சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் தாள
தாள்     தாளணி     தாளதி     தாள்தந்     தாளொன்றால்     தாளார்     தாளின்     தாளில்வாழ்     தாளறுவன     தாள     தாளிணைமேல்     தாளுடைய     தாளாண்மை     தாளாளர்     தாளால்     தாளி    
1.001   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தாள் நுதல் செய்து, இறை காணிய, மாலொடு தண்தாமரை யானும்,
நீணுதல் செய்து ஒழிய நிமிர்ந்தான், எனது உள்ளம் கவர் கள்வன்-
வாள்நுதல் செய் மகளீர் முதல் ஆகிய வையத்தவர் ஏத்த,
பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!

2.044   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தாளால் அரக்கன் தோள் சாய்த்த தலைமகன்தன்
நாள் ஆதிரை என்றே, நம்பன்தன் நாமத்தால்,
ஆள் ஆனார் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மானைக்
கேளாச் செவி எல்லாம் கேளாச் செவிகளே

4.019   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தாள் தழுவு கையன், தாமரைப் பூஞ்சேவடியன்,
கோள் தால வேடத்தன், கொண்டது ஓர் வீணையினான்,
ஆடு அரவக் கிண்கிணிக் கால் அன்னான் ஓர் சேடனை,
ஆடும் தீக் கூத்தனை,-நான் கண்டது ஆரூரே.

4.068   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தாள் உடைச் செங்கம(ல்)லத் தடங் கொள் சேவடியர் போலும்;
நாள் உடைக் காலன் வீழ உதை செய்த நம்பர் போலும்;
கோள் உடைப் பிறவி தீர்ப்பார்; குளிர் பொழில் பழனை மேய
ஆள் உடை அண்ணல் போலும்-ஆலங்காட்டு அடிகளாரே.

6.067   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தாள் பாவு கமல மலர் தயங்குவானைத் தலை   அறுத்து மா விரதம் தரித்தான் தன்னை,
கோள் பாவு நாள் எல்லாம் ஆனான் தன்னை,
கொடுவினையேன் கொடு நரகக்குழியில் நின்றால்
மீட்பானை, வித்துருவின் கொத்து ஒப்பானை,
வேதியனை, வேதத்தின் பொருள் கொள் வீணை
கேட்பானை, கீழ்வேளூர் ஆளும் கோவை, கேடு இலியை, நாடுமவர் கேடு இலாரே.

8.104   8 st/nd Thirumurai   Song # 41   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
தாளி அறுகின் தாராய், போற்றி!
நீள் ஒளி ஆகிய நிருத்தா, போற்றி!
சந்தனச் சாந்தின் சுந்தர, போற்றி!
சிந்தனைக்கு அரிய சிவமே, போற்றி!
மந்திர மா மலை மேயாய், போற்றி!

8.117   8 st/nd Thirumurai   Song # 8   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
தாளி அறுகினர், சந்தனச் சாந்தினர்,
ஆள் எம்மை ஆள்வரால்; அன்னே! என்னும்.
ஆள் எம்மை ஆளும் அடிகளார் தம் கையில்,
தாளம் இருந்த ஆறு; அன்னே! என்னும்.

10.405   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
தாளணி நூபுரம் செம்பட்டுத் தான் உடை
வாரணி கொங்கை மலர்க்கன்னல் வாளிவில்
ஏரணி அங்குச பாசம் எழில்முடி
காரணி மாமணிக் குண்டலக் காதிக்கே.

10.413   10 st/nd Thirumurai   Song # 37   திருமூலர்   திருமந்திரம்  
தாளதி னுள்ளே சமைந்தமு தேசுவரி
காலது கொண்டு கலந்துற வீசிடில்
நாளது நாளும் புதுமைகள் கண்டபின்
கேளது காயமும் கேடில்லை காணுமே.

10.413   10 st/nd Thirumurai   Song # 77   திருமூலர்   திருமந்திரம்  
தாளதி னுள்ளே தயங்கிய சோதியைக்
காலது வாகக் கலந்து `கம் ஜம்` என்று
மாலது வாக வழிபாடு செய்துநீ
பாலது போலப் பரந்தெழு விண்ணிலே.

10.735   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
தாள்தந் தளிக்கும் தலைவனே சற்குரு
தாள்தந்து தன்னை அறியத் தரவல்லோன்
தாள்தந்து தத்துவா தீதத்துச் சார்சீவன்
தாள்தந்து பாசம் தணிக்கும் வசனத்தே.

11.009   11 st/nd Thirumurai   Song # 88   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி  
தாளொன்றால் பாதாளம் ஊடுருவத் தண்விசும்பில்
தாளொன்றால் அண்டம் கடந்துருவித் - தோளொன்றால்
திக்கனைத்தும் போர்க்கும் திறற்காளி காளத்தி
நக்கனைத்தான் கண்ட நடம்.

11.023   11 st/nd Thirumurai   Song # 44   பரணதேவ நாயனார்   சிவபெருமான் திருவந்தாதி  
தாளார் கமல மலரோடு தண்மலரும்
தாள்ஆர வேசொரிந்து தாமிருந்து தாளார்
சிராமலையாய் சேமத் துணையேஎன் றேத்தும்
சிராமலையார் சேமத் துளார்.

11.034   11 st/nd Thirumurai   Song # 62   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி  
தாளின் சரணந் தருஞ்சண்பை
நாதன் தரியலர்போல்
கீளின் மலங்க விலங்கே
புகுந்திடும், கெண்டைகளும்,
வாளுந் தொலைய மதர்த்திரு
காதி னளவும்வந்து
மீளுங் கருங்கண்ணி மின்புரி
யாவைத்த மென்னகையே.

12.100   12 st/nd Thirumurai   Song # 68   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
தாளில்வாழ் செருப்பர்தோல்
தழைத்தநீடு தானையார்
வாளியோடு சாபம்மேவு  
கையர்வெய்ய வன்கணார்
ஆளியேறு போலஏகும்  
அன்ணலார்முன் எண்ணிலார்
மீளிவேடர் நீடுகூட்டம்
மிக்குமேல் எழுந்ததே.
12.100   12 st/nd Thirumurai   Song # 79   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
தாளறுவன இடைதுணிவன  
தலைதுமிவன கலைமா
வாளிகளொடு குடல்சொரிதர
மறிவனசில மரைமா
நீளுடல்விடு சரமுருவிட
நிமிர்வனமிடை கடமா
மீளிகொள்கணை படுமுடலெழ  
விழுவனபல உழையே.
12.190   12 st/nd Thirumurai   Song # 79   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
தாள தொன்றினில் மூன்றுபூ மலரும்
தமனி யச்செழுந் தாமரைத் தடமும்
நீள வார்புனல் குடதிசை யோடி
நீர்க ரக்குமா நதியுடன் நீடு
நாள லர்ந்துசெங் குவளைபைங் கமலம்
நண்ப கல்தரும் பாடலம் அன்றிக்
காள மேகம்ஒப் பாள்உறை வரைப்பிற்
கண்ப டாதகா யாப்புளி உளதால்.
12.210   12 st/nd Thirumurai   Song # 64   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
தாளிணைமேல் விழுந்தயருந்
தம்பியார் தமைநோக்கி
ஆளுடைய தம்பெருமான்
அருள்நினைந்து கைதொழுது
கோளில்பர சமயநெறிக்
குழியில்விழுந் தறியாது
மூளும்அருந் துயர்உழந்தீர்
எழுந்திரீர் எனமொழிந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 25   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தாளுடைய படைப்பென்னுந்
தொழில்தன்மை தலைமைபெற
நாளுடைய நிகழ்காலம்
எதிர்கால நவைநீங்க
வாளுடைய மணிவீதி
வளர்காழிப் பதிவாழ
ஆளுடைய திருத்தோணி
அமர்ந்தபிரான் அருள்பெருக.
12.290   12 st/nd Thirumurai   Song # 10   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தாளாண்மை உழவுதொழில்
தன்மைவளந் தலைசிறந்த
வேளாளர் குண்டையூர்க்
கிழவரெனும் மேதக்கோர்
வாளார்வெண் மதியணிந்தார்
மறையவராய் வழக்கினில்வென்று
ஆளாகக் கொண்டவர்தாள்
அடைந்தன்பா லொழுகுவார்.
12.340   12 st/nd Thirumurai   Song # 2   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
தாளாளர் திருச்சங்க
மங்கையினில் தகவுடைய
வேளாளர் குலத்துதித்தார்
மிக்கபொருள் தெரிந்துணர்ந்து
கேளாகிப் பல்லுயிர்க்கும்
அருளுடைய ராய்க்கெழுமி
நீளாது பிறந்திறக்கும்
நிலைஒழிவேன் எனநிற்பார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list