சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் குற்றம்
குற்றம்    
1.008   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
குற்றம் அறுத்தார், குணத்தின் உள்ளார், கும்பிடுவார் தமக்கு அன்பு செய்வார்,
ஒற்றை விடையினர், நெற்றிக்கண்ணார், உறை பதி ஆகும் செறிகொள் மாடம்
சுற்றிய வாசலில் மாதர் விழாச் சொல் கவி பாட, நிதானம் நல்க,
பற்றிய கையினர், வாழும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!

1.051   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
குற்றம் இன்மை, உண்மை, நீ என்று உன் அடியார் பணிவார்,
கற்றல் கேள்வி ஞானம் ஆன காரணம் என்னை கொல் ஆம்?
வற்றல் ஆமை வாள் அரவம் பூண்டு, அயன் வெண் தலையில்
துற்றல் ஆன கொள்கையானே! சோபுரம் மேயவனே!

2.113   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
குற்றம் இல்லார், குறைபாடு செய்வார் பழி தீர்ப்பவர்,
பெற்றம் நல்ல கொடி முன் உயர்த்த பெருமான், இடம்
மற்று நல்லார், மனத்தால் இனியார், மறை கலை எலாம்
கற்று நல்லார், பிழை தெரிந்து அளிக்கும் கடல் காழியே.

3.052   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
குற்றம் நீ! குணங்கள் நீ! கூடல் ஆலவாயிலாய்!
சுற்றம் நீ! பிரானும் நீ! தொடர்ந்து இலங்கு சோதி நீ!
கற்ற நூல் கருத்தும் நீ! அருத்தம், இன்பம், என்று இவை
முற்றும் நீ! புகந்து முன் உரைப்பது என், முக(ம்)மனே?

3.123   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
குற்றம் இலாதார் குரைகடல் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரை,
கற்று உணர் கேள்விக் காழியர்பெருமான்-கருத்து உடை ஞானசம்பந்தன்-
உற்ற செந்தமிழ் ஆர் மாலை ஈர்-ஐந்தும் உரைப்பவர், கேட்பவர், உயர்ந்தோர்
சுற்றமும் ஆகித் தொல்வினை அடையார்; தோன்றுவர்,வான் இடைப் பொலிந்தே.

4.101   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
குற்றம் உடைய அமணர் திறம் அது கை அகன்றிட்டு,
உற்ற கருமம் செய்து, உய்யப் போந்தேனுக்கும் உண்டுகொலோ-
மல் பொலி தோளான், இராவணன்தன் வலி வாட்டுவித்த
பொன் கழலான், அடித் தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?


5.065   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
குற்றம் கூடிக் குணம்பல கூடாதீர்!
மற்றும் தீவினை செய்தன மாய்க்கல் ஆம்;
புற்று அராவினன் பூவனூர் ஈசன் பேர்
கற்று வாழ்த்தும், கழிவதன் முன்னமே!

5.079   5 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
குற்றம் இ(ல்)லியை, கோலச் சிலையினால்
செற்றவர் புரம் செந்தழல் ஆக்கியை,
புற்று அர(வ்)வனை, புள்ளிருக்குவேளூர்,
பற்ற வல்லவர் பாவம் பறையுமே.

7.056   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
குற்றம் ஒன்று அடியார் இலர் ஆனால் கூடும் ஆறு அதனைக் கொடுப்பானை,
கற்ற கல்வியிலும்(ம்) இனியானை, காணப் பேணுமவர்க்கு எளியானை,
முற்ற அஞ்சும் துறந்திருப்பானை, மூவரின் முதல் ஆயவன் தன்னை,
சுற்றும் நீள் வயல் சூழ் திரு நீடூர்த் தோன்றலை, பணியா விடல் ஆமே?

7.060   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
குற்றம் தன்னொடு குணம் பல பெருக்கி, கோல நுண் இடையாரொடு மயங்கி,
கற்றிலேன், கலைகள் பல ஞானம்; கடிய ஆயின கொடுமைகள் செய்தேன்;
பற்றல் ஆவது ஓர் பற்று மற்று இல்லேன்; பாவியேன் பல பாவங்கள் செய்தேன்;
எற்று உளேன்? எனக்கு உய்வகை அருளாய் இடை மருது(வ்) உறை எந்தைபிரானே!.

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000