சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் அரு
அருநெறிய     அருகரொடு     அரும்பும்     அருவன்,     அருந்திறல்     அருமறை     அருத்தனை,     அருமையன்,     அருளும்     அருளல்ல     அருமைவல்     அருவினில்     அருள்பெற்     அருங்கரை     அருளால்     அருள்எங்கு     அருளின்     அருளே     அருட்கண்     அருளில்     அருளது     அருந்திய     அருளான     அருள்பெற்ற     அருள்தரும்     அருளாத     அருள்நம்பாற்     அருள்சேரா     அருளு     அருள்பழுத்     அருளைத்     அருதிக்கு     அருள்தரு     அருட்டுறை     அருந்தமி     அரும்பின     அரும்பத     அருளுந்     அருங்கலைநூல்     அருந்தமிழ்     அருங்கடி     அருந்தவத்     அரும்பெறல்     அருவரைக்     அருள்செய்த     அரும     அருவி     அருமறைஅந்     அருள்கொண்ட     அருகணைந்தார்     அருள்நயந்     அருட்பெரு     அருட்பெருகு     அருந்தனயன்     அருந்தவர்     அருகர்     அருக்கன்முதற்     அருமையாற்     அருள்வெள்ளத்     அருகணையுந்     அருவிலையிற்     அருமறைகள்     அருமறைவாழ்     அருகர்தாம்     அருநி     அருமறையோர்     அருந்தவத்தோர்     அருப்புமென்     அருந்தமிழா     அருளும்இக்     அருகு     அருமையினில்     அருகுதிரு     அருள்பொழியுந்     அருவாகி     அருந்தானை,     அரு     அருப்பின்     அருத்தம்     அருவராது     அரும்     அருந்தும்பொழுது     அரும்பு     அருவனாய்,     அருவராதது     அருந்     அருப்புப்     அருக்கன்     அருமறையனை,     அருத்தமும்     அருந்தவர்கள்     அருந்துணையை;     அரும்பித்த     அருப்பு     அருந்தவத்தின்     அருமணியை,     அருந்தவம்     அருளியது     அருளொது     அருமையில்     அருமந்த     அருணன்,     அருளாது     அருள்     அருந்தும்     அருந்தே     அருட்டிரட்     அரும்பேதைக்     அருளுமா     அருள்செய்     அரும்புனல்     அருள்பெறின்    
Search limited to first 100
1.001   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அருநெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய,
பெரு நெறிய, பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் தன்னை,
ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த
திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதுஆமே.

1.012   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அருகரொடு புத்தர் அவர் அறியா அரன், மலையான்
மருகன், வரும் இடபக் கொடி உடையான், இடம் மலர் ஆர்
கருகு குழல் மடவார் கடிகுறிஞ்சி அது பாடி,
முருகனது பெருமை பகர் முதுகுன்று அடைவோமே.

1.046   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரும்பும் குரும்பையும் அலைத்த மென் கொங்கைக்
கரும்பு இன்மொழியாளோடு உடன் கை அனல் வீசி,
சுரும்பு உண் விரிகொன்றைச் சுடர் பொன் சடை தாழ,
விரும்பும் அதிகையுள் ஆடும், வீரட்டானத்தே.

1.094   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அருவன், ஆலவாய் மருவினான்தனை
இருவர் ஏத்த, நின்று உருவம் ஓங்குமே.

1.109   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அருந்திறல் அவுணர்கள் அரண் அழியச்
சரம் துரந்து எரி செய்த சங்கரன் ஊர்
குருந்தொடு கொடிவிடு மாதவிகள்
திருந்திய புறவு அணி சிரபுரமே.

1.109   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அருமறை ஞானசம்பந்தன், அம் தண்
சிரபுரநகர் உறை சிவன் அடியைப்
பரவிய செந்தமிழ் பத்தும் வல்லார்
திருவொடு புகழ் மல்கு தேசினரே.

1.111   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அருத்தனை, அறவனை, அமுதனை, நீர்
விருத்தனை, பாலனை, வினவுதிரேல்,
ஒருத்தனை, அல்லது இங்கு உலகம் ஏத்தும்
கருத்தவன், வள நகர் கடைமுடியே.

1.121   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அருமையன், எளிமையன், அழல் விட மிடறினன்,
கருமையின் ஒளி பெறு கமழ் சடைமுடியன்,
பெருமையன், சிறுமையன், பிணைபெணொடு ஒருமையின்
இருமையும் உடை அணல், இடம் இடைமருதே.

2.011   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அருந்தானை, அன்பு செய்து ஏத்தகில்லார்பால்;
பொருந்தானை, பொய் அடிமைத் தொழில் செய்வாருள
விருந்தானை; வேதியர் ஓதி மிடை காழி
இருந்தானை; ஏத்துமின், நும் வினை ஏகவே!

2.020   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரு ஞானம் வல்லார் அழுந்தை மறையோர்
பெரு ஞானம் உடைப் பெருமான் அவனைத்
திருஞானசம்பந்தன செந்தமிழ்கள்,
உருஞானம் உண்டுஆம், உணர்ந்தார்தமக்கே.

2.025   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அருப்பின் ஆர் முலை மங்கை பங்கினன்,
விருப்பினான் அரக்கன் உரம் செகும்
பொருப்பினான், பொழில் ஆர் புகலிஊர்
இருப்பினான், அடி ஏத்தி வாழ்த்துமே!

2.066   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அருத்தம் அது ஆவது நீறு; அவலம் அறுப்பது நீறு;
வருத்தம் தணிப்பது நீறு; வானம் அளிப்பது நீறு;
பொருத்தம் அது ஆவது நீறு; புண்ணியர் பூசும் வெண் நீறு;
திருத் தகு மாளிகை சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே.

3.066   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அருமறை நான் முகத்தானும், அகலிடம் நீர் ஏற்றானும்,
இருவரும் ஆய் அளப்பு அரிய எரி உரு ஆய் நீண்ட பிரான்;
வருபுனலின் மணி உந்தி மறிதிரை ஆர் சுடர்ப் பவளத்-
திரு உருவில் வெண் நீற்றார் திரு வேட்டக்குடியாரே.

3.105   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரு வரை ஏந்திய மாலும், மற்றை அலர்மேல் உறைவானும்,
இருவரும் அஞ்ச, எரி உரு ஆய் எழுந்தான் கலிக்காமூர்,
ஒரு வரையான் மகள் பாகன் தன்னை உணர்வால்-தொழுது ஏத்த,
திரு மருவும்; சிதைவு இல்லை; செம்மைத் தேசு உண்டு,
அவர்பாலே.

3.118   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரு வரை பொறுத்த ஆற்றலினானும், அணி கிளர் தாமரையானும்,
இருவரும் ஏத்த, எரிஉரு ஆன இறைவனார் உறைவு இடம் வினவில்,
ஒருவர் இவ் உலகில் வாழ்கிலா வண்ணம் ஒலிபுனல்
வெள்ளம் முன் பரப்ப,
கருவரை சூழ்ந்த கடல் இடை மிதக்கும் கழுமலநகர் எனல் ஆமே.

3.123   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அருவராது ஒரு கை வெண்தலை ஏந்தி; அகம்தொறும் பலி உடன் புக்க
பெருவராய் உறையும் நீர்மையர்; சீர்மைப் பெருங்கடல் வண்ணனும், பிரமன்,
இருவரும் அறியா வண்ணம் ஒள் எரி ஆய் உயர்ந்தவர்; பெயர்ந்த நல் மாற்கும்
குருவராய் நின்றார், குரைகழல் வணங்க; கோணமாமலை அமர்ந்தாரே.

4.020   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரு மணித் தடம் பூண் முலை அரம்பையரொடு அருளிப்பாடியர்
உரிமையில்- தொழுவார், உருத்திர பல் கணத்தார்
விரிசடை விரதிகள், அந்தணர், சைவர், பாசுபதர், கபாலிகள்
தெருவினில் பொலியும் திரு ஆரூர் அம்மானே!

4.054   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரு வரை தாங்கினானும், அருமறை ஆதியானும்,
இருவரும் அறிய மாட்டா ஈசனார்; இலங்கை வேந்தன்
கருவரை எடுத்த ஞான்று கண் வழி குருதி சோரத்
திருவிரல் சிறிது வைத்தார் திருப் புகலூரனாரே.

4.055   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அருகு எலாம் குவளை, செந்நெல், அகல் இலை ஆம்பல் நெய்தல்;
தெரு எலாம் தெங்கு மாவின் பழம் விழும், படப்பை எல்லாம்
குருகு இனம் கூடி ஆங்கே கும்மலித்து இறகு உலர்த்தி
மருவல் ஆம் இடங்கள் காட்டும், வலம் புரத்து அடிகளாரே!

4.065   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரும் பெருஞ் சிலைக் கை வேடனாய், விறல் பார்த்தற்கு, அன்று(வ்)
உரம் பெரிது உடைமை காட்டி, ஒள் அமர் செய்து, மீண்டே
வரம் பெரிது உடையன் ஆக்கி, வாள் அமர் முகத்தில் மன்னும்
சரம் பொலி தூணி ஈந்தார் சாய்க்காடு மேவினாரே.

4.088   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அருகு அடை மாலையும் தான் உடையான், அழகால் அமைந்த
உரு உடை மங்கையும் தன் ஒரு பால் உலகு ஆயும் நின்றான்,
பொருபடை வேலினன், வில்லினன், பூந்துருத்தி(ய்) உறையும்
திரு உடைத் தேச மதியனை-யான் அடி போற்றுவதே.

4.101   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அருந்தும்பொழுது உரையாடா அமணர் திறம் அகன்று,
வருந்தி நினைந்து, அரனே! என்று வாழ்த்துவேற்கு உண்டுகொலோ-
திருந்திய மா மதில் ஆரூர்த் திருமூலட்டானனுக்குப்
பொருந்தும் தவம் உடைத் தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?

5.001   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரும்பு அற்றப் பட ஆய் மலர் கொண்டு, நீர்,
சுரும்பு அற்றப் படத் தூவி, தொழுமினோ-
கரும்பு அற்றச் சிலைக் காமனைக் காய்ந்தவன்,
பெரும்பற்றப்புலியூர் எம்பிரானையே!

5.004   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அருத்தனை, அரவு ஐந்தலை நாகத்தைத்
திருத்தனை, திரு அண்ணாமலையனை,
கருத்தனை, கடியார் புரம்மூன்று எய்த
வருத்தனை,-அடியேன் மறந்து உய்வனோ?

5.035   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அருவனாய், அத்திஈர் உரி போர்த்து உமை
உருவனாய், ஒற்றியூர் பதி ஆகிலும்,
பரு வரால் வயல் சூழ்ந்த பழனத்தான்,
திருவினால்-திரு வேண்டும், இத் தேவர்க்கே.

5.036   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அருவராதது ஓர் வெண்தலை ஏந்தி வந்து
இருவராய், இடுவார் கடை தேடுவார்,
தெரு எலாம் உழல்வார்-செம்பொன்பள்ளியார்;
ஒருவர் தாம் பலபேர் உளர்; காண்மினே!

5.048   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அருந் திறல்(ல்) அமரர் அயன் மாலொடு
திருந்த நின்று வழிபடத் தேவியோடு
இருந்தவன்(ன்) எழில் ஆர், கச்சி ஏகம்பம்
பொருந்தச் சென்று புடைபட்டு எழுதுமே.

5.061   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அருப்புப் போல் முலையார் அல்லல் வாழ்க்கை மேல்
விருப்புச் சேர் நிலை விட்டு, நல் இட்டம் ஆய்,
திருப் புத்தூரனைச் சிந்தைசெயச் செய,
கருப்புச் சாற்றிலும் அண்ணிக்கும்; காண்மினே!

5.067   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அருக்கன் அங்கி யமனொடு தேவர்கள்
திருத்தும் சேவடியான் திகழும் நகர்
ஒருத்தி பாகம் உகந்தவன், வாஞ்சியம்
அருத்தியால் அடைவார்க்கு இல்லை, அல்லலே.

5.079   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அருமறையனை, ஆணொடு பெண்ணனை,
கருவிடம் மிக உண்ட எம் கண்டனை,
புரிவெண்நூலனை, புள்ளிருக்குவேளூர்,
உருகி நைபவர் உள்ளம் குளிருமே.

5.084   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அருத்தமும் மனையாளொடு மக்களும்
பொருத்தம் இல்லை; பொல்லாதது போக்கிடும்
கருத்தன், கண்ணுதல், அண்ணல், காட்டுப்பள்ளி
திருத்தன், சேவடியைச் சென்று சேர்மினே!

5.100   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அருக்கன் பாதம் வணங்குவர், அந்தியில்;
அருக்கன் ஆவான் அரன் உரு அல்லனோ?
இருக்கு நால்மறை ஈசனையே தொழும்
கருத்தினை நினையார், கல்மனவரே.

6.001   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அருந்தவர்கள் தொழுது ஏத்தும் அப்பன் தன்னை,
அமரர்கள்தம் பெருமானை, அரனை, மூவா-
மருந்து அமரர்க்கு அருள் புரிந்த மைந்தன் தன்னை,
மறிகடலும் குலவரையும் மண்ணும் விண்ணும்
திருந்து ஒளிய தாரகையும் திசைகள் எட்டும் திரி
சுடர்கள் ஓர் இரண்டும் பிறவும் ஆய
பெருந்தகையை, பெரும்பற்றப்புலியூரானை, -பேசாத
நாள் எல்லாம் பிறவா நாளே.

6.001   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அருந்துணையை; அடியார் தம் அல்லல் தீர்க்கும்
அருமருந்தை; அகல் ஞாலத்து அகத்துள் தோன்றி
வரும் துணையும் சுற்றமும் பற்றும் விட்டு, வான்
புலன்கள் அகத்து அடக்கி, மடவாரோடும்
பொருந்து அணைமேல் வரும் பயனைப் போக மாற்றி,
பொது நீக்கி, தனை நினைய வல்லோர்க்கு என்றும்
பெருந்துணையை; பெரும்பற்றப்புலியூரானை;- பேசாத
நாள் எல்லாம் பிறவா நாளே.

6.006   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரும்பித்த செஞ்ஞாயிறு ஏய்க்கும்(ம்) அடி;
அழகு எழுதல் ஆகா அருள் சேவடி;
சுரும்பித்த வண்டு இனங்கள் சூழ்ந்த(வ்) அடி;
சோமனையும் காலனையும் காய்ந்தவ(வ்) அடி;
பெரும் பித்தர் கூடிப் பிதற்றும்(ம்) அடி;
பிழைத்தார் பிழைப்பு அறிய வல்ல(வ்) அடி;
திருந்து நீர்த் தென்கெடில நாடன்(ன்) அடி
திரு வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி.

6.018   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அருப்பு ஓட்டு முலை மடவாள் பாகம் தோன்றும்;
அணி கிளரும் உரும் என்ன அடர்க்கும் கேழல்-
மருப்பு ஓட்டு மணிவயிரக்கோவை தோன்றும்;
மணம் மலிந்த நடம் தோன்றும்; மணி ஆர் வைகைத்
திருக்கோட்டில் நின்றது ஓர் திறமும் தோன்றும்;
செக்கர்வான் ஒளி மிக்குத் திகழ்ந்த சோதிப்
பொருப்பு ஓட்டி நின்ற திண்புயமும் தோன்றும்-
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

6.088   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அருந்தவத்தோர் தொழுது ஏத்தும் அம்மான் தன்னை; ஆராத   இன்னமுதை; அடியார் தம்மேல்
வரும் துயரம் தவிர்ப்பானை; உமையாள் நங்கை-மணவாள   நம்பியை; என் மருந்து தன்னை;
பொருந்து புனல் தழுவு வயல் நிலவு, துங்கப் பொழில் கெழுவு தரும், ஓமாம்புலியூர் நாளும்
திருந்து திரு வடதளி எம் செல்வன் தன்னை; சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே!.

6.091   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அருந்தவத்தின் பெரு வலியால் அறிவது அன்றி, அடல் அரக்கன் தடவரையை எடுத்தான் திண்தோள்
முரிந்து, நெரிந்து, அழிந்து, பாதாளம் உற்று, முன் கை நரம்பினை எடுத்துக் கீதம் பாட,
இருந்தவனை; ஏழ் உலகும் ஆக்கினானை; எம்மானை; கைம்மாவின் உரிவை போர்த்த,
திருந்து எறும்பியூர் மலைமேல், மாணிக்கத்தை; செழுஞ்சுடரை, சென்று அடையப் பெற்றேன், நானே.

7.009   7 st/nd Thirumurai   Song # 2   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
அரு மலரோன் சிரம் ஒன்று அறுத்தீர்; செறுத்தீர், அழல் சூலத்தில் அந்தகனை;
திருமகள் கோன் நெடுமால் பல நாள் சிறப்பு ஆகிய பூசனை செய் பொழுதில்,
ஒரு மலர் ஆயிரத்தில் குறைவா, நிறைவு ஆக ஓர் கண்மலர் சூட்டலுமே,
பொரு விறல் ஆழி புரிந்து அளித்தீர் பொழில் ஆர் திருப்புத்தூர்ப் புனிதனீரே!.

7.013   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
அரும்பு ஆர்ந்தன மல்லிகை சண்பகம் சாடி,
சுரும்பு ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால்,
கரும்பு ஆர் மொழிக் கன்னியர் ஆடும், துறையூர்
விரும்பா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .

7.040   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
அருமணியை, முத்தினை, ஆன் அஞ்சும் ஆடும் அமரர்கள் தம் பெருமானை,   அருமறையின் பொருளைத்
திருமணியைத் தீங்கரும்பின் ஊறலிருந் தேனைத் தெரிவரிய மாமணியைத் திகழ்தருசெம் பொன்னைக்
குருமணிகள் கொழித்திழிந்து சுழித்திழியுந் திரைவாய்க் கோல்வளையார் குடைந்தாடுங் கொள்ளிடத்தின் கரைமேல்
கருமணிகள் போல்நீலம் மலர்கின்ற கழனிக் கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.


7.073   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
அருத்தம் பெரிதும் உகப்பேன்; அலவலையேன்; அலந்தார்கள்
ஒருத்தர்க்கு உதவியேன் அல்லேன்; உற்றவர்க்குத் துணை அல்லேன்;
பொருத்த மேல் ஒன்றும் இலாதேன்; புற்று எடுத்திட்டு இடம் கொண்ட
அருத்தன் இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்!

7.076   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
அருவி பாய்தரு கழனி, அலர் தரு குவளை அம் கண்ணார்,
குருவி ஆய் கிளி சேர்ப்ப, குருகு இனம் இரிதரு கிடங்கின்
பரு வரால் குதி கொள்ளும் பைம் பொழில் வாஞ்சியத்து உறையும்
இருவரால் அறிய ஒண்ணா இறைவனது அறை கழல் சரணே.

7.099   7 st/nd Thirumurai   Song # 2   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
அருந்தவம் மா முனிவர்க்கு அருள் ஆகி, ஓர் ஆல் அதன் கீழ்
இருந்து, அறமே புரிதற்கு இயல்பு ஆகியது என்னைகொல் ஆம்!-
குருந்து அயலே குரவம்(ம்) அரவின்(ன்) எயிறு ஏற்று அரும்ப,
செருந்தி செம்பொன் மலரும்-திரு நாகேச்சுரத்து அரனே!

8.103   8 st/nd Thirumurai   Song # 34   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
அருளியது அறியேன்; பருகியும் ஆரேன்;
விழுங்கியும் ஒல்லகில்லேன்:
செழும், தண் பால் கடல் திரை புரைவித்து,
உவாக் கடல் நள்ளும் நீர் உள் அகம் ததும்ப,
வாக்கு இறந்து, அமுதம், மயிர்க்கால்தோறும்,

8.103   8 st/nd Thirumurai   Song # 37   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
அருளொது பரவமு தாக்கினன்
பிரமன்மால் அரியாப் பெற்றியோனே. (182)
திருச்சிற்றம்பலம். மாணிக்கவாசகர் அடிகள் போற்றி!

8.104   8 st/nd Thirumurai   Song # 26   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
அருமையில் எளிய அழகே, போற்றி!
கரு முகில் ஆகிய கண்ணே, போற்றி!
மன்னிய திருஅருள் மலையே, போற்றி!
என்னையும் ஒருவன் ஆக்கி, இரும் கழல்
சென்னியில் வைத்த சேவக, போற்றி!

8.111   8 st/nd Thirumurai   Song # 5   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
அருமந்த | தேவர், | அயன், திருமாற்கு, | அரிய சிவம்
உருவந்து, | பூதலத்தோர் | உகப்பு எய்த, | கொண்டருளி,
கரு வெந்து | வீழக் | கடைக்கணித்து, என் | உளம் புகுந்த
திரு வந்த | வா பாடி | தெள்ளேணம் | கொட்டாமோ!

8.112   8 st/nd Thirumurai   Song # 20   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
அரும் தவருக்கு, ஆலின் கீழ், அறம் முதலா நான்கினையும்
இருந்து, அவருக்கு அருளும்அது எனக்கு அறிய இயம்பு; ஏடீ!
அரும் தவருக்கு, அறம் முதல் நான்கு அன்று அருளிச்செய்திலனேல்,
திருந்த, அவருக்கு, உலகு இயற்கை தெரியா, காண்; சாழலோ!

8.120   8 st/nd Thirumurai   Song # 2   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
அருணன், இந்திரன் திசை அணுகினன்; இருள் போய் அகன்றது; உதயம் நின் மலர்த்திருமுகத்தின்
கருணையின் சூரியன் எழ எழ, நயனக் கடி மலர் மலர, மற்று அண்ணல் அம்கண் ஆம்
திரள் நிரை அறுபதம் முரல்வன; இவை ஓர் திருப்பெருந்துறை உறைசிவபெருமானே!
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே! அலை கடலே! பள்ளி எழுந்தருளாயே!

8.121   8 st/nd Thirumurai   Song # 8   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
அருளாது ஒழிந்தால், அடியேனை, அஞ்சேல்' என்பார் ஆர், இங்கு?
பொருளா, என்னைப் புகுந்து, ஆண்ட பொன்னே! பொன்னம்பலக் கூத்தா!
மருள் ஆர் மனத்தோடு, உனைப் பிரிந்து, வருந்துவேனை, வா' என்று, உன்
தெருள் ஆர் கூட்டம் காட்டாயேல், செத்தே போனால், சிரியாரோ?

8.132   8 st/nd Thirumurai   Song # 3   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
அருள் ஆர் அமுதப் பெரும் கடல்வாய், அடியார் எல்லாம் புக்கு அழுந்த,
இருள் ஆர் ஆக்கை இது பொறுத்தே எய்த்தேன் கண்டாய்; எம்மானே!
மருள் ஆர் மனத்து ஓர் உன்மத்தன் வருமால்' என்று, இங்கு, எனைக் கண்டார்
வெருளாவண்ணம், மெய் அன்பை, உடையாய்! பெற நான் வேண்டுமே!

8.137   8 st/nd Thirumurai   Song # 4   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
அருள் உடைச் சுடரே! அளிந்தது ஓர் கனியே! பெரும் திறல் அரும் தவர்க்கு அரசே!
பொருள் உடைக் கலையே! புகழ்ச்சியைக் கடந்த போகமே! யோகத்தின் பொலிவே!
தெருள் இடத்து அடியார் சிந்தையுள் புகுந்த செல்வமே! சிவபெருமானே!
இருள் இடத்து, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

8.218   8 st/nd Thirumurai   Song # 7   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
அருந்தும் விடமணி யாம்மணி
   கண்டன்மற் றண்டர்க்கெல்லாம்
மருந்து மமிர்தமு மாகுமுன்
   னோன்தில்லை வாழ்த்தும்வள்ளல்
திருந்துங் கடன்நெறி செல்லுமிவ்
   வாறு சிதைக்குமென்றால்
வருந்தும் மடநெஞ்ச மேயென்ன
   யாமினி வாழ்வகையே.

8.223   8 st/nd Thirumurai   Song # 14   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
அருந்தே ரழிந்தனம் ஆலமென்
   றோல மிடுமிமையோர்
மருந்தே ரணியம் பலத்தோன்
   மலர்த்தாள் வணங்கலர்போல்
திருந்தே ரழிந்து பழங்கண்
   தருஞ்செல்வி சீர்நகர்க்கென்
வருந்தே ரிதன்முன் வழங்கேல்
   முழங்கேல் வளமுகிலே.

9.004   9 st/nd Thirumurai   Song # 3   திருமாளிகைத் தேவர்   திருவிசைப்பா  
அருட்டிரட் செம்பொற் சோதி
   யம்பலத் தாடு கின்ற
இருட்டிரட் கண்டத் தெம்மான்
   இன்பருக் கன்பு செய்யா
அரட்டரை அரட்டுப் பேசும்
   அழுக்கரைக் கழுக்க ளாய
பிரட்டரைக் காணா கண்வாய்
   பேசாதப் பேய்க ளோடே.

9.012   9 st/nd Thirumurai   Song # 8   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
அரும்பேதைக் கருள்புரியா
   தொழிந்தாய்நின் அவிர்சடைமேல்
நிரம்பாத பிறைதூவும்
   நெருப்பொடுநின் கையிலியாழ்
நரம்பாலும் உயிரீர்ந்தாய்
   நளிர்புரிசைக் குளிர்வனம்பா
திரம்போது சொரிகோடைத்
   திரைலோக்கிய சுந்தரனே.

9.016   9 st/nd Thirumurai   Song # 6   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
அருளுமா றருளி ஆளுமா றாள
   அடிகள்தம் அழகிய விழியும்
குருளும்வார் காதும் காட்டியான் பெற்ற
   குயிலினை மயல்செய்வ தழகோ
தரளவான் குன்றில் தண்ணிலா ஒளியும்
   தருகுவால் பெருகுவான் தெருவில்
இருளெலாங் கிழியும் இஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவர்க்கே. 

9.023   9 st/nd Thirumurai   Song # 4   திருவாலியமுதனார்   திருவிசைப்பா  
அருள்செய் தாடுநல் லம்பலக் கூத்தனே
   அணிதில்லை நகராளீ
மருள்செய் தென்றனை வனமுலை பொன்பயப்
   பிப்பது வழக்காமோ?
திரளும் நீண்மணிக் கங்கையைத் திருச்சடை
   சேர்த்திஅச் செய்யாளுக்
குருவம் பாகமும் ஈந்துநல் அந்தியை
   ஒண்ணுதல் வைத்தோனே.

9.026   9 st/nd Thirumurai   Song # 5   புருடோத்தம நம்பி   திருவிசைப்பா  
அரும்புனல் அலமரும் சடையினானை
   அமரர்கள் அடிபணிந் தரற்ற அந்நாள்
பெரும்புரம் எரிசெய்த சிலையின் வார்த்தை
   பேசவும் நையும்என் பேதை நெஞ்சம்
கருந்தட மலர்புரை கண்ட வண்டார்
   காரிகை யார்முன்பென் பெண்மை தோற்றேன்
திருந்திய மலரடி நசையி னாலே
   தில்லையம் பலத்தெங்கள் தேவ தேவே.

9.026   9 st/nd Thirumurai   Song # 10   புருடோத்தம நம்பி   திருவிசைப்பா  
அருள்பெறின் அகலிடத் திருக்க லாமென்
   றமரர்கள் தலைவனும் அயனும் மாலும்
இருவரும் அறிவுடை யாரின் மிக்கார்
   ஏத்துகின் றார்இன்னம் எங்கள் கூத்தை
மருள்படு மழலைமென் மொழியு மையாள்
   கணவனை வல்வினை யாட்டி யேன்நான்
அருள்பெற அலமரும் நெஞ்சம் ஆவா
   ஆசையை அளவறுத் தார்இங் காரே. 

10.106   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
அருளும் அரசனும் ஆனையுந் தேரும்
பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னந்
தெருளும் உயிரொடுஞ் செல்வனைச் சேரின்
மருளும் பினைஅறன் மாதவ மன்றே. 

10.214   10 st/nd Thirumurai   Song # 25   திருமூலர்   திருமந்திரம்  
அருளல்ல தில்லை அரன்அவன் அன்றி
அருளில்லை யாதலின் அவ்வோர் உயிரைத்
தருகின்ற போதிரு கைத்தாயர் தம்பால்
வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே.

10.225   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
அருமைவல் லான்கலை ஞானத்துள் தோன்றும்
பெருமைவல் லோன்பிற விச்சுழி நீந்தும்
உரிமைவல் லோன் உணர்ந் துழி யிருக்கும்
திருமைவல் லாரொடு சேர்ந்தனன் யானே. 1,

10.402   10 st/nd Thirumurai   Song # 47   திருமூலர்   திருமந்திரம்  
அருவினில் அம்பரம் அங்கெழும் நாதம்
பெருகு துடியிடை பேணிய விந்து
மருவி யகார சிகாரம் நடுவாய்
உருவிட ஆறும் உறுமந் திரமே.

10.405   10 st/nd Thirumurai   Song # 27   திருமூலர்   திருமந்திரம்  
அருள்பெற் றவர்சொல்ல வாரீர் மனிதர்
பொருள்பெற்ற சிந்தைப் புவனா பதியார்
மருளுற்ற சிந்தையை மாற்றி அருமைப்
பொருளுற்ற சேவடி போற்றுவன் யானே.

10.511   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
அருங்கரை யாவ தரனடி நீழல்
பெருங்கரை யாவது பிஞ்ஞகன் ஆணை
வருங்கரை ஏகின்ற மன்னுயிர்க் கெல்லாம்
ஒருங்கரை யாய்உல கேழின் ஒத்தானே.

10.612   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
அருளால் அரனுக் கடிமைய தாகிப்
பொருளாந் தனதுடற் பொற்பது நாடி
இருளான தின்றி இருஞ்செயல் அற்றோர்
தெருளாம் அடிமைச் சிவவேடத் தாரே.

10.709   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
அருள்எங்கு மான அளவை அறியார்
அருளை நுகரமு தானதுந் தேரார்
அருள்ஐங் கருமத் ததிசூக்க முன்னார்
அருள்எங்கும் கண்ணான தார்அறி வாரே.

10.709   10 st/nd Thirumurai   Song # 9   திருமூலர்   திருமந்திரம்  
அருளின் பிறந்திட்(டு) அருளின் வளர்ந்திட்(டு)
அருளின் அழிந்(து)இளைப் பாறி மறைந்திட்(டு)
அருளான அவ்வந்தத்(து) ஆரமு தூட்டி
அருளால் என்நந்தி அகம்புகுந் தானே.

அருளால் அமுதப் பெருங்கடல் ஆட்டி
அருளால் அடிபுனைந் தார்வமும் தந்திட்
டருளான ஆனந்தத் தாரமு தூட்டி
அருளால்என் நந்தி அகம்புகுந் தானே

10.709   10 st/nd Thirumurai   Song # 14   திருமூலர்   திருமந்திரம்  
அருளே சகலமும் ஆய பௌதிகம்
அருளே சராசரம் ஆய மலமே
இருளே வெளியே எனும்எங்கும் ஈசன்
அருளே சகளத்தன் அன்றிஇன் றாமே.

10.709   10 st/nd Thirumurai   Song # 16   திருமூலர்   திருமந்திரம்  
அருட்கண் ணிலாதார்க்(கு) அரும்பொருள் தோன்றா
அருட்கண் உளோர்க்கெதிர் தோன்றும் அரனே
இருட்கண்ணி னோர்க்கிங் கிரவியும் தோன்றா
தெருட்கண்ணி னோர்க்கெங்கும் சீரொளி யாமே.

10.710   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
அருளில் தலைநின் றறிந்தழுந் தாதார்
அருளில் தலைநில்லார் ஐம்பாசம் நீங்கார்
அருளின் பெருமை அறியார் செறியார்
அருளின் பிறந்திட்(டு) அறிந்தறி வாரே.

10.710   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
அருளது என்ற அகலிடம் ஒன்றும்
பொருளது என்ற புகலிடம் ஒன்றும்
மருளது நீங்க மனம்புகுந் தானைத்
தெருளுறும் பின்னைச் சிவகதி யாமே.

10.720   10 st/nd Thirumurai   Song # 11   திருமூலர்   திருமந்திரம்  
அருந்திய அன்ன மவைமூன்று கூறாம்
பொருந்தும் உடல்மனம் போம்மலம் என்ன
திருந்தும் உடல்மனம் ஆங்கது சேர்ந்திட்டு
இருந்தன முன்னாள் இரதம தாகுமே.

10.813   10 st/nd Thirumurai   Song # 38   திருமூலர்   திருமந்திரம்  
அருளான சத்தி அனல்வெம்மை போலப்
பொருள்அவ னாகத்தான் போதம் புணரும்
இருள்ஒளி யாய்ஈண்டும் மும்மலம் ஆகும்
தருவரு ளாநந்தி செம்பொருள் ஆகுமே.

10.838   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
அருள்பெற்ற காரணம் என்கொல் அமரில்
இருளற்ற சிந்தை இறைவனை நாடி
மருளுற்ற சிந்தையை மாற்றி அருமைப்
பொருளுற்ற சேவடி போற்றுவர் தாமே.

10.907   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
அருள்தரும் ஆயமும் அத்தனும் தம்மில்
ஒருவனை ஈன்றவர் உள்ளுறை மாயை
திரிமலம் நீங்கச் `சிவாய` என்(று)ஓதும்
அருவினை தீர்ப்பதுவும் அவ்வெழுந் தாமே.

11.004   11 st/nd Thirumurai   Song # 9   காரைக்கால் அம்மையார்    அற்புதத் திருவந்தாதி  
அருளே உலகெலாம் ஆள்விப்ப தீசன்
அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்
எப்பொருளும் ஆவ தெனக்கு.

11.006   11 st/nd Thirumurai   Song # 25   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
அருளால் வருநஞ்சம் உண்டுநின்
றாயை அமரர்குழாம்
பொருளார் கவிசொல்ல யானும்புன்
சொற்கள் புணர்க்கலுற்றேன்
இருளா சறவெழில் மாமதி
தோன்றவும் ஏன்றதென்ன
வெருளா தெதிர்சென்று மின்மினி
தானும் விரிகின்றதே.

11.009   11 st/nd Thirumurai   Song # 43   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி  
அருளாத வாறுண்டே யார்க்கேனும் ஆக
இருளார் கறைமிடற்றெம் ஈசன் - பொருளாய்ந்து
மெய்ம்மையே உன்னில் வியன்கயிலை மேயான்வந்
திம்மையே தீர்க்கும் இடர்.

11.022   11 st/nd Thirumurai   Song # 70   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருவந்தாதி  
அருள்நம்பாற் செஞ்சடையன் ஆமாத்தூர் அம்மான்
அருள்நம்பால் நல்கும் அமுதம் அருள்நம்பால்
ஓராழித் தேரான் எயிறட்ட உத்தமனை
ஓராழி நெஞ்சே உவ.

11.023   11 st/nd Thirumurai   Song # 8   பரணதேவ நாயனார்   சிவபெருமான் திருவந்தாதி  
அருள்சேரா தார்ஊர்தீ ஆறாமல் எய்தாய்
அருள்சேரோ தாரூர்தீ யாடி அருள்சேரப்
பிச்சையேற்று உண்டு பிறர்கடையிற் கால்நிமிர்த்துப்
பிச்சையேற்று உண்டுழல்வாய் பேச்சு.

11.026   11 st/nd Thirumurai   Song # 32   பட்டினத்துப் பிள்ளையார்   கோயில் நான்மணிமாலை  
அருளு வாழி அருளு வாழி
புரிசடைக் கடவுள் அருளு வாழி
தோன்றுழித் தோன்றி நிலைதவக் கரக்கும்
புற்புதச் செவ்வியின் மக்கள் யாக்கைக்கு
நினைப்பினுங் கடிதே இளமை நீக்கம்

அதனினுங் கடிதே மூப்பின் தொடர்ச்சி
அதனினுங் கடிதே கதுமென மரணம்
வாணாள் பருகி உடம்பை வறிதாக்கி
நாணாள் பயின்ற நல்காக் கூற்றும்
இனைய தன்மைய திதுவே யிதனை

எனதெனக் கருதி இதற்கென்று தொடங்கிச்
செய்தன சிலவே செய்வன சிலவே
செய்யா நிற்பன சிலவே யவற்றிடை
நன்றென்ப சிலவே தீதென்ப சிலவே
ஒன்றினும் பாடதன சிலவே யென்றிவை

கணத்திடை நினைந்து களிப்பவுங் கலுழ்பவும்
கணக்கில் கோடித் தொகுதி அவைதாம்
ஒன்றொன் றுணர்வுழி வருமோ வனைத்தும்
ஒன்றா உணர்வுழி வருமோ என்றொன்று
தெளிவுழித் தேறல் செல்லேம் அளிய
மனத்தின் செய்கை மற்றிதுவே நீயே
அறியை சாலவெம் பெரும தெரிவுறில்
உண்டாய்த் தோன்றுவ யாவையும் நீயே
கண்டனை அவைநினைக் காணா அதுதான்
நின்வயின் மறைத்தோ யல்லை யுன்னை

மாயாய் மன்னினை நீயே வாழி
மன்னியுஞ் சிறுமையிற் கரந்தோ யல்லை
பெருமையிற் பெரியோய் பெயர்த்தும் நீயே
பெருகியுஞ் சேணிடை நின்றோ யல்லை
தேர்வோர்க்குத் தம்மினும் அணியை நீயே

நண்ணியும் நீயொன்றின் மறைந்தோ யல்லை
இடையிட்டு நின்னை மறைப்பது மில்லை
மறைப்பினும் அதுவும்
நீயே யாகி நின்றதோர் நிலையே அஃதான்று
நினைப்பருங் காட்சி நின்னிலை யிதுவே

நினைப்புறுங் காட்சி எம்நிலை யதுவே
இனிநனி இரப்பதொன் றுடையன் மனமருண்டு
புன்மையின் திளைத்துப் புலன்வழி நடப்பினும்
நின்வயின் நினைந்தே னாகுதல் நின்வயின்
நினைக்குமா நினைக்கப் பெறுதல் அனைத்தொன்றும்

நீயே அருளல் வேண்டும் வேய்முதிர்
கயிலை புல்லென எறிவிசும்பு வறிதாக
இம்ப ருய்ய அம்பலம் பொலியத்
திருவளர் தில்லை மூதூர்
அருநடங் குயிற்றும் ஆதிவா னவனே.

11.027   11 st/nd Thirumurai   Song # 2   பட்டினத்துப் பிள்ளையார்   திருக்கழுமல மும்மணிக் கோவை  
அருளின் கடலடியேன் அன்பென்னும் ஆறு
பொருளின் திரள்புகலி நாதன் இருள்புகுதுங்
கண்டத்தான் என்பாரைக் காதலித்துக் கைதொழுவார்க்
கண்டத்தார் தாமார் அதற்கு.

11.027   11 st/nd Thirumurai   Song # 7   பட்டினத்துப் பிள்ளையார்   திருக்கழுமல மும்மணிக் கோவை  
அருள்பழுத் தளிந்த கருணை வான்கனி
ஆரா இன்பத் தீராக் காதல்
அடியவர்க் கமிர்த வாரி நெடுநிலை
மாடக் கோபுரத் தாடகக் குடுமி
மழைவயிறு கிழிக்கும் கழுமல வாணநின்

வழுவாக் காட்சி முதிரா இளமுலைப்
பாவையுடன் இருந்த பரம யோகி
யானொன் றுணர்த்துவான் எந்தை மேனாள்
அகில லோகமும் அனந்த யோனியும்
நிகிலமுந் தோன்றநீ நினைந்தநாள் தொடங்கி

எனைப்பல யோனியும் நினைப்பரும் பேதத்து
யாரும் யாவையும் எனக்குத் தனித்தனித்
தாய ராகியுந் தந்தைய ராகியும்
வந்தி லாதவர் இல்லை யான் அவர்
தந்தைய ராகியுந் தாய ராகியும்
வந்தி ராததும் இல்லை முந்து
பிறவா நிலனும் இல்லை அவ்வயின்
இறவா நிலனும் இல்லை பிறிதில்
என்னைத் தின்னா உயிர்களும் இல்லை
யான் அவை

தம்மைத் தின்னா தொழிந்ததும் இல்லை
அனைத்தே காலமும் சென்றது யான்இதன்
மேல்இனி
இளைக்குமா றிலனே நாயேன்
நந்தாச் சோதிநின் அஞ்செழுத்து நவிலுந்

தந்திரம் பயின்றதும் இலனே தந்திரம்
பயின்றவர்ப் பயின்றதும் இலனே ஆயினும்
இயன்றஓர் பொழுதின் இட்டது மலராச்
சொன்னது மந்திர மாக என்னையும்
இடர்ப்பிறப் பிறப்பெனும் இரண்டின்

கடற்ப டாவகை காத்தல்நின் கடனே.

11.029   11 st/nd Thirumurai   Song # 15   பட்டினத்துப் பிள்ளையார்   திருஏகம்பமுடையார் திருவந்தாதி  
அருளைத் தருகம்பர் அம்பொற்
கயிலைஎம் ஐயர்அம்பு
இருளைக் கரிமறிக் கும்மிவர்
ஐயர் உறுத்தியெய்ய
வெருளக் கலைகணை தன்னொடும்
போயின வில்லிமைக்கு
மருளைத் தருசொல்லி எங்கோ
விலையுண்டிவ் வையகத்தே.

11.032   11 st/nd Thirumurai   Song # 5   நம்பியாண்டார் நம்பி   கோயில் திருப்பண்ணியர் விருத்தம்  
அருதிக்கு விம்ம நிவந்ததோ
வெள்ளிக் குவடதஞ்சு
பருதிக் குழவி யுமிழ்கின்றதே
யொக்கும் பற்றுவிட்டோர்
கருதித் தொழுகழற் பாதமும்
கைத்தலம் நான்கும் மெய்த்த
சுருதிப் பதமுழங் குந்தில்லை
மேய சுடரிருட்கே.

11.032   11 st/nd Thirumurai   Song # 23   நம்பியாண்டார் நம்பி   கோயில் திருப்பண்ணியர் விருத்தம்  
அருள்தரு சீர்த்தில்லை யம்பலத்
தான்தன் அருளினன்றிப்
பொருள்தரு வானத் தரசாத
லிற்புழு வாதல்நன்றாம்
சுருள்தரு செஞ்சடை யோனரு
ளேல்துற விக்குநன்றாம்
இருள்தரு கீழேழ் நரகத்து
வீழும் இருஞ்சிறையே.

11.033   11 st/nd Thirumurai   Song # 17   நம்பியாண்டார் நம்பி   திருத்தொண்டர் திருவந்தாதி  
அருட்டுறை யத்தற் கடிமைபட்
டேனினி யல்லனென்னும்
பொருட்டுறை யாவதென் னேயென்ன
வல்லவன் பூங்குவளை
இருட்டுறை நீர்வயல் நாவற்
பதிக்கும் பிரானடைந்தோர்
மருட்டுறை நீக்கிநல் வான்வழி
காட்டிட வல்லவனே.

11.033   11 st/nd Thirumurai   Song # 27   நம்பியாண்டார் நம்பி   திருத்தொண்டர் திருவந்தாதி  
அருந்தமி ழாகரன் வாதி
லமணைக் கழுநுதிமேல்
இருந்தமிழ் நாட்டிடை யேற்றுவித்
தோனெழிற் சங்கம்வைத்த
பெரும்தமிழ் மீனவன் தன்அதி
காரி பிரசமல்கு
குருந்தவிழ் சாரல் மணமேற்
குடிமன் குலச்சிறையே.

11.034   11 st/nd Thirumurai   Song # 24   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி  
அரும்பின அன்பில்லை யர்ச்சனை
யில்லை யரன்நெறியே
விரும்பின மாந்தர்க்கு மெய்ப்பணி
செய்கிலன் பொய்க்கமைந்த
இரும்பன வுள்ளத்தி னேற்கெங்ங
னேவந்து நேர்பட்டதால்
கரும்பன நீள்வயல் சூழ்காழி
நாதன் கழலடியே.

11.034   11 st/nd Thirumurai   Song # 61   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி  
அரும்பத மாக்கு மடயரொ(டு)
அஞ்சலித் தார்க்கரிய
பெரும்பத மெய்தலுற் றீர்!வந்
திறைஞ்சுமின், பேரரவம்
வரும்ப நான்மறைக் காழித்
தலைவன் மலர்க்கமலத்
தரும்பத ஞானசம் பந்தனென்
னானைதன் தாளிணையே.

11.034   11 st/nd Thirumurai   Song # 74   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி  
அருளுந் தமிழா கர!நின்
னலங்கல்தந் தென்பெயரச்
சுருளுங் குழலியற் கீந்திலை
யேமுன்பு தூங்குகரத்(து)
உருளும் களிற்றினொ(டு) ஒட்டரு
வானை யருளியன்றே
மருளின் மொழிமட வாள்பெய
ரென்கண் வருவிப்பதே.

11.037   11 st/nd Thirumurai   Song # 42   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
அருங்கலைநூல் ஓதுவார் ஆதரித்து வென்றிக்
கருங்கலிநீங் கக்கனல்வ குப்பார் ஒருங்கிருந்து

11.038   11 st/nd Thirumurai   Song # 18   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்  
அருந்தமிழ் விரகநிற் பரசுதும் திருந்திய
நிரைச்செழு மாளிகை
  நிலைதொறும் நிலைதொறும்
உரைச்சதுர் மறையின் ஓங்கிய ஒலிசேர்
சீர்கெழு துழனித் திருமுகம் பொலிவுடைத்
தார்கெழு தண்டலை தண்பணை தழீஇக் (5)

12.000   12 st/nd Thirumurai   Song # 157   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
அருங்கடி எழுந்த போழ்தின்
ஆர்த்தவெள் வளைக ளாலும்
இருங்குழை மகரத் தாலும்
இலங்கொளி மணிக ளாலும்
நெருங்கிய பீலிச் சோலை
நீலநீர்த் தரங்கத் தாலுங்
கருங்கடல் கிளர்ந்த தென்னக்
காட்சியிற் பொலிந்த தன்றே.
12.000   12 st/nd Thirumurai   Song # 181   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
அருமறை முறையிட் டின்னும்
அறிவதற் கரியான் பற்றி
ஒருமுறை முறையோ என்ன
உழைநின்றார் விலக்கி இந்தப்
பெருமுறை உலகில் இல்லா
நெறிகொண்டு பிணங்கு கின்ற
திருமறை முனிவ ரேநீர்
எங்குளீர் செப்பு மென்றார்.
12.000   12 st/nd Thirumurai   Song # 193   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
அருமறை நாவல் ஆதி 
சைவனா ரூரன் செய்கை
பெருமுனி வெண்ணெய் நல்லூர்ப்
பித்தனுக் கியானும் என்பால்
வருமுறை மரபு ளோரும்
வழித்தொண்டு செய்தற் கோலை
இருமையா லெழுதி நேர்ந்தேன்
இதற்கிவை யென்னெ ழுத்து.
12.020   12 st/nd Thirumurai   Song # 36   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
அருந்தவத் தொண்டர் தாமும்
அந்தணர் மொழியக் கேட்டுத்
திருந்திய மனைவி யாரைத்
தீண்டாமை செப்ப மாட்டார்
பொருந்திய வகையான் மூழ்கித்
தருகின்றேன் போது மென்று
பெருந்தவ முனிவ ரோடும்
பெயர்ந்துதம் மனையைச் சார்ந்தார்.
Search limited to first 100
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list