சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் தானே
தானே     தானேயாய்     தானேறும்    
8.102   8 st/nd Thirumurai   Song # 20   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
தானே ஆகிய தயாபரன், எம் இறை,
சந்திரதீபத்து, சாத்திரன் ஆகி,
அந்தரத்து இழிந்து வந்து, அழகு அமர் பாலையுள்
சுந்தரத் தன்மையொடு துதைந்து, இருந்தருளியும்;
மந்திர மா மலை மகேந்திர வெற்பன்,

10.104   10 st/nd Thirumurai   Song # 28   திருமூலர்   திருமந்திரம்  
தானே புலன்ஐந்துந் தன்வச மாயிடும்
தானே புலன்ஐந்துந் தன்வசம் போயிடும்
தானே புலன்ஐந்துந் தன்னில் மடைமாறும்
தானே தனித்தெம் பிரான்தனைச் சந்தித்தே. 

10.115   10 st/nd Thirumurai   Song # 13   திருமூலர்   திருமந்திரம்  
தானே விடும்பற் றிரண்டுந் தரித்திட
நானே விடப்படு மேதொன்றை நாடாது
இப்பாடலின் பின் அடிகள் கிடைக்கவில்லை.. 

10.210   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
தானே திசையொடு தேவரு மாய்நிற்கும்
தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்கும்
தானே கடல்மலை யாதியு மாய்நிற்கும்
தானே உலகில் தலைவனு மாமே. 

10.311   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
தானே அணுவும் சகத்துத்தன் நோன்மையும்
மானாக் கனமும் பரகாயத் தேகலும்
தானாவ தும்பர காயஞ்சேர் தன்மையும்
ஆனாத வுண்மையும் வியாபியு மாம்எட்டே. 

10.311   10 st/nd Thirumurai   Song # 46   திருமூலர்   திருமந்திரம்  
தானே படைத்திட வல்லவ னாயிடும்
தானே அளித்திட வல்லவ னாயிடும்
தானேசங் காரத் தலைவனு மாயிடும்
தானே சிவனெனுந் தன்மைய னாமே. 

10.312   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
தானே எழுந்தஅத் தத்துவ நாயகி
ஊனே வழிசெய்தெம் உள்ளே யிருந்திடும்
வானோர் உலகீன்ற அம்மை மதித்திடத்
தேனே பருகச் சிவாலய மாகுமே.

10.401   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
தானே பரஞ்சுடர் தத்துவ மாய்நிற்கும்
தானே அகார உகாரம தாய்நிற்கும்
தானே பரஞ்சுடர் தத்துவக் கூத்துக்குத்
தானே தனக்குத் தராதலந் தானே.

10.401   10 st/nd Thirumurai   Song # 13   திருமூலர்   திருமந்திரம்  
தானே தனக்குத் தலைவியு மாய்நிற்கும்
தானே தனக்குத் தனமலை யாய்நிற்கும்
தானே தனக்குத் தனமய மாய்நிற்கும்
தானே தனக்குத் தலைவனு மாமே.

10.401   10 st/nd Thirumurai   Song # 18   திருமூலர்   திருமந்திரம்  
தானே தனக்குத் தகுநட்டந் தானாகும்
தானே அகார உகாரம தாய்நிற்கும்
தானேரீங் காரம்அத் தத்துவக் கூத்துக்குத்
தானே உலகில் தனிநடந் தானே.

10.402   10 st/nd Thirumurai   Song # 24   திருமூலர்   திருமந்திரம்  
தானே அளித்திடும் தையலை நோக்கினால்
தானே அளித்திட்டு மேல்உற வைத்திடும்
தானே அளித்த மகாரத்தை ஓதினால்
தானே அளித்ததோர் கல்ஒளி யாமே.

10.402   10 st/nd Thirumurai   Song # 26   திருமூலர்   திருமந்திரம்  
தானே எழுகுணம் தண்சுட ராய்நிற்கும்
தானே எழுகுணம் வேதமு மாய்நிற்கும்
தானே எழுகுணம் ஆவதும் ஓதிடில்
தானே எழுந்த மறையவ னாமே.

10.405   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
தானே அமைந்தஅம் முப்புரந் தன்னிடைத்
தானான மூவுரு ஓருருத் தன்மையள்
தானான பொன்செம்மை வெண்ணிறத் தாள் கல்வி
தானான போகமும் முத்தியும் நல்குமே.

10.405   10 st/nd Thirumurai   Song # 30   திருமூலர்   திருமந்திரம்  
தானே தலைவி எனநின்ற தற்பரை
தானே உயர்வித்துத் தந்த பதினாலும்
மானோர் தலமும் மனமும்நற் புத்தியும்
தானே சிவகதித் தன்மையு மாமே. 6,

10.407   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
தானே எழுந்தஇத் தத்துவ நாயகி
வானேர் எழுந்து மதியை விளக்கினள்
தேனேர் எழுகின்ற தீபத் தொளியுடன்
மானே நடமுடை மன்றறி யீரே.

10.408   10 st/nd Thirumurai   Song # 11   திருமூலர்   திருமந்திரம்  
தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்
தானே சுடும்அங்கி ஞாயிறுந் திங்களும்
தானே மழைபொழி தையலுமாய் நிற்கும்
தானே வடவரை தண்கடற் கண்ணே.

10.413   10 st/nd Thirumurai   Song # 23   திருமூலர்   திருமந்திரம்  
தானே கழறித் தணியவும் வல்லனாய்த்
தானே நினைத்தவை சொல்லவும் வல்லனாய்த்
தானே தனிநடங் கண்டவள் தன்னையும்
தானே வணங்கித் தலைவனு மாமே.

10.413   10 st/nd Thirumurai   Song # 43   திருமூலர்   திருமந்திரம்  
தானே வெளியென எங்கும் நிறைந்தவள்
தானே பரம வெளியது வானவள்
தானே சகலமும் ஆக்கி அழித்தவள்
தானே அனைத்துள அண்ட சகளமே.

10.413   10 st/nd Thirumurai   Song # 46   திருமூலர்   திருமந்திரம்  
தானே எழுந்தஅச் சக்கரம் சொல்லிடின்
மானே மதிவரை பத்திட்டு வைத்தபின்
தேனே இரேகை திகைப்பற ஒன்பதில்
தானே கலந்த வரைஎண்பத் தொன்றுமே.

10.709   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
தானே அழியும் வினைகள் அழிந்தபின்
நானே அறிகிலன் நந்தி யறியுங்கொல்
ஊனே யுருகி உணர்வை உணர்ந்தபின்
தேனே அனையன்நம் தேவர் பிரானே.

10.709   10 st/nd Thirumurai   Song # 17   திருமூலர்   திருமந்திரம்  
தானே படைத்திடும் தானே அளித்திடும்
தானே துடைத்திடும் தானே மறைந்திடும்
தானே இவைசெய்து தான்முத்தி தந்திடும்
தானே வியாபித் தலைவனு மாமே.

10.721   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
தானே அருளால் சிவயோகம் தங்காது
தானேஅக் காமாதி தங்குவோ னும்உட்கும்
தானே அதிகாரம் தங்கில் சடம்கெடும்
ஊனே அவத்துற் றுயிரோம்பா மாயுமே.

10.721   10 st/nd Thirumurai   Song # 32   திருமூலர்   திருமந்திரம்  
தானே உபதேசம் தானல்லா தொன்றில்லை
வானேய் உயர்விந்து வந்த பதினான்கு
மானேர் அடங்க அதன்பின்பு புத்தியும்
தானே சிவகதித் தன்மையு மாமே.

10.722   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
தானே உலகுக்குத் தத்துவ னாய்நிற்கும்
தானே உலகுக்குத் தையலுமாய் நிற்கும்
தானே உலகுக்குச் சம்புவுமாய் நிற்கும்
தானே உலகுக்குத் தண்சுட ராகுமே.

10.726   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
தானே விரிசுடர் மூன்றும்ஒன் றாய்நிற்கும்
தானே அயன்மால் எனநின்று தாபிக்கும்
தானே உடல்உயிர் வேறன்றி நின்றுளன்
தானே வெளிஒளி தான்இருட் டாகுமே.

10.735   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
தானே எனநின்ற சற்குரு சந்நிதி
தானே எனநின்ற தன்மை வெளிப்படின்
தானே தனைப்பெற வேண்டும் சதுர்பெறல்
ஊனே எனநினைந் தோர்ந்துகொள் உன்னிலே.

10.807   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானேதான் செய்த வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே.

10.813   10 st/nd Thirumurai   Song # 11   திருமூலர்   திருமந்திரம்  
தானே சிவமான தன்மை தலைப்பட
ஆன மலமும்அப் பாசபே தங்களும்
ஆன குணமும்ப ரான்மா உபாதியும்
பானுவின் முன்மதி போல்பட ராவே.

10.813   10 st/nd Thirumurai   Song # 26   திருமூலர்   திருமந்திரம்  
தானே அறியான் அறிவிலோன் றானல்லன்
தானே அறிவான் அறிவு சதசத்தென்
றானால் இரண்டும் அரனரு ளாய்நிற்கத்
தானே யறிந்து சிவத்துடன் தங்குமே.

10.838   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
தானே உலகின் தலைவன் எனத்தகும்
தானே உலகுக்கோர் தத்துவ மாய்நிற்கும்
வானே பொழிமழை மாமறை கூர்ந்திடும்
ஊனே உருகிய உள்ளம்ஒன் றாகுமே.

10.904   10 st/nd Thirumurai   Song # 17   திருமூலர்   திருமந்திரம்  
தானே இருக்கும் அவற்றின் தலைவனும்
தானே இருக்கும் அவன்என நண்ணிடும்
வானாய் இருக்கும்இம் மாயிரு ஞாலத்துப்
பானாய் இருக்கப் பாவலும் ஆமே. 5,

10.929   10 st/nd Thirumurai   Song # 19   திருமூலர்   திருமந்திரம்  
தானே கடல்மலை ஆதியு மாய்நிற்கும்
தானே திசையொடு தேவருமாய் நிற்கும்
தானே உடல்உயிர் தத்துவ மாய்நிற்கும்
தானே உலகில் தலைவனும் ஆமே.

11.004   11 st/nd Thirumurai   Song # 14   காரைக்கால் அம்மையார்    அற்புதத் திருவந்தாதி  
தானே தனிநெஞ்சந் தன்னையுயக் கொள்வான்,
தானே பெருஞ்சேமஞ் செய்யுமால் - தானேயோர்
பூணாகத் தாற்பொலிந்து, பொங்கழல்சேர் நஞ்சுமிழும்
நீணாகத் தானை நினைந்து.

11.008   11 st/nd Thirumurai   Song # 8   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
தானேயாய் நின்றளிப்பான் தன்னிற் பிறிதுருவம்
ஏனோர்க்குக் காண்பரிய எம்பெருமான் ஆனாத

11.009   11 st/nd Thirumurai   Song # 82   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி  
தானே உலகாள்வான் தான்கண்ட வா வழக்கம்
ஆனான்மற் றார்இதனை அன் றென்பார் - வானோர்
களைகண்தா னாய்நின்ற காளத்தி யாள்வார்
வளைகொண்டார் மால்தந்தார் வந்து.

11.011   11 st/nd Thirumurai   Song # 11   நக்கீரதேவ நாயனார்   திருவலஞ்சுழி மும்மணிக்கோவை  
தானேறும் ஆனேறு கைதொழேன் தன்சடைமேல்
தேனேறு கொன்றைத் திறம்பேசேன் வானேறு
மையாருஞ் சோலை வலஞ்சுழியான் என்கொல்என்
கையார் வளைகவர்ந்த வாறு.


This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list