சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் செல்வ
செல்வ     செல்வம்     செல்வங்     செல்வத்     செல்வநெடு     செல்வக்     செல்வம்மலி     செல்வமலி     செல்வியைப்     செல்வப்     செல்வம்,    
1.080   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செல்வ நெடுமாடம் சென்று சேண் ஓங்கிச்
செல்வ மதி தோய, செல்வம் உயர்கின்ற,
செல்வர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய
செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே.

1.099   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செல்வம் மல்கு செண்பகம் வேங்கை சென்று ஏறி,
கொல்லை முல்லை மெல் அரும்பு ஈனும் குற்றாலம்
வில்லின் ஒல்க மும்மதில் எய்து, வினை போக
நல்கும் நம்பான் நன்நகர்போலும்; நமரங்காள்!

1.135   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செல்வம் மல்கிய செல்வர் பராய்த்துறைச்
செல்வர்மேல், சிதையாதன
செல்வன் ஞானசம்பந்தன செந்தமிழ்,
செல்வம் ஆம், இவை செப்பவே.

4.043   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
செல்வியைப் பாகம் கொண்டார்; சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணியோடு மா மலர்க்கொன்றை சூடி
கல்வியைக் கரை இலாத காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
எல்லியை விளங்க நின்றார்-இலங்கு மேற்றளியனாரே.

5.073   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
செல்வம் மல்கு திரு மங்கலக்குடி-
செல்வம் மல்கு சிவநியமத்தராய்,
செல்வம் மல்கு செழு மறையோர் தொழ,
செல்வன் தேவியொடும் திகழ் கோயிலே.

6.007   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
செல்வப் புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
சிற்றேமமும், பெருந் தண் குற்றால(ம்)மும்,
தில்லைச் சிற்றம்பலமும், தென்கூட(ல்)லும்,
தென் ஆனைக்காவும், சிராப்பள்ளி(ய்)யும்,
நல்லூரும், தேவன்குடி, மருக(ல்)லும்,
  நல்லவர்கள் தொழுது ஏத்தும் நாரையூரும்-
கல்லலகு நெடும்புருவக் கபாலம் ஏந்திக்
கட்டங்கத்தோடு உறைவார் காப்புக்களே.

8.105.05   8 st/nd Thirumurai   Song # 48   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
செல்வம், நல்குரவு, இன்றி; விண்ணோர், புழு,
புல் வரம்பு இன்றி; யார்க்கும் அரும் பொருள்
எல்லை இல் கழல் கண்டும் பிரிந்தனன்:
கல் வகை மனத்தேன் பட்ட கட்டமே!

10.120   10 st/nd Thirumurai   Song # 9   திருமூலர்   திருமந்திரம்  
செல்வங் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும்
புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல்
இல்லங் கருதிஇறைவனை ஏத்துமின்
வில்லி இலக்கெய்த விற்குறி யாமே. 

11.033   11 st/nd Thirumurai   Song # 74   நம்பியாண்டார் நம்பி   திருத்தொண்டர் திருவந்தாதி  
செல்வம் திகழ்திரு வாரூர்
மதில்வட்டத் துட்பிறந்தார்
செல்வன் திருக்கணத் துள்ளவ
ரேயத னால்திகழச்
செல்வம் பெருகுதென் னாரூர்ப்
பிறந்தவர் சேவடியே
செல்வ நெறியுறு வார்க்கணித்
தாய செழுநெறியே.

11.037   11 st/nd Thirumurai   Song # 53   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
செல்வம் நிறைந்த ஊர் சீரில் திகழ்ந்தஊர்
மல்கு மலர்மடந்தை மன்னும் ஊர் சொல்லினிய

12.040   12 st/nd Thirumurai   Song # 6   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
செல்வம் மேவிய நாளி லிச்செயல்
செய்வ தன்றியும் மெய்யினால்
அல்லல் நல்குர வான போதினும்
வல்லர் என்றறி விக்கவே
மல்லல் நீடிய செல்வம் மெல்லம
றைந்து நாடொறு மாறிவந்
தொல்லை யில்வறு மைப்ப தம்புக
உன்னி னார்தில்லை மன்னினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 156   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செல்வம் மல்கிய தில்லைமூ
தூரினில் தென்றிசைத் திருவாயில்
எல்லை நீங்கியுள் புகுந்திரு
மருங்குநின் றெடுக்கும்ஏத் தொலிசூழ
மல்லல் ஆவண மறுகிடைக்
கழிந்துபோய் மறையவர் நிறைவாழ்க்கைத்
தொல்லை மாளிகை நிறைத்திரு
வீதியைத் தொழுதணைந் தனர்தூயோர்.
12.280   12 st/nd Thirumurai   Song # 165   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செல்வத் திருமுன்றில்
தாழ்ந்தெழுந்து தேவர்குழாம்
மல்குந் திருவாயில்
வந்திறைஞ்சி மாதவங்கள்
நல்குந் திருவீதி
நான்குந் தொழுதங்கண்
அல்குந் திறம்அஞ்சு
வார்சண்பை ஆண்டகையார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 171   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செல்வம் பிரிவறியாத்
தில்லைவாழ் அந்தணரும்
எல்லையில்சீர்ச் சண்பை
இளவே றெழுந்தருளி
ஒல்லை இறைஞ்சாமுன்
தாமும் உடனிறைஞ்சி
மல்லல் அணிவீதி
மருங்கணைய வந்தார்கள்.
12.280   12 st/nd Thirumurai   Song # 263   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செல்வநெடு மாளிகையில் அமர்ந்து நாளுந்
திருத்தோணி மிசையாரைச் சென்று தாழ்ந்து
மல்குதிருப் பதிகங்கள் பலவும் பாடி
மனமகிழ்ந்து போற்றிசைத்து வைகு நாளில்
ஒல்லைமுறை உபநயனப் பருவ மெய்த
உலகிறந்த சிவஞானம் உணரப் பெற்றார்
தொல்லைமறை விதிச்சடங்கு மறையோர் செய்யத்
தோலொடுநூல் தாங்கினார் சுரர்கள் போற்ற.
12.280   12 st/nd Thirumurai   Song # 339   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செல்வக் கருவூர்த் திருவா
னிலைக்கோயில் சென்றிறைஞ்சி
நல்லிசை வண்தமிழ்ச் சொற்றொடை
பாடிஅந் நாடகன்று
மல்கிய மாணிக்க வெற்பு
முதலா வணங்கிவந்து
பல்கு திரைப்பொன்னித் தென்கரைத்
தானம் பலபணிவார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 675   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செல்வம் மல்கியதிரு வால
வாயினிற் பணிசெய்
தல்கு தொண்டர்கள் பிள்ளையார்
மருங்கணைந் திறைஞ்சி
மல்கு கார்அமண் இருள்கெட
ஈங்குவந் தருள
எல்லை யில்தவஞ் செய்தனம்
எனஎடுத் திசைத்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 962   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செல்வம் மல்கிய தில்லைமூ
தூரினில் திருநடம் பணிந்தேத்திப்
பல்பெ ருந்தொண்ட ரெதிர்கொளப்
பரமர்தந் திருத்தினை நகர்பாடி
அல்கு தொண்டர்கள் தம்முடன்
திருமாணி குழியினை அணைந்தேத்தி
மல்கு வார்சடை யார்திருப்
பாதிரிப் புலியூரை வந்துற்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1038   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செல்வ மல்கிய சிரபுரத்
தலைவர்சே வடிக்கீழ்
எல்லை யில்லதோர் காதலின்
இடையறா வுணர்வால்
அல்லும் நண்பக லும்புரிந்
தவர்அருட் டிறமே
சொல்ல வுஞ்செயல் கேட்கவும்
தொழிலின ரானார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1170   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செல்வம்மலி திருப்புகலிச்
செழுந்திருவீ திகளெல்லாம்
மல்குநிறை குடம்விளக்கு
மகரதோ ரணம் நிரைத்தே
எல்லையிலா வொளிமுத்து
மாலைகளெங் கணும் நாற்றி
அல்கு பெருந் திருவோங்க
அணிசிறக்க அலங்கரித்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 124   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செல்வமலி திருவாரூர்த்
தேவரொடு முனிவர்களும்
மல்குதிருக் கோபுரத்து
வந்திறைஞ்சி உள்புக்கங்
கெல்லையிலாக் காதன்மிக
எடுத்தமலர்க் கைகுவித்துப்
பல்குபெருந் தொண்டருடன்
பரமர்திரு முன்னணைந்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 194   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செல்வ மல்கு திருப்பனங்காட்
டூரிற் செம்பொற் செழுஞ்சுடரை
அல்லல் அறுக்கும் அருமருந்தை
வணங்கி யன்பு பொழிகண்ணீர்
மல்கநின்று விடையின்மேல்
வருவார் எனும்வண் டமிழ்ப்பதிகம்
நல்ல இசையி னுடன்பாடிப்
போந்து புறம்பு நண்ணுவார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 80   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
செல்வத் திருவா ரூர்மேவும்
செம்பொற் புற்றில் இனிதமர்ந்த
வில்வெற் புடையார் கழல்வணங்கி
வீதி விடங்கப் பெருமானை
மல்லற் பவனி சேவித்து
வாழ்ந்து நாளும் மனமகிழ்ந்து
சொல்வித் தகர்தாம் இருவர்களுந்
தொடர்ந்த காத லுடன்சிறந்தார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list