சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் கரும்பு
கரும்பும்செந்     கரும்பு     கரும்பு,    
3.036   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கரும்பு, தேன், கட்டியும், கதலியின் கனிகளும்,
அரும்பு நீர் முகலியின் கரையினில், அணி மதி
ஒருங்கு வார் சடையினன், காளத்தி ஒருவனை,
விரும்புவார் அவர்கள் தாம் விண்ணுலகு ஆள்வரே.

3.090   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கரும்பு அன வரிசிலைப் பெருந்தகைக் காமனைக் கவின் அழித்த
சுரும்பொடு தேன் மல்கு தூ மலர்க்கொன்றை அம் சுடர்ச் சடையார்
அரும்பு அன வனமுலை அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,
விரும்பு இடம் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.

3.100   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கரும்பு அமர் வில்லியைக் காய்ந்து, காதல் காரிகை மாட்டு அருள
அரும்பு அமர் கொங்கை ஓர்பால் மகிழ்ந்த அற்புதம் செப்ப(அ)ரிதால்;
பெரும் பகலே வந்து, என் பெண்மை கொண்டு, பேர்ந்தவர் சேர்ந்த இடம்
சுரும்பு அமர் சோலைகள் சூழ்ந்த செம்மைத் தோணிபுரம் தானே.

4.102   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கரும்பு பிடித்தவர் காயப்பட்டார்; அங்கு ஓர் கோடலியால்
இரும்பு பிடித்தவர் இன்பு உறப்பட்டார்; இவர்கள் நிற்க,
அரும்பு அவிழ் தண் பொழில் சூழ் அணி ஆரூர் அமர்ந்த பெம்மான்
விரும்பு மனத்தினை, யாது ஒன்று? நான் உன்னை வேண்டுவனே.

5.003   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கரும்பு ஒப்பானை, கரும்பினில் கட்டியை,
விரும்பு ஒப்பானை, விண்ணோரும் அறிகிலா
அரும்பு ஒப்பானை, அரத்துறை மேவிய
சுரும்பு ஒப்பானை, - கண்டீர்-நாம் தொழுவதே.

6.001   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கரும்பு அமரும் மொழி மடவாள் பங்கன் தன்னை,
கன வயிரக் குன்று அனைய காட்சியானை,
அரும்பு அமரும் பூங்கொன்றைத்தாரான் தன்னை,
அருமறையோடு ஆறு அங்கம் ஆயினானை,
சுரும்பு அமரும் கடிபொழில்கள் சூழ் தென் ஆரூர்ச்
சுடர்க்கொழுந்தை, துளக்கு இல்லா விளக்கை, மிக்க
பெரும்பொருளை, பெரும்பற்றப்புலியூரானை, -
பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

6.079   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கரும்பு இருந்த கட்டிதனை, கனியை, தேனை, கன்றாப்பின் நடுதறியை, காறையானை,
இரும்பு அமர்ந்த மூ இலைவேல் ஏந்தினானை, என்னானை, தென் ஆனைக்காவான் தன்னை,
சுரும்பு அமரும் மலர்க்கொன்றை சூடினானை, தூயானை, தாய் ஆகி உலகுக்கு எல்லாம்
தரும் பொருளை, தலையாலங்காடன் தன்னை, சாராதே சால நாள் போக்கினேனே!.

10.927   10 st/nd Thirumurai   Song # 19   திருமூலர்   திருமந்திரம்  
கரும்பும்செந் தேனும் கலந்ததோர் காயத்தில்
அரும்பும் அக் கந்தமும் ஆகிய ஆனந்தம்
விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின்
கரும்பும்முன் கைத்தது தேனும் புளித்ததே.

12.280   12 st/nd Thirumurai   Song # 153   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
கரும்பு செந்நெல்பைங் கமுகொடு
கலந்துயர் கழனியம் பணைநீங்கி
அரும்பு மென்மலர் தளிர்பல
மூலமென் றனைத்தின் ஆகரமான
மருங்கில் நந்தன வனம்பணிந்
தணைந்தனர் மாடமா ளிகையோங்கி
நெருங்கு தில்லைசூழ் நெடுமதில்
தென்திரு வாயில் நேரணித்தாக.
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000