சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் அரவ
அரவு     அரவச்     அரவின்     அரவமொன்     அரவம்     அரவநெடுந்     அரவினொடு     அரவ     அரவமே     அரவினில்-துயில்     அரவத்தால்    
1.033   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரவு ஆர் புனல் அன்பில் ஆலந்துறை தன் மேல்
கரவாதவர் காழியுள் ஞானசம்பந்தன்
பரவு ஆர் தமிழ் பத்து இசை பாட வல்லார் போய்
விரவு ஆகுவர், வான் இடை; வீடு எளிது ஆமே.

1.037   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரவச் சடை மேல் மதி, மத்தம்,
விரவிப் பொலிகின்றவன் ஊர் ஆம்
நிரவிப் பல தொண்டர்கள் நாளும்
பரவிப் பொலியும் பனையூரே.

1.099   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரவின் வாயின் முள் எயிறு எய்ப்ப அரும்பு ஈன்று,
குரவம்பாவை முருகு அமர் சோலைக் குற்றாலம்
பிரமனோடு மால் அறியாத பெருமை எம்
பரமன் மேய நன் நகர்போலும்; பணிவீர்காள்!

1.134   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரவு உற்ற நாணா, அனல் அம்பு அது ஆக,
செரு உற்றவர் புரம் தீ எழச் செற்றான்-
தெருவில் கொடி சூழ் திருப் பறியலூரில்,
வெரு உற்றவர் தொழும் வீரட்டத்தானே.

2.007   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரவம் பூண்பர்; அணியும் சிலம்பு ஆர்க்க அகம்தொறும்
இரவில் நல்ல பலி பேணுவர் நாண் இலர்; நாமமே
பரவுவார் வினை தீர்க்க நின்றார் திரு வாஞ்சியம்
மருவி ஏத்த மடமாதொடு நின்ற எம் மைந்தரே.

2.017   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரவு ஆர் கரவன், அமை ஆர் திரள்தோள
குரவு ஆர் குழலாள் ஒருகூறன், இடம்
கரவாத கொடைக்கு அலந்தார் அவர்க்கு
விரவு ஆக வல்லார் வேணுபுரமே.

2.058   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரவு ஆர்ந்த திருமேனி ஆன வெண் நீறு ஆடினீர்!
இரவு ஆர்ந்த பெய் பலி கொண்டு இமையோர் ஏத்த நஞ்சு
உண்டீர்!
குரவு ஆர்ந்த பூஞ்சோலை வாசம் வீசும் குடவாயில்
திரு ஆர்ந்த கோயிலே கோயில் ஆகத் திகழ்ந்தீரே.

2.068   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரவினொடு ஆமையும் பூண்டு, அம் துகில் வேங்கை
அதளும்,
விரவும் திரு முடி தன் மேல் வெண்திங்கள் சூடி,
விரும்பிப்
பரவும் தனிக் கடம்பூரில் பைங்கண் வெள் ஏற்று
அண்ணல் பாதம்
இரவும் பகலும் பணிய, இன்பம் நமக்கு அது ஆமே.

2.071   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரவின் அணையானும் நான்முகனும் காண்பு அரிய
அண்ணல், சென்னி
விரவி மதி அணிந்த விகிர்தர்க்கு இடம்போலும்
விரிபூஞ்சாரல்,
மரவம் இரு கரையும் மல்லிகையும் சண்பகமும் மலர்ந்து
மாந்த,
குரவம் முறுவல் செய்யும் குன்று இடம் சூழ் தண் சாரல்
குறும்பலாவே.

2.091   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரவம் வீக்கிய அரையும், அதிர்கழல் தழுவிய அடியும்,
பரவ, நாம் செய்த பவம் பறை தர அருளுவர் பதிதான்
மரவம் நீடு உயர் சோலை மழலை வண்டு யாழ் செயும்
மறைக்காட்டு
இரவும் எல்லி அம் பகலும் ஏத்துதல் குணம் எனல் ஆமே.

2.103   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரவம் ஆட்டுவர்; அம் துகில் புலி அதள்; அங்கையில்
அனல் ஏந்தி,
இரவும் ஆடுவர்; இவை இவர் சரிதைகள்! இசைவன,
பலபூதம்;
மரவம் தோய் பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல்,
மாகாளம்
பரவியும் பணிந்து ஏத்த வல்லார் அவர் பயன்
தலைப்படுவாரே.

2.114   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரவ முந்நீர் அணி இலங்கைக் கோனை, அருவரைதனால்
வெருவ ஊன்றி, விரலால் அடர்த்தார்க்கு இடம் என்பரால்
குரவம், கோங்கம், குளிர் பிண்டி, ஞாழல், சுரபுன்னை,
மேல்
கிரமம் ஆக வரிவண்டு பண் செய்யும் கேதாரமே.

2.117   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரவம் ஆர்த்து, அன்று, அனல் அங்கை ஏந்தி, அடியும்
முடி
பிரமன் மாலும்(ம்) அறியாமை நின்ற பெரியோன் இடம்
குரவம் ஆரும் பொழில் குயில்கள் சேரும்(ம்)
இரும்பைதனுள்,
மருவி வானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே.

3.057   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரவமே கச்சு அது ஆக அசைத்தான்; அலர்க்கொன்றை அம்தார்
விரவி, வெண் நூல் கிடந்த விரை ஆர் வரைமார்பன்; எந்தை;
பரவுவார் பாவம் எல்லாம் பறைத்து, படர்புன்சடை மேல்
உரவு நீர் ஏற்ற பெம்மான்; உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.

3.089   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரவினில்-துயில் தரும் அரியும், நல் பிரமனும், அன்று, அயர்ந்து
குரைகழல், திருமுடி, அளவு இட அரியவர் கோங்கு செம்பொன்
விரி பொழில் இடை மிகு மலைமகள் மகிழ்தர வீற்றிருந்த
கரிய நல் மிடறு உடைக் கடவுளார் கொச்சையே கருது,
நெஞ்சே!

3.104   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரவு ஒலி, வில் ஒலி, அம்பின் ஒலி, அடங்கார் புரம் மூன்றும்
நிரவ வல்லார், நிமிர் புன்சடைமேல் நிரம்பா மதி சூடி,
இரவு இல் புகுந்து, என் எழில் கவர்ந்த இறைவர்க்கு
இடம்போலும்
பரவ வல்லார் வினை பாழ்படுக்கும் பரிதி(ந்) நியமமே.
4.070   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரவத்தால் வரையைச் சுற்றி அமரரோடு அசுரர் கூடி
அரவித்துக் கடையத் தோன்றும் ஆல நஞ்சு அமுதா உண்டார்
விரவித் தம் அடியர் ஆகி வீடு இலாத் தொண்டர் தம்மை
நரகத்தில் வீழ ஒட்டார்-நனிபள்ளி அடிகளாரே.

5.038   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரவு கையினர், ஆதி புராணனார்-
மரவு சேர் கடவூரின் மயானத்தார்;
பரவுவார் இடர் தீர்ப்பர், பணி கொள்வர்,
பிரமன் மாற்கும் பெருமான் அடிகளே.

5.064   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரவு அணைப் பயில் மால், அயன், வந்து அடி
பரவனை; பரம் ஆம் பரஞ்சோதியை;
குரவனை; குரவு ஆர் பொழில் கோழம்பத்து
உரவனை; ஒருவர்க்கு உணர்வு ஒண்ணுமே?

5.097   5 st/nd Thirumurai   Song # 26   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரவம் ஆர்த்து அனல் ஆடிய அண்ணலைப்
பரவுவார் அவர் பாவம் பறைதற்கு,
குரவை கோத்தவனும், குளிர்போதின்மேல்
கரவு இல் நான்முகனும், கரி அல்லரே.?

6.006   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரவு அணையான் சிந்தித்து அரற்றும்(ம்) அடி;
அருமறையான் சென்னிக்கு அணி ஆம் அடி;
சரவணத்தான் கைதொழுது சாரும்(ம்) அடி;
சார்ந்தார்கட்கு எல்லாம் சரண் ஆம் அடி;
பரவுவார் பாவம் பறைக்கும்(ம்) அடி;
பதினெண்கணங்களும் பாடும்(ம்) அடி;
திரை விரவு தென் கெடில நாடன்(ன்)அடி
திருவீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி.

7.032   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
அரவு ஏர் அல்குலாளை ஓர் பாகம் அமர்ந்து,
மரவம் கமழ் மா மறைக்காடு அதன் தென்பால்
குரவம் பொழில் சூழ்தரு கோடிக் குழகா!
இரவே துணை ஆய் இருந்தாய்; எம்பிரானே!

11.004   11 st/nd Thirumurai   Song # 27   காரைக்கால் அம்மையார்    அற்புதத் திருவந்தாதி  
அரவமொன் றாகத்து நீநயந்து பூணேல்
பரவித் தொழுதிரந்தோம் பன்னாள் - முரணழிய
ஒன்னாதார் மூவெயிலும் ஒரம்பால் எய்தானே
பொன்னாரம் மற்றொன்று பூண்.

11.006   11 st/nd Thirumurai   Song # 68   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
அரவம் உயிர்ப்ப அழலும்
அங்கங்கை வளாய்க்குளிரும்
குரவங் குழலுமை ஊடற்கு
நைந்துரு கும்அடைந்தார்
பரவும் புகழண்ணல் தீண்டலும்
பார்வா னவைவிளக்கும்
விரவும் இடரின்பம் எம்மிறை
சூடிய வெண்பிறையே.

11.015   11 st/nd Thirumurai   Song # 1   நக்கீரதேவ நாயனார்   கார் எட்டு  
அரவம் அரைக்கசைத்த அண்ணல் சடைபோல்
விரவி எழுந்தெங்கும் மின்னி அரவினங்கள்
அச்சங்கொண் டோடி அணைய அடைவுற்றே
கைச்சங்கம் போல்முழங்குங் கார்.

12.160   12 st/nd Thirumurai   Song # 14   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
அரவம் அணிந்த அரையாரை
அருச்சித் தவர்தங் கழல்நிழற்கீழ்
விரவு புகலூர் முருகனார்
மெய்ம்மைத் தொண்டின் திறம்போற்றிக்
கரவில் அவர்பால் வருவாரைக்
கருத்தில் உருத்தி ரங்கொண்டு
பரவு மன்பர் பசுபதியார்
பணிந்த பெருமை பகர்வுற்றேன்.
12.190   12 st/nd Thirumurai   Song # 97   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
அரவநெடுந் தேர்வீதி அருகு மாடத்
தணிமணிக்கோ புரத்தயலே வியல்வாய் நீண்ட
விரவுமர கதச்சோதி வேதித் திண்ணை
விளிம்பினொளி துளும்பமுறைப் படிமீ தேறுங்
குரவமரும் குழல்மடவா ரடியி லூட்டும்
குழம்படுத்த செம்பஞ்சின் சுவட்டுக் கோலம்
பரவைநெடுந் தரங்கமிசை விளங்கித் தோன்றும்
பவளநறுந் தளிரனைய பலவும் பாங்கர்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list