சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:         (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் தாய்
தாய்    
6.033   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தாய் அவனை, எவ் உயிர்க்கும்; தன் ஒப்பு இல்லாத் தகு தில்லை நடம் பயிலும் தலைவன் தன்னை;
மாயவனும், மலரவனும், வானோர், ஏத்த மறி கடல்   நஞ்சு உண்டு உகந்த மைந்தன் தன்னை;
மேயவனை, பொழில் ஆரூர் மூலட்டானம், விரும்பிய எம்பெருமானை; எல்லாம் முன்னே
ஆயவனை; அரநெறியில் அப்பன் தன்னை; அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே!.

6.064   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தாய் அவன் காண், உலகிற்கு; தன் ஒப்பு இல்லாத் தத்துவன் காண்; மலை மங்கை பங்கா! என்பார்
வாயவன் காண்; வரும் பிறவி நோய் தீர்ப்பான் காண், வானவர்க்கும் தானவர்க்கும் மண்ணுளோர்க்கும்;
சேயவன் காண், நினையார்க்கு; சித்தம் ஆரத் திருவடியே உள்கி நினைந்து எழுவார் உள்ளம்
ஏயவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.

6.066   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தாய் அவனை, வானோர்க்கும் ஏனோருக்கும் தலையவனை, மலையவனை, உலகம் எல்லாம்
ஆயவனை, சேயவனை, அணியான் தன்னை, அழலவனை, நிழலவனை, அறிய ஒண்ணா
மாயவனை, மறையவனை, மறையோர் தங்கள் மந்திரனை, தந்திரனை, வளரா நின்ற
தீ அவனை, திரு நாகேச்சுரத்து உளானை, சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே.

7.017   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தாய் அவளாய், தந்தை ஆகி, சாதல் பிறத்தல் இன்றி,
போய் அகலாமைத் தன் பொன் அடிக்கு என்னைப் பொருந்த வைத்த
வேயவனார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்ட
நாயகனார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே.

8.150   8 st/nd Thirumurai   Song # 5   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
தாய் ஆய் முலையைத் தருவானே, தாராது ஒழிந்தால், சவலையாய்
நாயேன் கழிந்து போவேனோ? நம்பி, இனித்தான் நல்குதியே;
தாயே என்று உன் தாள் அடைந்தேன்; தயா, நீ, என்பால் இல்லையே?
நாயேன் அடிமை உடன் ஆக ஆண்டாய்; நான் தான் வேண்டாவோ?

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000