சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் துணி
துணி     துணிவு     துணிந்தார்     துணிப்படும்     துணியா,    
1.044   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
துணி வளர் திங்கள் துளங்கி விளங்க, சுடர்ச்சடை சுற்றி முடித்து,
பணி வளர் கொள்கையர், பாரிடம் சூழ, ஆர் இடமும் பலி தேர்வர்;
அணி வளர் கோலம் எலாம் செய்து, பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
மணி வளர் கண்டரோ, மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே?

1.087   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
துணி ஆர் உடை ஆடை துன்னி, அரைதன்மேல்
தணியா அழல் நாகம் தரியா வகை வைத்தார்
பணி ஆர் அடியார்கள் பலரும் பயின்று ஏத்த,
அணி ஆர் வடுகூரில் ஆடும் அடிகளே.

1.125   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
துணிவு உடையவர்; சுடுபொடியினர்; உடல் அடு
பிணி அடைவு இலர்; பிறவியும் அற விசிறுவர்
திணிவு உடையவர் பயில் சிவபுரம் மருவிய
மணிமிடறனது அடி இணை தொழுமவரே.

2.018   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
துணி நீலவண்ணம் முகில் தோன்றியன்ன
மணி நீலகண்டம்(ம்) உடையாய், மருகல்!
கணி நீலவண்டு ஆர் குழலாள் இவள்தன்
அணி நீலஒண்கண் அயர்வு ஆக்கினையே?

2.055   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
துணி மல்கு கோவணமும் தோலும் காட்டித் தொண்டு ஆண்டீர்!
மணி மல்கு கண்டத்தீர்! அண்டர்க்கு எல்லாம் மாண்பு ஆனீர்!
பிணி மல்கு நூல் மார்பர் பெரியோர் வாழும்
தலைச்சங்கை,
அணி மல்கு கோயிலே கோயில் ஆக அமர்ந்தீரே.

3.027   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
துணி படு கோவணம், சுண்ண வெண் பொடியினர்
பணி படு மார்பினர், பனிமதிச் சடையினர்,
மணிவணன் அவனொடு மலர் மிசையானையும்
தணிவினர், வள நகர் சக்கரப்பள்ளியே.

5.059   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
துணி வண்ணச் சுடர் ஆழி கொள்வான் எண்ணி,
அணி வண்ணத்து அலர்கொண்டு, அடி அர்ச்சித்த
மணி வண்ணற்கு அருள் செய்தவன் மாற்பேறு
பணி வண்ணத்தவர்க்கு இல்லைஆம், பாவமே.

6.028   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
துணி உடையர், தோல் உடையர், என்பார்போலும்; தூய திருமேனிச் செல்வர்போலும்;
பிணி உடைய அடியாரைத் தீர்ப்பார்போலும்;   பேசுவார்க்கு எல்லாம் பெரியார்போலும்;
மணி உடைய மா நாகம் ஆர்ப்பார்போலும்; வாசுகி மா நாணாக வைத்தார் போலும்;
அணி உடைய நெடுவீதி நடப்பார்போலும்- அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.

7.014   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
துணிப்படும் உடையும் சுண்ண வெண்நீறும் தோற்றமும் சிந்தித்துக் காணில்,
மணிப் படு கண்டனை வாயினால் கூறி, மனத்தினால்-தொண்டனேன் நினைவேன்;
பணிப் படும் அரவம் பற்றிய கையர், பாச்சிலாச்சிராமத்து எம் பரமர்,
பிணிப்பட ஆண்டு, பணிப்பு இலர் ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .

7.053   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
துணி வார் கீளும் கோவணமும் துதைந்து, சுடலைப் பொடி அணிந்து,
பணி மேல் இட்ட பாசுபதர்; பஞ்சவடி மார்பினர்; கடவூர்த்
திணிவு ஆர் குழையார்; புரம் மூன்றும் தீவாய்ப் படுத்த சேவகனார்;
பிணி வார் சடையார் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.

8.132   8 st/nd Thirumurai   Song # 8   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
துணியா, உருகா, அருள் பெருகத் தோன்றும் தொண்டர் இடைப் புகுந்து,
திணி ஆர் மூங்கில் சிந்தையேன், சிவனே! நின்று தேய்கின்றேன்;
அணி ஆர் அடியார் உனக்கு உள்ள அன்பும் தாராய்; அருள் அளியத்
தணியாது, ஒல்லை வந்தருளி, தளிர் பொன் பாதம் தாராயே!

10.714   10 st/nd Thirumurai   Song # 9   திருமூலர்   திருமந்திரம்  
துணிந்தார் அகம்படி துன்னி உறையும்
பணிந்தார் அகம்படி பாற்பட் டொழுகும்
அணிந்தார் அகம்படி ஆதிப் பிரானைக்
கணிந்தார் ஒருவர்க்குக் கைவிட லாமே.

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000