சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:         (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் ஊழி
ஊழி     ஊழிதொ     ஊழிதோ     ஊழிகள்     ஊழியும்     ஊழித்     ஊழியார்;     ஊழிதொறு    
2.059   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊழி ஆய பாரில் ஓங்கும் உயர் செல்வக்
காழி ஈசன் கழலே பேணும் சம்பந்தன்,
தாழும் மனத்தால், உரைத்த தமிழ்கள் இவை வல்லார்,
வாழி நீங்கா வானோர் உலகில் மகிழ்வாரே.

2.096   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊழி ஆனவை பலவும் ஒழித்திடும் காலத்தில் ஓங்கு...........

2.102   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊழி அந்தத்தில், ஒலிகடல் ஓட்டந்து, இவ் உலகங்கள்
அவை மூட,
ஆழி, எந்தை! என்று அமரர்கள் சரண்புக, அந்தரத்து
உயர்ந்தார் தாம்,
யாழின் நேர் மொழி ஏழையோடு இனிது உறை இன்பன்,
எம்பெருமானார்,
வாழி மா நகர்ச்சிரபுரம் தொழுது எழ, வல்வினை
அடையாவே.

2.114   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊழி ஊழி உணர்வார்கள், வேதத்தின் ஒண் பொருள்களால்,
வாழி, எந்தை! என வந்து இறைஞ்சும் இடம் என்பரால்
மேழித் தாங்கி உழுவார்கள் போல(வ்), விரை தேரிய,
கேழல் பூழ்தி, கிளைக்க, மணி சிந்தும் கேதாரமே.

3.053   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊழி ஊழி வையகத்து உயிர்கள் தோற்றுவானொடும்,
ஆழியானும், காண்கிலா ஆனைக்காவில் அண்ணலை,
காழி ஞானசம்பந்தன் கருதிச் சொன்ன பத்து இவை
வாழி ஆகக் கற்பவர் வல்வினைகள் மாயுமே.

3.061   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊழிகள் ஆய், உலகு ஆய், ஒருவர்க்கும் உணர்வு அரியான்;
போழ் இள வெண்மதியும் புனலும்(ம்) அணி புன் சடையான்;
யாழின் மொழி உமையாள் வெருவ(வ்), எழில் வெண் மருப்பின்
வேழம் உரித்த பிரான்; விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே.

3.107   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊழியும் இன்பமும் காலம் ஆகி, உயரும் தவம் ஆகி,
ஏழ் இசையின் பொருள், வாழும் வாழ்க்கை வினையின் புணர்ப்பு ஆகி,
நாழிகையும் பல ஞாயிறு ஆகி, நளிர் நாரையூர் தன்னில்
வாழியர், மேதகு மைந்தர், செய்யும் வகையின் விளைவு
ஆமே.

4.004   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஊழி அளக்க வல்லானும், உகப்பவர் உச்சி உள்ளானும்,
தாழ் இளஞ் செஞ்சடையானும், தண்ணம் ஆர் திண் கொடியானும்,
தோழியர் தூது இடையாட, தொழுது அடியார்கள் வணங்க,
ஆழி வளைக் கையினானும்-ஆரூர் அமர்ந்த அம்மானே.

4.013   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஊழித் தீ ஆய் நின்றாய்! உள்குவார் உள்ளத்தாய்!
வாழித் தீ ஆய் நின்றாய்! வாழ்த்துவார் வாயானே!
பாழித் தீ ஆய் நின்றாய்! படர் சடை மேல் பனிமதியம்
ஆழித் தீ ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!

4.036   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஊழியார்; ஊழிதோறும் உலகினுக்கு ஒருவர் ஆகிப்
பாழியார்; பாவம் தீர்க்கும் பராபரர்; பரம் அது ஆய,
ஆழியான் அன்னத்தானும் அன்று அவர்க்கு அளப்ப(அ) ரீய,
பாழியார்-பரவி ஏத்தும் பழனத்து எம் பரமனாரே.

5.028   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஊழி வண்ணமும், ஒண்சுடர் வண்ணமும்,
வேழ் ஈர் உரி போர்த்தது ஓர் வண்ணமும்,
வாழித் தீ உரு ஆகிய வண்ணமும்,
ஆழி வண்ணமும், ஆவர்-ஐயாறரே.

7.100   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஊழிதொறு ஊழி முற்றும்(ம்) உயர் பொன் நொடித்தான்மலையை,
சூழ் இசை இன் கரும்பின் சுவை நாவல ஊரன் சொன்ன,
ஏழ் இசை இன் தமிழால் இசைந்து ஏத்திய பத்தினையும்,
ஆழி-கடல்(ல்) அரையா! அஞ்சையப்பர்க்கு அறிவிப்பதே!

10.208   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
ஊழி வலஞ்செய்தங் கோரும் ஒருவற்கு
வாழி சதுமுகன் வந்து வெளிப்படும்
வீழித் தலைநீர் விதித்தது காவெனும்
ஊழிக் கதிரோன் ஒளியைவென் றானே. 9,

10.321   10 st/nd Thirumurai   Song # 24   திருமூலர்   திருமந்திரம்  
ஊழி பிரியா திருக்கின்ற யோகிகள்
நாழிகை யாக நமனை அளப்பர்கள்
ஊழி முதலாய் உயர்வார் உலகினில்
தாழஅல் லார்இச் சசிவன்னர் தாமே. 

10.507   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
ஊழிதொ றூழி யுணர்ந்தவர்க் கல்லது
ஊழிதொ றூழி உணரவுந் தானொட்டான்
ஆழி அமரும் அரிஅயன் என்றுளார்
ஊழி முயன்றும்ஓர் உச்சியு ளானே.

10.711   10 st/nd Thirumurai   Song # 21   திருமூலர்   திருமந்திரம்  
ஊழிதோ றூழி உணர்பவர்க் கல்லது
ஊழிவ் வுயிரை உணரவுந் தானொட்டா(து)
ஆழி அமரும் அரிஅயன் என்றுளோர்
ஊழி கடந்தும்ஓர் உச்சி யுளானே. 12,

12.280   12 st/nd Thirumurai   Song # 162   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஊழி முதல்வர்க்
குரிமைத் தொழிற்சிறப்பால்
வாழிதிருத் தில்லைவாழ்
அந்தணரை முன்வைத்தே
ஏழிசையும் ஓங்க
எடுத்தார் எமையாளும்
காழியர்தங் காவலனார்
கற்றாங் கெரியோம்பி.
12.280   12 st/nd Thirumurai   Song # 551   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஊழி முடிவில் உயர்ந்த வெள்ளத்
தோங்கிய காழி உயர் பதியில்
வாழி மறையவர் தாங்க ளெல்லாம்
வந்து மருங்கணைந் தார்கள் என்ன
வீழி மிழலையின் வேதி யர்கள்
கேட்டுமெய்ஞ் ஞானமுண் டாரை முன்னா
ஏழிசை சூழ்மறை எய்த வோதி
எதிர்கொள் முறைமையிற் கொண்டு புக்கார்.
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000