சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:         (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் செத்த
செத்தார்     செத்தில்என்     செத்த     செத்தையேன்,     செத்துச்     செத்தவர்    
4.069   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
செத்தையேன், சிதம்ப நாயேன், செடியனேன், அழுக்குப் பாயும்
பொத்தையே போற்றி நாளும் புகல் இடம் அறிய மாட்டேன்;
எத்தை நான் பற்றி நிற்கேன்? இருள் அற நோக்க மாட்டாக்
கொத்தையேன் செய்வது என்னே? கோவல் வீரட்டனீரே!

5.100   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
செத்துச் செத்துப் பிறப்பதே தேவு என்று
பத்திசெய் மனப்பாறைகட்கு ஏறுமோ,
அத்தன் என்று அரியோடு பிரமனும்
துத்தியம் செய நின்ற நல்சோதியே?

6.013   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
செத்தவர் தம் தலைமாலை கையில் ஏந்தி,   சிரமாலை சூடி, சிவந்த மேனி
மத்தகத்த யானை உரிவை மூடி, மடவாள் அவளோடும் மான் ஒன்று ஏந்தி,
அத் தவத்த தேவர் அறுபதின்மர்   ஆறுநூறாயிரவர்க்கு ஆடல் காட்டி,
புத்தகம் கைக் கொண்டு, புலித்தோல் வீக்கி, புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே!

7.059   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
செத்த போதினில் முன் நின்று நம்மைச் சிலர்கள் கூடிச் சிரிப்பதன் முன்னம்,
வைத்த சிந்தை உண்டே; மனம் உண்டே; மதி உண்டே; விதியின் பயன் உண்டே!
முத்தன், எங்கள் பிரான் என்று வானோர் தொழ நின்ற(த்) திமில் ஏறு உடையானை,
அத்தன், எந்தைபிரான், எம்பிரானை, ஆரூரானை, மறக்கலும் ஆமே? .

10.718   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
செத்தார் பெறும்பய னாவதி யாதெனில்
செத்துநீர் சேர்வது சித்தினைக் கூடிடில்
செத்தார் இருந்தார் செகத்தில் திரிமலம்
செத்தார் சிவமாய திண்சித்தர் தாமே.

10.920   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
செத்தில்என் சீவில்என் செஞ்சாந் தணியில்என்
மத்தகத் தேஉளி நாட்டி மறிக்கில் என்
வித்தக நந்தி விதிவழி யல்லது
தத்துவ ஞானிகள் தன்மைகுன் றாரே.

11.002   11 st/nd Thirumurai   Song # 15   காரைக்கால் அம்மையார்    திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம்-1  
செத்த பிணத்தைத் தெளியா
தொருபேய் சென்று விரல்சுட்டிக்
கத்தி உறுமிக் கனல்விட்
டெறிந்து கடக்கப் பாய்ந்துபோய்ப்
பத்தல் வயிற்றைப் பதைக்க
மோதிப் பலபேய் இரிந்தோடப்
பித்த வேடங் கொண்டு
நட்டம் பெருமான் ஆடுமே.

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000