சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் குண்டிகை
குண்டிகை     குண்டிகைக்     குண்டிகைப்    
2.066   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூட,
கண் திகைப்பிப்பது நீறு; கருத இனியது நீறு;
எண்திசைப்பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு;
அண்டத்தவர் பணிந்து ஏத்தும் ஆலவாயான் திருநீறே.

3.032   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
குண்டிகைக் கையினர், குணம் இலாத் தேரர்கள்
பண்டியைப் பெருக்கிடும் பளகர்கள் பணிகிலர்
வண்டு இரைக்கும் மலர்க்கொன்றையும் வன்னியும்
இண்டை சேர்க்கும் சடை ஏடகத்து எந்தையே.

3.035   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
குண்டிகைக் கை உடைக் குண்டரும், புத்தரும்,
பண்டு உரைத்து ஏயிடும் பற்று விட்டீர், தொழும்
வண்டு இரைக்கும் பொழில்-தண்டலைக் கொண்டல் ஆர்
தெண்திரைத் தண்புனல்,-தென்குடித்திட்டையே!

3.100   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
குண்டிகை பீலி தட்டோடு நின்று கோசரம் கொள்ளியரும்,
மண்டை கை ஏந்தி மனம் கொள் கஞ்சி ஊணரும், வாய் மடிய,
இண்டை புனைந்து, எருது ஏறி வந்து, என் எழில் கவர்ந்தார் இடம் ஆம்
தொண்டு இசை பாடல் அறாத தொன்மைத் தோணிபுரம் தானே.

7.072   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
குண்டிகைப் படப்பினில் விடக்கினை ஒழித்தவர்
கண்டவர், கண்டு அடி வீழ்ந்தவர், கனை கழல்
தண்டு உடைத் தண்டிதன் இனம் உடை அர உடன்
எண் திசைக்கு ஒரு சுடர் இடம் வலம்புரமே.

12.280   12 st/nd Thirumurai   Song # 638   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
குண்டிகை தகர்த்துப் பாயும்
பீறியோர் குரத்தி யோடப்
பண்டிதர் பாழி நின்றுங்
கழுதைமேற் படர்வார் தம்பின்
ஒண்டொடி இயக்கி யாரும்
உளையிட்டுப் புலம்பி யோடக்
கண்டனம் என்று சொன்னார்
கையறு கவலை யுற்றார்.
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000