சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் கலி
கலி     கலியின்     கலியேன்,    
1.079   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கலி கெழு பார் இடை ஊர் என உளது ஆம் கழுமலம் விரும்பிய
  கோயில் கொண்டவர் மேல்,
வலி கெழு மனம் மிக வைத்தவன், மறை சேர்வரும் கலை
ஞானசம்பந்தன் தமிழின்
ஒலிகெழுமாலை என்று உரைசெய்த பத்தும் உண்மையினால்
  நினைந்து ஏத்த வல்லார்மேல்
மெலி குழு துயர் அடையா; வினை சிந்தும்; விண்ணவர் ஆற்றலின்
மிகப் பெறுவாரே.

2.009   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கலியின் வல் அமணும், கருஞ்சாக்கியப்பேய்களும்,
நலியும் நாள் கெடுத்து ஆண்ட என் நாதனார் வாழ் பதி
பலியும் பாட்டொடு பண் முழவும், பலஓசையும்,
மலியும் மா மழபாடியை வாழ்த்தி வணங்குமே!

3.011   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கலி படு தண் கடல் நஞ்சம் உண்ட கறைக்கண்டனும்,
புலி அதள் பாம்பு அரைச் சுற்றினானும் புனவாயிலில்,
ஒலிதரு தண்புனலோடு, எருக்கும், மதமத்தமும்,
மெலிதரு வெண்பிறை, சூடி நின்ற விடை ஊர்தியே.

3.041   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கலி ஆர் கச்சி, மலி ஏகம்பம்
பலியால் போற்ற, நலியா, வினையே.

7.015   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கலியேன், மானுட வாழ்க்கை ஒன்று ஆக; கருதிடின் கண்கள் நீர் பில்கும்;
பலி தேர்ந்து உண்பது ஓர் பண்பு கண்டு இகழேன்; பசுவே ஏறிலும் பழியேன்;
வலியே ஆகிலும் வணங்குதல் ஒழியேன்; மாட்டேன்; மறுமையை நினையேன்;
நலியேன் ஒருவரை, நான் உமை அல்லால்; நாட்டியத்தான் குடி நம்பீ!.

7.067   7 st/nd Thirumurai   Song # 11   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கலி வலம் கெட ஆர் அழல் ஓம்பும்-கற்ற நால்மறை முற்று அனல் ஓம்பும்
வலி வலம் தனில் வந்து கண்டு, அடியேன் மன்னும் நாவல் ஆரூரன்-வன்தொண்டன்-
ஒலி கொள் இன் இசைச் செந்தமிழ் பத்தும் உள்ளத்தால் உகந்து ஏத்த வல்லார், போய்,
மெலிவு இல் வான் உலகத்தவர் ஏத்த, விரும்பி விண்ணுலகு எய்துவர் தாமே .

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000