சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் கொட்ட
கொட்டும்     கொட்டுவர்,     கொட்டியும்     கொட்டனம்-     கொட்டுக்     கொட்டிக்     கொட்டியவன்     கொட்டமே     கொட்ட     கொட்டு    
1.086   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கொட்டும் பறை சீரால் குழும, அனல் ஏந்தி,
நட்டம் பயின்று ஆடும் நல்லூர்ப் பெருமானை
முட்டு இன்று இருபோதும், முனியாது எழுந்து, அன்பு-
பட்ட மனத்தார்கள் அறியார், பாவமே.

1.117   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கொட்டுவர், அக்கு அரை ஆர்ப்பது, தக்கை; குறுந்தாளன
இட்டுவர் தம், கலப்பு இலர், இன்புகழ், என்பு; உலவின்
மட்டு வரும் தழல், சூடுவர் மத்தமும், ஏந்துவர்; வான்
தொட்டு வரும் கொடித் தோணிபுரத்து உறை சுந்தரரே.

3.001   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கொட்டமே கமழும் குழலாளொடு கூடினாய்! எருது ஏறினாய்! நுதல்
பட்டமே புனைவாய்! இசை பாடுவ பாரிடமா,
நட்டமே நவில்வாய்! மறையோர் தில்லை, நல்லவர், பிரியாத சிற்றம்பலம்
இட்டமா உறைவாய்! இவை மேவியது என்னை கொலோ

3.006   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர்
நட்டம் ஆடிய நம்பனை உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!

3.075   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கொட்ட முழவு, இட்ட அடி வட்டணைகள் கட்ட, நடம் ஆடி, குலவும்
பட்டம் நுதல், கட்டு மலர் மட்டு மலி, பாவையொடு மேவு பதிதான்-
வட்டமதி தட்டு பொழிலுள், தமது வாய்மை வழுவாத மொழியார்
சட்ட கலை எட்டு மருவு எட்டும் வளர் தத்தை பயில் சண்பைநகரே.

4.089   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கொட்டு முழவு அரவத்தொடு கோலம்பல அணிந்து
நட்டம் பல பயின்று ஆடுவர்; நாகம் அரைக்கு அசைத்துச்
சிட்டர் திரிபுரம் தீ எழச் செற்ற சிலை உடையான்
இட்டம் உமையொடு நின்ற நெய்த்தானத்து இருந்தவனே.

10.924   10 st/nd Thirumurai   Song # 36   திருமூலர்   திருமந்திரம்  
கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடை
எட்டியும் வேம்பும் இனியதோர் வாழையும்
கட்டியும் தேனும் கலந்துண்ண மாட்டாதார்
எட்டிப் பழத்துக் கிளைக்கின்ற வாறே.

10.924   10 st/nd Thirumurai   Song # 40   திருமூலர்   திருமந்திரம்  
கொட்டனம்- செய்து குளிக்கின்ற கூவலுள்
வட்டனப் பூமி மருவிவந் தூறிடும்
கட்டனம் செய்து கயிற்றால் தொழுமியுள்
ஒட்டனம் செய்தெளி யாவர்க்கு மாமே.

10.924   10 st/nd Thirumurai   Song # 41   திருமூலர்   திருமந்திரம்  
கொட்டுக் குந்தாலி இரண்டே இரண்டுக்கும்
கொட்டுக்குந் தாலிக்கும் பாரை வலிதென்பர்
கொட்டுக்குந் தாலிக்கும் பாரைக்கும் மூன்றுக்கும்
இட்டம் வலிதென்பர் ஈசன் அருளே.

11.006   11 st/nd Thirumurai   Song # 47   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
கொட்டும் சிலபல சூழநின்
ரார்க்கும்குப் புற்றெழுந்து
நட்ட மறியும் கிரீடிக்கும்
பாடும் நகும்வெருட்டும்
வட்டம் வருமருஞ் சாரணை
செல்லும் மலர்தயங்கும்
புட்டங் கிரும்பொழில் சூழ்மறைக்
காட்டான் பூதங்களே.

11.016   11 st/nd Thirumurai   Song # 19   நக்கீரதேவ நாயனார்   போற்றித் திருக்கலி வெண்பா  
கொட்டிக் குறளை உரைத்த அயன்சிரத்தை
வெட்டிச் சிரித்த விறல்போற்றி மட்டித்து

11.016   11 st/nd Thirumurai   Song # 21   நக்கீரதேவ நாயனார்   போற்றித் திருக்கலி வெண்பா  
கொட்டியவன் தாதை இருதாள் எறிந்துயிரை
வீட்டிய சண்டிக்கு வேறாக நாட்டின்கண்


This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list