சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் கொடு
கொடுகொட்டி     கொடுவிற்     கொடுத்தெறியும்     கொடுத்தான்     கொடு     கொடுத்த     கொடுவி     கொடுங்குன்றத்     கொடுங்கோ     கொடுங்     கொடுவினையார்     கொடுங்கோளூர்,     கொடுகு     கொடுக்க     கொடுங்கால்    
5.023   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கொடுங் கண் வெண்தலை கொண்டு, குறை விலைப்
படும் கண் ஒன்று இலராய், பலி தேர்ந்து உண்பர்-
நெடுங்கண் மங்கையர் ஆட்டு அயர் நின்றியூர்க்
கடுங் கைக் கூற்று உதைத்திட்ட கருத்தரே.

6.006   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கொடுவினையார் என்றும் குறுகா அடி;
குறைந்துஅடைந்தார் ஆழாமைக் காக்கும்(ம்) அடி;
படு முழவம் பாணி பயிற்றும்(ம்) அடி;
பதைத்து எழுந்த வெங் கூற்றைப் பாய்ந்த(வ்) அடி;
கடு முரண் ஏறு ஊர்ந்தான் கழல்சேவடி;
கடல் வையம் காப்பான் கருதும்(ம்) அடி;
நெடு மதியம் கண்ணி அணிந்தான் அடி
நிறை கெடில வீரட்டம் நீங்கா அடி.

6.070   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கொடுங்கோளூர், அஞ்சைக்களம், செங்குன்றூர், கொங்கணம், குன்றியூர், குரக்குக்காவும்,
நெடுங்களம், நன்னிலம், நெல்லிக்காவும், நின்றியூர், நீடூர், நியமநல்லூர்,
இடும்பாவனம், எழுமூர், ஏழூர், தோழூர், எறும்பியூர், ஏர் ஆரும் ஏமகூடம்,
கடம்பை, இளங்கோயில் தன்னிலுள்ளும், கயிலாய நாதனையே காணல் ஆமே.

7.049   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர், விரவலாமை சொல்லி,
திடுகு மொட்டு எனக் குத்தி, கூறை கொண்டு, ஆறு அலைக்கும் இடம்
முடுகு நாறிய வடுகர் வாழ் முருகன் பூண்டி மா நகர்வாய்,
இடுகு நுண் இடை மங்கை தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!

7.060   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கொடுக்க கிற்றிலேன், ஒண் பொருள் தன்னை; குற்றம் செற்றம் இவை முதல் ஆக,
விடுக்க கிற்றிலேன், வேட்கையும் சினமும்; வேண்டில், ஐம்புலன் என் வசம் அல்ல;
நடுக்கம் உற்றது ஓர் மூப்பு வந்து எய்த, நமன்தமர் நரகத்து இடல் அஞ்சி;
இடுக்கண் உற்றனன்; உய்வகை அருளாய்- இடைமருது(வ்)உறை எந்தைபிரானே!.

7.072   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கொடு மழு விரகினன், கொலை மலி சிலையினன்,
நெடு மதில் சிறுமையின் நிரவ வல்லவன், இடம்;
படு மணி முத்தமும் பவளமும் மிகச் சுமந்து
இடு மணல் அடை கரை இடம் வலம்புரமே.

8.202   8 st/nd Thirumurai   Song # 13   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
கொடுங்கால் குலவரை யேழேழ்
   பொழிலெழில் குன்றுமன்று
நடுங்கா தவனை நடுங்க
   நுடங்கு நடுவுடைய
விடங்கா லயிற்கண்ணி மேவுங்கொ
   லாந்தில்லை யீசன்வெற்பில்
தடங்கார் தருபெரு வான்பொழில்
   நீழலந் தண்புனத்தே.

10.913   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
கொடுகொட்டி பாண்டரம் கோடுசங் காரம்
நடம்எட்டோ(டு) ஐந்(து) ஆறு நாடியுள் நாடும்
திடம்உ ற்றெழும் தேவ தாருவனத் தில்லை
வடம்உற்ற மாவன மன்னவன் தானே.

11.010   11 st/nd Thirumurai   Song # 36   நக்கீரதேவ நாயனார்   திருஈங்கோய்மலை எழுபது  
கொடுவிற் சிலைவேடர் கொல்லை புகாமல்
படுகுழிகள் கல்லுதல்பார்த் தஞ்சி நெடுநாகம்
தண்டூன்றிச் செல்லுஞ்சீர் ஈங்கோயே தாழ்சடைமேல்
வண்டூன்றுந் தாரான் மலை.

11.016   11 st/nd Thirumurai   Song # 15   நக்கீரதேவ நாயனார்   போற்றித் திருக்கலி வெண்பா  
கொடுத்தெறியும் மாகாளி கோபந் தவிர
எடுத்த நடத்தியல்பு போற்றி தடுத்து

11.033   11 st/nd Thirumurai   Song # 64   நம்பியாண்டார் நம்பி   திருத்தொண்டர் திருவந்தாதி  
கொடுத்தான் முதலைகொள் பிள்ளைக்
குயிரன்று புக்கொளியூர்த்
தொடுத்தான் மதுர கவியவி
நாசியை வேடர்சுற்றம்
படுத்தான் திருமுரு கன்பூண்
டியினில் பராபரத்தேன்
மடுத்தா னவனென்பர் வன்றொண்ட
னாகின்ற மாதவனே.

11.037   11 st/nd Thirumurai   Song # 104   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
கொடு நிகளம் போக்கி நிமிர் கொண்டெழுந்து கோபித்
திடுவண்டை இட்டுக் கலித்து முடுகி

12.070   12 st/nd Thirumurai   Song # 15   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
கொடுத்த கோவணம் கைக்கொண்டு கோதிலா அன்பர்
கடுப்பில் இங்கெழுந் தருளும்நீர் குளித்தெனக் கங்கை
மடுத்த தும்பிய வளர்சடை மறைத்தஅம் மறையோர்
அடுத்த தெண்டிரைப் பொன்னிநீ ராடுதற்கு அகன்றார்.
12.190   12 st/nd Thirumurai   Song # 35   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
கொடுவி னைத்தொழில் நுளையர்கள் கொடுப்பன கொழுமீன்
படும ணற்கரை நுளைச்சியர் கொடுப்பன பவளம்
தொடுக டற்சங்கு துறையவர் குளிப்பன அவர்தம்
வடுவ கிர்க்கண்மங் கையர்குளிப் பனமணற் கேணி.
12.280   12 st/nd Thirumurai   Song # 630   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
கொடுங்குன்றத் தினிதமர்ந்த
கொழும்பவளச் செழுங்குன்றை
அடுங்குன்றம் உரித்தானை
வணங்கிஅருந் தமிழ்பாடி
நெடுங்குன்றம் படர்கானும்
நிறைநாடுங் கடந்துமதி
தொடுங்குன்ற மதில்மதுரைத்
தொன்னகர்வந் தணைகின்றார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 144   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
கொடுங்கோ ளூரின் மதில்வாயில்
அணிகோ டித்து மறுகில்உடுத்
தொடுங்கோ புரங்கள் மாளிகைகள்
சூளி குளிர்சா லைகள்தெற்றி
நெடுங்கோ நகர்கள் ஆடரங்கு
நிரந்த மணித்தா மங்கமுகு
விடுங்கோ தைப்பூந் தாமங்கள்
நிரைத்து வெவ்வே றலங்கரித்து.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list