சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் கலவ
கலவிக்     கலவ     கலவமாமயில்     கலவமஞ்ஞை     கலவு     கலவம்    
2.052   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கலவ மா மயிலாள் ஒர் பங்கனைக் கண்டு, கண்மிசை நீர் நெகிழ்த்து, இசை
குலவும் ஆறு வல்லார் குடிகொண்ட கோட்டாற்றில்,
நிலவ மா மதி சேர் சடை உடை நின்மலா! என உன்னுவார் அவர்
உலவு வானவரின் உயர்வு ஆகுவது உண்மையதே.

3.002   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கலவமாமயில் ஆர் இயலாள்,கரும்பு அன்ன மென்மொழியாள், கதிர் வாள்நுதல்
குலவு பூங்குழலாள் உமை கூறனை, வேறு உரையால்
அலவை சொல்லுவார் தேர் அமண் ஆதர்கள்
ஆக்கினான்தனை, நண்ணலும் நல்கும் நன்
புலவர்தாம் புகழ் பொன் பதி பூந்தராய் போற்றுதுமே.

3.046   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கலவமஞ்ஞை உலவும் கருகாவூ
நிலவு பாடல் உடையான் தன நீள்கழல்
குலவு ஞானசம்பந்தன் செந்தமிழ்
சொல வலார் அவர் தொல்வினை தீருமே.

3.050   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கலவு சீவரத்தார், கையில் உண்பவர்
குலவமாட்டாக் குழகன் உறைவு இடம்
சுலவு மா மதிலும், சுதை மாடமும்,
நிலவு தண்டலை நீணெறி; காண்மினே!

3.066   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கலவம் சேர் கழிக் கானல் கதிர் முத்தம் கலந்து எங்கும்
அலவன் சேர் அணை வாரிக் கொணர்ந்து எறியும் அகன் துறைவாய்
நிலவு அம் சேர் நுண் இடைய நேரிழையாள் அவளோடும்
திலகம் சேர் நெற்றியினார் திரு வேட்டக்குடியாரே.

7.091   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கலவ மயில் போல் வளைக்கை நல்லார்
பலரும் பரவும் பவளப்படியான்,
உலகின் உள்ளார் வினைகள் தீர்ப்பான்,-
உலவும் திரைவாய் ஒற்றியூரே.

11.010   11 st/nd Thirumurai   Song # 25   நக்கீரதேவ நாயனார்   திருஈங்கோய்மலை எழுபது  
கலவிக் களிறசைந்த காற்றெங்குங் காணா
திலைகைக்கொண் டேந்திக்கால் வீச உலவிச்சென்
றொண்பிடிகாற் றேற்றுகக்கும் ஈங்கோயே பாங்காய
வெண்பொடிநீற் றான்மருவும் வெற்பு.

12.280   12 st/nd Thirumurai   Song # 149   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
கலவ மென்மயில் இனங்களித்
தழைத்திடக் கடிமணக் குளிர்கால்வந்
துலவி முன்பணிந் தெதிர்கொளச்
கிளர்ந்தெழுந் துடன்வருஞ் சுரும்பார்ப்ப
இலகு செந்தளிர் ஒளிநிறந்
திகழ்தர இருகுழை புடையாட
மலர்மு கம்பொலிந் தசையமென்
கொம்பர்நின் றாடுவ மலர்ச்சோலை.
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000