சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:         (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் ஊர்
ஊர்     ஊர்கின்ற     ஊர்வதுவும்     ஊர்மதில்     ஊர்தொறும்     ஊர்ந்த     ஊர்வது     ஊர்வா    
1.029   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊர் உலாவு பலி கொண்டு, உலகு ஏத்த,
நீர் உலாவும் நிமிர் புன் சடை அண்ணல்,
சீர் உலாவும் மறையோர் நறையூரில்,
சேரும் சித்தீச்சுரம் சென்று அடை நெஞ்சே!

1.079   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊர் எதிர்ந்து இடு பலி, தலை கலன் ஆக உண்பவர்; விண்
  பொலிந்து இலங்கிய உருவர்;
பார் எதிர்ந்து அடி தொழ, விரை தரும் மார்பில் பட அரவு ஆமை
  அக்கு அணிந்தவர்க்கு இடம் ஆம்
நீர் எதிர்ந்து இழி மணி, நித்தில முத்தம் நிரை சொரி சங்கமொடு,
ஒண்மணி வரன்றி,
கார் எதிர்ந்து ஓதம் வன் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய,
நம் வினை கரிசு அறுமே.

1.129   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊர்கின்ற அரவம், ஒளிவிடு திங்கள்-
ஒடு, வன்னி, மத்தம், மன்னும்
நீர் நின்ற கங்கை, நகுவெண்தலை, சேர்
செஞ்சடையான் நிகழும் கோயில்
ஏர் தங்கி, மலர் நிலவி, இசை வெள்ளி
மலை என்ன நிலவி நின்ற,
கார் வண்டின் கணங்களால், கவின் பெருகு
சுதை மாடக் கழுமலமே.

2.047   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலைக்
கூர்தரு வேல் வல்லார் கொற்றம் கொள் சேரிதனில்,
கார் தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆர்திரைநாள் காணாதே போதியோ? பூம்பாவாய்!

2.059   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊர் ஆர் உவரிச் சங்கம் வங்கம் கொடுவந்து
கார் ஆர் ஓதம் கரைமேல் உயர்த்தும் கலிக் காழி,
நீர் ஆர் சடையாய்! நெற்றிக்கண்ணா! என்று என்று
பேர் ஆயிரமும் பிதற்ற, தீரும், பிணிதானே.

2.074   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊர் மதியைக் கதுவ உயர் மதில் சண்பை, ஒளி மருவு
காழி, கொச்சை,
கார் மலியும் பொழில் புடை சூழ் கழுமலம், மெய்த்
தோணிபுரம், கற்றோர் ஏத்தும்
சீர் மருவு பூந்தராய், சிரபுரம், மெய்ப் புறவம், அயன் ஊர்,
பூங் கற்பத்
தார் மருவும் இந்திரன் ஊர், புகலி, வெங்குரு கங்கை
தரித்தோன் ஊரே.

2.086   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊர் இடை நின்று வாழும் உயிர் செற்ற காலன், துயர்
உற்ற தீங்கு விரவி,
பார் இடை மெள்ள வந்து, பழி உற்ற வார்த்தை ஒழிவு
உற்ற வண்ணம், அகலும்
போர் இடை அன்று, மூன்று மதில் எய்த ஞான்று, புகழ்
வான் உளோர்கள் புணரும்
தேர் இடை நின்ற எந்தை பெருமான் இருந்த திரு
நாரையூர் கைதொழவே.

3.105   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊர் அரவம் தலை நீள் முடியான் ஒலி நீர் உலகு ஆண்டு
கார் அரவக்கடல் சூழ வாழும் பதி ஆம் கலிக்காமூர்,
தேர் அரவு அல்குல் அம் பேதை அஞ்சத் திருந்து வரை பேர்த்தான்
ஆர் அரவம் பட வைத்த பாதம் உடையான் இடம் ஆமே.

4.004   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஊர் திரை வேலை உள்ளானும், உலகு இறந்த ஒண் பொருளானும்,
சீர் தரு பாடல் உள்ளானும், செங்கண் விடைக் கொடியானும்,
வார் தரு பூங்குழலாளை மருவி உடன் வைத்தவனும்,
ஆர்திரை நாள் உகந்தானும்- ஆரூர் அமர்ந்த அம்மானே.

4.090   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஊர்ந்த விடை உகந்து ஏறிய செல்வனை நாம் அறியோம்;
ஆர்ந்த மடமொழி மங்கை ஓர் பாகம் மகிழ்ந்து உடையான்;
சேர்ந்த புனல் சடைச் செல்வப் பிரான்; திரு வேதி குடிச்
சார்ந்த வயல் அணி தண்ணமுதை அடைந்து ஆடுதுமே.

5.097   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஊர் இலாய்! என்று, ஒன்று ஆக உரைப்பது ஓர்
பேர் இலாய்! பிறை சூடிய பிஞ்ஞகா!
கார் உலாம் கண்டனே! உன் கழல் அடி
சேர்வு இலார்கட்குத் தீயவை தீயவே.

6.055   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஊர் ஆகி நின்ற உலகே, போற்றி!
ஓங்கி அழல் ஆய் நிமிர்ந்தாய், போற்றி!
பேர் ஆகி எங்கும் பரந்தாய், போற்றி!
பெயராது என் சிந்தை புகுந்தாய், போற்றி!
நீர் ஆவி ஆன நிழலே, போற்றி!
நேர்வார் ஒருவரையும் இல்லாய், போற்றி!
கார் ஆகி நின்ற முகிலே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

7.056   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஊர்வது ஓர் விடை ஒன்று உடையானை, ஒண்நுதல்-தனிக் கண் நுதலானை,
கார் அது ஆர் கறை மாமிடற்றானை, கருதலார் புரம் மூன்று எரித்தானை,
நீரில் வாளை, வரால், குதி கொள்ளும் நிறை புனல் கழனிச் செல்வம் நீடூர்ப்
பார் உளார் பரவித் தொழ நின்ற பரமனை, பணியா விடல் ஆமே?

7.085   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஊர்தொறும் வெண் தலை கொண்டு, உண் பலி இடும்! என்று,
வார் தரு மென்முலையாள் மங்கையொடும்(ம்) உடனே,
கூர் நுனை மழு ஏந்தி, கூடலையாற்றூரில்
ஆர்வன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!

8.210   8 st/nd Thirumurai   Song # 8   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
ஊர்வா யொழிவா யுயர்பெண்ணைத்
   திண்மடல் நின்குறிப்புச்
சீர்வாய் சிலம்ப திருத்த
   இருந்தில மீசர்தில்லைக்
கார்வாய் குழலிக்குன் னாதர
   வோதிக்கற் பித்துக்கண்டால்
ஆர்வாய் தரினறி வார்பின்னைச்
   செய்க அறிந்தனவே.

11.023   11 st/nd Thirumurai   Song # 56   பரணதேவ நாயனார்   சிவபெருமான் திருவந்தாதி  
ஊர்வதுவும் ஆனேறு உடைதலையில் உண்பதுவும்
ஊர்வதுவும் மேல்லுரகம் ஊடுவர்கொல் ஊர்வதுவும்
ஏகம்பம் என்றும் இடைமருதை நேசத்தார்க்
கேகம்ப மாய்நின்ற ஏறு.

11.033   11 st/nd Thirumurai   Song # 10   நம்பியாண்டார் நம்பி   திருத்தொண்டர் திருவந்தாதி  
ஊர்மதில் மூன்றட்ட வுத்தமற்
கென் றோருயர்தவத்தோன்
தார்மலர் கொய்யா வருபவன்
தண்டின் மலர்பறித்த
ஊர்மலை மேற்கொள்ளும் பாக
ருடல்துணி யாக்குமவன்
ஏர்மலி மாமதில் சூழ்கரு
வூரில் எறிபத்தனே.

12.110   12 st/nd Thirumurai   Song # 22   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
ஊர்தொறும் பலிகொண் டுய்க்கும்
ஒருவன தருளி னாலே
பாரினில் ஆர்ந்த செல்வம்
உடையராம் பண்பில் நீடிச்
சீருடை அடிசில் நல்ல
செழுங்கறி தயிர்நெய் பாலால்
ஆர்தரு காதல் கூர
அடியவர்க் குதவும் நாளில்.
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000