சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் அரை
அரை     அரையோடு     அரைக்கின்     அரையிற்சர     அரையில்     அரைப்பால்     அரைக்கும்     அரைசே,     அரைசே!     அரைசனே!    
1.035   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரை ஆர் விரி கோவண ஆடை,
நரை ஆர் விடை ஊர்தி, நயந்தான்,
விரை ஆர் பொழில், வீழி மிழலை
உரையால் உணர்வார் உயர்வாரே.

1.039   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரை புல்கும் ஐந்தலை ஆடல் அரவம் அமைய வெண்
   கோவணத்தோடு அசைத்து,
வரை புல்கு மார்பில் ஓர் ஆமை வாங்கி அணிந்தவர் தாம்
திரை புல்கு தெண் கடல் தண் கழி ஓதம் தேன் நல் அம்
   கானலில் வண்டு பண்செய்ய,
விரை புல்கு பைம்பொழில் சூழ்ந்த வேட்கள நன் நகராரே.

1.040   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரை கெழு கோவண ஆடையின்மேல் ஓர் ஆடு அரவம் அசைத்து, ஐயம்
புரை கெழு வெண் தலை ஏந்தி, போர் விடை ஏறி, புகழ
வரை கெழு மங்கையது ஆகம் ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
விரை கெழு மா மலர் தூவி, விரிசடையான் அடி சேர்வோம்.

1.046   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரையோடு அலர் பிண்டி மருவிக் குண்டிகை
சுரை ஓடு உடன் ஏந்தி, உடை விட்டு உழல்வார்கள்
உரையோடு உரை ஒவ்வாது; உமையோடு உடன் ஆகி,
விரை தோய் அலர்தாரான் ஆடும், வீரட்டானத்தே.

1.084   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரை ஆர் அழல்நாகம் அக்கோடு அசைத்திட்டு,
விரை ஆர் வரைமார்பின் வெண் நீறு அணி அண்ணல்
வரை ஆர்வன போல வளரும் வங்கங்கள்
கரை ஆர் கடல் நாகைக்காரோணத்தானே.

1.089   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரை ஆர்தரு நாகம் அணிவான், அலர்மாலை
விரை ஆர்தரு கொன்றை உடையான், விடை ஏறி,
வரையான், எருக்கத்தம்புலியூர் மகிழ்கின்ற
திரை ஆர் சடையானைச் சேர, திரு ஆமே.

2.017   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரை ஆர் கலை சேர் அனமென்னடையை
உரையா உகந்தான் உறையும் இடம் ஆம்
நிரை ஆர் கமுகின் நிகழ் பாளை உடை
விரை ஆர் பொழில் சூழ் வேணுபுரமே.

2.120   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரையில் ஆரும் கலை இல்லவன்; ஆணொடு பெண்ணும்
ஆம்
உரையில் ஆர் அவ் அழல் ஆடுவர்; ஒன்று அலர்;
காண்மினோ
விரவலார்தம் மதில் மூன்று உடன் வெவ் அழல்
ஆக்கினான்,
அரையன் மூக்கீச்சுரத்து அடிகள், செய்கின்றது ஓர்
அச்சமே!

4.113   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரைப்பால் உடுப்பன கோவணச் சின்னங்கள்; ஐயம் உணல்;
வரைப்பாவையைக் கொண்டது எக் குடிவாழ்க்கைக்கு? வான் இரைக்கும்
இரைப்பா! படுதலை ஏந்து கையா! மறை தேடும் எந்தாய்!ப்பார் உரைப்பனவே செய்தியால்-எங்கள் உத்தமனே!

5.053   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரை ஆர் கோவண ஆடையன், ஆறு எலாம்
திரை ஆர் ஒண் புனல் பாய் கெடிலக் கரை-
விரை ஆர் நீற்றன் விளங்கு வீரட்டன்பால்
கரையேன் ஆகில், என் கண் துயில் கொள்ளுமே?.

6.015   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரை சேர் அரவன் ஆம்; ஆலத்தான் ஆம்;
ஆதிரை நாளான் ஆம்; அண்ட வானோர்
திரை சேர் திருமுடித் திங்களான் ஆம்; தீவினை
நாசன், என் சிந்தையான் ஆம்;
உரை சேர் உலகத்தார் உள்ளானும்(ம்) ஆம்;
  உமையாள் ஓர்பாகன் ஆம்; ஓத வேலிக்
கரை சேர் கடல் நஞ்சை உண்டான் ஆகும்;
கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.

7.027   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
அரை ஆர் கீளொடு கோவணமும்(ம்) அரவும்(ம்) அசைத்து
விரை ஆர் கொன்றை உடன் விளங்கும் பிறை மேல் உடையாய்!
கரை ஆரும் வயல் சூழ் திருக்கற்குடி மன்னி நின்ற
அரையா! எம்பெருமான்! அடியேனையும் அஞ்சல்! என்னே!.

7.060   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
அரைக்கும் சந்தனத்தோடு அகில் உந்தி ஐவனம் சுமந்து ஆர்த்து இருபாலும்
இரைக்கும் காவிரித் தென்கரை தன்மேல் இடைமருது(வ்) உறை எந்தைபிரானை,
உரைக்கும் ஊரன் ஒளி திகழ் மாலை, உள்ளத்தால் உகந்து ஏத்த வல்லார்கள்,
நரைப்பு மூப்பொடு நடலையும் இன்றி, நாதன் சேவடி நண்ணுவர் தாமே. .

7.099   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
அரை விரி கோவணத்தோடு அரவு ஆர்த்து, ஒரு நால்மறை நூல்
உரை பெருக(வ்) உரைத்து, அன்று உகந்து(வ்), அருள்செய்தது என்னே?-
வரை தரு மா மணியும், வரைச் சந்து, அகிலோடும், உந்தித்
திரை பொரு தண்பழன-திரு நாகேச்சுரத்து அரனே!

8.106   8 st/nd Thirumurai   Song # 37   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
அரைசே, அறியாச் சிறியேன் பிழைக்கு அஞ்சல்' என்னின் அல்லால்,
விரை சேர் முடியாய், விடுதி கண்டாய்? வெள் நகை, கரும் கண்,
திரை சேர் மடந்தை மணந்த திருப் பொன் பதப் புயங்கா,
வரை சேர்ந்து அடர்ந்து என்ன, வல் வினை தான் வந்து அடர்வனவே.

8.111   8 st/nd Thirumurai   Song # 6   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
அரை ஆடு | நாகம் | அசைத்த பிரான், | அவனியின்மேல்,
வரை ஆடு | மங்கை தன் | பங்கொடும், வந்து, | ஆண்ட திறம்
உரை ஆட, | உள் ஒளி ஆட, | ஒள் மா மலர்க் | கண்களில் நீர்
திரை ஆடு | மா பாடி | தெள்ளேணம் | கொட்டாமோ!

8.121   8 st/nd Thirumurai   Song # 5   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
அரைசே! பொன்னம்பலத்து ஆடும் அமுதே!' என்று உன் அருள் நோக்கி,
இரை தேர் கொக்கு ஒத்து, இரவு பகல், ஏசற்று இருந்தே, வேசற்றேன்;
கரை சேர் அடியார் களி சிறப்ப, காட்சி கொடுத்து, உன் அடியேன்பால்,
பிரை சேர் பாலின் நெய் போல, பேசாது இருந்தால், ஏசாரோ?

8.122   8 st/nd Thirumurai   Song # 3   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
அரைசனே! அன்பர்க்கு; அடியனேன் உடைய அப்பனே! ஆவியோடு ஆக்கை
புரை புரை கனியப் புகுந்துநின்று, உருக்கி, பொய் இருள் கடிந்த மெய்ச் சுடரே!
திரை பொரா மன்னும், அமுதத் தெண் கடலே! திருப்பெருந்துறை உறை சிவனே!
உரை, உணர்வு, இறந்துநின்று, உணர்வது ஓர் உணர்வே! யான், உன்னை உரைக்கும் ஆறு,உணர்த்தே.

10.212   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
அரைக்கின் றருள்தரும் அங்கங்கள் ஓசை
உரைக்கின்ற ஆசையும் ஒன்றொடொன் றொவ்வாப்
பரக்கும் உருவமும் பாரகந் தானாய்க்
கரக்கின் றவைசெய்த காண்டகை யானே.

12.100   12 st/nd Thirumurai   Song # 61   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
அரையிற்சர ணத்துரி யாடையின் மீது பௌவத்
திரையிற்படு வெள்ளல கார்த்து விளிம்பு சேர்த்தி
நிரையிற்பொலி நீளுடை தோல்சுரி கைப்பு றஞ்சூழ்
விரையிற்றுவர் வார்விசி போக்கி அமைத்து வீக்கி.
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000