சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:         (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் அருமறை
அருமறை     அருமறைஅந்     அருமறைகள்     அருமறைவாழ்     அருமறையோர்     அருமறையனை,    
1.109   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அருமறை ஞானசம்பந்தன், அம் தண்
சிரபுரநகர் உறை சிவன் அடியைப்
பரவிய செந்தமிழ் பத்தும் வல்லார்
திருவொடு புகழ் மல்கு தேசினரே.

3.066   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அருமறை நான் முகத்தானும், அகலிடம் நீர் ஏற்றானும்,
இருவரும் ஆய் அளப்பு அரிய எரி உரு ஆய் நீண்ட பிரான்;
வருபுனலின் மணி உந்தி மறிதிரை ஆர் சுடர்ப் பவளத்-
திரு உருவில் வெண் நீற்றார் திரு வேட்டக்குடியாரே.

5.079   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அருமறையனை, ஆணொடு பெண்ணனை,
கருவிடம் மிக உண்ட எம் கண்டனை,
புரிவெண்நூலனை, புள்ளிருக்குவேளூர்,
உருகி நைபவர் உள்ளம் குளிருமே.

12.000   12 st/nd Thirumurai   Song # 181   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
அருமறை முறையிட் டின்னும்
அறிவதற் கரியான் பற்றி
ஒருமுறை முறையோ என்ன
உழைநின்றார் விலக்கி இந்தப்
பெருமுறை உலகில் இல்லா
நெறிகொண்டு பிணங்கு கின்ற
திருமறை முனிவ ரேநீர்
எங்குளீர் செப்பு மென்றார்.
12.000   12 st/nd Thirumurai   Song # 193   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
அருமறை நாவல் ஆதி 
சைவனா ரூரன் செய்கை
பெருமுனி வெண்ணெய் நல்லூர்ப்
பித்தனுக் கியானும் என்பால்
வருமுறை மரபு ளோரும்
வழித்தொண்டு செய்தற் கோலை
இருமையா லெழுதி நேர்ந்தேன்
இதற்கிவை யென்னெ ழுத்து.
12.190   12 st/nd Thirumurai   Song # 99   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
அருமறைஅந் தணர்மன்னும் இருக்கை யான
ஆகுதியின் புகையடுத்த அம்பொன் மாடப்
பெருமறுகு தொறும்வேள்விச் சாலை யெங்கும்
பெறுமவிப்பா கங்கொடுக்கும் பெற்றி மேலோர்
வருமுறைமை அழைத்துவிடு மந்திரம்எம் மருங்கும்
வானவர்நா யகர்திருவே கம்பர் முன்றில்
திருமலிபொற் கோபுரத்து நெருங்கும் எல்லாத்
தேவரையும் அணித்தாகக் கொண்டு செல்லும்.
12.280   12 st/nd Thirumurai   Song # 580   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அருமறைகள் திருக்காப்புச் செய்து வைத்த
அக்கதவந் திறந்திடஅம் மறைகளோதும்
பெருகியஅன் புடைஅடியார் அணைந்து நீக்கப்
பெறாமையினால் அன்றுமுத லாகப் பின்னை
ஒருபுடைஓர் வாயில்அமைத் தொழுகுந் தன்மை
உள்ளபடி கேட்டருளி உயர்ந்த சண்பைத்
திருமறையோர் தலைவர்வியப் பெய்தி நின்று
திருநாவுக் கரசருக்குச் செப்பு கின்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 590   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அருமறை யான வெல்லாம்
அகலிரு விசும்பில் ஆர்த்துப்
பெருமையின் முழங்கப் பஞ்ச
நாதமும் பிறங்கி ஓங்க
இருபெருந் தகையோர் தாமும்
எதிரெதிர் இறைஞ்சிப் போந்து
திருமடங் களின்முன் புக்கார்
செழும்பதி விழவு கொள்ள.
12.280   12 st/nd Thirumurai   Song # 731   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அருமறைவாழ் பூம்புகலி
அண்ணலார் அடிபூண்ட
இருவரையுந் திருக்கையால்
எடுத்தருளித் தேற்றிடவும்
தெருமந்து தெளியாதார்
தமைநோக்கிச் சிறப்பருளித்
திருவுடையீர் உங்கள்பால்
தீங்குளதோ எனவினவ.
12.280   12 st/nd Thirumurai   Song # 1158   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அருமறையோர் அவர்பின்னும்
கைதொழுதங் கறிவிப்பார்
இருநிலத்து மறைவழக்கம்
எடுத்தீர்நீர் ஆதலினால்
வருமுறையால் அறுதொழிலின்
வைதிகமா நெறியொழுகும்
திருமணம்செய் தருளுதற்குத்
திருவுள்ளம் செய்யுமென.
12.290   12 st/nd Thirumurai   Song # 345   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அருமறை முனிவ ரான
ஐயரைத் தைய லார்தாம்
கருமம்ஈ தாக நீர்
கடைத்தலை வருதல் நுந்தம்
பெருமைக்குத் தகுவ தன்றால்
ஒற்றியூர் உறுதி பெற்றார்
வருவதற் கிசையேன் நீரும்
போம்என மறுத்துச் சொன்னார்.
12.650   12 st/nd Thirumurai   Song # 3   சேக்கிழார்   மன்னிய சீர்ச் சருக்கம்  
அருமறை மரபு வாழ
அப்பதி வந்து சிந்தை
தரும்உணர் வான வெல்லாந்
தம்பிரான் கழல்மேற் சார
வருநெறி மாறா அன்பு
வளர்ந்து எழ வாய்மைப்
பொருள்பெறு வேத நீதிக்
கலையுணர் பொலிவின் மிக்கார்.
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000