சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் கோ
கோவண     கோலம்     கோது     கோள்     கோடல்     கோழை     கோல்வளை     கோல     கோணா     கோயிலின்     கோலக்     கோனக்கன்     கோயில்கொண்     கோவுணர்த்     கோவணங்     கோரை     கோமுற்     கோட்டி     கோத்த     கோங்கின்     கோடரவங்     கோப்பாடி     கோவிற்     கோட்டகத்துப்     கோதைவேல்     கோலப்     கோவின்திரு     கோலப்பூங்     கோட்டமில்என்     கோடுமுன்     கோலினிற்     கோட்டு     கோடு     கோதி     கோதில்     கோலும்     கோவாய்     கோயிலினிற்     கோடல்கோங்     கோதிலா     கோயிலுட்     கோவல்     கோதைமாதர்     கோதையர்     கோவைவாய்ப்     கோதை     கோவா     கோளுறு     கோதின்     கோடிக்     கோத்திட்டை     கோடாத     கோயிலை     கோயில்     கோடுஎலாம்     கோடல்,     கோடலொடு     கோன்     கோங்கு     கோலத்து     கோணல்     கோங்கு,     கோட்டகக்     கோடல்கள்     கோடு,     கோங்கமே,     கோசரம்     கோவலன்     கோடி     கோவணம்     கோணிக்     கோனைக்     கோலும்,     கோ     கோவணமோ,     கோழிக்     கோத்திட்டையும்     கோட்டம்     கோணிய     கோடரம்     கோழி     கோலாலம்     கோல்     கோல்தேன்     கோண்     கோவே,     கோங்கிற்     கோம்பிக்     கோலத்     கோலித்     கோலமே     கோவினைப்    
Search limited to first 100
1.007   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கோவண ஆடையும், நீற்றுப்பூச்சும், கொடுமழு ஏந்தலும், செஞ்சடையும்,
நாவணப் பாட்டும், நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்
பூவண மேனி இளைய மாதர், பொன்னும் மணியும் கொழித்து எடுத்து,
ஆவண வீதியில் ஆடும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?

1.015   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கோலம் முடி நெடு மாலொடு, கொய் தாமரை யானும்,
சீலம் அறிவு அரிது ஆய் ஒளி திகழ்வு ஆய நெய்த்தானம்,
காலம் பெற, மலர் நீர் அவை தூவித் தொழுது ஏத்தும்
ஞாலம் புகழ் அடியார் உடல் உறு நோய் நலியாவே.

1.028   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கோது சாற்றித் திரிவார், அமண் குண்டர்,
ஓதும் ஓத்தை உணராது எழு, நெஞ்சே!
நீதி நின்று நினைவார் வேடம் ஆம்
ஆதி சோற்றுத்துறை சென்று அடைவோமே.

1.080   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கோள் நாக(அ)ணையானும் குளிர்தாமரையானும்
காணார் கழல் ஏத்த, கனல் ஆய் ஓங்கினான்,
சேணார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் ஏத்த,
மாணா நோய் எல்லாம் வாளா மாயுமே.

1.106   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கோடல் இரும் புறவில் கொடி மாடக் கொச்சையர்மன், மெச்ச
ஓடுபுனல் சடைமேல் கரந்தான் திரு ஊறல்,
நாடல் அரும்புகழான் மிகு ஞானசம்பந்தன், சொன்ன நல்ல
பாடல்கள் பத்தும் வல்லார் பரலோகத்து இருப்பாரே.

2.002   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கோடுஎலாம் நிறையக் குவளை மலரும் குழி
மாடுஎலாம் மலிநீர் மணம் நாறும் வலஞ்சுழி,
சேடுஎலாம் உடையீர்! சிறுமான்மறியீர்! சொலீர்
நாடுஎலாம் அறியத் தலையில் நறவு ஏற்றதே?

2.003   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கோடு அடுத்த பொழிலின்மிசைக் குயில் கூவிடும்
சேடு அடுத்த தொழிலின் மிகு தெளிச்சேரியீர்!
மாடு அடுத்த மலர்க்கண்ணினாள் கங்கை நங்கையைத்
தோடு அடுத்த மலர்ச் சடை என்கொல் நீர் சூடிற்றே?

2.006   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை, குலாய சீர்
ஓடு கங்கை, ஒளிவெண்பிறை, சூடும் ஒருவனார்
பாடல் வீணை, முழவம், குழல், மொந்தை, பண் ஆகவே
ஆடும் ஆறு வல்லானும் ஐயாறு உடை ஐயனே.

2.029   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கோடலொடு கூன்மதி குலாய சடைதன்மேல்
ஆடுஅரவம் வைத்துஅருளும் அப்பன், இருவர்க்கும்
நேட எரி ஆகி, இருபாலும் அடி பேணித்
தேட, உறையும் நகர் திருப் புகலி ஆமே.

2.034   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கோடலொடு கோங்குஅவை குலாவு முடிதன்மேல்
ஆடுஅரவம் வைத்த பெருமானது இடம் என்பர்
மாடம் மலி சூளிகையில் ஏறி, மடவார்கள்
பாடலொலி செய்ய, மலிகின்ற பழுவூரே.

2.037   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கோன் என்று பல்கோடிஉருத்திரர் போற்றும்
தேன் அம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை செல்வா!
ஏனம் கழுகு ஆனவர், உன்னை முன், என்கொல்,
வானம் தலம் மண்டியும் கண்டிலாஆறே?

2.041   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கோங்கு அன்ன குவிமுலையாள், கொழும் பணைத்தோள்
கொடியிடையைப்
பாங்கு என்ன வைத்து உகந்தான், படர்சடைமேல்
பால்மதியம்
தாங்கினான் பூம் புகார்ச் சாய்க்காட்டான்; தாள் நிழல் கீழ்
ஓங்கினார், ஓங்கினார் என உரைக்கும், உலகமே.

2.044   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கோள் நாகப் பேர் அல்குல் கோல்வளைக்கை மாதராள
பூண் ஆகம் பாகமாப் புல்கி, அவளோடும்
ஆண் ஆகம் காதல் செய் ஆமாத்தூர் அம்மானைக்
காணாத கண் எல்லாம் காணாத கண்களே

2.046   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கோலத்து ஆர் கொன்றையான், கொல் புலித் தோல்
ஆடையான்,
நீலத்து ஆர் கண்டத்தான், நெற்றி ஓர் கண்ணினான்
ஞாலத்தார் சென்று ஏத்தும் நாலூர் மயானத்தில்
சூலத்தான் என்பார்பால், சூழா ஆம், தொல்வினையே.

2.051   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கோல மா மயில் ஆலக் கொண்டல்கள் சேர் பொழில் குலவும் வயல் இடைச்
சேல், இளங் கயல், ஆர் புனல் சூழ்ந்த திருக்களருள
நீலம் மேவிய கண்டனே! நிமிர்புன்சடைப் பெருமான் எனப் பொலி
ஆல நீழல் உளாய்! அடைந்தார்க்கு அருளாயே!

2.061   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கோள் வித்து அனைய கூற்றம் தன்னைக் குறிப்பினால்
மாள்வித்து, அவனை மகிழ்ந்து அங்கு ஏத்து மாணிக்கு
ஆய்
ஆள்வித்து, அமரர் உலகம் அளிப்பான் ஊர்போலும்
வேள்விப் புகையால் வானம் இருள் கூர் வெண்காடே.

2.102   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கோல மா கரி உரித்தவர்; அரவொடும், ஏனக்கொம்பு, இள
ஆமை,
சாலப் பூண்டு, தண்மதி அது சூடிய சங்கரனார்; தம்மைப்
போலத் தம் அடியார்க்கும் இன்பு அளிப்பவர்; பொருகடல்
விடம் உண்ட
நீலத்து ஆர் மிடற்று அண்ணலார்; சிரபுரம் தொழ, வினை
நில்லாவே.

2.109   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கோணல் வெண்பிறைச் சடையனை, கோட்டூர்
நற்கொழுந்தினை, செழுந்திரனை,
பூணல் செய்து அடி போற்றுமின்! பொய் இலா மெய்யன்
நல் அருள் என்றும்
காணல் ஒன்று இலாக் கார் அமண், தேரர்குண்டு ஆக்கர்,
சொல் கருதாதே,
பேணல் செய்து, அரனைத் தொழும் அடியவர்
பெருமையைப் பெறுவாரே.

2.110   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கோடு தேன் சொரி குன்று இடைப் பூகமும் கூந்தலின்
குலை வாரி
ஓடு நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை நம்பன்,
வாடினார் தலையில் பலி கொள்பவன், வானவர் மகிழ்ந்து
ஏத்தும்
கேடு இலாமணியைத் தொழல் அல்லது, கெழுமுதல்
அறியோமே.

2.110   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கோங்கு, செண்பகம், குருந்தொடு, பாதிரி, குரவு, இடை
மலர் உந்தி,
ஓங்கி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை,
பாங்கினால் இடும் தூபமும் தீபமும் பாட்டு அவி(ம்) மலர்
சேர்த்தி,
தாங்குவார் அவர், நாமங்கள் நாவினில் தலைப்படும்
தவத்தோரே.

3.006   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கோட்டகக் கழனிக் கொள்ளம்பூதூர்
நாட்டு அகத்து உறை நம்பனை உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!

3.014   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கோடல்கள் புறவு அணி கொல்லை முல்லைமேல்
பாடல் வண்டு இசை முரல் பயில் பைஞ்ஞீலியார்
பேடு அலர், ஆண் அலர், பெண்ணும் அல்லது, ஓர்
ஆடலை உகந்த எம் அடிகள் அல்லரே!

3.023   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கோடல் வெண்பிறையனை, கூகம் மேவிய
சேடன செழு மதில் திரு விற்கோலத்தை,
நாட வல்ல தமிழ் ஞானசம்பந்தன
பாடல் வல்லார்களுக்கு இல்லை, பாவமே.

3.030   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கோடல் சால(வ்) உடையார், கொலை யானையின்
மூடல் சால(வ்) உடையார், முளி கான் இடை
ஆடல் சால(வ்) உடையார், அழகு ஆகிய
பீடர், கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.

3.031   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கோங்கு இள வேங்கையும், கொழு மலர்ப்புன்னையும்,
தாங்கு தேன் கொன்றையும், தகு மலர்க்குரவமும்,
மாங் கரும்பும், வயல் மயேந்திரப்பள்
ஆங்கு இருந்தவன் கழல் அடி இணை பணிமினே!

3.032   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கோடு, சந்தனம், அகில், கொண்டு இழி வைகை நீா
ஏடு சென்று அணைதரும் ஏடகத்து ஒருவனை,
நாடு தென்புகலியுள் ஞானசம்பந்தன
பாடல் பத்து இவை வலார்க்கு இல்லை ஆம், பாவமே.

3.036   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கோங்கமே, குரவமே, கொன்றை, அம் பாதிர்
மூங்கில், வந்து அணைதரு முகலியின் கரையினில்,
ஆங்கு அமர் காளத்தி அடிகளை அடி தொழ,
வீங்கு வெந்துயர் கெடும்; வீடு எளிது ஆகுமே.

3.052   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கோலம் ஆய நீள்மதிள் கூடல் ஆலவாயிலாய்!
பாலன் ஆய தொண்டு செய்து, பண்டும் இன்றும் உன்னையே,
நீலம் ஆய கண்டனே! நின்னை அன்றி, நித்தலும்,
சீலம் ஆய சிந்தையில் தேர்வது இல்லை, தேவரே.

3.061   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கோல மலர் அயனும், குளிர் கொண்டல் நிறத்தவனும்,
சீலம் அறிவு அரிது ஆய்த் திகழ்ந்து ஓங்கிய செந்தழலான்;
மூலம் அது ஆகி நின்றான்; முதிர் புன்சடை வெண்பிறையான்;
வேலைவிடமிடற்றான்; விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே.

3.071   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கோழை மிடறு ஆக, கவி கோளும் இல ஆக, இசை கூடும் வகையால்,
ஏழை அடியார் அவர்கள் யாவை சொன சொல் மகிழும் ஈசன் இடம் ஆம்
தாழை இளநீர் முதிய காய் கமுகின் வீழ, நிரை தாறு சிதறி,
வாழை உதிர் வீழ் கனிகள் ஊறி, வயல் சேறு செயும் வைகாவிலே.

3.074   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கோள் அரவு, கொன்றை, நகு வெண் தலை, எருக்கு, வனி, கொக்கு இறகொடும்,
வாள் அரவு, தண்சலமகள், குலவு செஞ்சடை வரத்து இறைவன் ஊர்
வேள் அரவு கொங்கை இள மங்கையர்கள் குங்குமம் விரைக்கும் மணம் ஆர்
தேள் அரவு தென்றல் தெரு எங்கும் நிறைவு ஒன்றி வரு தேவூர் அதுவே.

3.079   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கோடல் அரவு ஈனும் விரி சாரல் முன் நெருங்கி வளர்
கோகரணமே
ஈடம் இனிது ஆக உறைவான் அடிகள் பேணி, அணி காழி நகரான்-
நாடிய தமிழ்க்கிளவி இன் இசை செய்
ஞானசம்பந்தன்-மொழிகள்
பாட வல பத்தர் அவர் எத்திசையும் ஆள்வர்; பரலோகம் எளிதே.

3.084   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கோசரம் நுகர்பவர், கொழுகிய துவர் அன துகிலினர்
பாசுர வினை தரு பளகர்கள், பழி தரு மொழியினர்
நீசரை விடும், இனி! நினைவு உறும் நிமலர்தம் உறைபதி,
பூசுரர் மறை பயில் நிறை புகழ் ஒலி மலி, புறவமே!

3.091   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கோங்கமே, குரவமே, கொழு மலர்ப் புன்னையே, கொகுடி, முல்லை,
வேங்கையே, ஞாழலே, விம்மு பாதிரிகளே, விரவி எங்கும்
ஓங்கு மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை,
வீங்கு நீர்ச் சடைமுடி அடிகளார் இடம் என விரும்பினாரே.

3.091   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கோடு இடைச் சொரிந்த தேன் அதனொடும் கொண்டல்
வாய்விண்ட முன்நீா
காடு உடைப் பீலியும் கடறு உடைப் பண்டமும் கலந்து நுந்தி,
ஓடு உடைக் காவிரி வடகரை அடை குரங்காடுதுறை,
பீடு உடைச் சடைமுடி அடிகளார் இடம் எனப் பேணினாரே.

3.091   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கோல மா மலரொடு தூபமும் சாந்தமும் கொண்டு போற்றி
வாலியார் வழிபடப் பொருந்தினார், திருந்து மாங்கனிகள் உந்தி
ஆலும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை
நீல மாமணி மிடற்று அடிகளை, நினைய, வல்வினைகள் வீடே.

3.101   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கோவலன் நான்முகன் நோக்க ஒணாத குழகன், அழகு ஆய
மேவலன், ஒள் எரி ஏந்தி ஆடும் இமையோர் இறை, மெய்ம்மை
ஏ வலனார் புகழ்ந்து ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரம் மேய
சே வல வெல் கொடி ஏந்து கொள்கை எம் இறைவர், செயும் செயலே!

3.103   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கோத்த கல்லாடையும், கோவணமும், கொடுகொட்டி
கொண்டு ஒரு கை,
தேய்த்து அன்று அநங்கனைத் தேசு அழித்து, திசையார் தொழுது ஏத்த,
காய்த்த கல்லால் அதன் கீழ் இருந்த கடவுள் இடம் போலும்
வாய்த்த முத்தீத் தொழில் நால் மறையோர் வலம்புர
நன்நகரே.

3.105   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கோல நல் மேனியின் மாதர் மைந்தர் கொணர் மங்கலியத்தில்,
காலமும் பொய்க்கினும், தாம் வழுவாது இயற்றும் கலிக்காமூர்,
ஞாலமும், தீ, வளி, ஞாயிறு, ஆய நம்பன் கழல் ஏத்தி,
ஓலம் இடாதவர் ஊழி என்றும் உணர்வைத் துறந்தாரே.

4.015   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கோலக் காவில் குருமணியை, குடமூக்கு உறையும் விடம் உணியை,
ஆலங்காட்டில் அம் தேனை, அமரர் சென்னி ஆய்மலரை,
பாலில்-திகழும் பைங்கனியை, பராய்த்துறை எம் பசும் பொன்னை,
சூலத்தானை, துணை இலியை, தோளைக் குளிரத் தொழுதேனே.

4.057   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கோலம் மா மங்கை தன்னைக் கொண்டு ஒரு கோலம் ஆய
சீலமே அறிய மாட்டேன்; செய்வினை மூடி நின்று
ஞாலம் ஆம் இதனுள் என்னை நைவியா வண்ணம் நல்காய்
ஆலம் மா நஞ்சம் உண்ட ஆவடுதுறை உளானே!

4.061   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கோடி மா தவங்கள் செய்து குன்றினார் தம்மை எல்லாம்
வீடவே சக்கரத்தால் எறிந்து, பின் அன்பு கொண்டு,
தேடி, மால் செய்த கோயில்-திரு இராமேச்சுரத்தை
நாடி வாழ்!-நெஞ்சமே, நீ!-நன்நெறி ஆகும் அன்றே.

4.077   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கோவணம் உடுத்த ஆறும், கோள் அரவு அசைத்த ஆறும்,
தீ வணச் சாம்பர் பூசித் திரு உரு இருந்த ஆறும்,
பூவணக் கிழவனாரை புலி உரி அரையனாரை,
ஏ வணச் சிலையினாரை, யாவரே எழுதுவாரே?

4.096   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கோவாய் முடுகி அடுதிறல் கூற்றம் குமைப்பதன் முன்
பூ ஆர் அடிச்சுவடு என்மேல் பொறித்துவை! போக விடில்
மூவா முழுப்பழி மூடும்கண்டாய்-முழங்கும் தழல் கைத்
தேவா! திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே!

5.005   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கோணிக் கொண்டையர் வேடம் முன் கொண்டவர்,
பாணி நட்டங்கள் ஆடும் பரமனார்,
ஆணிப் பொன்னின், அண்ணாமலை கைதொழப்
பேணி நின்ற பெருவினை போகுமே.

5.031   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கோனைக் காவிக் குளிர்ந்த மனத்தராய்த்
தேனைக் காவி உண்ணார், சிலதெண்ணர்கள்;
ஆனைக்காவில் எம்மானை அணைகிலார்,
ஊனைக் காவி உழிதர்வர், ஊமரே.

5.039   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கோலும், புல்லும், ஒரு கையில் கூர்ச்சமும்,
தோலும், பூண்டு துயரம் உற்று என் பயன்?
நீல மா மயில் ஆடு துறையனே!
நூலும் வேண்டுமோ, நுண் உணர்ந்தோர்கட்கே?

5.041   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கோடல் கோங்கம் புறவு அணி முல்லைமேல்
பாடல் வண்டு இசை கேட்கும் பைஞ்ஞீலியார்,
பேடும் ஆணும் பிறர் அறியாதது ஓர்-
ஆடும் நாகம் அசைத்த-அடிகளே.

5.053   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கோணல் மா மதி சூடி, ஓர் கோவண
நாண் இல் வாழ்க்கை நயந்தும், பயன் இலை;
பாணில் வீணை பயின்றவன் வீரட்டம்
காணில் அல்லது, என் கண் துயில் கொள்ளுமே?

5.099   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கோடி தீர்த்தம் கலந்து குளித்து அவை-
ஆடினாலும், அரனுக்கு அன்பு இல்லையேல்,
ஓடும் நீரினை ஓட்டைக் குடத்து அட்டி
மூடி வைத்திட்ட மூர்க்கனொடு ஒக்குமே.

6.013   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கோ ஆய இந்திரன் உள்ளிட்டார் ஆகக் குமரனும், விக்கின விநாயக(ன்)னும்,
பூ ஆய பீடத்து மேல் அய(ன்)னும், பூமி அளந்தானும், போற்று இசைப்ப;
பா ஆய இன் இசைகள் பாடி ஆடிப் பாரிடமும் தாமும் பரந்து பற்றி,
பூ ஆர்ந்த கொன்றை பொறிவண்டு ஆர்க்க, புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே!.

6.025   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கோவணமோ, தோலோ, உடை ஆவது? கொல் ஏறோ, வேழமோ, ஊர்வதுதான்?
பூவணமோ, புறம்பயமோ, அன்று ஆயில்-தான் பொருந்தாதார் வாழ்க்கை திருந்தாமையோ?
தீ வணத்த செஞ்சடைமேல்-திங்கள் சூடி, திசை நான்கும் வைத்து உகந்த செந்தீவண்ணர்,
ஆவணமோ, ஒற்றியோ, அம்மானார் தாம்- அறியேன் மற்று-ஊர் ஆம் ஆறு ஆரூர்தானே?.

6.047   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கோன் நாரணன் அங்கம் தோள்மேல் கொண்டு, கொழு மலரான் தன் சிரத்தைக் கையில் ஏந்தி,
கான் ஆர் களிற்று உரிவைப் போர்வை மூடி, கங்காளவேடராய் எங்கும் செல்வீர்;
நான் ஆர், உமக்கு, ஓர் வினைக்கேட(ன்)னேன்?   நல்வினையும் தீவினையும் எல்லாம் முன்னே
ஆனாய்! அடியேனை, அஞ்சேல்! என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.

6.089   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கோழிக் கொடியோன் தன் தாதைபோலும்; கொம்பனாள் பாகம் குளிர்ந்தார் போலும்;
ஊழி முதல்வரும் தாமே போலும்; உள்குவார் உள்ளத்தின் உள்ளார் போலும்;
ஆழித்தேர் வித்தகரும் தாமே போலும்; அடைந்தவர்கட்கு அன்பராய் நின்றார் போலும்;
ஏழு பிறவிக்கும் தாமேபோலும் இன்னம்பர்த் தான் தோன்றி   ஈசனாரே.

7.002   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கோத்திட்டையும் கோவலும் கோவில் கொண்டீர்; உம்மைக் கொண்டு உழல்கின்றது ஓர், கொல்லைச் சில்லை,
சே, திட்டுக் குத்தித் தெருவே திரியும்; சில பூதமும் நீரும் திசை திசையன;
சோத்திட்டு விண்ணோர் பலரும் தொழ, நும் அரைக் கோவணத்தோடு ஒரு தோல் புடைசூழ்ந்து,
ஆர்த்திட்டதும் பாம்பு; கைக் கொண்டதும் பாம்பு அடிகேள்! உமக்கு ஆட்செய அஞ்சுதுமே .

7.002   7 st/nd Thirumurai   Song # 9   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கோள் ஆளிய குஞ்சரம் கோள் இழைத்தீர்; மலையின் தலை அல்லது கோயில் கொள்ளீர்;
வேள் ஆளிய காமனை வெந்து அழிய விழித்தீர்; அது அன்றியும், வேய் புரையும்
தோளான் உமை நங்கை ஓர்பங்கு உடையீர்; உடு கூறையும் சோறும் தந்து ஆளகில்லீர்;
ஆள் ஆளியவே கிற்றீர்; எம்பெருமான்! அடிகேள்! உமக்கு ஆட்செய அஞ்சுதுமே .

7.003   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கோடு உயர் கோங்கு அலர் வேங்கை அலர் மிக உந்தி வரும் நிவவின் கரை மேல்
நீடு உயர் சோலை நெல்வாயில் அரத்துறை நின்மலனே! நினைவார் மனத்தாய்!
ஓடு புனல் கரை ஆம், இளமை; உறங்கி விழித்தால் ஒக்கும், இப் பிறவி;
வாடி இருந்து வருந்தல் செய்யாது, அடியேன் உய்யப் போவது ஓர் சூழல் சொல்லே!.

7.017   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கோவலன் நான்முகன் வானவர் கோனும் குற்றேவல் செய்ய,
மேவலர் முப்புரம் தீ எழுவித்தவர், ஓர் அம்பினால்;
ஏவலனார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்ட
நாவலனார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே .

7.017   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கோட்டம் கொண்டார், குட மூக்கிலும் கோவலும் கோத்திட்டையும்;
வேட்டம் கொண்டார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்டார்;
ஆட்டம் கொண்டார், தில்லைச் சிற்றம்பலத்தே; அருக்கனை முன்
நாட்டம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே.

7.033   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கோணல் மாமதி சூடரோ? கொடுகொட்டி, காலர் கழலரோ?
வீணை தான் அவர் கருவியோ? விடை ஏறு வேத முதல்வரோ?
நாண் அது ஆக ஒர் நாகம் கொண்டு அரைக்கு ஆர்ப்பரோ? நலம் ஆர்தர
ஆணை ஆக நம் அடிகளோ? நமக்கு அடிகள் ஆகிய அடிகளே.

7.048   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கோணிய பிறை சூடியை, கறையூரில் பாண்டிக் கொடுமுடி
பேணிய பெருமானை, பிஞ்ஞகப்பித்தனை, பிறப்பு இ (ல்)லியை,
பாண் உலா வரிவண்டு அறை கொன்றைத் தாரனை, படப்பாம்பு அரை-
நாணனை, தொண்டன் ஊரன் சொல் இவை சொல்லுவார்க்கு இல்லை, துன்பமே.

7.055   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கோலம் மால் வரை மத்து என நாட்டி, கோள் அர(வ்)வு சுற்றி, கடைந்து எழுந்த
ஆலம் நஞ்சு கண்டு அவர் மிக இரிய, அமரர்கட்கு அருள் புரிவது கருதி,
நீலம் ஆர் கடல் விடம் தனை உண்டு, கண்டத்தே வைத்த பித்த! நீ செய்த
சீலம் கண்டு, நின் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே!.

7.062   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கோடரம் பயில் சடை உடைக் கரும்பை, கோலக் காவுள் எம்மானை, மெய்ம் மானப்
பாடர் அம் குடி அடியவர் விரும்பப் பயிலும் நாவல் ஆரூரன்-வன்தொண்டன்-
நாடு இரங்கி முன் அறியும் அந் நெறியால் நவின்ற பத்து இவை விளம்பிய மாந்தர்
காடு அரங்கு என நடம் நவின்றான் பால் கதியும் எய்துவர்; பதி அவர்க்கு அதுவே .

7.065   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கோடு நான்கு உடைக் குஞ்சரம் குலுங்க, நலம் கொள் பாதம் நின்று ஏத்திய பொழுதே
பீடு விண் மிசைப் பெருமையும் பெற்ற பெற்றி கேட்டு நின் பொன்கழல் அடைந்தேன்-
பேடை மஞ்ஞையும், பிணைகளின் கன்றும், பிள்ளைக்கிள்ளையும், எனப் பிறை நுதலார்
நீடு மாடங்கள் மாளிகை தோறும் நிலவு தென் திரு நின்றியூரானே! .

7.070   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கோது இலா அமுதே! அருள் பெருகு கோலமே! இமையோர் தொழு கோவே!
பாதி மாது ஒருகூறு உடையானே! பசுபதீ! பரமா! பரமேட்டீ!
தீது இலா மலையே! திரு அருள் சேர் சேவகா! திரு ஆவடுதுறையுள்
ஆதியே! எனை, அஞ்சல்! என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!

7.094   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கோல அரவும், கொக்கின் இறகும்,
மாலை மதியும், வைத்தான் இடம் ஆம்-
ஆலும் மயிலும், ஆடல் அளியும்,
சோலை தரு நீர்-சோற்றுத்துறையே.

7.098   7 st/nd Thirumurai   Song # 11   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கோடு உயர் வெங்களிற்றுத் திகழ் கோச்செங்கணான் செய் கோயில்,
நாடிய நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனைச்
சேடு இயல் சிங்கிதந்தை-சடையன், திரு ஆரூரன்
பாடிய பத்தும் வல்லார் புகுவார், பரலோகத்துளே.

8.107   8 st/nd Thirumurai   Song # 8   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
கோழி சிலம்ப, சிலம்பும் குருகு எங்கும்;
ஏழில் இயம்ப, இயம்பும் வெண் சங்கு எங்கும்;
கேழ் இல் பரஞ்சோதி, கேழ் இல் பரங்கருணை,
கேழ் இல் விழுப் பொருள்கள் பாடினோம்; கேட்டிலையோ?
வாழி! ஈது என்ன உறக்கமோ? வாய் திறவாய்!
ஆழியான் அன்புடைமை ஆம் ஆறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை,
ஏழை பங்காளனையே பாடு!' ஏல் ஓர் எம்பாவாய்!

8.112   8 st/nd Thirumurai   Song # 3   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
கோயில் சுடுகாடு, கொல் புலித் தோல் நல் ஆடை,
தாயும் இலி, தந்தை இலி, தான் தனியன் காண்; ஏடீ!
தாயும் இலி, தந்தை இலி, தான் தனியன்; ஆயிடினும்,
காயில், உலகு அனைத்தும் கல் பொடி, காண்; சாழலோ!

8.112   8 st/nd Thirumurai   Song # 8   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
கோலாலம் ஆகிக் குரை கடல்வாய் அன்று எழுந்த
ஆலாலம் உண்டான் அவன் சதுர் தான் என் ஏடீ
ஆலாலம் உண்டிலனேல் அன்று அயன் மால் உள்ளிட்ட
மேல் ஆய தேவர் எல்லாம் வீடுவர் காண் சாழலோ!

8.116   8 st/nd Thirumurai   Song # 8   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
கோல வரைக் குடுமி வந்து, குவலயத்துச்
சால அமுது உண்டு, தாழ் கடலின் மீது எழுந்து,
ஞாலம் மிக, பரி மேற்கொண்டு, நமை ஆண்டான்;
சீலம் திகழும் திரு உத்தரகோசமங்கை,
மாலுக்கு அரியானை வாய் ஆர நாம் பாடி,
பூலித்து, அகம் குழைந்து பொன் ஊசல் ஆடாமோ.

8.119   8 st/nd Thirumurai   Song # 7   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
கோல் தேன் மொழிக் கிள்ளாய்! கோது இல் பெருந்துறைக் கோன்,
மாற்றாரை வெல்லும் படை பகராய் ஏற்றார்
அழுக்கு அடையா நெஞ்சு உருக, மும் மலங்கள் பாயும்
கழுக்கடை காண், கைக்கொள் படை.

8.130   8 st/nd Thirumurai   Song # 5   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
கோல மேனி வராகமே! குணம் ஆம் பெருந்துறைக் கொண்டலே!
சீலம் ஏதும் அறிந்திலாத என் சிந்தை வைத்த சிகாமணி!
ஞாலமே கரி ஆக, நான் உனை நச்சி நச்சிட வந்திடும்
காலமே! உனை ஓத, நீ வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!

8.134   8 st/nd Thirumurai   Song # 8   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
கோல்தேன் எனக்கு என்கோகுரை கடல்வாய் அமுது என்கோ
ஆற்றேன்; எங்கள் அரனே! அரு மருந்தே! எனது அரசே!
சேற்று ஆர் வயல் புடை சூழ்தரு திருப்பெருந்துறை உறையும்,
நீற்று ஆர்தரு திருமேனி நின்மலனே! உனை யானே?

8.135   8 st/nd Thirumurai   Song # 10   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
கோண் இலா வாளி அஞ்சேன்; கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்;
நீள் நிலா அணியினானை நினைந்து, நைந்து, உருகி, நெக்கு,
வாள் நிலாம் கண்கள் சோர, வாழ்த்திநின்று, ஏத்தமாட்டா
ஆண் அலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

8.150   8 st/nd Thirumurai   Song # 6   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
கோவே, அருள வேண்டாவோ? கொடியேன் கெடவே அமையுமே?
ஆ! ஆ!' என்னாவிடில், என்னை அஞ்சேல்' என்பார் ஆரோ தான்?
சாவார் எல்லாம் என் அளவோ? தக்க ஆறு அன்று' என்னாரோ?
தேவே! தில்லை நடம் ஆடீ! திகைத்தேன்; இனித்தான் தேற்றாயே!

8.201   8 st/nd Thirumurai   Song # 13   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
கோங்கிற் பொலியரும் பேய்கொங்கை
   பங்கன் குறுகலரூர்
தீங்கிற் புகச்செற்ற கொற்றவன்
   சிற்றம் பலமனையாள்
நீங்கிற் புணர்வரி தென்றோ
   நெடிதிங்ங னேயிருந்தால்
ஆங்கிற் பழியா மெனவோ
   அறியே னயர்கின்றதே.

8.202   8 st/nd Thirumurai   Song # 3   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
கோம்பிக் கொதுங்கிமே யாமஞ்ஞை
   குஞ்சரங் கோளிழைக்கும்
பாம்பைப் பிடித்துப் படங்கிழித்
   தாங்கப் பணைமுலைக்கே
தேம்பற் றுடியிடை மான்மட
   நோக்கிதில் லைச்சிவன்றாள்
ஆம்பொற் றடமலர் சூடுமென்
   னாற்ற லகற்றியதே.

8.202   8 st/nd Thirumurai   Song # 27   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
கோலத் தனிக்கொம்ப ரும்பர்புக்
   கஃதே குறைப்பவர்தஞ்
சீலத் தனகொங்கை தேற்றகி
   லேஞ்சிவன் தில்லையன்னாள்
நுலொத்த நேரிடை நொய்ம்மையெண்
   ணாதுநுண் தேன்நசையாற்
சாலத் தகாதுகண் டீர்வண்டு
   காள்கொண்டை சார்வதுவே.

8.223   8 st/nd Thirumurai   Song # 3   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
கோலித் திகழ்சிற கொன்றி
   னொடுக்கிப் பெடைக்குருகு
பாலித் திரும்பனி பார்ப்பொடு
   சேவல் பயிலிரவின்
மாலித் தனையறி யாமறை
   யோனுறை யம்பலமே
போலித் திருநுத லாட்கென்ன
   தாங்கொலென் போதரவே.

9.001   9 st/nd Thirumurai   Song # 5   திருமாளிகைத் தேவர்   திருவிசைப்பா  
கோலமே மேலை வானவர் கோவே !
   குணங்குறி இறந்ததோர் குணமே !
காலமே கங்கை நாயகா எங்கள்
   காலகாலா! காம நாசா !
ஆலமே அமுதுண்டு அம்பலம் செம்பொற்
   கோயில்கொண்டு ஆடவல் லானே !
ஞாலமே தமியேன் நற்றவத் தாயைத்
   தொண்டனேன் நணுகுமா நணுகே.
9.007   9 st/nd Thirumurai   Song # 3   சேந்தனார்   திருவிசைப்பா  
கோவினைப் பவளக் குழமணக் கோலக்
    குழாங்கள் சூழ்கோழிவெல் கொடியோன்
காவல்நற் சேனையென் னக்காப் பவன்என்
    பொன்னை மேகலை கவர்வானே
தேவின்நற் றலைவன் திருவிடைக் கழியில்
    திருக்குரா நீழற்கீழ் நின்ற
தூவிநற் பீலி மாமயில் ஊரும்
    சுப்பிர மண்ணியன் தானே.
9.025   9 st/nd Thirumurai   Song # 1   திருவாலியமுதனார்   திருவிசைப்பா  
கோல மலர்நெடுங்கண் கொவ்வை
   வாய்க்கொடி ஏரிடையீர்
பாலினை இன்னமுதைப்
   பரமாய பரஞ்சுடரைச்
சேலுக ளும்வயல்சூழ் தில்லை
   மாநகர்ச் சிற்றம்பலத்(து)
ஏலவுடை எம்இறையை
   என்றுகொல் காண்பதுவே.
10.101   10 st/nd Thirumurai   Song # 12   திருமூலர்   திருமந்திரம்  
கோது குலாவிய கொன்றைக் குழற்சடை
மாது குலாவிய வாள்நுதல் பாகனை
யாது குலாவி அமரருந் தேவரும்
கோது குலாவிக் குணம்பயில் வாரே

10.112   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
கோழை ஒழுக்கங் குளமூடு பாசியில்
ஆழ நடுவார் அளப்புறு வார்களைத்
தாழத் துடக்கித் தடுக்ககில் லாவிடில்
பூழை நுழைந்தவர் போகின்ற வாறே. 

10.214   10 st/nd Thirumurai   Song # 34   திருமூலர்   திருமந்திரம்  
கோல்வளை உந்தியிற் கொண்ட குழவியும்
தால்வளை யுள்ளே தயங்கிய சோதியாம்
பால்வளர்ந் துள்ளே பகலவன் பொன்னுருப்
போல்வளர்ந் துள்ளே பொருந்துரு வாமே. 

10.217   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
கோல வறட்டைக் குனிந்து குளகிட்டுப்
பாலைக் கறந்து பருகுவ தேயொக்கும்
சீலமும் நோன்பும் இலாதவர்க் கீந்தது
காலங் கழிந்த பயிரது ஆகுமே. 

10.307   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி
வீணாத்தண் டூடே வெளியுறத் தான்நோக்கிக்
காணாக்கண் கேளாச் செவியென் றிருப்பார்க்கு
வாணாள் அடைக்கும் வழியது வாமே. 

10.318   10 st/nd Thirumurai   Song # 13   திருமூலர்   திருமந்திரம்  
கோயிலின் உள்ளே குடிசெய்து வாழ்பவர்
தாயினும் நல்லார் தரணி முழுதுக்கும்
காயினும் நல்லவர் காய்ந்தவர் தம்முளுந்
தீயினுந் தீயரத் தீவினை யாளர்க்கே. 

10.406   10 st/nd Thirumurai   Song # 26   திருமூலர்   திருமந்திரம்  
கோலக் குழலி குலாய புருவத்தள்
நீலக் குவளை மலரன்ன கண்ணினாள்
ஆலிக்கும் இன்னமு தானந்த சுந்தரி
மேலைச் சிவத்தை வெளிப்படுத் தாளே.

10.506   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
கோனக்கன் றாய குரைகழல் ஏத்துமின்
ஞானக்கன் றாய நடுவே உழிதரும்
வானக்கன் றாகிய வானவர் கைதொழும்
ஆனைக்கன் றீசன் அருள்வெள்ள மாமே.

10.703   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
கோயில்கொண் டன்றே குடிகொண்ட ஐவரும்
வாயில்கொண் டாங்கே வநின் றருளுவர்
தாயில்கொண் டாற்போல் தலைவன்என் னுட்புக
ஆயில்கொண் டீசனும் ஆளவந் தானே.

10.703   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
கோயில்கொண் டான்அடி கொல்லைப் பெருமறை
வாயில்கொண் டான்அடி நாடிகள் பத்துள
பூசைகொண் டான்புலன் ஐந்தும் பிறகிட்டு
வாயில் கொண்டான் எங்கள் மாநந்தி தானே.4,

10.815   10 st/nd Thirumurai   Song # 20   திருமூலர்   திருமந்திரம்  
கோவுணர்த் தும்சத்தி யாலே குறிவைத்துத்
தேவுணர்த் தும்கரு மச்செய்தி செய்யவே
பாஅனைத் தும்படைத்(து) அற்சனை பாரிப்ப
ஓவனைத் துண்டொழி யாத ஒருவனே.

10.902   10 st/nd Thirumurai   Song # 19   திருமூலர்   திருமந்திரம்  
கோவணங் கும்படி கோவண மாகிப்பின்
நாவணங் கும்படி நந்தி அருள்செய்தான்
தேவணங் கோம்இனிச் சித்தம் தெளிந்தனம்
போய்வணங் கும்பொரு ளாயிருந் தோமே. 3,

10.924   10 st/nd Thirumurai   Song # 46   திருமூலர்   திருமந்திரம்  
கோரை யெழுந்து கிடந்த குளத்தினில்
ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது
நாரை படிகின்றாற் போல்நல்ல நாதனார்
பாரைக் கிடக்கப் படிகின்ற வாறே.

10.924   10 st/nd Thirumurai   Song # 67   திருமூலர்   திருமந்திரம்  
கோமுற் றமரும் குடிகளும் தம்முளே
காமுற்ற கத்தி யிடுவர் கடைதொறும்
வீவற்ற எல்லை விடாது வழிகாட்டி
யாமுற்ற தட்டினால் ஐந்துண்ண லாமே.

11.008   11 st/nd Thirumurai   Song # 127   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
கோட்டி ஒழிய எழுந்து குழைமுகத்தைக்
காட்டி நுதல்சிவப்ப வாய்துலக்கி நாட்டார்கள்

11.009   11 st/nd Thirumurai   Song # 68   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி  
கோத்த மலர்வாளி கொண்டனங்கன் காளத்திக்
கூத்தன்மேல் அன்று குறித்தெய்யப் -பார்த்தலுமே
பண்பொழியாக் கோபத்தீப் பற்றுதலும் பற்றற்று
வெண்பொடியாய் வீழ்ந்திலனோ வெந்து.

11.010   11 st/nd Thirumurai   Song # 37   நக்கீரதேவ நாயனார்   திருஈங்கோய்மலை எழுபது  
கோங்கின் அரும்பழித்த கொங்கைக் குறமகளிர்
வேங்கைமணி நீழல் விளையாடி வேங்கை
வரவதனைக் கண்டிரியும் ஈங்கோயே தீங்கு
வரவதனைக் காப்பான் மலை.

Search limited to first 100      
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000