சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் கொம்பு
கொம்பு    
2.071   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கொம்பு ஆர் பூஞ்சோலைக் குறும்பலா மேவிய கொல்
ஏற்று அண்ணல்,
நம்பான், அடி பரவும் நால்மறையான் ஞானசம்பந்தன்
சொன்ன
இன்பு ஆய பாடல் இவைபத்தும் வல்லார், விரும்பிக்
கேட்பார்
தம்பால தீவினைகள் போய் அகலும்; நல்வினைகள் தளரா
அன்றே.

2.088   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கொம்பு அன்ன மின்னின் இடையாள் ஒர் கூறன், விடை
நாளும் ஏறு குழகன்,
நம்பன், எம் அன்பன், மறை நாவன், வானின் மதி ஏறு
சென்னி அரன், ஊர்
அம்பு அன்ன ஒண்கணவர் ஆடு அரங்கின் அணி
கோபுரங்கள், அழகு ஆர்
செம்பொன்ன செவ்வி தரு மாடம், நீடு திரு முல்லை
வாயில் இதுவே.

3.001   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கொம்பு அலைத்து அழகு எய்திய நுண் இடை,கோல வாள்மதிபோலும் முகத்து இரண்டு
அம்பு அலைத்த கண்ணாள் முலை மேவிய வார்சடையான்
கமபலைத்து எழு காமுறு காளையர் காதலால் கழல்சேவடி கைதொழ,
அம்பலத்து உறைவான் அடியார்க்கு அடையா, வினையே.

3.018   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கொம்பு இயல் கோதை முன் அஞ்ச, குஞ்சரத்-
தும்பி அது உரி செய்த துங்கர் தங்கு இடம்
வம்பு இயல் சோலை சூழ் வைகல் மேல்-திசை,
செம்பியன் கோச்செங்கணான் செய் கோயிலே.

3.082   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கொம்பு இரிய வண்டு உலவு கொன்றை, புரிநூலொடு குலாவி,
தம் பரிசினோடு சுடுநீறு தடவந்து, இடபம் ஏறி,
கம்பு அரிய செம்பொன் நெடுமாட மதில், கல்வரை வில் ஆக,
அம்பு எரிய எய்த பெருமான் உறைவது அவளிவணலூரே.

4.004   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கொம்பு நல் வேனிலவனைக் குழைய முறுவல் செய்தானும்,
செம்பு நல் கொண்ட எயில் மூன்றும் தீ எழக் கண் சிவந்தானும்,
வம்பு நல் கொன்றையினானும், வாள் கண்ணி வாட்டம் அது எய்த
அம்பர ஈர் உரியானும்- ஆரூர் அமர்ந்த அம்மானே.

4.024   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கொம்பு கொப்பளித்த திங்கள் கோணல் வெண் பிறையும் சூடி,
வம்பு கொப்பளித்த கொன்றை வளர் சடை மேலும் வைத்து,
செம்பு கொப்பளித்த மூன்று மதில் உடன் சுருங்க, வாங்கி
அம்பு கொப்பளிக்க எய்தார்-அதிகைவீரட்டனாரே

4.066   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கொம்பு அனாள் பாகர் போலும்; கொடி உடை விடையர் போலும்;
செம்பொன் ஆர் உருவர் போலும்; திகழ் திரு நீற்றர் போலும்;
எம்பிரான்! எம்மை ஆளும் இறைவனே! என்று தம்மை
நம்புவார்க்கு அன்பர் போலும்-நாக ஈச்சுரவனாரே.

7.083   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கொம்பு அன நுண் இடையாள் கூறனை, நீறு அணிந்த
வம்பனை, எவ் உயிர்க்கும் வைப்பினை, ஒப்பு அமராச்
செம்பொனை, நல்மணியை,-தென்திரு ஆரூர் புக்கு-
என்பொனை, என் மணியை, என்றுகொல் எய்துவதே?


This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list