சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் கணி
கணிகை     கணிச்சி     கணி     கணியார்     கணியெரி    
2.087   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கணிகை ஒர் சென்னி மன்னும், மது வன்னி கொன்றை
மலர் துன்று செஞ்சடையினான்;
பணிகையின் முன் இலங்க, வரு வேடம் மன்னு பல ஆகி
நின்ற பரமன்;
அணுகிய வேத ஓசை அகல் அங்கம் ஆறின் பொருள்
ஆன ஆதி அருளான்
நணுகிய தொண்டர் கூடி மலர் தூவி ஏத்தும் நறையூரில்
நம்பன் அவனே.

2.098   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கணிச்சி அம்படைச் செல்வா! கழிந்தவர்க்கு ஒழிந்த சீர்
துணிச் சிரக் கிரந்தையாய்! கரந்தையாய்! துருத்தியாய்!
அணிப்படும் தனிப் பிறைப் பனிக் கதிர்க்கு அவாவும் நல்
மணிப் படும் பைநாகம் நீ மகிழ்ந்த அண்ணல் அல்லையே?

3.018   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கணி அணி மலர்கொடு, காலை மாலையும்
பணி அணிபவர்க்கு அருள் செய்த பான்மையர்,
தணி அணி உமையொடு தாமும் தங்கு இடம்
மணி அணி கிளர் வைகல் மாடக்கோயிலே.

4.008   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கணி வளர் வேங்கையோடு கடி திங்கள் கண்ணி, கழல்கால் சிலம்ப, அழகு ஆர்
அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணம் இயலார்; ஒருவர்; இருவர்;
மணி கிளர் மஞ்ஞை ஆல, மழை ஆடு சோலை மலையான் மகட்கும் இறைவர்
அணி கிளர் அன்ன வண்ணம், அவள் வண்ண வண்ணம்; அவர் வண்ண வண்ணம், அழலே.

8.213   8 st/nd Thirumurai   Song # 30   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
கணியார் கருத்தின்று முற்றிற்
   றியாஞ்சென்றுங் கார்ப்புனமே
மணியார் பொழில்காண் மறத்திர்கண்
   டீர்மன்னு மம்பலத்தோன்
அணியார் கயிலை மயில்காள்
   அயில்வே லொருவர்வந்தால்
துணியா தனதுணிந் தாரென்னு
   நீர்மைகள் சொல்லுமினே.

9.002   9 st/nd Thirumurai   Song # 8   திருமாளிகைத் தேவர்   திருவிசைப்பா  
கணியெரி விசிறு கரம்துடி விடவாய்க்
கங்கணம் செங்கைமற் றபயம்
பிணிகெட இவைகண்(டு) உன்பெரு நடத்திற்
பிரிவிலார் பெரும்பற்றப் புலியூர்த்
திணிமணி நீல கண்டத்(து)என் அமுதே !
சீர்கொள்சிற் றம்பலக் கூத்தா !
அணிமணி முறுவல் பவளவாய்ச் செய்ய
சோதியுள் அடங்கிற்(று)என் அறிவே.


This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list