சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் அவ்
அவ்     அவ்வியம்     அவ்வவர்     அவ்விட்டு     அவ்வுண்டு     அவ்வியல்     அவ்வென்ற     அவ்வொடு     அவ்வினம்     அவ்வுல     அவ்வழி     அவ்வுரை     அவ்வண்ணந்     அவ்வாறு     அவ்வளவில்     அவ்வென்பின்     அவ்வேளையில்     அவ்வகைய     அவ்வார்த்தை     அவ்விடத்தை     அவ்வினை     அவ்வுரைகேட்     அவ்வூர்     அவ்வகை     அவ்வினைக்     அவ்வுரையும்     அவ்விரவு     அவ்வகையால்     அவ்வ(த்)    
1.116   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அவ் வினைக்கு இவ் வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர்!
உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே?
கை வினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும், நாம் அடியோம்;
செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா; திருநீலகண்டம்!

3.070   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அவ்வ(த்) திசையாரும் அடியாரும் உளர் ஆக அருள் செய்து, அவர்கள் மேல்
எவ்வம் அற, வைகலும் இரங்கி, எரி ஆடும் எமது ஈசன் இடம் ஆம்
கவ்வையொடு காவிரி கலந்து வரு தென்கரை நிரந்து கமழ்பூ
மவ்வலொடு மாதவி மயங்கி மணம் நாறும் மயிலாடுதுறையே.

10.108   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்
வெவ்விய னாகிப் பிறர்பொருள் வவ்வன்மின்
செவ்விய னாகிச் சிறந்துண்ணும் போதொரு
தவ்விகொ டுமின் தலைப்பட்ட போதே.9,

10.308   10 st/nd Thirumurai   Song # 15   திருமூலர்   திருமந்திரம்  
அவ்வவர் மண்டல மாம்பரி சொன்றுண்டு
அவ்வவர் மண்டலத் தவ்வவர் தேவராம்
அவ்வவர் மண்டலம் அவ்வவர்க் கேவரில்
அவ்வவர் மண்டலம் ஆயம்மற் றோர்க்கே. 

10.402   10 st/nd Thirumurai   Song # 19   திருமூலர்   திருமந்திரம்  
அவ்விட்டு வைத்தங் கரவிட்டு மேல்வைத்து
இவ்விட்டுப் பார்க்கில் இலிங்கமதாய் நிற்கும்
மவ்விட்டு மேலே வளியுறக் கண்டபின்
தொம்மிட்டு நின்ற சுடர்க்கொழுந் தாமே.

10.402   10 st/nd Thirumurai   Song # 20   திருமூலர்   திருமந்திரம்  
அவ்வுண்டு சவ்வுண் டனைத்தும்அங் குள்ளது
கவ்வுண்டு நிற்குங் கருத்தறி வார்இல்லை
கவ்வுண்டு நிற்குங் கருத்தறி வாளர்க்குச்
சவ்வுண்டு சத்தி சதாசிவன் றானே.

10.402   10 st/nd Thirumurai   Song # 29   திருமூலர்   திருமந்திரம்  
அவ்வியல் பாய இருமூன் றெழுத்தையும்
செவ்வியல் பாகச் சிறந்தனன் நந்தியும்
ஒவ்வியல் பாக ஒளியுற நோக்கிடின்
பவ்வியல் பாகப் பரந்துநின் றானே.

10.402   10 st/nd Thirumurai   Song # 40   திருமூலர்   திருமந்திரம்  
அவ்வென்ற போதினில் உவ்வெழுத் தாலித்தால்
உவ்வென்ற முத்தி உருகிக் கலந்திடும்
மவ்வென்றென் னுள்ளே வழிபட்ட நந்தியை
எவ்வண்ணஞ் சொல்லுகேன் எந்தை இயற்கையே.

10.402   10 st/nd Thirumurai   Song # 44   திருமூலர்   திருமந்திரம்  
அவ்வொடு சவ்வென் றரனுற்ற மந்திரம்
அவ்வொடு சவ்வென்ற தாரும் அறிகிலர்
அவ்வொடு சவ்வென்ற தாரும் அறிந்தபின்
அவ்வொடு சவ்வும் அனாதியு மாமே.

10.409   10 st/nd Thirumurai   Song # 15   திருமூலர்   திருமந்திரம்  
அவ்வினம் மூன்றும்அவ் ஆடது வாய்வரும்
கெவ்வினம் மூன்றும் கிளர்தரு ஏறதாம்
தவ்வின மூன்றும் தழைத்திடும் தண்டதாம்
இவ்வினம் மூன்றும் இராசிகள் எல்லாம்.

10.607   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
அவ்வுல கத்தே பிறக்கில் உடலொடும்
அவ்வுல கத்தே அருந்தவம் நாடுவர்
அவ்வுல கத்தே அரனடி கூடுவர்
அவ்வுல கத்தே அருள்பெறு வாரே.

10.843   10 st/nd Thirumurai   Song # 9   திருமூலர்   திருமந்திரம்  
அவ்வழி காட்டும் அமரர்க் கரும்பொருள்
இவ்வழி தந்தை தாய் கேளிரே ஒக்கும்
செவ்வழி சேர்சிவ லோகத் திருத்திடும்
இவ்வழி நந்தி யியல்பது தானே.

12.000   12 st/nd Thirumurai   Song # 107   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
அவ்வுரை கேட்ட வேந்தன்
ஆவுறு துயர மெய்தி
வெவ்விடந் தலைக்கொண் டாற்போல்
வேதனை யகத்து மிக்கிங்கு
இவ்வினை விளைந்த வாறென்
றிடருறு மிரங்கு மேங்குஞ்
செவ்விதென் செங்கோ லென்னுந்
தெருமருந் தெளியுந் தேறான்.
12.000   12 st/nd Thirumurai   Song # 114   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
அவ்வண்ணந் தொழுதுரைத்த
அமைச்சர்களை முகம்நோக்கி
மெய்வண்ணந் தெரிந்துணர்ந்த
மனுவென்னும் விறல்வேந்தன்
இவ்வண்ணம் பழுதுரைத்தீர்
என்றெரியி னிடைத்தோய்ந்த
செவ்வண்ணக் கமலம்போல்
முகம்புலர்ந்து செயிர்த்துரைப்பான்.
12.000   12 st/nd Thirumurai   Song # 189   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
அவ்வுரை யவையின் முன்பு 
நம்பியா ரூரர் சொல்லச்
செவ்விய மறையோர் நின்ற
திருமறை முனியை நோக்கி
இவ்வுல கின்கண் நீயின்
றிவரையுன் னடிமை யென்ற
வெவ்வுரை யெம்முன் பேற்ற
வேண்டுமென் றுரைத்து மீண்டும்.
12.000   12 st/nd Thirumurai   Song # 284   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
அவ்வாறு பணிந்தேத்தி
யணியாரூர் மணிப்புற்றின்
மைவாழுந் திருமிடற்று
வானவர்பால் நின்றும்போந்து
எவ்வாறு சென்றாள்என்
இன்னுயிராம் அன்னமெனச்
செவ்வாய்வெண் நகைக்கொடியைத்
தேடுவா ராயினார்.
12.000   12 st/nd Thirumurai   Song # 304   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
அவ்வளவில் அருகிருந்த சேடிதனை
முகநோக்கி ஆரூர் ஆண்ட
மைவிரவு கண்டரைநாம் வணங்கப்போம்
மறுகெதிர்வந் தவரா ரென்ன
இவ்வுலகி லந்தணரா யிருவர்தே
டொருவர்தா மெதிர்நின் றாண்ட
சைவமுதல் திருத்தொண்டர் தம்பிரான்
தோழனார் நம்பி யென்றாள்.
12.050   12 st/nd Thirumurai   Song # 19   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
அவ்வழி அவர்க ளெல்லாம்
அஞ்சியே அகன்று நீங்கச்
செவ்விய நெறியில் தத்தன் 
திருநகர் கடந்து போந்து
கைவடி நெடுவா ளேந்தி
ஆளுறாக் கானஞ் சேர
வெவ்வினைக் கொடியோன் தன்னை
விட்டபின் மீண்டு போந்தான்.
12.100   12 st/nd Thirumurai   Song # 127   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
அவ்வழி யந்தி மாலை  
அணைதலும் இரவு சேரும்
வெவ்விலங் குளவென் றஞ்சி
மெய்ம்மையின் வேறு கொள்ளாச்
செவ்விய அன்பு தாங்கித்
திருக்கையில் சிலையும் தாங்கி
மைவரை யென்ன ஐயர்
மருங்குநின் றகலா நின்றார்.
12.120   12 st/nd Thirumurai   Song # 23   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
அவ்வென்பின் ஒளிமணிகோத்
தணிந்ததிருத் தாழ்வடமும்
பைவன்பேர் அரவொழியத்
தோளிலிடும் பட்டிகையும்
மைவந்த நிறக்கேச
வடப்பூணு நூலும்மனச்
செவ்வன்பர் பவமாற்றுந்
திருநீற்றுப் பொக்கணமும்.
12.150   12 st/nd Thirumurai   Song # 27   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
அவ்வேளையில் அங்கண் அமைச்சர்கள்
கூடித் தங்கள்
கைவேறுகொள் ஈம வருங்கடன்
காலை முற்றி
வைவேலவன் தன்குல மைந்தரும்
இன்மை யாலே
செய்வேறு வினைத்திறஞ் சிந்தனை
செய்து தேர்வார்.
12.150   12 st/nd Thirumurai   Song # 40   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
அவ்வாறு மொழிந்தது கேட்ட
அமைச்ச ரோடு
மெய்வாழ்தரு நூலறி வின்மிகு
மாந்தர் தாமும்
எவ்வாறருள் செய்தனை மற்றவை
யன்றி யாவர்
செய்வார் பெரியோய் எனச்சேவடி
தாழ்ந்து செப்ப.
12.190   12 st/nd Thirumurai   Song # 111   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
அவ்வகைய திருநகரம்
அதன்கண்ஒரு மருங்குறைவார்
இவ்வுலகில் பிறப்பினால்
ஏகாலிக் குலத்துள்ளார்
செவ்வியஅன் புடைமனத்தார்
சீலத்தின் நெறிநின்றார்
மைவிரவு கண்டரடி
வழித்தொண்டர் உளரானார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 59   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அவ்வார்த்தை கேட்டலுமே
அயர்வெய்தி இதற்கினியான்
எவ்வாறு செய்வன்என
ஈசரருள் கூடுதலால்
ஒவ்வாஇப் புன்சமயத்
தொழியாஇத் துயரொழியச்
செவ்வாறு சேர்திலக
வதியார்தாள் சேர்வனென.
12.210   12 st/nd Thirumurai   Song # 106   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அவ்விடத்தை ஆண்டஅர
சமுதுசெய்து முன்னிருப்ப
வெவ்விடமும் அமுதாயிற்
றெனஅமணர் வெருக்கொண்டே
இவ்விடத்தில் இவன்பிழைக்கில்
எமக்கெல்லாம் இறுதியெனத்
தெவ்விடத்துச் செயல்புரியுங்
காவலற்குச் செப்புவார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 124   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அவ்வினை செய்திடப் போகும்
அவருடன் போயரு கந்த
வெவ்வினை யாளருஞ் சென்று
மேவிட நாவுக் கரசர்
செவ்விய தம்திரு உள்ளஞ்
சிறப்ப அவருடன் சென்றார்
பவ்வத்தின் மன்னவன் சொன்ன
படிமுடித் தார்அப் பதகர்.
12.240   12 st/nd Thirumurai   Song # 27   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அவ்வுரைகேட் டலும்மடவார்
அருளுடையார் அளித்தருளும்
செவ்வியபேர் அருள்விளம்புந்
திறமன்றென் றுரைசெய்யார்
கைவருகற் புடைநெறியால்
கணவன்உரை காவாமை
மெய்வழியன் றெனவிளம்பல்
விடமாட்டார் விதிர்ப்புறுவார்.
12.250   12 st/nd Thirumurai   Song # 33   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அவ்வுரை கேட்ட போதே
அங்கணர் அருளால் அன்பர்
செவ்விய திருஉள் ளத்தோர்
தடுமாற்றஞ் சேர நோக்கி
இவ்வுரை பொறாதென் உள்ளம்
என்செய்தான் இதற்கொன் றுண்டால்
மெய்விரித் துரையும் என்ன
விளம்புவார் விதிர்ப்புற் றஞ்சி.
12.270   12 st/nd Thirumurai   Song # 6   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அவ்வூர் நின்றும் திருவாரூர்
அதனை அடைவார் அடியார்மேல்
வெவ்வூ றகற்றும் பெருமான்தன்
விரைசூழ் மலர்த்தாள் பணிவுறுவ
தெவ்வூ தியமும் எனக்கொள்ளும்
எண்ணம் உடையார் பலநாளும்
தெவ்வூர் எரித்த வரைச்சிலையார்
திருப்பா தங்கள் வணங்கினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 130   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அவ்வகை மருங்கு சூழ்ந்த
பதிகளில் அரனார் பொற்றாள்
மெய்வகை ஞானம் உண்ட
வேதியர் விரவிப் போற்றி
உய்வகை மண்ணு ளோருக்கு
உதவிய பதிகம் பாடி
எவ்வகை யோரும் ஏத்த
இறைவரை ஏத்து நாளில்.
12.280   12 st/nd Thirumurai   Song # 313   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அவ்வளவில் ஆளுடைய பிள்ளையார்
எழுந்தருளி அணுக வெய்தச்
செவ்வியமெய்ஞ்ஞானமுணர் திருஞான
சம்பந்தன் வந்தான் என்றே
எவ்வுலகுந் துயர்நீங்கப் பணிமாறுந்
தனிக்காளத் தெழுந்த வோசை
வெவ்வுயிர்க்கும் அவன்கேளா மெல்லியலை
விட்டெதிரே விரைந்து செல்வான்.
12.280   12 st/nd Thirumurai   Song # 335   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அவ்வினைக் கிவ்வினை
என்றெடுத் தையர்அமுதுசெய்த
வெவ்விடம் முன்தடுத்
தெம்மிடர் நீக்கிய வெற்றியினால்
எவ்விடத்தும்அடி யார்இடர்
காப்பது கண்டமென்றே
செய்வினை தீண்டா திருநீல
கண்டம் எனச்செப்பினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 393   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அவ்வுரையும் மணிமுத்தின்
பந்தரும்ஆ காயமெழச்
செவ்விய மெய்ஞ் ஞானமுணர்
சிரபுரத்துப் பிள்ளையார்
இவ்வினைதான் ஈசர்திரு
வருளாகில் இசைவதென
மெய்விரவு புளகமுடன்
மேதினியின் மிசைத்தாழ்ந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 642   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அவ்வகை அவர்க ளெல்லாம்
அந்நிலை மையர்க ளாகச்
சைவநன் மரபில் வந்த
தடமயில் மடமென் சாயல்
பைவளர் அரவுஏர் அல்குல்
பாண்டிமா தேவி யார்க்கும்
மெய்வகை அமைச்ச னார்க்கும்
விளங்குநன் னிமித்தம் மேன்மேல்.
12.280   12 st/nd Thirumurai   Song # 921   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அவ்வுரைகேட் டெதிர்மாற்றம் அறைவ தின்றி
அணைந்துளன் அம் முத்தியெனும் அதுவும் பாழாம்
கவ்வையில்நின் றவனையெதிர் நோக்கி ஞானக்
கடலமுதம் அனையவர்தங் காத லன்பர்
பொய்வகையே முத்தியினிற் போனான் முன்பே
பொருளெல்லாம் உணர்ந்துரைத்துப் போனான் என்றாய்
எவ்வகையால் அவனெல்லாம் உணர்ந்த தீதும்
இல்லதுரைப் பாய்எனினும் ஏற்போ மென்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 936   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அவ்வார்த்தை கேட்டஞ்சி
அவனியின்மேல் இழிந்தருளி
இவ்வாறு செய்தருளிற்
றென்னாம்என் றிறைஞ்சுதலும்
செவ்வாறு மொழிநாவர்
திருஞான சம்பந்தர்க்
கெவ்வாறு செயத்தகுவ
தென்றெதிரே இறைஞ்சினார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 15   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அவ்விரவு புலர்காலை
உணர்ந்தெழுவார் அதுகண்டே
எவ்வுலகில் நெல்மலைதா
னிதுவென்றே யதிசயித்துச்
செவ்வியபொன் மலைவளைத்தார்
திருவருளின் செயல் போற்றிக்
கொவ்வைவாய்ப் பரவையார்
கொழுநரையே தொழுதெழுவார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 26   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அவ்விரவு புலர்காலை
ஆரூரில் வாழ்வார்கண்டு
எவ்வுலகில் விளைந்தனநெல்
மலையிவையென் றதிசயித்து
நவ்விமதர்த் திருநோக்கின்
நங்கைபுகழ்ப் பரவையார்க்
கிவ்வுலகு வாழவரு
நம்பியளித் தனவென்பார்.
12.470   12 st/nd Thirumurai   Song # 6   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
அவ்வகையால் அருள்பெற்றங்கு
அமர்ந்துசில நாள்வைகி
இவ்வுலகில் தம்பெருமான்
கோயில்களெல் லாம்எய்திச்
செவ்வியஅன் பொடுபணிந்து
திருப்பணிஏற் றனசெய்தே
எவ்வுலகும் புகழ்ந்தேத்தும்
இன்தமிழ்வெண் பாமொழிந்தார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list