சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் தன்
தன்னது     தன்னை     தன்வழி     தன்மைய     தன்னுளு     தன்னைப்     தன்பால்     தன்மேனி     தன்மனை     தன்னினில்     தன்வலி     தன்அமர்     தன்உருவம்     தன்மையிற்     தன்தாள்     தன்னுயிர்க்     தன்னையா     தன்னையொப்     தன்மை     தன்     தன்னைச்     தன்னில்-தன்னை     தன்னவனாய்,     தன்மையினால்     தன்னில்     தன்னடி     தன்னக     தன்சோதி    
2.006   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தன்மை யாரும் அறிவார் இலை; தாம் பிறர் எள்கவே,
பின்னும் முன்னும் சிலபேய்க்கணம் சூழத் திரிதர்வர்;
துன்னஆடை உடுப்பர்; சுடலைப் பொடி பூசுவர்
அன்னம் ஆலும் துறையானும் ஐயாறு உடை ஐயனே.

2.040   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தன் அடைந்தார்க்கு இன்பங்கள் தருவானை, தத்துவனை,
கன் அடைந்த மதில் பிரமபுரத்து உறையும் காவலனை,
முன் அடைந்தான் சம்பந்தன் மொழி பத்தும் இவை
வல்லார்
பொன் அடைந்தார்; போகங்கள் பல அடைந்தார்; புண்ணியரே.

3.119   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தன் தவம் பெரிய சலந்தரன் உடலம் தடிந்த சக்கரம்
எனக்கு அருள்! என்று
அன்று அரி வழிபட்டு இழிச்சிய விமானத்து இறையவன்,
பிறை அணி சடையன்-
நின்ற நாள் காலை, இருந்த நாள் மாலை, கிடந்த
மண்மேல் வரு கலியை
வென்ற வேதியர்கள் விழா அறா வீழிமிழலையான் என,
வினை கெடுமே.

4.105   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தன்னைச் சரண் என்று தாள் அடைந்தேன்; தன் அடி அடைய,
புன்னைப் பொழில் புகலூர் அண்ணல் செய்வன கேண்மின்களோ!
என்னைப் பிறப்பு அறுத்து, என் வினை கட்டு அறுத்து, ஏழ் நரகத்து
என்னைக் கிடக்கல் ஒட்டான், சிவலோகத்து இருத்திடுமே.

5.079   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தன் உரு(வ்)வை ஒருவருக்கு அறிவு ஒணா
மின் உரு(வ்)வனை, மேனி வெண் நீற்றனை,
பொன் உரு(வ்)வனை, புள்ளிருக்குவேளூர்,
என்ன வல்லவர்க்கு இல்லை, இடர்களே.

5.097   5 st/nd Thirumurai   Song # 29   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தன்னில்-தன்னை அறியும் தலைமகன்
தன்னில்-தன்னை அறியில்-தலைப்படும்;
தன்னில்-தன்னை அறிவு இலன் ஆயிடில்,
தன்னில்-தன்னையும் சார்தற்கு அரியனே.

6.018   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தன் அடியார்க்கு அருள்புரிந்த தகவு தோன்றும்;
சதுர்முகனைத் தலை அரிந்த தன்மை தோன்றும்;
மின் அனைய நுண் இடையாள் பாகம் தோன்றும்;
வேழத்தின் உரி விரும்பிப் போர்த்தல் தோன்றும்;
துன்னிய செஞ்சடை மேல் ஓர் புனலும் பாம்பும் 
தூய மா மதி உடனே வைத்தல் தோன்றும்;
பொன் அனைய திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

6.044   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தன்னவனாய், உலகு எல்லாம் தானே ஆகி,
தத்துவனாய், சார்ந்தார்க்கு இன் அமுது ஆனானே!
என்னவனாய், என் இதயம் மேவினானே! ஈசனே! பாச வினைகள் தீர்க்கும்
மன்னவனே! மலை மங்கை பாகம் ஆக வைத்தவனே! வானோர் வணங்கும் பொன்னித்
தென்னவனே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ் ஒளியே! சிவனே! உன் அபயம், நானே.

6.049   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தன் உருவம் யாவர்க்கும் தாக்காதான் காண்; தாழ் சடை எம்பெருமான் காண்; தக்கார்க்கு உள்ள
பொன் உருவச் சோதி; புனல் ஆடினான் காண்; புராணன் காண்; பூதங்கள் ஆயினான் காண்;
மின் உருவ நுண் இடையாள் பாகத்தான் காண்; வேழத்தின் உரி வெருவப் போர்த்தான் தான் காண்;
மன் உரு ஆய் மாமறைகள் ஓதினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே.

7.017   7 st/nd Thirumurai   Song # 2   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தன்மையினால் அடியேனைத் தாம் ஆட்கொண்ட நாள், சபை முன்
வன்மைகள் பேசிட, வன் தொண்டன் என்பது ஓர் வாழ்வு தந்தார்;
புன்மைகள் பேசவும், பொன்னைத் தந்து என்னைப் போகம் புணர்த்த
நன்மையினார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே .

7.064   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தன்னில் ஆசு அறு சித்தமும் இன்றி, தவம் முயன்று, அவம் ஆயின பேசி,
பின்னல் ஆர் சடை கட்டி, என்பு அணிந்தால், பெரிதும் நீந்துவது அரிது; அது நிற்க;
முன் எலாம் முழு முதல் என்று வானோர் மூர்த்தி ஆகிய முதலவன் தன்னை,
செந்நெல் ஆர் வயல்-திருத் தினை நகருள் சிவக்கொழுந்தினை, சென்று அடை, மனனே! .

8.103   8 st/nd Thirumurai   Song # 30   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
தன் நேர் இல்லோன் தானே ஆன தன்மை
என் நேர் அனையார் கேட்க வந்து இயம்பி,
அறை கூவி, ஆட்கொண்டருளி,
மறையோர் கோலம் காட்டி அருளலும்;
உலையா அன்பு என்பு உருக, ஓலம் இட்டு,

8.105.06   8 st/nd Thirumurai   Song # 59   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
தன்மை பிறரால் அறியாத தலைவா! பொல்லா நாய் ஆன
புன்மையேனை ஆண்டு, ஐயா! புறமே போக விடுவாயோ?
என்னை நோக்குவார் யாரே? என் நான் செய்கேன்? எம்பெருமான்!
பொன்னே திகழும் திருமேனி எந்தாய்! எங்குப் புகுவேனே?

9.005   9 st/nd Thirumurai   Song # 4   சேந்தனார்   திருவிசைப்பா  
தன்னடி நிழற்கீழ் என்னையும் தகைத்த
   சசிகுலா மவுலியைத் தானே
என்னிடைக் கமலம் மூன்றினுள் தோன்றி
   எழுஞ்செழுஞ் சுடரினை அருள்சேர்
மின்னெடுங் கடலுள் வெள்ளத்தை வீழி
   மிழலையுள் விளங்குவெண் பளிங்கின்
பொன்னடிக் கடிமை புக்கினிப் போக
   விடுவனோ பூண்டுகொண் டேனே.

9.010   9 st/nd Thirumurai   Song # 8   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
தன்னக மழலைச் சிலம்பொடு சதங்கை
   தமருகம் திருவடி திருநீ
றின்னகை மழலை கங்கைகொங் கிதழி
   இளம்பிறை குழைவளர் இளமான்
கின்னரம் முழவம் மழலையாழ் வீணை
   கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மன்னவன் மணியம் பலத்துள் நின்றாடும்
   மைந்தன்என் மனத்துள்வைத் தனனே.

9.012   9 st/nd Thirumurai   Song # 7   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
தன்சோதி எழுமேனித்
   தபனியப்பூச் சாய்க்காட்டாய்
உன்சோதி எழில்காண்பான்
   ஓலிடவும் உருக்காட்டாய்
துஞ்சாக்கண் ணிவளுடைய
   துயர்தீரும் ஆறுரையாய்
செஞ்சாலி வயற்கோடைத்
   திரைலோக்கிய சுந்தரனே. 

10.106   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
தன்னது சாயை தனக்குத வாதுகண்
டென்னது மாடென் றிருப்பர்கள் ஏழைகள்
உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது
கண்ணது காணொளி கண்டுகொ ளீரே. 

10.119   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
தன்னை அறியாது தாம்நலர் என்னாதிங்
கின்மை யறியா திளையரென் றோராது
வன்மையில் வந்திடும் கூற்றம் வருமுன்னம்
தன்மமும் நல்ல தவஞ்செய்யும் நீரே.

10.311   10 st/nd Thirumurai   Song # 38   திருமூலர்   திருமந்திரம்  
தன்வழி யாகத் தழைத்திடும் ஞானமும்
தன்வழி யாகத் தழைத்திடும் வையகம்
தன்வழி யாகத் தழைத்த பொருளெல்லாம்
தன்வழித் தன்னரு ளாகிநின் றானே.

10.311   10 st/nd Thirumurai   Song # 47   திருமூலர்   திருமந்திரம்  
தன்மைய தாகத் தழைத்த கலையினுள்
பன்மைய தாகப் பரந்தஐம் பூதத்தை
வன்மைய தாக மறித்திடில் ஓராண்டின்
மென்மைய தாகிய மெய்ப்பொருள் காணுமே. 

10.311   10 st/nd Thirumurai   Song # 49   திருமூலர்   திருமந்திரம்  
தன்மைய தாகத் தழைத்த பகலவன்
மென்மைய தாகிய மெய்ப்பொருள் கண்டிடின்
புன்மைய தாகிப் புலன்களும் போயிட
நன்மைய தாகிய நற்கொடி காணுமே. 

10.413   10 st/nd Thirumurai   Song # 33   திருமூலர்   திருமந்திரம்  
தன்னுளு மாகித் தரணி முழுதுங்கொண்
டென்னுளு மாகி இடம்பெற நின்றவள்
மண்ணுளும் நீரனல் காலுளும் வானுளும்
கண்ணுளும் மெய்யுளும் காணலு மாமே.

10.503   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
தன்னைப் பரனைச் சதாசிவன் என்கின்ற
மன்னைப் பதிபசு பாசத்தை மாசற்ற
முன்னைப் பழமல முன்கட்டை வீட்டினை
உன்னத் தகும் சுத்த சைவர் உபாயமே.

10.508   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
தன்பால் உலகம் தனக்கரு காவதும்
அன்பால் எனக்கரு ளாவது மாவன
என்பார்கள் ஞானமும் எய்தும் சிவோகமும்
பின்பாலின் நேயமும் பெற்றிடுந் தானே.

10.704   10 st/nd Thirumurai   Song # 21   திருமூலர்   திருமந்திரம்  
தன்மேனி தற்சிவ லிங்கமாய் நின்றிடும்
தன்மேனி தானும் சதாசிவ மாய்நிற்கும்
தன்மேனி தற்சிவன் தற்சிவா னந்தமாம்
தன்மேனி தானாகும் தற்பரன் றானே.

10.719   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
தன்மனை சாலை குளங்கரை யாற்றிடை
நன்மலர்ச் சோலை நகரில்நற் பூமி
உன்னருங் கானம் உயர்ந்த மலைச்சாரல்
இந்நிலந் தான்குகைக் கெய்தும் இடமே.

10.807   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
தன்னை யறிசுத்தன் தற்கே வலன்றானும்
பின்ன முறநின்ற பேத சகலனும்
மன்னிய சத்தசத் துச்சத சத்துடன்
துன்னுவர் தத்தம் தொழிலள வாகவே.

10.807   10 st/nd Thirumurai   Song # 38   திருமூலர்   திருமந்திரம்  
தன்னை அறியா துடலைமுன் `தான்` என்றான்
தன்னைமுன் கண்டான் துரியந் தனைக்கண்டான்
உண்ணும் துரியமுன் ஈசனோ டொன்றாக்கால்
பின்னையும் வந்து பிறந்திடுந் தானே.

10.813   10 st/nd Thirumurai   Song # 28   திருமூலர்   திருமந்திரம்  
தன்னை யறிந்து சிவனுடன் தான்ஆக
மன்னும் மலக்குணம் மாளும் பிறப்பறும்
பின்அது நன்முத்தி சன்மார்க்கப் பேரொளி
நன்னர்த்து ஞானத்தின் முத்திரை நண்ணுமே.

10.813   10 st/nd Thirumurai   Song # 46   திருமூலர்   திருமந்திரம்  
தன்னினில் தன்னை அறியும் தலைமகன்
தன்னினில் தன்னை அறியின் தலைப்படும்
தன்னினில் தன்னை அறிகில னாயிடில்
தன்னினில் தன்னையும் சார்தற் கரியனே.

10.814   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே.

10.839   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
தன்னை அறிந்திடுந் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்
சென்னியில் வைத்த திருவரு ளாலே.

10.928   10 st/nd Thirumurai   Song # 40   திருமூலர்   திருமந்திரம்  
தன்வலி யால்உல கேழும் தரித்தவன்
தன்வலி யாலே அணுவினுந் தான்நொய்யன்
தன்வலி யால்மலை எட்டினும் சார்பவன்
தன்வலி யாலே தடங்கட லாமே.

11.008   11 st/nd Thirumurai   Song # 123   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
தன்அமர் தோழியர்கள் சூழத் தவிசேறிப்
பின்னும்ஓர் காமரம் யாழமைத்து மன்னும்

11.008   11 st/nd Thirumurai   Song # 132   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
தன்உருவம் பூங்கொன்றைத் தார்கொள்ளத் தான்கொன்றைப்
பொன்உருவங் கொண்டு புலம்புற்றாள் பின்னொருத்தி

11.029   11 st/nd Thirumurai   Song # 10   பட்டினத்துப் பிள்ளையார்   திருஏகம்பமுடையார் திருவந்தாதி  
தன்மையிற் குன்றாத் தவத்தோர்
இமையவர் தாம்வணங்கும்
வன்மையிற் குன்றா மதிற்கச்சி
ஏகம்பர் வண்கயிலைப்
பொன்மயிற் சாயலுஞ் சேயரிக்
கண்ணும் புரிகுழலும்
மென்மையிற் சாயும் மருங்குலும்
காதல் விளைத்தனவே.

11.032   11 st/nd Thirumurai   Song # 42   நம்பியாண்டார் நம்பி   கோயில் திருப்பண்ணியர் விருத்தம்  
தன்தாள் தரித்தார் யாவர்க்கும்
மீளா வழிதருவான்
குன்றா மதில்தில்லை மூதூர்க்
கொடிமேல் விடையுடையோன்
மன்றா டவும்பின்னும் மற்றவன்
பாதம் வணங்கியங்கே
ஒன்றார் இரண்டில் விழுவரந்
தோசில வூமர்களே.

12.000   12 st/nd Thirumurai   Song # 102   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
தன்னுயிர்க் கன்று வீயத்
தளர்ந்தஆத் தரியா தாகி
முன்நெருப் புயிர்த்து விம்மி
முகத்தினில் கண்ணீர் வார
மன்னுயிர் காக்குஞ் செங்கோல்
மனுவின்பொற் கோயில் வாயில்
பொன்னணி மணியைச் சென்று
கோட்டினால் புடைத்த தன்றே.
12.000   12 st/nd Thirumurai   Song # 312   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
தன்னையா ளுடையபிரான்
சரணார விந்தமலர்
சென்னியிலுஞ் சிந்தையிலும்
மலர்வித்துத் திருப்பதிகம்
பன்னுதமிழ்த் தொடைமாலை
பலசாத்திப் பரவையெனும்
மின்னிடையா ளுடன்கூடி
விளையாடிச் செல்கின்றார்.
12.000   12 st/nd Thirumurai   Song # 327   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
தன்னையா ளுடைய நாதன்
தானருள் செய்யக் கேட்டுச்
சென்னியால் வணங்கி நின்ற
திருமுனைப் பாடி நாடர்
இன்னவா றின்ன பண்பென்
றேத்துகேன் அதற்கி யானார்
பன்னுபா மாலை பாடும்
பரிசெனக் கருள்செய் யென்ன.
12.020   12 st/nd Thirumurai   Song # 16   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
தன்னையொப் பரியது தலத்துத் தன்னுழைத்
துன்னிய யாவையுந் தூய்மை செய்வது
பொன்னினும் மணியினும் போற்ற வேண்டுவது
இன்னதன் மையதிது வாங்கு நீயென.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list