சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் துருத்தி
துருத்தியுள்     துருத்தி     துருத்தியார்,     துருத்திச்    
4.025   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
துருத்தி ஆம் குரம்பைதன்னில்-தொண்ணூற்று அங்கு அறுவர் நின்று,
விருத்தி தான் தருக! என்று வேதனை பலவும் செய்ய,
வருத்தியால்; வல்ல ஆறு வந்துவந்து அடைய நின்ற
அருத்தியார்க்கு அன்பர் போலும்-அதிகை வீரட்டனாரே.

4.044   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
துருத்தியார், பழனத்து உள்ளார், தொண்டர்கள் பலரும் ஏத்த
அருத்தியால் அன்பு செய்வார் அவர் அவர்க்கு அருள்கள் செய்து(வ்)
எருத்தினை இசைய ஏறி ஏகம்பம் மேவினார்க்கு
வருத்தி நின்று அடிமை செய்வார் வல்வினை மாயும் அன்றே!

7.047   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
துருத்திச் சுடரே! நெய்த்தானத்தாய்! சொல்லாய், கல்லாலா!
பருத்(த்)தி நியமத்து உறைவாய்! வெயில் ஆய், பல ஆய், காற்று ஆனாய்;
திருத்தித் திருத்தி வந்து, என் சிந்தை இடம் கொள் கயிலாயா!
அருத்தித்து, உன்னை அடைந்தார் வினைகள் அகல அருளாயே!

7.095   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
துருத்தி உறைவீர்; பழனம் பதியா, சோற்றுத்துறை ஆள்வீர்;
இருக்கை திரு ஆரூரே உடையீர்; மனமே என வேண்டா:
அருத்தி உடைய அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்,
வருத்தி வைத்து, மறுமை பணித்தால், வாழ்ந்துபோதீரே!

8.102   8 st/nd Thirumurai   Song # 18   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
துருத்தி தன்னில் அருத்தியோடு இருந்தும்;
திருப்பனையூரில் விருப்பன் ஆகியும்;
கழுமலம் அதனில் காட்சி கொடுத்தும்;
கழுக்குன்று அதனில் வழுக்காது இருந்தும்;
புறம்பயம் அதனில் அறம் பல அருளியும்;

10.924   10 st/nd Thirumurai   Song # 30   திருமூலர்   திருமந்திரம்  
துருத்தியுள் அக்கரை தோன்றும் மலைமேல்
விருத்திகண் காணிக்கப் போவார்முப் போதும்
வருத்திஉள் நின்ற மலையைத் தவிர்ப்பான்
ஒருத்திஉள் ளாள்அவள் ஊரறி யோமே.


This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list