| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter:
( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் கொண்டல்
கொண்டல்
கொண்டல்வண்
3.031
3 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கொண்டல் சேர் கோபுரம், கோலம் ஆர் மாளிகை,
கண்டலும் கைதையும் கமலம் ஆர் வாவியும்,
வண்டு உலாம் பொழில், அணி மயேந்திரப்பள்
செண்டு சேர் விடையினான் திருந்து அடி பணிமினே!
6.051
6 st/nd Thirumurai
Song # 9
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொண்டல் உள்ளார்; கொண்டீச்சுரத்தின் உள்ளார்; கோவலூர் வீரட்டம் கோயில் கொண்டார்;
தண்டலையார்; தலையாலங்காட்டில் உள்ளார்; தலைச்சங்கைப் பெருங்கோயில் தங்கினார் தாம்;
வண்டலொடு மணல் கொணரும் பொன்னி நன்நீர் வலஞ்சுழியார்; வைகலில் மேல்மாடத்து உள்ளார்;
வெண்தலை கைக் கொண்ட விகிர்த வேடர் வீழிமிழலையே மேவினாரே.
10.211
10 st/nd Thirumurai
Song # 4
திருமூலர்
திருமந்திரம்
கொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடி
அண்டத்துள் ஊறி யிருந்தெண் டிரையாகி
ஒன்றின் பதஞ்செய்ய ஓம்என்ற அப்புறக்
குண்டத்தின் மேல்அங்கி கோலிக்கொண் டானே.
11.024
11 st/nd Thirumurai
Song # 13
இளம்பெருமான் அடிகள்
சிவபெருமான் திருமும்மணிக்கோவை
கொண்டல் காரெயிற்றுச் செம்மருப் பிறாலின்
புண்படு சிமையத்துப் புலவுநாறு குடுமி
வரையோன் மருக புனலாள் கொழுந
இளையோன் தாதை முதுகாட்டுப் பொருநநின்
நீறாடு பொலங்கழல் பரவ
வேறாங்கு கவர்க்குமோ வீடுதரு நெறியே.
11.026
11 st/nd Thirumurai
Song # 38
பட்டினத்துப் பிள்ளையார்
கோயில் நான்மணிமாலை
கொண்டல்வண் ணத்தவன் நான்முகன்
இந்திரன் கோமகுடத்
தண்டர்மிண் டித்தொழும் அம்பலக்
கூத்தனுக் கன்பு செய்யா
மிண்டர்மிண் டித்திரி வாரெனக்
கென்னினி நானவன்றன்
தொண்டர்தொண் டர்க்குத் தொழும்பாய்த்
திரியத் தொடங்கினனே.
12.190
12 st/nd Thirumurai
Song # 8
சேக்கிழார்
மும்மையால் உலகாண்ட சருக்கம்
கொண்டல் வானத்தின் மணிசொரி வனகுல வரைப்பால்
தண்டு ணர்க்கொன்றை பொன்சொரி வனதள வயற்பால்
வண்டல் முத்தநீர் மண்டுகால் சொரிவன வயற்பால்
கண்டல் முன்துறைக் கரிசொரி வனகலங் கடற்பால்.
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000