்னார்.
12.190   12 st/nd Thirumurai   Song # 100   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
அரசர்குலப் பெருந்தெருவும் தெற்றி முற்றத்
தாயுதங்கள் பயிலும்வியல் இடமு மங்கண்
புரசைமதக் கரிகளொடு புரவி யேறும்
பொற்புடைய வீதிகளும் பொலிய வெங்கும்
விரைசெய்நறுந் தொடையலங்கல் குமரர் செய்யும்
வியப்புறுசெய் தொழில்கண்டு விஞ்சை விண்ணோர்
நிரைசெறியும் விமானவூர் திகளின் மேலும்
நிலமிசையும் பலமுறையும் நிரந்து நீங்கார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 91   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அரசனது பணிதலைநின்
றமைச்சர்களும் அந்நிலையே
முரசதிருந் தானையொடு
முன்சென்று முகில்சூழ்ந்து
விரைசெறியுஞ் சோலைசூழ்
திருவதிகை தனைமேவிப்
பரசமயப் பற்றறுத்த
பான்மையினார் பாற்சென்றார்.
12.250   12 st/nd Thirumurai   Song # 17   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அரசறிய உரைசெய்ய
அப்பூதி அடிகள்தாம்
கரகமல மிசைகுவியக்
கண்ணருவி பொழிந்திழிய
உரைகுழறி உடம்பெல்லாம்
உரோமபுள கம்பொலியத்
தரையின்மிசை வீழ்ந்தவர்தஞ்
சரணகம லம்பூண்டார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 496   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அரசரு ளிச்செய்த வாய்மை கேட்ட
அப்பொழு தேஅருள் ஞான முண்ட
சிரபுர வேந்தருஞ் சிந்தை யின்கண்
தென்திரு வாரூர் வணங்கு தற்கு
விரவிய காதலிற் சென்று போற்றி
மீண்டும்வந் தும்முடன் மேவு வன்என்
றுரவு கடற்கல் மிதப்பின் வந்தார்க்
குரைத்துடன் பாடுகொண் டொல்லை போந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 616   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அரசருளிச் செய்கின்றார் பிள்ளாய் அந்த
அமண்கையர் வஞ்சனைக்கோர் அவதி யில்லை
உரைசெய்வ துளதுறுகோள் தானுந் தீய
எழுந்தருள உடன்படுவ தொண்ணா தென்னப்
பரசுவது நம்பெருமான் கழல்கள் என்றால்
பழுதணையா தெனப்பகர்ந்து பரமர் செய்ய
விரைசெய்மலர்த் தாள்போற்றிப் புகலி வேந்தார்
வேயுறுதோ ளியை எடுத்து விளம்பினாரே.
12.280   12 st/nd Thirumurai   Song # 710   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அரச னுக்குவெப் படுத்ததென்
றருகுகஞ் சுகிகள்
உரைசெ யப்பதைத் தொருதனித்
தேவியார் புகுத
விரைவும் அச்சமும் மேற்கொளக்
குலச்சிறை யாரும்
வரைசெய் பொற்புய மன்னவன்
மருங்குவந் தணைந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1135   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அரசிலியில் அமர்ந்தருளும்
அங்கண்அர சைப்பணிந்து
பரசியெழு திருப்புறவார்
பனங்காட்டூர் முதலாய
விரைசெய்மலர்க் கொன்றையினார்
மேவுபதி பலவணங்கித்
திரைசெய்நெடுங் கடலுடுத்த
திருத்தில்லை நகரணைந்தார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 73   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
அரசர்க் கமைத்த சிறப்பினும்மேல்
அடியார்க் கேற்கும் படியாக
விரவிப் பெருகும் அன்பினுடன்
விரும்பும் அமுது சமைத்ததற்பின்
புரசைக் களிற்றுச் சேரலனார்
புடைசூழ்ந் தவரோ டமுதுசெயப்
பரவைப் பிறந்த திருவனைய
பரவை யார்வந் தறிவித்தார்.
12.530   12 st/nd Thirumurai   Song # 4   சேக்கிழார்   கடல் சூழ்ந்த சருக்கம்  
அரசியல் ஆயத் தோடும்
அங்கணர் கோயி லுள்ளால்
முரசுடைத் தானை மன்னர்
முதல்வரை வணங்கும் போதில்
விரைசெறி மலர்மென் கூந்தல்
உரிமைமெல் லியலார் தம்முள்
உரைசிறந் துயர்ந்த பட்டத்
தொருதனித் தேவி மேவி.
12.540   12 st/nd Thirumurai   Song # 7   சேக்கிழார்   கடல் சூழ்ந்த சருக்கம்  
அரசரவர் பண்டாரத்
தந்நாட்டின் நெற்கூட்டில்
நிரைசெறிந்த புரிபலவா
நிலைக்கொட்ட காரத்தில்
புரைசெறிநள் ளிருளின்கண்
புக்குமுகந்து எடுப்பவரை
முரசெறிகா வலர்கண்டு
பிடித்தரசன் முன்கொணர்ந்தார்.
12.650   12 st/nd Thirumurai   Song # 16   சேக்கிழார்   மன்னிய சீர்ச் சருக்கம்  
அரசனும் அதனைக் கேட்டங்
கதிசய மெய்தி என்னே
புரையறு சிந்தை யன்பர்
பெருமையென் றவரைப் போற்றி
விரைசெறி மாலை தாழ
நிலமிசை வீழ்ந்து தாழ்ந்து
முரசெறி தானை யோடு
மீண்டுதன் மூதூர் புக்கான்.
12.720   12 st/nd Thirumurai   Song # 46   சேக்கிழார்   வெள்ளானைச் சருக்கம்  
அரசர் அஞ்சலி கூப்பிநின்று
அடியனேன் ஆரூரர் கழல்போற்றிப்
புரசை யானைமுன் சேவித்து
வந்தனன் பொழியுநின் கருணைத்தெண்
திரைசெய் வெள்ளமுன் கொடுவந்து
புகுதலின் திருமுன்பு வரப்பெற்றேன்
விரைசெய் கொன்றைசேர் வேணியாய்
இனியொரு விண்ணப்பம் உளதென்று.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list