சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் கருப்
கருப்பம்     கருப்புச்     கருப்புரு     கருப்புவில்     கருப்பு     கருப்     கருப்பினம்    
1.132   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கருப்பம் மிகும் உடல் அடர்த்து, கால் ஊன்றி,
கை மறித்து, கயிலை என்னும்
பொருப்பு எடுக்கல் உறும் அரக்கன் பொன் முடி தோள்
நெரித்த விரல் புனிதர்கோயில்
தருப்பம் மிகு சலந்தரன் தன் உடல் தடிந்த
சக்கரத்தை வேண்டி, ஈண்டு
விருப்பொடு மால் வழிபாடு செய்ய, இழி
விமானம் சேர் மிழலை ஆமே.

3.007   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கருப்பு நல் வார் சிலைக் காமன் வேவக் கடைக்கண்டானும்,
மருப்பு நல் ஆனையின் ஈர் உரி போர்த்த மணாளனும்
பொருப்பு அன மா மணி மாடம் ஓங்கும் புகலி(ந்) நகர்,
விருப்பின் நல்லாளொடும் வீற்றிருந்த விமலன் அன்றே!

4.074   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கருப் பனைத் தடக்கை வேழக் களிற்றினை உரித்த கண்டன்,
விருப்பனை, விளங்கு சோதி வியன் கயிலாயம் என்னும்
பொருப்பனை, பொருப்பன் மங்கை பங்கனை, அங்கை ஏற்ற
நெருப்பனை,-நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே!

5.042   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கருப்பு வெஞ்சிலைக் காமனைக் காய்ந்தவன்;
பொருப்பு வெஞ்சிலையால் புரம் செற்றவன்;
விருப்பன் மேவிய வேட்களம் கைதொழுது
இருப்பன் ஆகில், எனக்கு இடர் இல்லையே.

8.223   8 st/nd Thirumurai   Song # 4   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
கருப்பினம் மேவும் பொழிற்றில்லை
   மன்னன்கண் ணாரருளால்
விருப்பினம் மேவச்சென் றார்க்குஞ்சென்
   றல்குங்கொல் வீழ்பனிவாய்
நெருப்பினம் மேய்நெடு மாலெழில்
   தோன்றச்சென் றாங்குநின்ற
பொருப்பின மேறித் தமியரைப்
   பார்க்கும் புயலினமே.

11.008   11 st/nd Thirumurai   Song # 96   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
கருப்புச் சிலையும் மலர் அம்பும் தேரும்
ஒருப்பட்டு உடன்எழுதும் போழ்தில் விருப்பூரும்

11.021   11 st/nd Thirumurai   Song # 3   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை  
கருப்புச் சிலை அநங்கன் கட்டழகு சுட்ட
நெருப்புத் திருநெற்றி நாட்டம் திருச்சடையில்
திங்கள் புரையும் திரள்பொன் திருமேனி
எங்கள் இமையோர் இறைக்கு.

11.032   11 st/nd Thirumurai   Song # 46   நம்பியாண்டார் நம்பி   கோயில் திருப்பண்ணியர் விருத்தம்  
கருப்புரு வத்திரு வார்த்தைகள்
கேட்டலும் கண்பனியேன்
விருப்புரு வத்தினொ டுள்ளம்
உருகேன் விதிர்விதிரேன்
இருப்புரு வச்சிந்தை யென்னைவந்
தாண்டது மெவ்வணமோ
பொருப்புரு வப்புரி சைத்தில்லை
யாடல் புரிந்தவனே.

12.110   12 st/nd Thirumurai   Song # 34   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
கருப்புவில் லோனைக் கூற்றைக்
காய்ந்தவர் கடவூர் மன்னி
விருப்புறும் அன்பு மேன்மேல்
மிக்கெழும் வேட்கை கூர
ஒருப்படும் உள்ளத் தன்மை
உண்மையால் தமக்கு நேர்ந்த
திருப்பணி பலவும் செய்து
சிவபத நிழலில் சேர்ந்தார்.
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000