சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் தலை
தலைமதி,     தலையின்     தலையவன்,     தலைப்பட்     தலைப்பட்ட     தலைவன்     தலைவனு     தலைவி     தலையான     தலைமிசை     தலைஅடி     தலைப்பட     தலைப்படுங்     தலையாய     தலையாலங்     தலையவன்     தலைப்பட்டார்     தலைமிசைச்     தலைநெறியா     தலையினால்     தலைவர்தம்     தலைதானது     தலை     தலையே,     தலையவனாய்     தலையானை,     தலைக்குத்     தலைக்கலன்     தலைப்படு    
1.019   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தலைமதி, புனல், விட அரவு, இவை தலைமையது ஒரு சடை இடை உடன்-
நிலை மருவ ஓர் இடம் அருளினன்; நிழல் மழுவினொடு அழல் கணையினன்;
மலை மருவிய சிலைதனில் மதில் எரியுண மனம் மருவினன்-நல
கலை மருவிய புறவு அணிதரு கழுமலம் இனிது அமர் தலைவனே.

1.036   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தலையின் தொடை மாலை அணிந்து
கலை கொண்டது ஒரு கையினர் சேர்வு ஆம்
நிலை கொண்ட மனத்தவர் நித்தம்
மலர் கொண்டு வணங்கும் ஐயாறே.

1.114   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தலையவன், தலை அணிமாலை பூண்டு
கொலை நவில் கூற்றினைக் கொன்று உகந்தான்,
கலை நவின்றான், கயிலாயம் என்னும்
மலையவன், வள நகர் மாற்பேறே.

2.019   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தலைதானது ஏந்திய தம் அடிகள்
கலைதான் திரி காடுஇடம் நாடுஇடம் ஆம்;
மலைதான் எடுத்தான், மதில்மூன்று உடைய;
நிலை தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.

2.071   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தலை வாள்மதியம் கதிர் விரிய, தண்புனலைத் தாங்கி,
தேவி
முலை பாகம் காதலித்த மூர்த்தி இடம்போலும் முது வேய்
சூழ்ந்த
மலைவாய் அசும்பு பசும்பொன் கொழித்து இழியும் மல்கு
சாரல்,
குலைவாழைத் தீம்கனியும் மாங்கனியும் தேன் பிலிற்றும்
குறும்பலாவே.

3.122   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தலை ஒரு பத்தும் தடக்கை அது இரட்டி தான் உடை
அரக்கன் ஒண்கயிலை
அலைவது செய்த அவன் திறல் கெடுத்த ஆதியார் உறைவு இடம் வினவில்
மலை என ஓங்கும் மாளிகை நிலவும், மா மதில் மாற்றலர் என்றும்
உலவு பல்புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி
அதுவே.

4.009   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தலையே, நீ வணங்காய்!-தலைமாலை தலைக்கு அணிந்து,
தலையாலே பலி தேரும் தலைவனை-தலையே, நீ வணங்காய்!

4.069   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தலை சுமந்து இரு கை நாற்றித் தரணிக்கே பொறை அது ஆகி
நிலை இலா நெஞ்சம் தன்னுள் நித்தலும் ஐவர் வேண்டும்
விலை கொடுத்து அறுக்க மாட்டேன்; வேண்டிற்றே வேண்டி எய்த்தேன்-
குலை கொள் மாங்கனிகள் சிந்தும் கோவல் வீரட்டனீரே!

5.058   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தலை எலாம் பறிக்கும் சமண்கையர் உள்-
நிலையினால் மறைத்தால் மறைக்க ஒண்ணுமே?
அலையின் ஆர் பொழில் ஆறை வடதளி
நிலையினான் அடியே நினைந்து உய்ம்மினே!

6.024   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தலை உருவச் சிரமாலை சூடினான்காண்; தமர் உலகம் தலை கலனாப் பலி கொள்வான் காண்;
அலை உருவச் சுடர் ஆழி ஆக்கினான்காண்; அவ் ஆழி நெடுமாலுக்கு அருளினான்காண்;
கொலை உருவக் கூற்று உதைத்த கொள்கையான்காண்; கூர் எரி நீர் மண்ணொடு காற்று ஆயினான்காண்;
சிலை உருவச் சரம் துரந்த திறத்தினான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே.

6.044   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தலையவனாய் உலகுக்கு ஓர் தன்மையானே! தத்துவனாய்ச் சார்ந்தார்க்கு இன் அமுது ஆனானே!
நிலையவனாய் நின் ஒப்பார் இல்லாதானே! நின்று உணராக் கூற்றத்தைச் சீறிப் பாய்ந்த
கொலையவனே! கொல் யானைத் தோல் மேல் இட்ட கூற்றுவனே! கொடி மதில்கள் மூன்றும் எய்த
சிலையவனே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ் ஒளியே! சிவனே! உன் அபயம், நானே.

6.066   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தலையானை, எவ் உலகும் தான் ஆனானை, தன் உருவம் யாவர்க்கும் அறிய ஒண்ணா
நிலையானை, நேசர்க்கு நேசன் தன்னை, நீள் வானமுகடு அதனைத் தாங்கி நின்ற
மலையானை, வரி அரவு நாணாக் கோத்து   வல் அசுரர் புரம் மூன்றும் மடிய எய்த
சிலையானை, திரு நாகேச்சுரத்து உளானை, சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே.

6.090   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தலை ஏந்து கையானை, என்பு ஆர்த்தானை, சவம் தாங்கு தோளானை, சாம்பலானை,
குலை ஏறு நறுங்கொன்றை முடிமேல் வைத்துக் கோள் நாகம் அசைத்தானை, குலம் ஆம் கைலை-
மலையானை, மற்று ஒப்பார் இல்லாதானை, மதி கதிரும் வானவரும் மாலும் போற்றும்
கலையானை, கஞ்சனூர் ஆண்ட கோவை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டு உய்ந்தேனே!.

7.004   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தலைக்குத் தலை மாலை அணிந்தது என்னே? சடைமேல் கங்கை வெள்ளம் தரித்தது என்னே?
அலைக்கும் புலித்தோல் கொண்டு அசைத்தது என்னே? அதன் மேல் கதநாகம் கச்சு   ஆர்த்தது என்னே?
மலைக்கு(ந்) நிகர்-ஒப்பன வன் திரைகள் வலித்து, எற்றி, முழங்கி வலம்புரி கொண்டு,
அலைக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து  அப்பனே! .

7.019   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தலை இடை ஆர் பலி சென்று அகம் தோறும் திரிந்த செல்வர்;
மலை உடையாள் ஒரு பாகம் வைத்தார்; கல்-துதைந்த நன்நீர்-
அலை உடையார்; சடை எட்டும் சுழல, அரு நடம் செய்
நிலை உடையார்; உறையும்(ம்) இடம் ஆம் திரு நின்றியூரே .

7.057   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தலைக்கலன் தலை மேல்-தரித்தானை, தன்னை என்னை நினைக்கத் தருவானை,
கொலைக் கை யானை உரி போர்த்து உகந்தானை, கூற்று உதைத்த(க்) குரை சேர் கழலானை,
அலைத்த செங்கண் விடை ஏற வல்லானை, ஆணையால் அடியேன் அடிநாயேன்-
மலைத்த செந்நெல் வயல் வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, மறந்து என் நினைக்கேனே? .

8.202   8 st/nd Thirumurai   Song # 7   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
தலைப்படு சால்பினுக் குந்தள
   ரேன்சித்தம் பித்தனென்று
மலைத்தறி வாரில்லை யாரையுந்
   தேற்றுவ னெத்துணையுங்
கலைச்சிறு திங்கள் மிலைத்தசிற்
   றம்பல வன்கயிலை
மலைச்சிறு மான்விழி யாலழி
   வுற்று மயங்கினனே.

10.309   10 st/nd Thirumurai   Song # 11   திருமூலர்   திருமந்திரம்  
தலைப்பட் டிருந்திடத் தத்துவங் கூடும்
வலைப்பட் டிருந்திடும் மாதுநல் லாளும்
குலைப்பட் டிருந்திடும் கோபம் அகலும்
துலைப்பட் டிருந்திடந் தூங்கவல் லார்க்கே. 

10.311   10 st/nd Thirumurai   Song # 21   திருமூலர்   திருமந்திரம்  
தலைப்பட்ட வாறண்ணல் தையலை நாடி
வலைப்பட்ட பாசத்து வன்பிணை மான்போல்
துலைப்பட்ட நாடியைத் தூவழி செய்தால்
விலைக்குண்ண வைத்ததோர் வித்தது வாமே.

10.315   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
தலைவன் இடம்வலஞ் சாதிப்பார் இல்லை
தலைவன் இடம்வலம் ஆயிடில் தையல்
தலைவன் இடம்வலம் தன்வழி அஞ்சில்
தலைவன் இடம்வலந் தன்வழி நூறே. 

10.319   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
தலைவனு மாயிடுந் தன்வழி ஞானம்
தலைவனு மாயிடுந் தன்வழி போகம்
தலைவனு மாயிடுந் தன்வழி உள்ளே
தலைவனு மாயிடுந் தன்வழி அஞ்சே. 

10.401   10 st/nd Thirumurai   Song # 14   திருமூலர்   திருமந்திரம்  
தலைவனு மாய்நின்ற தற்பரக் கூத்தனைத்
தலைவனு மாய்நின்ற சற்பாத் திரத்தைத்
தலைவனு மாய்நின்ற தாதவிழ் ஞானத்
தலைவனு மாய்நின்ற தாளிணை தானே.

10.405   10 st/nd Thirumurai   Song # 16   திருமூலர்   திருமந்திரம்  
தலைவி தடமுலை மேல்நின்ற தையல்
தொலைவில் தவம்செய்யும் தூய்நெறித் தோகை
கலைபல ஏன்றிடும் கன்னி என் உள்ளம்
நிலைபெற இங்கே நிறைந்துநின் றாளே.

10.709   10 st/nd Thirumurai   Song # 18   திருமூலர்   திருமந்திரம்  
தலையான நான்கும் தனதரு வாகும்
அலையா அருவுரு வாகும் சதாசிவம்
நிலையான கீழ்நான்கும் நீடுரு வாகும்
தொலையா இவைமுற்று மாய்அல்ல தொன்றே.

10.714   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
தலைமிசை வானவர் தாழ்சடை நந்தி
மிலைமிசை வைத்தனன் மெய்ப்பணி செய்யப்
புலைமிசை நீங்கிய பொன்னுல காளும்
பலமிசை செய்யும் படர்சடை யோனே.

10.817   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
தலைஅடி யாவ தறியார்கா யத்தில்
தலைஅடி உச்சி உள்ளது மூலம்
தலைஅடி யான அறிவை அறிந்தோர்
தலைஅடி யாகவே தாம்இருந் தாரே.

10.902   10 st/nd Thirumurai   Song # 11   திருமூலர்   திருமந்திரம்  
தலைப்பட லாம்எங்கள் தத்துவன் றன்னை
அலைப்படு பாசம் அறுத்தறுத் திட்டு
நிலைப்பட நாடி நினைப்பற உள்கின்
தலைப்பட லாகும் தருமமுந் தானே.

10.902   10 st/nd Thirumurai   Song # 13   திருமூலர்   திருமந்திரம்  
தலைப்படுங் காலத்துத் தத்துவன் றன்னை
விலக்குறின் `மேலே விதி`என்று கொள்க
அனைத்துல காய்நின்ற ஆதிப் பிரானை
நினைப்புறு வார்பத்தி நேடிக்கொள் வாரே.

11.003   11 st/nd Thirumurai   Song # 10   காரைக்கால் அம்மையார்    திரு இரட்டை மணிமாலை  
தலையாய ஐந்தினையுஞ் சாதித்துத் தாழ்ந்து
தலையா யினவுணர்ந்தோர் காண்பர் - தலையாய
அண்டத்தான் ஆதிரையான் ஆலாலம் உண்டிருண்ட
கண்டத்தான் செம்பொற் கழல்.

11.022   11 st/nd Thirumurai   Song # 93   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருவந்தாதி  
தலையாலங் காட்டிப் பலிதிரிவர் என்னும்
தலையாலங் காடர்தாம் என்னும் தலையாய
பாகீ ரதிவளரும் பல்சடையீர் வல்விடையீர்
பாகீ ரதிவளரும் பண்பு.

11.032   11 st/nd Thirumurai   Song # 30   நம்பியாண்டார் நம்பி   கோயில் திருப்பண்ணியர் விருத்தம்  
தலையவன் பின்னவன் தாய்தந்தை
யிந்தத் தராதலத்து
நிலையவம் நீக்கு தொழில்புரிந்
தோன்அடு வாகிநின்ற
கொலையவன் சூலப் படையவன்
ஆலத் தெழுகொழுந்தின்
இலையவன் காண்டற் கருந்தில்லை
யம்பலத் துள்ளிறையே.

12.090   12 st/nd Thirumurai   Song # 27   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
தலைப்பட்டார் எல்லாரும்
தனிவீரர் வாளில்
கொலைப்பட்டார் முட்டாதார்
கொல்களத்தை விட்டு
நிலைப்பட்ட மெய்யுணர்வு
நேர்பட்ட போதில்
அலைப்பட்ட ஆர்வமுதல்
குற்றம்போ லாயினார்.
12.100   12 st/nd Thirumurai   Song # 124   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
தலைமிசைச் சுமந்த பள்ளித்  
தாமத்தைத் தடங்கா ளத்தி
மலைமிசைத் தம்பி ரானார்  
முடிமிசை வணங்கிச் சாத்திச்
சிலைமிசைப் பொலிந்த செங்கைத்
திண்ணனார் சேர்த்த கல்லை
இலைமிசைப் படைத்த ஊனின்  
திருவமு தெதிரே வைத்து.
12.210   12 st/nd Thirumurai   Song # 89   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
தலைநெறியா கியசமயந்
தன்னையழித் துன்னுடைய
நிலைநின்ற தொல்வரம்பில்
நெறியழித்த பொறியிலியை
அலைபுரிவாய் எனப்பரவி
வாயால்அஞ் சாதுரைத்தார்
கொலைபுரியா நிலைகொண்டு
பொய்யொழுகும் அமண்குண்டர்.
12.210   12 st/nd Thirumurai   Song # 300   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
தலையின் மயிரைப் பறித்துண்ணுஞ்
சாதி அமணர் மறைத்தாலும்
நிலையி லாதார் நிலைமையினால்
மறைக்க ஒண்ணு மோஎன்னும்
விலையில் வாய்மைக் குறுந்தொகைகள்
விளம்பிப் புறம்போந் தங்கமர்ந்தே
இலைகொள் சூலப் படையார்சேர்
இடங்கள் பிறவுந் தொழஅணைவார்.
12.240   12 st/nd Thirumurai   Song # 56   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
தலையினால் நடந்து சென்று
சங்கரன் இருந்த வெள்ளி
மலையின்மேல் ஏறும் போது
மகிழ்ச்சியால் அன்பு பொங்கக்
கலையிளந் திங்கட் கண்ணிக்
கண்ணுதல் ஒருபா கத்துச்
சிலைநுதல் இமைய வல்லி
திருக்கண்நோக் குற்ற தன்றே.

12.280   12 st/nd Thirumurai   Song # 363   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தலைவர்தம் சக்கரப் பள்ளிதன் னிடையகன்
றலைபுனற் பணைகளின் அருகுபோய் அருமறைப்
புலனுறும் சிந்தையார் புள்ளமங் கைப்பதி
குலவும் ஆலந்துறைக் கோயிலைக் குறுகினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 851   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தலைமிசை வைத்துக் கொண்டு
தாங்கரும் மகிழ்ச்சி பொங்க
அலைபுனற் கரையில் ஏறி
அங்கினி தமர்ந்த மேருச்
சிலையுடை யவர்தாள் போற்றி
மீண்டுசென் றணைவார் தெய்வ
மலைமகள் குழைத்த ஞானம்
உண்டவர் தம்பால் வந்தார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list