சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் காண
காண்     காண     காணும்     காணநில்     காண்கின்ற     காணகி     காணலு     காணாத     காண்டற்     காணா     காணவல்     காண்பார்க்குங்     காணான்     காணங்கை     காணாய்     காணீர்     காண்டகைய     காண்டகைமை     காண்ட     காணவும்     காண்டலும்     காணுங்     காணி,     காண்டலே     காணியேல்     காண்டனன்     காண்டவன்     காண்டு,     காணல்     காண்பதி     காணீரே    
1.060   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
காண் தகைய செங்கால் ஒண் கழி நாராய்! காதலால்
பூண் தகைய முலை மெலிந்து பொன் பயந்தாள் என்று, வளர்
சேண் தகைய மணி மாடத் திருத் தோணிபுரத்து உறையும்
ஆண்தகையாற்கு இன்றே சென்று அடி அறிய உணர்த்தாயே!

1.090   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
காண உள்குவீர்! வேணுநல்புரத்
தாணுவின் கழல் பேணி, உய்ம்மினே!

1.132   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
காணும் ஆறு அரிய பெருமான் ஆகி,
காலம் ஆய், குணங்கள் மூன்று ஆய்,
பேணு மூன்று உருஆகி, பேர் உலகம்
படைத்து அளிக்கும் பெருமான் கோயில்
தாணு ஆய் நின்ற பரதத்துவனை,
உத்தமனை, இறைஞ்சீர்! என்று
வேணு வார்கொடி விண்ணோர்தமை விளிப்ப
போல் ஓங்கு மிழலை ஆமே.

2.066   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
காண இனியது நீறு; கவினைத் தருவது நீறு;
பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு;
மாணம் தகைவது நீறு; மதியைத் தருவது நீறு;
சேணம் தருவது நீறு; திரு ஆலவாயான் திருநீறே.

3.092   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
காண் தகு மலைமகள் கதிர் நிலா முறுவல் செய்து
அருளவேயும்,
பூண்ட நாகம் புறங்காடு அரங்கா நடம் ஆடல் பேணி
ஈண்டு மா மாடங்கள், மாளிகை, மீது எழு கொடி மதியம்
தீண்டி வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர்
தாமே.

3.110   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
காணி, ஒண் பொருள், கற்றவர்க்கு ஈகை உடைமையோர்
அவர் காதல் செய்யும் நல்-
தோணிவண் புரத்து ஆணி என்பவர் தூ மதியினரே.

4.020   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
காண்டலே கருத்து ஆய் நினைந்திருந்தேன் மனம் புகுந்தாய்; கழல் அடி
பூண்டு கொண்டொழிந்தேன்; புறம் போயினால் அறையோ?-
ஈண்டு மாடங்கள் நீண்ட மாளிகைமேல் எழு கொடி வான் இள (ம்) மதி
தீண்டி வந்து உலவும் திரு ஆரூர் அம்மானே!

4.027   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
காண் இலார் கருத்தில் வாரார்; திருத்தலார்; பொருத்தல் ஆகார்
ஏண் இலார்; இறப்பும் இல்லார்; பிறப்பு இலார்; துறக்கல் ஆகார்
நாண் இலார் ஐவரோடும் இட்டு எனை விரவி வைத்தார்
ஆண் அலார்; பெண்ணும் அல்லார்-அதிகைவீரட்டனாரே.

7.034   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
காணியேல் பெரிது உடையனே! கற்று நல்லனே! சுற்றம், நல் கிளை,
பேணியே விருந்து ஓம்புமே! என்று பேசினும் கொடுப்பார் இலை;
பூணி பூண்டு உழப் புள் சிலம்பும் தண் புகலூர் பாடுமின், புலவீர்காள்!
ஆணி ஆய் அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.

7.045   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
காண்டனன் காண்டனன், காரிகையாள் தன் கருத்தனாய்
ஆண்டனன் ஆண்டனன்; ஆமாத்தூர் எம் அடிகட்கு ஆட்-
பூண்டனன் பூண்டனன்; பொய் அன்று; சொல்லுவன்; கேண்மின்கள்:
மீண்டனன் மீண்டனன், வேதவித்து அல்லாதவர்கட்கே.

7.045   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
காண்டவன் காண்டவன், காண்டற்கு அரிய கடவுளாய்;
நீண்டவன் நீண்டவன், நாரணன் நான்முகன் நேடவே;
ஆண்டவன் ஆண்டவன், ஆமாத்தூரையும் எனையும் ஆள்;
பூண்டவன் பூண்டவன், மார்பில் புரிநூல் புரளவே.

7.063   7 st/nd Thirumurai   Song # 9   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
காண்டு, நம்பி கழல் சேவடி என்றும் கலந்து உனைக் காதலித்து ஆட் செய்கிற்பாரை
ஆண்டு நம்பி அவர் முன்கதி சேர அருளும் நம்பி; குரு மாப் பிறை பாம்பைத்
தீண்டு நம்பி; சென்னியில் கன்னி தங்கத் திருத்தும் நம்பி; பொய்ச் சமண் பொருள் ஆகி
ஈண்டு நம்பி; இமையோர் தொழும் நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .

8.105.05   8 st/nd Thirumurai   Song # 44   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
காணல் ஆம் பரமே, கட்கு இறந்தது ஓர்
வாள் நிலாப் பொருளே, இங்கு, ஒர் பார்ப்பு என,
பாணனேன் படிற்று ஆக்கையை விட்டு, உனைப்
பூணும் ஆறு அறியேன் புலன் போற்றியே.

8.105.09   8 st/nd Thirumurai   Song # 84   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
காணும் ஆறு காணேன்; உன்னை அந் நாள் கண்டேனும்
பாணே பேசி, என் தன்னைப் படுத்தது என்ன? பரஞ்சோதி!
ஆணே, பெண்ணே, ஆர் அமுதே, அத்தா, செத்தே போயினேன்;
ஏண் நாண் இல்லா நாயினேன், என் கொண்டு எழுகேன், எம்மானே?

8.144   8 st/nd Thirumurai   Song # 5   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
காணும் அது ஒழிந்தேன் நின் திருப் பாதம்; கண்டு கண் களி கூர,
பேணும் அது ஒழிந்தேன்; பிதற்றும் அது ஒழிந்தேன்; பின்னை, எம்பெருமானே,
தாணுவே, அழிந்தேன்: நின் நினைந்து உருகும் தன்மை, என் புன்மைகளால்
காணும் அது ஒழிந்தேன்; நீ இனி வரினும், காணவும் நாணுவனே.

8.148   8 st/nd Thirumurai   Song # 6   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
காணும் கரணங்கள் எல்லாம் பேரின்பம் என,
பேணும் அடியார் பிறப்பு அகல, காணும்
பெரியானை, நெஞ்சே! பெருந்துறையில் என்றும்
பிரியானை, வாய் ஆரப் பேசு.

9.025   9 st/nd Thirumurai   Song # 2   திருவாலியமுதனார்   திருவிசைப்பா  
காண்பதி யானென்றுகொல் கதிர்
   மாமணி யைக்கனலை
ஆண்பெண் அருவுருவென் றறி
   தற்கரி தாயவனைச்
சேண்பணை மாளிகைசூழ் தில்லை
   மாநகர்ச் சிற்றம்பலம்
மாண்புடை மாநடஞ்செய் மறை
   யோன்மலர்ப் பாதங்களே. 

9.027   9 st/nd Thirumurai   Song # 5   புருடோத்தம நம்பி   திருவிசைப்பா  
காணீரே என்னுடைய
   கைவளைகள் கொண்டார்தாம்
சேணார் மணிமாடத்
   தில்லைச்சிற் றம்பலவர்
பூணார் வனமுலைமேற்
   பூவம்பாற் காமவேள்
ஆணாடு கின்றவா
   கண்டும் அருளாரே. 

10.101   10 st/nd Thirumurai   Song # 20   திருமூலர்   திருமந்திரம்  
காணநில் லாயடி யேற்குற வாருளர்
நாணநில் லேன்உன்னை நான்தழு விக்கொளக்
கோணநில் லாத குணத்தடி யார்மனத்
தாணிய னாகி அமர்ந்து நின் றானே. 

10.212   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
காண்கின்ற கண்ணொளி காதல்செய் தீசனை
ஆண்பெண் அலியுரு வாய்நின்ற ஆதியை
ஊண்படு நாவுடை நெஞ்சம் உணர்ந்திட்டுச்
சேண்படு பொய்கை செயலணை யாரே. 

10.314   10 st/nd Thirumurai   Song # 22   திருமூலர்   திருமந்திரம்  
காணகி லாதார் கழிந்தோடிப் போவர்கள்
நாணகி லார்நயம் பேசி விடுவர்கள்
காணகி லாதார் கழிந்த பொருளெலாம்
காணகி லாமற் கழிகின்ற வாறே. 

10.314   10 st/nd Thirumurai   Song # 30   திருமூலர்   திருமந்திரம்  
காணலு மாகும் பிரமன் அரியென்று
காணலு மாகுங் கறைக்கண்டன் ஈசனைக்
காணலு மாகுஞ் சதாசிவ சத்தியும்
காணலு மாகுங் கலந்துடன் வைத்ததே. 15,

10.315   10 st/nd Thirumurai   Song # 11   திருமூலர்   திருமந்திரம்  
காணலு மாகுங் கருதிய பத்தோடிற்
காணலு மாகுங் கலந்த இரண்டையும்
காணலு மாகுங் கலப்பற மூவைந்தேற்
காணலு மாகுங் கருத்துற ஒன்றே. 

10.321   10 st/nd Thirumurai   Song # 16   திருமூலர்   திருமந்திரம்  
காணும் பரிதியின் காலை இடத்திட்டு
மாணும் மதியதன் காலை வலத்திட்டுப்
பேணியிவ் வாறு பிழையாமற் செய்வீரேல்
ஆணி கலங்காதவ் வாயிரத் தாண்டே. 

10.406   10 st/nd Thirumurai   Song # 13   திருமூலர்   திருமந்திரம்  
காணும் பலபல தெய்வங்கள் வெவ்வேறு
பூணும் பலபல பொன்போலத் தோற்றிடும்
பேணும் சிவனும் பிரமனும் மாயனும்
காணுந் தலைவிநற் காரணி காணே.

10.406   10 st/nd Thirumurai   Song # 18   திருமூலர்   திருமந்திரம்  
காணும் இருதய மந்திரமும் கண்டு
பேணும் நமஎன்று பேசும் தலைமேலே
வேணு நடுவு மிகநின்ற ஆகுதி
பூணும் நடுவென்ற வஞ்சஞ் சிகையே.

10.411   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
காணும் பொருளும் கருதிய தெய்வமும்
பேணும் பதியும் பெருகிய தீர்த்தமும்
ஊணும் உணர்வும் உறக்கமும் தானாகக்
காணுங் கனகமும் காரிகை யாமே.

10.413   10 st/nd Thirumurai   Song # 34   திருமூலர்   திருமந்திரம்  
காணலு மாகும் கலந்துயிர் செய்வன
காணலு மாகும் கருத்துள் இருந்திடில்
காணலு மாகும் கலந்து வழிசெயல்
காணலு மாகும் கருத்துற நில்லே.

10.603   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
காணாத கண்ணுடன் கேளாத கேள்வியும்
கோணாத போகமும் கூடாத கூட்டமும்
நாணாத நாணமும் நாதாந்த போதமும்
காணா யெனவந்து காட்டினன் நந்தியே.

10.709   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
காண்டற் கரியன் கருத்திலன் நந்தியும்
தீண்டற்கும் சார்தற்கும் சேயனாய்த் தோன்றிடும்
வேண்டிக் கிடந்து விளக்கொளி யான்நெஞ்சம்
ஈண்டிக் கிடந்தங் கிருளறு மாமே.

10.736   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
காணா தவர்கண்ணில் படலமே கண்ணொளி
காணா தவர்கட்குக் காணாத தவ்வொளி
காணா தவர்கட்கும் கண்ணாம் பெருங்கண்ணைக்
காணாது கண்டார் களவொழிந் தாரே.

10.917   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
காணவல் லார்க்கவன் கண்ணின் மணியொக்கும்
காணவல் லார்க்குக் கடலின் னமுதொக்கும்
பேணவல் லார்க்குப் பிழைப்பிலன் பேர்நந்தி
ஆணம்வல் லார்க்கே அவன்துணை யாமே.

11.004   11 st/nd Thirumurai   Song # 17   காரைக்கால் அம்மையார்    அற்புதத் திருவந்தாதி  
காண்பார்க்குங் காணலாந் தன்மையனே கைதொழுது
காண்பார்க்குங் காணலாங் காதலாற் - காண்பார்க்குச்
சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக்
காதியாய் நின்ற அரன்.

11.008   11 st/nd Thirumurai   Song # 130   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
காண லுறும்கண்கள் நீர்மல்கும் காண்பார்முன்
நாண லுறும்நெஞ்சம் ஒட்டாது பூணாகம்

11.009   11 st/nd Thirumurai   Song # 18   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி  
காணா தலக்கின்றார் வானோர்கள் காளத்திப்
பூணார மார்பன்றன் பொற்பாதம் நாணாதே
கண்டிடுவான் யான்இருந்தேன் காணீர் கடல்நஞ்சை
உண்டிடுவான் றன்னை ஒருங்கு.

11.016   11 st/nd Thirumurai   Song # 5   நக்கீரதேவ நாயனார்   போற்றித் திருக்கலி வெண்பா  
காணான் இழியக் கனக முடிகவித்துக்
கோணாது நின்ற குறிபோற்றி நாணாளும்

11.022   11 st/nd Thirumurai   Song # 56   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருவந்தாதி  
காணங்கை இன்மை கருதிக் கவலாதே
காணங்கை யாற்றொழுது நன்னெஞ்சே காணங்கை
பாவனையாய் நின்றான் பயிலும் பரஞ்சோதி
பாவனையாய் நின்ற பதம்.

11.023   11 st/nd Thirumurai   Song # 12   பரணதேவ நாயனார்   சிவபெருமான் திருவந்தாதி  
காணாய் கபாலி கதிர்முடிமேல் கங்கைதனைக்
காணாயக் கார்உருவிற் சேர்உமையைக் காணா
உடைதலைகொண் டூரூர் திரிவானை நச்சி
உடைதலைகொண் டூரூர் திரி.

11.028   11 st/nd Thirumurai   Song # 12   பட்டினத்துப் பிள்ளையார்   திருவிடைமருதூர் மும்மணிக்கோவை  
காணீர் கதியொன்றுங் கல்லீர்
எழுத்தஞ்சும் வல்லவண்ணம்
பேணீர் திருப்பணி பேசீர்
அவன்புகழ் ஆசைப்பட்டுப்
பூணீர் உருத்திர சாதனம்
நீறெங்கும் பூசுகிலீர்
வீணீர் எளிதோ மருதப்
பிரான்கழல் மேவுதற்கே.

11.037   11 st/nd Thirumurai   Song # 121   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
காண்டகைய வென்றிக் கருவரைமேல் வெண்மதிபோல்
ஈண்டு குடையின் எழில்நிழற் கீழ்க் காண்டலுமே

12.210   12 st/nd Thirumurai   Song # 203   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
காண்டகைமை இன்றியும்முன்
கலந்தபெருங் கேண்மையினார்
பூண்டபெருங் காதலுடன்
போனகமுங் கறியமுதும்
வேண்டுவன வெவ்வேறு
விதங்கள்பெற விருப்பினால்
ஆண்டஅர சமுதுசெயத்
திருவமுதாம் படிஅமைத்து.
12.210   12 st/nd Thirumurai   Song # 223   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
காண்ட லேகருத் தாய்நினைந்
தென்னுங் கலைப்பதிகம்
தூண்டா விளக்கன்ன சோதிமுன்
நின்று துதித்துருகி
ஈண்டு மணிக்கோயில் சூழ
வலஞ்செய் திறைஞ்சியன்பு
பூண்ட மனத்தொடு நீள்திரு
வாயிற் புறத்தணைந்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 375   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
காணும் அப்பெருங் கோயிலுங்
கயிலைமால் வரையாய்ப்
பேணு மால்அயன் இந்திரன்
முதற்பெருந் தேவர்
பூணும் அன்பொடு போற்றிசைத்
தெழும்ஒலி பொங்கத்
தாணு மாமறை யாவையுந்
தனித்தனி முழங்க.

12.280   12 st/nd Thirumurai   Song # 816   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
காணவும் எய்தா வண்ணம்
கடலின்மேற் செல்லும் ஏடு
நாணிலா அமணர் தம்மை
நட்டாற்றில் விட்டுப் போகச்
சேணிடைச் சென்று நின்றார்
சிதறினார் திகைத்தார் மன்னன்
ஆணையில் வழுவ மாட்டாது
அஞ்சுவார் அணைய மீண்டார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 90   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
காண்டலும் தொழுது வீழ்ந்துஉட னெழுந்து
கரையிலன் பென்பினை யுருக்கப்
பூண்டஐம் புலனிற் புலப்படா இன்பம்
புணர்ந்துமெய் யுணர்வினிற் பொங்கத்
தாண்டவம் புரியுந் தம்பிரா னாரைத்
தலைப்படக் கிடைத்தபின் சைவ
ஆண்டகை யாருக் கடுத்தஅந் நிலைமை
விளைவையார் அளவறிந் துரைப்பார்.
12.310   12 st/nd Thirumurai   Song # 2   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
காணுங் கண்ணால் காண்பதுமெய்த்
தொண்டே யான கருத்துடையார்
பேணும் செல்வத் திருவாரூர்ப்
பெருமான் அடிகள் திருவடிக்கே
பூணும் அன்பி னால்பரவிப்
போற்றும் நிலைமை புரிந்தமரர்
சேணு மறிய வரியதிருத்
தொண்டிற் செறியச் சிறந்துள்ளார்.
12.340   12 st/nd Thirumurai   Song # 7   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
காணாத அருவினுக்கும்
உருவினுக்குங் காரணமாய்
நீணாக மணிந்தார்க்கு
நிகழ்குறியாஞ் சிவலிங்கம்
நாணாது நேடியமால்
நான்முகனுங் காணநடுச்
சேணாருந் தழற்பிழம்பாய்த்
தோன்றியது தெளிந்தாராய்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list