சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் அலை
அலை     அலைகடல்     அலையார்     அலைகடலின்     அலையார்ந்த     அலை,     அலைக்கின்ற     அலைத்து    
1.064   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அலை ஆர் புனலை நீத்தவரும், தேரரும், அன்பு செய்யா
நிலையா வண்ணம் மாயம் வைத்த நின்மலன் தன் இடம் ஆம்
மலை போல் துன்னி வென்றி ஓங்கும் மாளிகை சூழ்ந்து, அயலே
சிலை ஆர் புரிசை பரிசு பண்ணும் தென்திருப்பூவணமே.

1.080   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அலை ஆர் புனல் சூடி, ஆகத்து ஒருபாகம்
மலையான் மகளோடும் மகிழ்ந்தான், உலகு ஏத்தச்
சிலையால் எயில் எய்தான், சிற்றம்பலம் தன்னைத்
தலையால் வணங்குவார் தலை ஆனார்களே.

1.107   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அலை மலி தண்புனலோடு அரவம் சடைக்கு அணிந்து, ஆகம்
மலைமகள் கூறு உடையான், மலை ஆர் இள வாழைக்
குலை மலி தண் பொழில் சூழ் கொடி மாடச் செங்குன்றூர் நின்ற
தலைமகனைத் தொழுவார் தடுமாற்று அறுப்பாரே.

1.107   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அலை மலி தண் புனல் சூழ்ந்து அழகு ஆர் புகலிநகர் பேணும்
தலைமகன் ஆகி நின்ற தமிழ் ஞானசம்பந்தன்,
கொலை மலி மூஇலையான் கொடி மாடச்செங்குன்றூர் ஏத்தும்
நலம் மலி பாடல் வல்லார் வினை ஆன நாசமே.

2.020   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அலை ஆர் புனல் சூழ் அழுந்தைப் பெருமான்!
நிலை ஆர் மறியும், நிறை வெண்மழுவும்,
இலைஆர் படையும்(ம்), இவை ஏந்து செல்வ!
நிலையா அது கொள்க என, நீ நினையே!

2.022   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அலை சேர் புனலன்; அனலன்; அமலன்;
தலை சேர் பலியன்; சதுரன்; விதிரும்
கொலை சேர் படையன் குடவாயில்தனில்
நிலை சேர் பெருங்கோயில் நிலாயவனே.

2.055   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அலை ஆரும் புனல் துறந்த அமணர், குண்டர் சாக்கீயர்,
தொலையாது அங்கு அலர் தூற்ற, தோற்றம் காட்டி ஆட்கொண்டீர்!
தலை ஆன நால்வேதம் தரித்தார் வாழும் தலைச்சங்கை,
நிலை ஆர்ந்த கோயிலே கோயில் ஆக நின்றீரே.

2.057   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அலை மல்கு தண்புனலும் பிறையும் சூடி, அங்கையில்
கொலை மல்கு வெண் மழுவும் அனலும் ஏந்தும்
கொள்கையீர்!
சிலை மல்கு வெங்கணையால் புரம் மூன்றும் எரித்தீர்! திரு
நல்லூர்,
மலை மல்கு கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.

2


3.004   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அலை புனல் ஆவடுதுறை அமர்ந்த
இலை நுனை வேல்படை எம் இறையை,
நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன
விலை உடை அருந்தமிழ்மாலை வல்லார்,
வினை ஆயின நீங்கிப் போய், விண்ணவர் வியன் உலகம்
நிலை ஆக முன் ஏறுவர்; நிலம்மிசை நிலை இலரே.

3.010   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அலை, வளர் தண்மதியோடு அயலே அடக்கி, உமை
முலை வளர் பாகம் முயங்க வல்ல முதல்வன்; முனி;
இலை வளர் தாழைகள் விம்மு கானல் இராமேச்சுரம்,
தலை வளர் கோல நல் மாலையன்தான் இருந்து ஆட்சியே.

3.101   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அலை வளர் தண் புனல் வார் சடைமேல் அடக்கி, ஒரு பாகம்
மலை வளர் காதலி பாட, ஆடி மயக்கா வரு மாட்சி
இலை வளர் தாழை முகிழ் விரியும் இராமேச்சுரம் மேயார்
தலை வளர் கோல நல் மாலை சூடும் தலைவர், செயும்
செயலே!

3.118   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அலை புனல் கங்கை தங்கிய சடையார், அடல் நெடுமதில் ஒருமூன்றும்
கொலை இடைச் செந்தீ வெந்து அறக் கண்ட குழகனார், கோயிலது என்பர்
மலையின் மிக்கு உயர்ந்த மரக்கலம் சரக்கு மற்றுமற்று இடை இடை எங்கும்
கலை களித்து ஏறிக் கானலில் வாழும் கழுமலநகர் எனல் ஆமே.

4.095   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அலைக்கின்ற நீர், நிலம், காற்று, அனல் அம்பரம், ஆகி நின்றீர்
கலைக்கன்று சேரும் கரத்தீர்! கலைப்பொருள் ஆகி நின்றீர்
விலக்கு இன்றி நல்கும் மிழலை உள்ளீர் மெய்யில் கையொடு கால்
குலைக்கின்று நும்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!

6.036   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அலை ஆர் கடல் நஞ்சம் உண்டார் தாமே; அமரர்களுக்கு அருள்செய்யும் ஆதி தாமே;
கொலை ஆய கூற்றம் உதைத்தார் தாமே; கொல் வேங்கைத் தோல் ஒன்று அசைத்தார் தாமே;
சிலையால் புரம் மூன்றும் எரித்தார் தாமே; தீ நோய் களைந்து என்னை ஆண்டார் தாமே;
பலி தேர்ந்து அழகு ஆய பண்பர்தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.

6.039   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அலை ஆர்ந்த புனல் கங்கைச் சடையான் கண்டாய்;
அண்டத்துக்கு அப்பால் ஆய் நின்றான் கண்டாய்;
கொலை ஆன கூற்றம் குமைத்தான் கண்டாய்; கொல் வேங்கைத் தோல் ஒன்று உடுத்தான் கண்டாய்;
சிலையால்-திரிபுரங்கள் செற்றான் கண்டாய்; செழு மா மதி சென்னி வைத்தான் கண்டாய்;
மலை ஆர் மடந்தை மணாளன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் தானே.

6.040   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அலை அடுத்த பெருங்கடல் நஞ்சு அமுதா உண்டு, அமரர்கள் தம் தலை காத்த ஐயர்; செம்பொன்
சிலை எடுத்து மா நாகம் நெருப்புக் கோத்துத்   திரிபுரங்கள் தீ இட்ட செல்வர் போலும்;
நிலை அடுத்த பசும் பொன்னால், முத்தால், நீண்ட நிரை வயிரப் பலகையால், குவையாத் துற்ற
மலை அடுத்த மழபாடி வயிரத்தூணே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே.

6.042   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அலை ஆர் வினைத் திறம் சேர் ஆக்கையுள்ளே அகப்பட்டு, உள் ஆசை எனும் பாசம் தன்னுள்
தலை ஆய், கடை ஆகும் வாழ்வில் ஆழ்ந்து   தளர்ந்து, மிக, நெஞ்சமே, அஞ்ச வேண்டா!
இலை ஆர் புனக் கொன்றை, எறிநீர், திங்கள், இருஞ்சடைமேல் வைத்து உகந்தான்; இமையோர் ஏத்தும்
நிலையான; உறை நிறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.

6.072   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அலை ஆர் புனல் கங்கை நங்கை காண அம்பலத்தில் அருநட்டம் ஆடி, வேடம்
தொலையாத வென்றியார், நின்றியூரும் நெடுங்களமும் மேவி, விடையை மேற்கொண்டு,
இலை ஆர் படை கையில் ஏந்தி, எங்கும் இமையவரும் உமையவளும் இறைஞ்சி ஏத்த,
மலை ஆர் திரள் அருவிப் பொன்னி சூழ்ந்த வலஞ்சுழியே புக்கு, இடமா மன்னினாரே.

6.081   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அலை ஆர்ந்த புனல் கங்கைச் சடையான் கண்டாய்; அடியார்கட்கு ஆர் அமுதம் ஆனான் கண்டாய்;
மலை ஆர்ந்த மடமங்கை பங்கன் கண்டாய்; வானோர்கள் முடிக்கு அணி ஆய் நின்றான் கண்டாய்;
இலை ஆர்ந்த திரிசூலப்படையான் கண்டாய்; ஏழ்   உலகும் ஆய் நின்ற எந்தை கண்டாய்;
கொலை ஆர்ந்த குஞ்சரத் தோல் போர்த்தான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.

6.097   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அலைத்து ஓடு புனல் கங்கை சடையில் கண்டேன்;
அலர் கொன்றைத்தார் அணிந்த ஆறு கண்டேன்;
பலிக்கு ஓடித் திரிவார் கைப் பாம்பு கண்டேன்;   பழனம் புகுவாரைப் பகலே கண்டேன்;
கலிக் கச்சி மேற்றளியே இருக்கக் கண்டேன்; கறை மிடறும் கண்டேன்; கனலும் கண்டேன்;
வலித்து உடுத்த மான் தோல் அரையில் கண்டேன் -மறை வல்ல மா தவனைக் கண்ட ஆறே!.

7.027   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
அலை ஆர் தண் புனல் சூழ்ந்து, அழகு ஆகி, விழவு அமரும்
கலை ஆர் மா தவர் சேர் திருக்கற்குடிக் கற்பகத்தைச்
சிலை ஆர் வாள் நுதலாள் நல்ல சிங்கடி அப்பன் உரை
விலை ஆர் மாலை வல்லார் வியல் மூ உலகு ஆள்பவரே .

8.103   8 st/nd Thirumurai   Song # 31   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
அலை கடல் திரையின் ஆர்த்து ஆர்த்து ஓங்கி,
தலை தடுமாறா வீழ்ந்து, புரண்டு அலறி,
பித்தரின் மயங்கி, மத்தரின் மதித்து,
நாட்டவர் மருளவும், கேட்டவர் வியப்பவும்,
கடக் களிறு ஏற்றாத் தடப் பெரு மதத்தின்

10.205   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
அலைகடல் ஊடறுத் தண்டத்து வானோர்
தலைவன் எனும்பெயர் தான்தலை மேற்கொண்
டுலகார் அழற்கண் டுள்விழா தோடி
அலைவாயில் வீழாமல் அஞ்சலென் றானே.

11.006   11 st/nd Thirumurai   Song # 15   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
அலையார் புனலனல் ஞாயி
றவனி மதியம்விண்கால்
தொலையா உயிருடம் பாகிய
சோதியைத் தொக்குமினோ
தலையாற் சுமந்துந் தடித்துங்
கொடித்தேர் அரக்கனென்னே
கலையான் ஒருவிரல் தாங்ககில்
லான்விட்ட காரணமே.

11.036   11 st/nd Thirumurai   Song # 23   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை  
அலைகடலின் மீதோடி யந்நுளையர் வீசும்
வலைகடலில் வந்தேறு சங்கம் அலர்கடலை
வெண்முத் தவிழ்வயல்சூழ் வீங்குபுனற் காழியே
ஒண்முத் தமிழ்பயந்தா னூர்.

11.038   11 st/nd Thirumurai   Song # 1   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்  
அலையார்ந்த கடலுலகத்
  தருந்திசைதோ றங்கங்கே
நிலையார்ந்த பலபதிகம்
  நெறிமனிதர்க் கினிதியற்றி
ஈங்கருளி யெம்போல்வார்க்
  கிடர்கெடுத்தல் காரணமாய்
ஓங்குபுகழ்ச் சண்பையெனும்
  ஒண்பதியுள் உதித்தனையே.


This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list