சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் எண்ணா
எண்ணார்     எண்ணா     எண்ணானை,     எண்ணாத     எண்ணாது    
1.042   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எண்ணார் தங்கள் மும்மதில் வேவ ஏ வலம் காட்டிய எந்தை,
விண்ணோர் சாரத் தன் அருள் செய்த வித்தகர், வேத முதல்வர்,
பண் ஆர் பாடல் ஆடல் அறாத பசுபதி, ஈசன், ஓர் பாகம்
பெண் ஆண் ஆய வார்சடை அண்ணல் பேணு பெருந்துறையாரே.

1.046   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எண்ணார் எயில் எய்தான்; இறைவன்; அனல் ஏந்தி;
மண் ஆர் முழவு அதிர, முதிரா மதி சூடி,
பண் ஆர் மறை பாட, பரமன்-அதிகையுள்,
விண்ணோர் பரவ, நின்று ஆடும், வீரட்டானத்தே.

1.065   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எண்ணார் எயில்கள் மூன்றும் சீறும் எந்தைபிரான், இமையோர்
கண் ஆய் உலகம் காக்க நின்ற கண்ணுதல், நண்ணும் இடம்
மண் ஆர் சோலைக் கோல வண்டு வைகலும் தேன் அருந்தி,
பண் ஆர் செய்யும் பட்டினத்துப் பல்லவனீச்சுரமே.

1.119   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எண்ணார் மும்மதில் எய்த இமையா முக்கண்
பண் ஆர் நால்மறை பாடும் பரமயோகி,
கண் ஆர் நீறு அணி மார்பன்-கள்ளில் மேயான்,
பெண் ஆண் ஆம் பெருமான், எம் பிஞ்ஞகனே.

2.016   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எண்ணானை, எண் அமர் சீர் இமையோர்கட்குக்
கண்ணானை, கண் ஒருமூன்றும் உடையானை,
மண்ணானை, மா வயல் சூழ்ந்த மணஞ்சேரிப்
பெண்ணானை, பேச நின்றார் பெரியோர்களே.
3.901   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எண்ணாத அரக்கன் உரத்தை நெரித்துப்
பண்ணார் தருபாடல் உகந்தவர் பற்றாம்
கண்ணார் விழவிற் கடிவீதிகள் தோறும்
விண்ணோர் களும்வந் திறைஞ்சும் விடைவாயே.

4.094   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
எண்ணாது அமரர் இரக்கப் பரவையுள் நஞ்சம் உண்டாய்!
திண் ஆர் அசுரர் திரிபுரம் தீ எழச் செற்றவனே!
பண் ஆர்ந்து அமைந்த பொருள்கள் பயில் பாதிரிப்புலியூர்க்
கண் ஆர் நுதலாய்!-கழல் நம் கருத்தில் உடையனவே.

7.052   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
எண்ணார் தங்கள் எயில் எய்த எந்தாய்! எந்தை பெருமானே!
கண் ஆய் உலகம் காக்கின்ற கருத்தா! திருத்தல் ஆகாதாய்!
பண் ஆர் இசைகள் அவை கொண்டு பலரும் ஏத்தும் பழையனூர்
அண்ணா! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே.

10.308   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதனைக் கண்டறி வாரில்லை
உண்ணாடி உள்ளே ஒளிபெற நோக்கிடில்
கண்ணாடி போலக் கலந்துநின் றானே.

12.360   12 st/nd Thirumurai   Song # 47   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
எண்ணா தடியேன் மொழியேன்நீர்
அமுது செய்யும் இயல்பதனைக்
கண்ணார் வேட நிறைதவத்தீர்
அருளிச் செய்யுங் கடிதமைக்கத்
தண்ணார் இதழி முடியார்தம்
அடியார் தலைப்பட் டால்தேட
ஒண்ணா தனவும் உளவாகும்
அருமை யில்லை யெனவுரைத்தார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list