சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் சித்த
சித்தம்     சித்தத்தின்     சித்தர்     சித்தந்     சித்திக     சித்திகள்     சித்த     சித்தாந்தத்     சித்தியும்     சித்திரக்     சித்தநிலை     சித்தனே!     சித்தராய்     சித்தி     சித்தத்து     சித்தர்,     சித்தம்!     சித்தமும்     சித்தமே     சித்தனே    
1.091   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப்
பத்தி மலர் தூவ, முத்தி ஆகுமே.

2.065   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சித்த வடிவு இலர்போலும்; தேசம் திரிந்திலர்போலும்;
கத்தி வரும் கடுங்காளி கதங்கள் தவிர்த்திலர் போலும்;
மெய்த்த நயனம் இடந்தார்க்கு ஆழி அளித்திலர் போலும்;
பித்தவடிவு இலர்போலும் பிரமபுரம் அமர்ந்தாரே.

2.093   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சித்தம் தன் அடி நினைவார் செடி படு கொடுவினை
தீர்க்கும்,
கொத்தின் தாழ்சடை முடிமேல் கோள் எயிற்று அரவொடு
பிறையன்;
பத்தர் தாம் பணிந்து ஏத்தும் பரம்பரன்; பைம்புனல்
பதித்த
வித்தன் தாழ்பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று
அமர்ந்தாரே.

3.051   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சித்தனே! திரு ஆலவாய் மேவிய
அத்தனே! அஞ்சல்! என்று அருள்செய், எனை;
எத்தர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பத்தி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!

4.060   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சித்தராய் வந்து தன்னைத் திருவடி வணங்குவார்கள்
முத்தனை, மூர்த்தி ஆய முதல்வனை, முழுதும் ஆய
பித்தனை, பிறரும் ஏத்தப் பெருவேளூர் பேணினானை,
மெத்த நேயவனை, நாளும் விரும்பும் ஆறு அறிகிலேனே.

4.064   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சித்தி செய்பவர்கட்கு எல்லாம் சேர்வு இடம்; சென்று கூடப்
பத்தி செய்பவர்கள் பாவம் பறைப்பவர்; இறப்பு இலாளா
முத்து இசை பவள மேனி முதிர் ஒளி நீலகண்டர்
வித்தினில் முளையர்-வீழிமிழலையுள் விகிர்தனாரே.

4.080   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சித்தத்து எழுந்த செழுங் கமலத்து அன்ன சேவடிகள்
வைத்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்,
முத்தும் வயிரமும் மாணிக்கம் தன்னுள் விளங்கிய தூ
மத்த மலர் கண்ட கண் கொண்டு மற்று இனிக் காண்பது என்னே?

4.110   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சித்தத்து உருகி, சிவன், எம்பிரான் என்று சிந்தையுள்ளே
பித்துப் பெருகப் பிதற்றுகின்றார் பிணி தீர்த்து அருளாய்-
மத்தத்து அரக்கன் இருபது தோளும் முடியும் எல்லாம்
பத்து உற்று உற நெரித்தாய்! எம்மை ஆளும் பசுபதியே!

5.039   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சித்தம் தேறும்; செறிவளை சிக்கெனும்;
பச்சை தீரும், என் பைங்கொடி-பால்மதி
வைத்த மா மயிலாடுதுறை அரன்
கொத்தினில் பொலி கொன்றை கொடுக்கிலே.

5.051   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சித்தர், கன்னியர், தேவர்கள், தானவர்,
பித்தர், நால்மறை வேதியர், பேணிய
அத்தனே! நமை ஆள் உடையாய்! எனும்
பத்தர்கட்கு அன்பர்-பாலைத்துறையரே.

5.087   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சித்தர், தேவர்கள், மாலொடு, நான்முகன்
புத்தர் தேர் அமண்கையர்-புகழவே,
மத்தர்தாம் அறியார், மணஞ்சேரி எம்
அத்தனார்; அடியார்க்கு அல்லல் இல்லையே.

7.050   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
சித்தம்! நீ நினை! என்னொடு சூள் அறு, வைகலும்!
மத்தயானையின் ஈர் உரி போர்த்த மணாளன் ஊர்
பத்தர் தாம் பலர் பாடி நின்று ஆடும் பழம் பதி,
பொத்தில் ஆந்தைகள் பாட்டு அறா புனவாயிலே.

8.103   8 st/nd Thirumurai   Song # 9   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க!
பத்தி வலையில் படுவோன் காண்க!
ஒருவன் என்னும் ஒருவன் காண்க!
விரி பொழில் முழுதாய் விரிந்தோன் காண்க!
அணுத் தரும் தன்மையில் ஐயோன் காண்க!

8.142   8 st/nd Thirumurai   Song # 6   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
சித்தமே புகுந்து, எம்மை ஆட்கொண்டு, தீ வினை கெடுத்து, உய்யல் ஆம்
பத்தி தந்து, தன் பொன் கழல்கணே பன் மலர் கொய்து சேர்த்தலும்,
முத்தி தந்து, இந்த மூ உலகுக்கும் அப்புறத்து எமை வைத்திடும்
மத்தன் மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, மலருமே!

9.015   9 st/nd Thirumurai   Song # 9   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
சித்தனே அருளாய் செங்கணா அருளாய்
   சிவபுர நகருள்வீற் றிருந்த
அத்தனே அருளாய் அமரனே அருளாய்
   அமரர்கள் அதிபனே அருளாய்
தத்துநீர்ப் படுகர்த் தண்டலைச் சூழல்
   சாட்டியக் குடியுள்ஏ ழிருக்கை
முத்தனே அருளாய் முதல்வனே அருளாய்
   முன்னவா துயர்கெடுத் தெனக்கே.

9.024   9 st/nd Thirumurai   Song # 7   திருவாலியமுதனார்   திருவிசைப்பா  
சித்தர் தேவர் இயக்கர் முனிவர்
   தேனார் பொழில்தில்லை
அத்தா அருளாய் அணிஅம் பலவா
   என்றென் றவர் ஏத்த
முத்தும் மணியும் நிரந்த தலத்துள்
   முளைவெண் மதிசூடிக்
கொத்தார் சடைகள் தாழநட்டம்
   குழகன் ஆடுமே.

10.100   10 st/nd Thirumurai   Song # 23   திருமூலர்   திருமந்திரம்  
சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்
உத்தம மாகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி
அத்தன் எனக்கிங் கருளால் அளித்ததே.

10.104   10 st/nd Thirumurai   Song # 13   திருமூலர்   திருமந்திரம்  
சித்தர் சிவலோகம் இங்கே தெரிசித்தோர்
சத்தமுஞ் சத்த முடிவுந்தம் முள்கொண்டோர்
நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர
முத்தர்தம் முத்தி முதல்முப்பத் தாறே. 

10.127   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
சித்தம் உருக்கிச் சிவமாஞ் சமாதியில்
ஒத்த சிவானந்தத் தோவாத தேறலைச்
சுத்தமது வுண்ணச் சுவானந்தம் விட்டிடா
நித்தல் இருத்தல் கிடத்தல்கீழ்க் காலே. 

10.311   10 st/nd Thirumurai   Song # 13   திருமூலர்   திருமந்திரம்  
சித்தந் திரிந்து சிவமய மாகியே
முத்தந் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர்
சுத்தம் பெறலாக ஐந்தில் தொடக்கற்றோர்
சித்தம் பரத்தின் திருநடத் தோரே. 

10.311   10 st/nd Thirumurai   Song # 30   திருமூலர்   திருமந்திரம்  
சித்திக ளெட்டன்றிச் சேரெட்டி யோகத்தாற்
புத்திக ளானவை எல்லாம் புலப்படும்
சித்திகள் எண்சித்தி தானாந் திரிபுரை
சத்தி அருள்தரத் தானுள வாகுமே.

10.601   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
சித்திகள் எட்டொடும் திண்சிவ மாக்கிய
சுத்தியும் எண்சத்தித் தூய்மையும் யோகத்துச்
சத்தியும் மந்திர சாதக போதமும்
பத்தியும் நாதன் அருளிற் பயிலுமே.

10.601   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
சித்த மியாவையும் சிந்தித் திருந்திடும்
அத்தன் உணர்த்துவ தாகும் அருளாலே
சித்த மியாவையும் திண்சிவ மானக்கால்
அத்தனும் அவ்விடத் தேஅமர்ந் தானே.

10.606   10 st/nd Thirumurai   Song # 13   திருமூலர்   திருமந்திரம்  
சித்தம் சிவமாகச் செய்தவம் வேண்டாவால்
சித்தஞ் சிவானந்தஞ் சேர்ந்தோர் உறவுண்டால்
சித்தஞ் சிவமாக வேசித்தி முத்திஆம்
சித்தம் சிவமாதல் செய்தவப் பேறே. 7,

10.815   10 st/nd Thirumurai   Song # 25   திருமூலர்   திருமந்திரம்  
சித்தாந்தத் தேசீவன் முத்திசித் தித்தலால்
சித்தாந்தத் தேநிற்போர் முத்திசித் தித்தவர்
சித்தந்த வேதாந்தம் செம்பொருள் ஆதலால்
சித்தாந்த வேதாந்தம் காட்டும் சிவனையே.

10.823   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
சித்தியும் முத்தியும் திண்சிவ மாகிய
சுத்தியும் முத்தித் தொலைக்கும் சுகானந்த
சத்தியும் மேலைச் சமாதியு மாயிடும்
பெத்தம் அறுத்த பெரும்பெரு மானே. 24,

10.830   10 st/nd Thirumurai   Song # 15   திருமூலர்   திருமந்திரம்  
சித்தர் சிவத்தைக் கண்டவர் சீருடன்
சுத்தாசுத் தத்துதுடன் தோய்ந்தும்தோ யாதவர்
முத்தர முத்திக்கும் மூலத்தர் மூலத்துச்
சத்தர் சதாசிவத் தன்மையர் தாமே. 31,

10.927   10 st/nd Thirumurai   Song # 12   திருமூலர்   திருமந்திரம்  
சித்தம் சிவமாய் மலம்மூன்றும் செற்றவர்
சுத்த சிவமாவர் தோயார் மலபந்தம்
கத்தும் சிலுகும் கலகமும் கைகாணார்
சத்தம் பரவிந்து தானாம்என் றெண்ணியே.

11.037   11 st/nd Thirumurai   Song # 34   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
சித்திரக் காவும் செழும் பொழிலும் வாவிகளும்
நித்திலஞ்சேர் நீடு நிலைக்களமும் எத்திசையும்

12.210   12 st/nd Thirumurai   Song # 235   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
சித்தம் நிலாவுந் தென்திரு
வாரூர் நகராளும்
மைத்தழை கண்டர் ஆதிரை
நாளின் மகிழ்செல்வம்
இத்தகை மைத்தென் றென்மொழி
கேனென் றுரைசெய்தார்
முத்து விதான மணிப்பொற்
கவரி மொழிமாலை.
12.290   12 st/nd Thirumurai   Song # 163   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சித்தநிலை திரியாத
திருநாவ லூர்மன்னர்
அத்தகுதி யினிற்பள்ளி
யுணர்ந்தவரைக் காணாமை
இத்தனையா மாற்றை
அறிந்திலேன் எனவெடுத்து
மெய்த்தகைய திருப்பதிகம்
விளம்பியே சென்றடைந்தார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list