சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் உடை
உடையார்     உடையான்     உடையவன்     உடைஓடு     உடைதலையின்     உடைமணியின்     உடைப்புலி     உடையவர     உடையொ     உடைய     உடையொடு     உடை     உடையேது     உடையர்     உடையானே!     உடையாள்,     உடைமணிகட்டிச்     உடையும்    
1.030   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உடையார் துகில் போர்த்து உழல்வார், சமண்கையர்,
அடையாதன சொல்லுவர் ஆதர்கள் ஓத்தைக்
கிடையாதவன் தன் நகர் நல் மலி பூகம்
புடை ஆர்தரு பூம் புகலி நகர்தானே.

2.040   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உடை இலார், சீவரத்தார், தன் பெருமை உணர்வு அரியான்;
முடையில் ஆர் வெண்தலைக் கை மூர்த்தி ஆம் திரு
உருவன்;
பெடையில் ஆர் வண்டு ஆடும் பொழில் உறையும்
சடையில் ஆர் வெண்பிறையான்; தாள் பணிவார் தக்காரே.

2.052   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உடை இலாது உழல்கின்ற குண்டரும், ஊண் அருந்தவத்து ஆய சாக்கியர்,
கொடை இலார் மனத்தார்; குறை ஆரும் கோட்டாற்றில்,
படையில் ஆர் மழு ஏந்தி ஆடிய பண்பனே! இவர் என்கொலோ, நுனை
அடைகிலாத வண்ணம்? அருளாய், உன் அடியவர்க்கே!

2.113   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உடை நவின்றார், உடை விட்டு உழல்வார், இருந் தவத்தார்
முடை நவின்ற(ம்) மொழி ஒழித்து, உகந்த(ம்) முதல்வன்(ன்)
இடம்
மடை நவின்ற புனல் கெண்டை பாயும் வயல் மலிதர,
கடை நவின்ற(ந்) நெடுமாடம் ஓங்கும் கடல் காழியே.

3.031   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உடை துறந்தவர்களும், உடை துவர் உடையரும்,
படு பழி உடையவர் பகர்வன விடுமின், நீர்
மடை வளர் வயல் அணி மயேந்திரப்பள்
இடம் உடை ஈசனை இணை அடி பணிமினே!

3.901   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உடையேது மிலார் துவராடை யுடுப்போர்
கிடையா நெறியான் கெழுமும் இடமென்பர்
அடையார் புரம்வேவ மூவர்க் கருள்செய்த
விடையார் கொடியான் அழகார் விடைவாயே.

4.038   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
உடை தரு கீளும் வைத்தார்; உலகங்கள் அனைத்தும் வைத்தார்
படை தரு மழுவும் வைத்தார்; பாய் புலித்தோலும் வைத்தார்
விடை தரு கொடியும் வைத்தார்; வெண் புரி நூலும் வைத்தார்
அடை தர அருளும் வைத்தார்-ஐயன் ஐயாறனாரே.

5.041   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
உடையர் கோவணம், ஒன்றும் குறைவு இலர்-
படை கொள் பாரிடம் சூழ்ந்த பைஞ்ஞீலியார்;
சடையின் கங்கை தரித்த சதுரரை
அடைய வல்லவர்க்கு இல்லை, அவலமே.

8.105.06   8 st/nd Thirumurai   Song # 56   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
உடையானே! நின் தனை உள்கி, உள்ளம் உருகும், பெரும் காதல்
உடையார், உடையாய்! நின் பாதம் சேரக் கண்டு, இங்கு ஊர் நாயின்
கடை ஆனேன், நெஞ்சு உருகாதேன், கல்லா மனத்தேன், கசியாதேன்,
முடை ஆர் புழுக் கூடு இது காத்து, இங்கு இருப்பது ஆக முடித்தாயே.

8.105.10   8 st/nd Thirumurai   Song # 97   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
உடைய நாதனே, போற்றி! நின் அலால் பற்று, மற்று எனக்கு ஆவது ஒன்று இனி
உடையனோ? பணி; போற்றி! உம்பரார் தம் பரா பரா, போற்றி! யாரினும்
கடையன் ஆயினேன்; போற்றி! என் பெரும் கருணையாளனே, போற்றி! என்னை, நின்
அடியன் ஆக்கினாய்; போற்றி! ஆதியும், அந்தம், ஆயினாய், போற்றி! அப்பனே!

8.121   8 st/nd Thirumurai   Song # 1   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
உடையாள், உன் தன் நடுவு, இருக்கும்; உடையாள் நடுவுள், நீ இருத்தி;
அடியேன் நடுவுள், இருவீரும் இருப்பதானால், அடியேன், உன்
அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய் பொன்னம்பலத்து எம்
முடியா முதலே! என் கருத்து முடியும்வண்ணம், முன் நின்றே!

8.225   8 st/nd Thirumurai   Song # 34   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
உடைமணிகட்டிச் சிறுதே
   ருருட்டி யுலாத்தருமிந்
நடைமணி யைத்தந்த பின்னர்முன்
   நான்முகன் மாலறியா
விடைமணி கண்டர்வண் தில்லைமென்
   தோகையன் னார்கண்முன்னங்
கடைமணி வாள்நகை யாயின்று
   கண்டனர் காதலரே.

9.023   9 st/nd Thirumurai   Song # 7   திருவாலியமுதனார்   திருவிசைப்பா  
உடையும் பாய்புலித் தோலும்நல் லரவமும்
   உண்பதும் பலிதேர்ந்து
விடைய தூர்வதும் மேவிடங் கொடுவரை
   ஆகிலும் என்னெஞ்சம்
மடைகொள் வாளைகள் குதிகொளும் வயற்றில்லை
   யம்பலத் தனலாடும்
உடைய கோவினை யன்றிமற் றாரையும்
   உள்ளுவ தறியேனே. 

10.225   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
உடையான் அடியார் அடியா ருடன்போய்ப்
படையா ரழலான் பதிசென்று புக்கே
கடையார நின்றவர் கண்டறி விப்ப
உடையான் வருகென ஓலமென் றாரே. 

10.407   10 st/nd Thirumurai   Song # 16   திருமூலர்   திருமந்திரம்  
உடையவன் அங்கி உருத்திர சோதி
விடையவன் ஏறி விளங்கி யிருக்கும்
கடையவர் போயிடும் கண்டவர் நெஞ்சத்
தடையது வாகிய சாதகர் தாமே.

11.022   11 st/nd Thirumurai   Song # 34   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருவந்தாதி  
உடைஓடு காடாடி ஊர்ஐயம் உண்ணி
உடைஆடை தோல்பொடிசந் தென்னை உடையானை
உன்மத் தகமுடிமேல் உய்த்தானை நன்னெஞ்சே
உன்மத் தகமுடிமேல் உய்.

11.024   11 st/nd Thirumurai   Song # 8   இளம்பெருமான் அடிகள்   சிவபெருமான் திருமும்மணிக்கோவை  
உடைதலையின் கோவை ஒருவடமோ கொங்கை
புடைமலிந்த வெள்ளெருக்கம் போதோ சடைமுடிமேல்
முன்னாள் பூத்த முகிழ்நிலவோ முக்கணா
இன்னநாள் கண்டதிவள்.

11.028   11 st/nd Thirumurai   Song # 11   பட்டினத்துப் பிள்ளையார்   திருவிடைமருதூர் மும்மணிக்கோவை  
உடைமணியின் ஓசைக் கொதுங்கி அரவம்
படமொடுங்கப் பையவே சென்றங் கிடைமருதர்
ஐயம் புகுவ தணியிழையார் மேல் அநங்கன்
கையம் புகவேண்டிக் காண்.

11.029   11 st/nd Thirumurai   Song # 43   பட்டினத்துப் பிள்ளையார்   திருஏகம்பமுடையார் திருவந்தாதி  
உடைப்புலி ஆடையின் மேலுர
கக்கச்சு வீக்கிமுஞ்சி
வடத்தொரு கோவணந் தோன்றும்
அரைவலம் மற்றையல்குல்
தொடக்குறு காஞ்சித் தொடுத்த
அரசிலை தூநுண்துகில்
அடல்பொலி ஏறுடை ஏகம்பம்
மேய அடிகளுக்கே.

12.000   12 st/nd Thirumurai   Song # 217   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
உடையவர சுலகேத்து 
முழவாரப் படையாளி
விடையவர்க்குக் கைத்தொண்டு
விரும்புபெரும் பதியைமிதித்
தடையுமதற் கஞ்சுவனென்
றந்நகரிற் புகுதாதே
மடைவளர்தண் புறம்பணையிற்
சித்தவட மடம்புகுந்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 85   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
உடையொ ழிந்தொரு பேச்சிடை
யின்றிநின் றுண்போர்
கடைய ணைந்தவன் வாயில்கா
வலருக்கு நாங்கள்
அடைய வந்தமை அரசனுக்
கறிவியும் என்ன
இடைய றிந்துபுக் கவருந்தம்
இறைவனுக் கிசைப்பார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 234   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
உடைய பிள்ளையார் வருமெல்லை
யுள்ளஅப் பதியோர்
புடையி ரண்டினுங் கொடியொடு
பூந்துகில் விதானம்
நடைசெய் காவணம் தோரணம்
பூகநற் கதலி
மிடையு மாலைகள் நிறைகுடம்
விளக்கொடு நிரைத்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1066   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
உடைய பிள்ளையார்க் கெனஇவள்
அடைவு துன்புறு வதற்கிலை
யாம்நமக் கென்றே
இடரொ ழிந்தபின் அடக்கிய
என்பொடு சாம்பல்
புடைபெ ருத்தகும் பத்தினிற்
புகப்பெய்து வைப்பார்.
12.360   12 st/nd Thirumurai   Song # 67   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
உடைய நாதர் அமுதுசெய
வுரைத்த படியே அமைத்தஅதற்
கடையு மின்ப முன்னையிலும்
ஆர்வம் பெருகிக் களிகூர
விடையில் வருவார் தொண்டர்தாம்
விரைந்து சென்று மென்மலரின்
புடைவண் டறையும் ஆத்தியின்கீழ்
இருந்த புனிதர் முன்சென்றார்.
12.670   12 st/nd Thirumurai   Song # 4   சேக்கிழார்   மன்னிய சீர்ச் சருக்கம்  
உடையொடு நல்ல கீளும்
ஒப்பில்கோ வணமும் நெய்து
விடையவர் அடியார் வந்து
வேண்டுமாறு ஈயு மாற்றால்
இடையறா தளித்து நாளும்
அவர்கழல் இறைஞ்சி யேத்தி
அடைவுறு நலத்த ராகி
அரனடி நீழல் சேர்ந்தார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list