சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் கால
காலை     காலையில்     காலது,     காலும்     கால்கொண்டு     காலோ     காலவி     காலரை     காலங்     கால்     கால்கொண்டென்     காலினில்     காலையே     காலனையும்     காலைக்     காலங்கள்     காலது     காலற்     காலத்     காலைசெய்     காலி     கால்கழல்     காலனைக்     காலெல்லாந்     கால     காலந்     காலையெழுங்     காலம்     காலகாலர்,     காலால்     காலினோடு     காலமும்     காலன்     காலனை     காலையொடு     காலின்     காலேமேலே     கால்களால்     கால்-தனால்     காலையின்     காலபாசம்    
1.075   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
காலை நல்மாமலர் கொண்டு அடி பரவி, கைதொழு மாணியைக் கறுத்த வெங்காலன்,
ஓலம் அது இட, முன் உயிரொடு மாள உதைத்தவன்; உமையவள் விருப்பன்; எம்பெருமான்-
மாலை வந்து அணுக, ஓதம் வந்து உலவி, மறிதிரை சங்கொடு பவளம் முன் உந்தி,
வேலை வந்து அணையும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

1.108   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
காலையில் உண்பவரும் சமண்கையரும் கட்டுரை விட்டு, அன்று
ஆலவிடம் நுகர்ந்தான் அவன்தன் அடியே பரவி,
மாலையில் வண்டு இனங்கள் மது உண்டு இசை முரல, வாய்த்த
பாலையாழ்ப் பாட்டு உகந்தான் உறை கோயில் பாதாளே.

1.117   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
காலது, கங்கை கற்றைச் சடையுள்ளால், கழல் சிலம்பு;
மாலது, ஏந்தல் மழு அது, பாகம்; வளர் கொழுங் கோட்டு
ஆல் அது, ஊர்வர் அடல் ஏற்று, இருப்பர்; அணி மணி நீர்ச்
சேல் அது கண்ணி ஒர்பங்கர் சிரபுரம் மேயவரே.

2.003   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கால் எடுத்த திரைக்கை கரைக்கு எறி கானல் சூழ்
சேல் அடுத்த வயல் பழனத் தெளிச்சேரியீர்!
மால் அடித்தலம், மா மலரான் முடி, தேடியே
ஓலம் இட்டிட, எங்ஙனம் ஓர் உருக் கொண்டதே?

2.007   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
காலகாலர், கரிகான் இடை மாநடம் ஆடுவர்,
மேலர், வேலைவிடம் உண்டு இருள்கின்ற மிடற்றினர்,
மாலை கோல மதி மாடம் மன்னும் திரு வாஞ்சியம்
ஞாலம் வந்து பணியப் பொலி கோயில் நயந்ததே.

2.023   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
காலால் உயிர் காலனை வீடுசெய்தாய்!
பாலோடு நெய் ஆடிய பால்வணனே!
வேல் ஆடு கையாய்! எம் வெண்நாவல் உளாய்!
ஆல் ஆர் நிழலாய்! எனும் ஆயிழையே.

2.060   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கால் நின்று அதிர, கனல் வாய் நாகம் கச்சு ஆக,
தோல் ஒன்று உடையார்; விடையார்; தம்மைத்
தொழுவார்கள்
மால் கொண்டு ஓட மையல் தீர்ப்பார்; ஊர்போலும்
பால் வெண்மதி தோய் மாடம் சூழ்ந்த பாசூரே.

2.078   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கால் விளங்கு எரி கழலினார், கை விளங்கிய வேலினார்,
நூல் விளங்கிய மார்பினார், நோய் இலார், பிறப்பும்(ம்)
இலார்,
மால் விளங்கு ஒளி மல்கிய மாசு இலா மணிமிடறினார்,
மேல் விளங்கு வெண்பிறையினார்; மேயது விளநகர் அதே.

2.097   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
காலினோடு கைகளும் தளர்ந்து, காம்நோய்தனால்
ஏல வார்குழலினார் இகழ்ந்து உரைப்பதன் முனம்
மாலினோடு நான்முகன் மதித்தவர்கள் காண்கிலா
நீலம் மேவு கண்டனார் நிகழ்ந்த காழி சேர்மினே!

3.021   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
காலமும் ஞாயிறும் தீயும் ஆயவர்
கோலமும் முடி அரவு அணிந்த கொள்கையர்;
சீலமும் உடையவர்; திருக்கருக்கு
சாலவும் இனிது, அவர் உடைய தன்மையே!

3.028   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
காலை ஆர் வண்டு இனம் கிண்டிய, கார் உறும்,
சோலை ஆர் பைங்கிளி சொல் பொருள் பயிலவே,
வேலை ஆர் விடம் அணி வேதியன் விரும்பு இடம்
மாலை ஆர் மதி தவழ் மா மழபாடியே.

3.043   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
காலன் தன் உயிர் வீட்டு, கழல் அடி,
மாலும் நான் முகன்தானும், வனப்பு உற
ஓலம் இட்டு, முன் தேடி, உணர்கிலாச்
சீலம் கொண்டவன் ஊர் திகழ் காழியே.

3.061   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
காலனை ஓர் உதையில் உயிர் வீடு செய் வார்கழலான்;
பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடிய பண்டரங்கன்;
மாலை மதியொடு, நீர், அரவம், புனை வார்சடையான்;
வேல் அன கண்ணியொடும், விரும்பும்(ம்) இடம்
வெண்டுறையே.

3.072   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
காலையொடு துந்துபிகள், சங்கு, குழல், யாழ், முழவு, காமருவு சீர்
மாலை வழிபாடு செய்து, மாதவர்கள் ஏத்தி மகிழ் மாகறல் உளான்-
தோலை உடை பேணி, அதன்மேல் ஒர் சுடர் நாகம் அசையா, அழகிதாப்
பாலை அன நீறு புனைவான்-அடியை ஏத்த, வினை பறையும், உடனே.

3.072   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
காலின் நல பைங்கழல்கள் நீள் முடியின் மேல் உணர்வு காமுறவினார்
மாலும் மலரானும், அறியாமை எரி ஆகி, உயர் மாகறல் உளான்-
நாலும் எரி, தோலும் உரி, மா மணிய நாகமொடு கூடி உடன் ஆய்,
ஆலும் விடை ஊர்தி உடை அடிகள் அடியாரை அடையா, வினைகளே.

3.073   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
காலை மடவார்கள் புனல் ஆடுவது கௌவை, கடி ஆர் மறுகு எலாம்
மாலை மணம் நாறு பழையாறை மழபாடி அழகு ஆய மலி சீர்ப்
பாலை அன நீறு புனை மார்பன் உறை பட்டிசுரமே பரவுவார்
மேலை ஒரு மால்கடல்கள் போல் பெருகி, விண்ணுலகம் ஆளுமவரே.

3.117   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா!

4.009   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கால்களால் பயன் என்? -கறைக் கண்டன் உறை கோயில்
கோலக் கோபுரக் கோகரணம் சூழாக் கால்களால் பயன் என்?

4.014   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
காலமும் நாள்கள் ஊழி படையா முன், ஏக உரு ஆகி, மூவர் உருவில்,
சாலவும் ஆகி மிக்க சமயங்கள் ஆறின் உரு ஆகி, நின்ற தழலோன்,
ஞாலமும் மேலை விண்ணொடு உலகு ஏழும் உண்டு குறள் ஆய் ஒர் ஆலின் இலை மேல்
பாலனும் ஆயவர்க்கு ஒர் பரம் ஆய மூர்த்தி அவன், ஆம், நமக்கு ஒர் சரணே.

4.033   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கால் கொடுத்து, இருகை ஏற்றி, கழி நிரைத்து, இறைச்சி மேய்ந்து
தோல் மடுத்து, உதிர நீரால் சுவர் எடுத்து, இரண்டுவாசல்
ஏல்வு உடைத்தா அமைத்து, அங்கு ஏழுசாலேகம் பண்ணி,
மால் கொடுத்து, ஆவி வைத்தார்-மா மறைக்காடனாரே.

4.036   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கால்-தனால் காலற் காய்ந்து கார் உரி போர்த்த ஈசர்
தோற்றனார், கடலுள் நஞ்சை; தோடு உடைக் காதர்; சோதி
ஏற்றினார் இளவெண்திங்கள், இரும் பொழில் சூழ்ந்த காயம்;
பாற்றினார், வினைகள் எல்லாம்;-பழனத்து எம் பரமனாரே.

4.037   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
காலனை வீழச் செற்ற கழல் அடி இரண்டும் வந்து என்
மேல ஆய் இருக்கப் பெற்றேன்; மேதகத் தோன்றுகின்ற
கோல நெய்த்தானம் என்னும் குளிர்பொழில் கோயில் மேய
நீலம் வைத்த(அ)னைய கண்டம் நினைக்குமா நினைக்கின்றேனே.

4.037   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கால் அதிர்கழல்கள் ஆர்ப்ப, கனல்-எரி கையில் வீசி,
ஞாலமும் குழிய நின்று, நட்டம் அது ஆடுகின்ற
மேலவர்-முகடு தோய விரிசடை திசைகள் பாய
மால் ஒருபாகம் ஆக மகிழ்ந்த நெய்த்தானனாரே.

4.051   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
காலனைக் காலால் செற்று, அன்று, அருள் புரி கருணையானே!
நீலம் ஆர் கண்டத்தானே! நீள் முடி அமரர்கோவே!
ஞாலம் ஆம் பெருமையானே! நளிர் இளந்திங்கள் சூடும்
கோலம் ஆர் சடையினானே! கோடிகா உடைய கோவே!

4.064   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
காலையின் கதிர்செய் மேனி, கங்குலின் கறுத்த கண்டர்
மாலையின் மதியம் சேர்ந்த மகுடத்தர்; மதுவும் பாலும்
ஆலையில் பாகும் போல அண்ணித் திட்டு, -அடியார்க்கு,-என்றும்
வேலையின் அமுதர்-வீழிமிழலையுள் விகிர்தனாரே.

4.067   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கால் கொடுத்து, எலும்பு மூட்டி, கதிர் நரம்பு ஆக்கை ஆர்த்து
தோல் உடுத்து, உதிரம் அட்டி, தொகு மயிர் மேய்ந்த கூரை
ஓல் எடுத்து உழைஞர் கூடி ஒளிப்பதற்கு அஞ்சுகின்றேன்-
சேல் உடைப் பழனம் சூழ்ந்த திருக்கொண்டீச்சுரத்து உளானே!

4.085   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
காலை எழுந்து, கடிமலர் தூயன தாம் கொணர்ந்து
மேலை அமரர் விரும்பும் இடம்-விரையான் மலிந்த
சோலை மணம் கமழ்-சோற்றுத்துறை உறைவார் சடை மேல்
மாலை மதியம் அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?

5.008   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
காலை போய்ப் பலி தேர்வர்; கண்ணார், நெற்றி;
மேலைவானவர் வந்து விரும்பிய,
சோலை சூழ் புறங்காடு அரங்கு ஆகவே,
ஆலின்கீழ் அறத்தார்-அன்னியூரரே.

5.043   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
காலம் ஆன கழிவதன் முன்னமே,
ஏலும் ஆறு வணங்கி, நின்று, ஏத்துமின்
மாலும், மா மலரானொடு, மாமறை-
நாலும் வல்லவர், கோன் இடம் நல்லமே!

5.086   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
காலபாசம் பிடித்து எழு தூதுவர்,
பாலகர், விருத்தர், பழையார் எனார்;
ஆலநீழல் அமர்ந்த வாட்போக்கியார்
சீலம் ஆர்ந்தவர் செம்மையுள் நிற்பரே.

5.099   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
காலை சென்று கலந்து நீர் மூழ்கில் என்?
வேலை தோறும் விதிவழி நிற்கில் என்?
ஆலை வேள்வி அடைந்து அது வேட்கில் என்?
ஏல ஈசன் என்பார்க்கு அன்றி இல்லையே.

6.033   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
காலனைக் காலால் காய்ந்த கடவுள் தன்னை, காரோணம் கழிப்பாலை மேயான் தன்னை,
பாலனுக்குப் பாற்கடல் அன்று ஈந்தான் தன்னை, பணி உகந்த அடியார்கட்கு இனியான் தன்னை,
சேல் உகளும் வயல் ஆரூர் மூலட்டானம் சேர்ந்து இருந்த பெருமானை, பவளம் ஈன்ற
ஆலவனை, அரநெறியில் அப்பன் தன்னை, அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே!.

6.036   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
காலன் உயிர் வௌவ வல்லார் தாமே; கடிது ஓடும் வெள்ளை விடையார் தாமே;
கோலம் பலவும் உகப்பார் தாமே; கோள் நாகம் நாண் ஆகப் பூண்டார் தாமே;
நீலம் பொலிந்த மிடற்றார் தாமே; நீள்வரையின் உச்சி இருப்பார் தாமே;
பால விருத்தரும் ஆனார் தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.

6.075   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
காலன் வலி தொலைத்த கழல் காலர் போலும்; காமன் எழில் அழல் விழுங்கக் கண்டார் போலும்;
ஆல் அதனில் அறம் நால்வர்க்கு அளித்தார் போலும்; ஆணொடு பெண் அலி அல்லர், ஆனார், போலும்;
நீல உரு, வயிர நிரை, பச்சை, செம்பொன், நெடும் பளிங்கு, என்று அறிவு அரிய நிறத்தார் போலும்
கோல மணி கொழித்து இழியும் பொன்னி நன்நீர்க் குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே.

7.019   7 st/nd Thirumurai   Song # 9   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
காலமும் ஞாயிறும் ஆகி நின்றார்; கழல் பேண வல்லார்
சீலமும் செய்கையும் கண்டு உகப்பார்; அடி போற்று இசைப்ப,
மாலொடு நான்முகன் இந்திரன் மந்திரத்தால் வணங்க,
நீலநஞ்சு உண்டவருக்கு இடம் ஆம் திரு நின்றியூரே .

7.097   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
காலமும் நாழிகையும் நனிபள்ளி மனத்தின் உள்கி,
கோலம் அது ஆயவனைக் குளிர் நாவல ஊரன் சொன்ன
மாலை மதித்து உரைப்பார், மண் மறந்து வானோர் உலகில்
சால நல் இன்பம் எய்தி, தவலோகத்து இருப்பவரே.

8.136   8 st/nd Thirumurai   Song # 5   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
காலம் உண்டாகவே, காதல் செய்து உய்ம்மின்; கருது அரிய
ஞாலம் உண்டானொடு, நான்முகன், வானவர், நண் அரிய
ஆலம் உண்டான்; எங்கள் பாண்டிப் பிரான்; தன் அடியவர்க்கு
மூல பண்டாரம் வழங்குகின்றான்: வந்து, முந்துமினே.

10.105   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
காலும் இரண்டு முகட்டலக் கொன்றுள
பாலுள் பருங்கழி முப்பத்தி ரண்டுள
மேலுள கூரை பிரியும் பிரிந்தால்முன்
போலுயிர் மீளப் புகஅறி யாதே. 

10.107   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும்
மாலை படுவதும் வாழ்நாள் கழிவதும்
சாலும்அவ் வீசன் சலவிய னாகிலும்
ஏல நினைப்பவர்க் கின்பஞ்செய் தானே. 

10.116   10 st/nd Thirumurai   Song # 9   திருமூலர்   திருமந்திரம்  
கால்கொண்டு கட்டிக் கனல்கொண்டு மேலேற்றிப்
பால்கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணாதோர்
மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரை
மேல்கொண்டு தண்டஞ்செய் வேந்தன் கடனே.

10.311   10 st/nd Thirumurai   Song # 54   திருமூலர்   திருமந்திரம்  
காலோ டுயிருங் கலக்கும் வகைசொல்லிற்
காலது வக்கொடி நாயகி தன்னுடன்
காலது ஐஞ்ஞூற் றொருபத்து மூன்றையும்
காலது வேமண்டிக் கண்டஇவ் வாறே. 

10.402   10 st/nd Thirumurai   Song # 42   திருமூலர்   திருமந்திரம்  
காலை நடுவுறக் காயத்தில் அக்கரம்
மாலை நடுவுற ஐம்பதும் ஆவன
மேலை நடுவுற வேதம் விளம்பிய
மூலன் நடுவுற முத்திதந் தானே.

10.408   10 st/nd Thirumurai   Song # 62   திருமூலர்   திருமந்திரம்  
காலவி எங்கும் கருத்தும் அருத்தியும்
கூலவி ஒன்றாகும் கூடல் இழைத்தனள்
மாலினி மாகுலி மந்திர சண்டிகை
பாலினி பாலவன் பாகம தாகுமே.

10.409   10 st/nd Thirumurai   Song # 35   திருமூலர்   திருமந்திரம்  
காலரை முக்கால் முழுதெனும் மந்திரம்
ஆலித் தெழுந்தமைந் தூறி யெழுந்தவாய்ப்
பாலித் தெழுந்து பகையற நின்றபின்
மாலுற்ற மந்திரம் மாறிக்கொள் வார்க்கே.

10.721   10 st/nd Thirumurai   Song # 18   திருமூலர்   திருமந்திரம்  
காலங் கடந்தவன் காண்விந்து செற்றவன்
காலங் கடந்தழிந் தான்விந்து செற்றவன்
காலங் களின்விந்து செற்றுற்ற காரிகை
காலின்கண் வந்த கலப்பறி யாரே.

10.813   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
கால் அங்கி நீர் பூக் கலந்தஆ காயமே
மால் அங்கி ஈசன் பிரமன் சதாசிவன்
மேல் அஞ்சும் ஓடி விரவவல் லார்கட்குக்
காலனும் இல்லை கருத்தில்லை தானே.

10.817   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
காலும் தலையும் அறியார் கலதிகள்
கால்அந்தச் சத்தி அருள்என்பர் காரணம்
பால்ஒன்று ஞானமே பண்பார் தலைஉயிர்
கால்அந்த ஞானத்தைக் காட்டவீ டாகுமே.

10.817   10 st/nd Thirumurai   Song # 9   திருமூலர்   திருமந்திரம்  
கால்கொண்டென் சென்னியிற் கட்டறக் கட்டற
மால்கொண்ட நெஞ்சின் மயக்கில் துயக்கறப்
பால்கொண்ட என்னைப் பரன்கொள நாடினான்
மேல்கொண்டென் செம்மை விளம்பஒண்ணாதே.

10.843   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
காலினில் ஊறும் கரும்பினிற் கட்டியும்
பாலினுள் நெய்யும் பழத்துள் இரதமும்
பூவினுள் நாற்றமும் போல் உளன் எம்மிறை
காவலன் எங்கும் கலந்துநின் றானே.

11.004   11 st/nd Thirumurai   Song # 65   காரைக்கால் அம்மையார்    அற்புதத் திருவந்தாதி  
காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு - மாலையின்
தாங்குருவே போலுஞ் சடைக்கற்றை மற்றவற்கு
வீங்கிருளே போலும் மிடறு.

11.004   11 st/nd Thirumurai   Song # 81   காரைக்கால் அம்மையார்    அற்புதத் திருவந்தாதி  
காலனையும் வென்றோம் கடுநரகம் கைகழன்றோம்
மேலை இருவினையும் வேரறுத்தோம் - கோல
அரணார் அவிந்தழிய வெந்தீஅம் பெய்தான்
சரணார விந்தங்கள் சார்ந்து.

11.005   11 st/nd Thirumurai   Song # 6   ஐயடிகள் காடவர்கோன் நாயனார்   திருக்கோயில் திருவெண்பா சேத்திரத்  
காலைக் கரையிழையாற் கட்டித்தன் கைஆர்த்து
மாலை தலைக்கணிந்து மையெழுதி மேலோர்
பருக்கோடி மூடிப் பலரழா முன்னம்
திருக்கோடி காஅடைநீ சென்று.

11.008   11 st/nd Thirumurai   Song # 50   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
காலங்கள் மூன்றும் கணமும் குணங்களும்
வால கிலியரும் வந்தீண்டி மேலை

11.025   11 st/nd Thirumurai   Song # 12   அதிராவடிகள்   மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை  
காலது கையது கண்ணது தீயது கார்மதநீர்
மேலது கீழது நூலது வெற்பது பொற்பமைதீம்
பாலது தேனது தானது மென்மொழிப் பாவைமுப்பூண்
வேலது வாளது நான்மறைக் கின்ற விடுசுடர்க்கே.

11.030   11 st/nd Thirumurai   Song # 10   பட்டினத்துப் பிள்ளையார்   திருவொற்றியூர் ஒருபா ஒருபது  
காலற் சீறிய கழலோய் போற்றி
மூலத் தொகுதி முதல்வ போற்றி
ஒற்றி மாநகர் உடையோய் போற்றி
முற்றும் ஆகிய முதல்வ போற்றி
அணைதொறுஞ் சிறக்கும் அமிர்தே போற்றி
இணைபிறி தில்லா ஈச போற்றி
ஆர்வஞ் செய்பவர்க் கணியோய் போற்றி
தீர்வில் இன்சுவைத் தேனே போற்றி
வஞ்சனை மாந்தரை மறந்தோய் போற்றி
நஞ்சினை அமிர்தாய் நயந்தோய் போற்றி

விரிகடல் வையக வித்தே போற்றி
புரிவுடை வனமாய்ப் புணர்ந்தோய் போற்றி
காண முன்பொருள் கருத்துறை செம்மைக்
காணி யாகிய அரனே போற்றி
வெம்மை தண்மையென் றிவைகுணம் உடைமையின்

பெண்ணோ டாணெனும் பெயரோய் போற்றி
மேவிய அவர்தமை வீட்டினிற் படுக்கும்
தீப மாகிய சிவனே போற்றி
மாலோய் போற்றி மறையோய் போற்றி
மேலோய் போற்றி வேதிய போற்றி

சந்திர போற்றி தழலோய் போற்றி
இந்திர போற்றி இறைவ போற்றி
அமரா போற்றி அழகா போற்றி
குமரா போற்றி கூத்தா போற்றி
பொருளே போற்றி போற்றி என்றுனை

நாத்தழும் பிருக்க நவிற்றின் அல்லது
ஏத்துதற் குரியோர் யாரிரு நிலத்தே.

11.037   11 st/nd Thirumurai   Song # 68   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
காலத் தொகுதியும் நான்மறையின் காரணமும்
மூலப் பொருளும் முழுதுணர்ந்த சீலத்

12.000   12 st/nd Thirumurai   Song # 149   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
காலைசெய் வினைகள் முற்றிக்
கணிதநூற் புலவர் சொன்ன
வேலைவந் தணையு முன்னர்
விதிமணக் கோலங் கொள்வான்
நூலசைந் திலங்கு மார்பின்
நுணங்கிய கேள்வி மேலோன்
மாலையுந் தாரும் பொங்க
மஞ்சனச் சாலை புக்கான்.
12.040   12 st/nd Thirumurai   Song # 18   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
காலி னால்தட விச்சென்று கைகளால்
சாலி வெண்முளை நீர்வழிச் சார்ந்தன
கோலி வாரி யிடாநிறை யக்கொண்டு
மேலெ டுத்துச் சுமந்தொல்லை மீண்டனர்.
12.090   12 st/nd Thirumurai   Song # 16   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
கால்கழல் கட்டிய மள்ளர்கள்
கைகளின் மெய்க ளடக்கிய
வாளொளி வட்ட முனைந்திட
வந்திரு கைகளின் முந்தினர்
வேலொடு வேலெதிர் நீள்வன
மேவிய பாதலம் விட்டுயர்
ஞாலமு றும்பணி வீரர்கள்
நாநிமிர் கின்றன வொத்தன.
12.110   12 st/nd Thirumurai   Song # 17   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
காலனைக் காய்ந்த செய்ய
காலனார் கலய னாராம்
ஆலுமன் புடைய சிந்தை
அடியவ ரறியு மாற்றால்
சாலநீ பசித்தாய் உன்தன்
தடநெடு மனையில் நண்ணிப்
பாலின்இன் அடிசில் உண்டு
பருவரல் ஒழிக வென்றார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 4   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
காலெல்லாந் தகட்டுவரால்
கரும்பெல்லாங் கண்பொழிதேன்
பாலெல்லாங் கதிர்ச்சாலி
பரப்பெல்லாங் குலைக்கமுகு
சாலெல்லாந் தரளநிரை
தடமெல்லாஞ் செங்கழுநீர்
மேலெல்லாம் அகில்தூபம்
விருந்தெல்லாந் திருந்துமனை.
12.210   12 st/nd Thirumurai   Song # 257   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
கால நிலைமை யால்உங்கள்
கருத்தில் வாட்ட முறீர்எனினும்
ஏல உம்மை வழிபடுவார்க்
களிக்க அளிக்கின் றோம்என்று
கோலங் காண எழுந்தருளிக்
குலவும் பெருமை இருவர்க்கும்
ஞாலம் அறியப் படிக்காசு
வைத்தார் மிழலை நாயகனார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 262   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
காலந் தவறு தீர்ந்தெங்கும்
கலிவான் பொழிந்து புனல்கலந்து
ஞாலம் எல்லாம் குளிர்தூங்கி
உணவு பெருகி நலஞ்சிறப்ப
மூல அன்பர் இருவர்களும்
மொழிமா லைகளும் பலசாத்தி
நீல கண்டர் உறைபதிகள்
பிறவும் வணங்க நினைவுற்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 756   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
காலையெழுங் கதிரவனைப்
புடைசூழுங் கருமுகில்போல்
பீலிசேர் சமண்கையர்
பிள்ளையார் தமைச்சூழ்வார்
ஏலவே வாதினால்
வெல்வதனுக் கெண்ணித்தாம்
கோலுநூ லெடுத்தோதித்
தலைதிமிர்ப்பக் குரைத்தார்கள்.
12.290   12 st/nd Thirumurai   Song # 312   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
காலம் நிரம்பத் தொழுதேத்திக்
கனக மணிமா ளிகைக்கோயில்
ஞால முய்ய வரும்நம்பி
நலங்கொள் விருப்பால் வலங்கொண்டு
மாலும் அயனு முறையிருக்கும்
வாயில் கழியப் புறம்போந்து
சீல முடைய அன்பருடன்
தேவா சிரியன் மருங்கணைந்தார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 2   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
காலை யெழும்பல் கலையின்ஒலி
களிற்றுக் கன்று வடிக்கும்ஒலி
சோலை யெழுமென் சுரும்பின்ஒலி
துரகச் செருக்காற் சுலவும்ஒலி
பாலை விபஞ்சி பயிலும்ஒலி
பாட லாடல் முழவின்ஒலி
வேலை ஒலியை விழுங்கியெழ
விளங்கி யோங்கும் வியப்பினதால்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list