சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் கற்ற
கற்றாங்கு     கற்று     கற்றவர்     கற்றைச்     கற்றவர்கள்     கற்றறி     கற்றுஞ்     கற்ற     கற்றானஞ்     கற்றைப்     கற்றநன்     கற்றொகு     கற்றை     கற்றது     கற்றனன்,     கற்றிலேன்,     கற்றார்     கற்றுக்     கற்றானை,     கற்றிலாதானை,     கற்றில    
1.080   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கற்றாங்கு எரி ஓம்பி, கலியை வாராமே
செற்றார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய
முற்றா வெண் திங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா, பாவமே.

1.097   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கற்று அறிவு எய்தி, காமன் முன் ஆகும் உகவு எல்லாம்
அற்று, அரனே! நின் அடி சரண்! என்னும் அடியோர்க்குப்
பற்று அது ஆய பாசுபதன் சேர் பதி என்பர்
பொந்திகழ் மாடத்து ஒளிகள் நிலாவும் புறவமே.

1.113   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கற்றவர் திரு வல்லம் கண்டு சென்று,
நல்-தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன
குற்றம் இல் செந்தமிழ் கூற வல்லார்
பற்றுவர், ஈசன் பொன்பாதங்களே.

1.117   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கற்றைச் சடையது, கங்கணம் முன்கையில்-திங்கள் கங்கை;
பற்றித்து, முப்புரம், பார் படைத்தோன் தலை, சுட்டது பண்டு;
எற்றித்து, பாம்பை அணிந்தது, கூற்றை; எழில் விளங்கும்
வெற்றிச் சிலைமதில் வேணுபுரத்து எங்கள் வேதியரே.

1.129   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கழுமலத்துள்
ஈசன்தன் கழல்மேல், நல்லோர்
நல்-துணை ஆம் பெருந்தன்மை ஞானசம்
பந்தன்தான் நயந்து சொன்ன
சொல்-துணை ஓர் ஐந்தினொடு ஐந்து இவை வல்லார்,
தூமலராள் துணைவர் ஆகி,
முற்று உலகம் அது கண்டு, முக்கணான்
அடி சேர முயல்கின்றாரே.

2.029   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கற்ற மணர், உற்று உலவு தேரர், உரைசெய்த
குற்றம் மொழி கொள்கைஅது இலாத பெருமான் ஊர்
பொன் தொடி மடந்தையரும், மைந்தர், புலன் ஐந்தும்,
செற்றவர், விருப்புஉறு திருப் புகலிஆமே.

2.067   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கற்றது உறப் பணி செய்து காண்டும் என்பார் அவர்தம்
கண்;
முற்று இது அறிதும் என்பார்கள் முதலியர்; வேதபுராணர்;
மற்று இது அறிதும் என்பார்கள் மனத்து இடையார்; பணி
செய்ய,
பெற்றி பெரிதும் உகப்பார் பெரும்புலியூர் பிரியாரே.

2.098   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கற்று முற்றினார் தொழும் கழுமலத்து அருந்தமிழ்
சுற்றும் முற்றும் ஆயினான் அவன் பகர்ந்த சொற்களால்,
பெற்றம் ஒன்று உயர்த்தவன் பெருந் துருத்தி பேணவே,
குற்றம் முற்றும் இன்மையின், குணங்கள் வந்து கூடுமே.

3.086   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கற்ற நல்மறை பயில் அடியவர் அடி தொழு கவின் உறு
சிற்றிடையவளொடும் இடம் என உறைவது ஒர் சேறைமேல்,
குற்றம் இல் புகலியுள் இகல் அறு ஞானசம்பந்தன
சொல்,-தகவு உற மொழிபவர் அழிவு இலர்; துயர் தீருமே.

4.047   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கற்றனன், கயிலை தன்னைக் காண்டலும் அரக்கன் ஓடிச்
செற்றவன் எடுத்த ஆறே, சேயிழை அஞ்ச, ஈசன்
உற்று இறை ஊன்றா முன்னம் உணர்வு அழி வகையால், வீழ்ந்தான்;
மற்று இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!

4.052   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கற்ற தேல் ஒன்றும் இல்லை; காரிகையாரோடு ஆடிப்
பெற்ற தேல் பெரிதும் துன்பம்; பேதையேன் பிழைப்பினாலே
முற்றினால் ஐவர் வந்து முறை முறை துயரம் செய்ய
அற்று நான் அலந்து போனேன் ஆரூர் மூலட்டனீரே!

4.058   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கற்ற மா மறைகள் பாடிக் கடை தொறும் பலியும் தேர்வார்
வற்றல் ஓர் தலை கை ஏந்தி, வானவர் வணங்கி வாழ்த்த,
முற்ற ஓர் சடையில் நீரை ஏற்ற முக்கண்ணர்-தம்மைப்
பற்றினார்க்கு அருள்கள் செய்து, பருப்பதம் நோக்கினாரே.

4.078   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கற்றிலேன், கலைகள் ஞானம்; கற்றவர் தங்களோடும்
உற்றிலேன்; ஆதலாலே உணர்வுக்கும் சேயன் ஆனேன்;
பெற்றிலேன்; பெருந் தடங்கண் பேதையார் தமக்கும் பொல்லேன்;
எற்று உளேன்? இறைவனே!-நான் என் செய்வான் தோன்றினேனே!

4.103   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கற்றார் பயில் கடல் நாகைக்காரோணத்து எம் கண்ணுதலே!
வில்-தாங்கிய கரம் வேல் நெடுங்கண்ணி வியன் கரமே;
நல்-தாள் நெடுஞ் சிலை நாண் வலித்த(க்) கரம் நின் கரமே;
செற்றார் புரம் செற்ற சேவகம் என்னை கொல்? செப்புமினே!

5.072   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கற்றைச் செஞ்சடைக் காய் கதிர் வெண் திங்கள்
பற்றிப் பாம்பு உடன் வைத்த பராபரன்
நெற்றிக்கண் உடை நீலக்குடி அரன்;
சுற்றித் தேவர் தொழும் கழல் சோதியே.

5.091   5 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கற்றுக் கொள்வன வாய் உள, நா உள;
இட்டுக் கொள்வன பூ உள; நீர் உள;
கற்றைச் செஞ்சடையான் உளன்; நாம் உளோம்;
எற்றுக்கோ, நமனால் முனிவுண்பதே?

6.001   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கற்றானை, கங்கை வார்சடையான் தன்னை, காவிரி
சூழ் வலஞ்சுழியும் கருதினானை,
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள் செய்வானை,
ஆரூரும் புகுவானை, அறிந்தோம் அன்றே;
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதானை, வானவர்கள்
எப்பொழுதும் வணங்கி ஏத்தப்-
பெற்றானை, பெரும்பற்றப்புலியூரானை, -பேசாத நாள்
எல்லாம் பிறவா நாளே.

6.032   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி!
கழல் அடைந்தார் செல்லும் கதியே, போற்றி!
அற்றவர்கட்கு ஆர் அமுதம் ஆனாய், போற்றி!
அல்லல் அறுத்து அடியேனை ஆண்டாய், போற்றி!
மற்று ஒருவர் ஒப்பு இல்லா மைந்தா, போற்றி!
வானவர்கள் போற்றும் மருந்தே, போற்றி!
செற்றவர் தம் புரம் எரித்த சிவனே,
போற்றி! திருமூலட்டானனே, போற்றி போற்றி!.

7.034   7 st/nd Thirumurai   Song # 9   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கற்றிலாதானை, கற்று நல்லனே!, காமதேவனை ஒக்குமே ,
முற்றிலாதானை, முற்றனே!, என்று மொழியினும் கொடுப்பார் இலை;
பொத்தில் ஆந்தைகள் பாட்டு அறாப் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்!
அத்தனாய் அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.

7.051   7 st/nd Thirumurai   Song # 9   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கற்று உள வான் கனி ஆய கண்ணுதலை, கருத்து ஆர
உற்று உளன் ஆம் ஒருவனை, முன் இருவர் நினைந்து இனிது ஏத்தப்-
பெற்றுளன் ஆம் பெருமையனை, பெரிது அடியேன் கை அகன்றிட்டு
எற்று உளனாய்ப் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?

8.138   8 st/nd Thirumurai   Song # 5   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
கற்று அறியேன் கலை ஞானம்; கசிந்து உருகேன்; ஆயிடினும்,
மற்று அறியேன் பிற தெய்வம்; வாக்கு இயலால், வார் கழல் வந்து
உற்று, இறுமாந்து இருந்தேன்; எம்பெருமானே! அடியேற்குப்
பொன் தவிசு நாய்க்கு இடும் ஆறு அன்றே, நின் பொன் அருளே!

8.212   8 st/nd Thirumurai   Song # 8   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
கற்றில கண்டன்னம் மென்னடை
   கண்மலர் நோக்கருளப்
பெற்றில மென்பிணை பேச்சுப்
   பெறாகிள்ளை பிள்ளையின்றொன்
றுற்றில ளுற்ற தறிந்தில
   ளாகத் தொளிமிளிரும்
புற்றில வாளர வன்புலி
   யூரன்ன பூங்கொடியே.

9.005   9 st/nd Thirumurai   Song # 2   சேந்தனார்   திருவிசைப்பா  
கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்
   கரையிலாக் கருணைமா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை
   மதிப்பவர் மனமணி விளக்கைச்
செற்றவர் புரங்கள் செற்றஎம் சிவனைத்
   திருவீழி மிழலைவீற் றிருந்த
கொற்றவன் றன்னைக் கண்டுகண் டுள்ளம்
   குளிரஎன் கண்குளிர்ந் தனவே.

10.123   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
கற்றறி வாளர் கருதிய காலத்துக்
கற்றறி வாளர் கருத்திலோர் கண்ணுண்டு
கற்றறி வாளர் கருதி உரைசெய்யுங்
கற்றறி காட்டக் கயலுள வாக்குமே.

10.125   10 st/nd Thirumurai   Song # 9   திருமூலர்   திருமந்திரம்  
கற்றுஞ் சிவஞானம் இல்லாக் கலதிகள்
சுற்றமும் வீடார் துரிசறார் மூடர்கள்
மற்றும் பலதிசை காணார் மதியிலோர்
கற்றன்பில் நிற்போர் கணக்கறிந் தார்களே. 

10.730   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
கற்ற பசுக்கள் கதறித் திரியினும்
கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும்
உற்ற பசுக்கள் ஒருகுடம் பால் போதும்;
மற்றைப் பசுக்கள் வறள்பசு தானே.

11.022   11 st/nd Thirumurai   Song # 90   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருவந்தாதி  
கற்றானஞ் சாடுகா வாலி களந்தைக்கோன்
கற்றானைக் கல்லாத நாளெல்லாம் கற்றான்
அமரர்க் கமரர் அரக்கடிமை பூண்டார்
அமரர்க் கமரரா வார்.

11.029   11 st/nd Thirumurai   Song # 38   பட்டினத்துப் பிள்ளையார்   திருஏகம்பமுடையார் திருவந்தாதி  
கற்றைப் பவளச் சடைவலம்
பூக்கமழ் கொன்றையந்தார்
முற்றுற் றிலாமதி யின் கொழுந்
தேகம்பர் மொய்குழலாம்
மற்றைத் திசையின் மணிப்பொற்
கொழுந்தத் தரங்கழுநீர்
தெற்றிப் பொலிகின்ற சூட்டழ
காகித் திகழ்தருமே.

11.033   11 st/nd Thirumurai   Song # 6   நம்பியாண்டார் நம்பி   திருத்தொண்டர் திருவந்தாதி  
கற்றநன் மெய்த்தவன் போலொரு
பொய்த்தவன் காய்சினத்தால்
செற்றவன் தன்னை யவனைச்
செறப்புக லுந்திருவாய்
மற்றவன் தத்தாநமரே
யெனச் சொல்லி வானுலகம்
பெற்றவன் சேதிபன் மெயப்பொரு
ளாமென்று பேசுவரே.

11.038   11 st/nd Thirumurai   Song # 19   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்  
கற்றொகு புரிசைக் காழியர் நாத
நற்றொகு கீர்த்தி ஞானசம் பந்த
நின்பெருங் கருணையை நீதியின்
அன்புடை அடியவர்க் கருளுவோய் எனவே.

12.280   12 st/nd Thirumurai   Song # 1036   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
கற்றை வார்சடை முடியினார்
அடியவர் கலப்பில்
உற்ற செய்கையில் ஒழிவின்றி
உருகிய மனமும்
பற்றி லாநெறிப் பரசம
யங்களைப் பாற்றுஞ்
செற்ற மேவிய சீலமும்
உடையராய்த் திகழ்வார்.
12.670   12 st/nd Thirumurai   Song # 5   சேக்கிழார்   மன்னிய சீர்ச் சருக்கம்  
கற்றை வேணி முடியார்தங்
கழல்சேர் வதற்குக் கலந்தவினை
செற்ற நேசர் கழல்வணங்கிச்
சிறப்பால் முன்னைப் பிறப்புணர்ந்து
பெற்றம் உயர்த்தார்க் காலயங்கள்
பெருக அமைத்து மண்ணாண்ட
கொற்ற வேந்தர் கோச்செங்கட்
சோழர் பெருமை கூறுவாம்.


This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list