சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் தொழு
தொழுவார்     தொழு     தொழுவாள்     தொழுது     தொழுதும்     தொழுந்தகை     தொழுதணைவுற்     தொழுதெ     தொழுதுபல     தொழுவார்க்கே     தொழுதுபுறம்     தொழும்     தொழுவார்க்கு     தொழுது,     தொழுத     தொழுதுபின்    
1.028   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தொழுவார் இருவர் துயரம் நீங்கவே
அழல் ஆய் ஓங்கி அருள்கள் செய்தவன்,
விழவு ஆர் மறுகில் விதியால் மிக்க எம்
எழில் ஆர் சோற்றுத்துறை சென்று அடைவோமே.

1.090   1 st/nd Thirumurai   Song # 12   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தொழு மனத்தவர், கழுமலத்து உறை
பழுது இல் சம்பந்தன் மொழிகள் பத்துமே.

2.020   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தொழும் ஆறு வல்லார், துயர் தீர நினைந்து
எழும் ஆறு வல்லார், இசை பாட விம்மி
அழும் ஆறு வல்லார், அழுந்தை மறையோர்
வழிபாடு செய் மா மடம் மன்னினையே.

4.053   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தொழுது அகம் குழைய மேவித் தொட்டிமை உடைய தொண்டர்
அழுத(அ)அகம் புகுந்து நின்றார், அவர் அவாப் போலும்-ஆரூர்
எழில் அகம் நடு வெண் முற்றம் அன்றியும், ஏர் கொள் வேலிப்
பொழில் அகம் விளங்கு திங்கள் புது முகிழ் சூடினாரே.

5.021   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தொழுது தூ மலர் தூவித் துதித்து நின்று
அழுது காமுற்று அரற்றுகின்றாரையும்,
பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும்,
எழுதும், கீழ்க்கணக்கு-இன்னம்பர் ஈசனே.

7.042   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தொழுவார்க்கு எளியாய்! துயர் தீர நின்றாய்! சுரும்பு ஆர் மலர்க் கொன்றை துன்றும்   சடையாய்!
உழுவார்க்கு அரிய விடை ஏறி! ஒன்னார் புரம் தீ எழ ஓடுவித்தாய்! அழகா!
முழவு ஆர் ஒலி பாடலொடு ஆடல் அறா முதுகாடு அரங்கா நடம் ஆட வல்லாய்!
விழவு ஆர் மறுகின் வெஞ்சமாக்கூடல் விகிர்தா! அடியேனையும் வேண்டுதியே .

8.104   8 st/nd Thirumurai   Song # 13   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
தொழுது, உளம் உருகி, அழுது, உடல் கம்பித்து,
ஆடியும், அலறியும், பாடியும், பரவியும்,
கொடிறும், பேதையும், கொண்டது விடாது' எனும்
படியே ஆகி, நல் இடை அறா அன்பின்,
பசு மரத்து ஆணி அறைந்தால் போல,

8.104   8 st/nd Thirumurai   Song # 27   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
தொழுத கை துன்பம் துடைப்பாய், போற்றி!
அழிவு இலா ஆனந்த வாரி, போற்றி!
அழிவதும், ஆவதும், கடந்தாய், போற்றி!
முழுவதும் இறந்த முதல்வா, போற்றி!
மான் நேர் நோக்கி மணாளா, போற்றி!

9.015   9 st/nd Thirumurai   Song # 3   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
தொழுதுபின் செல்வ(து) அயன்முதற் கூட்டம்
   தொடர்வன மறைகள்நான் கெனினும்
கழுதுறு கரிகா(டு) உறைவிடம் போர்வை
   கவந்திகை கரியுரி திரிந்தூண்
தழலுமிழ் அரவம் கோவணம் பளிங்கு
   செபவடம் சாட்டியக் குடியார்
இழுதுநெய் சொரிந்தோம்(பு) அழலொளி விளக்கேழ்
   இருக்கையில் இருந்த ஈசனுக்கே.
11.009   11 st/nd Thirumurai   Song # 58   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி  
தொழுவாள் பெறாளே தோள்வளையும் தோற்றாள்
மழுவாளன் காளத்தி வாழ்த்தி - எழுவாள்
நறுமா மலர்க்கொன்றை நம்முன்னே நாளைப்
பெறுமாறு காணீர்என் பெண்.

11.009   11 st/nd Thirumurai   Song # 86   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி  
தொழுது நமனுந்தன் தூதுவர்க்குச் சொல்லும்
வழுவில்சீர்க் காளத்தி மன்னன் - பழுதிலாப்
பத்தர்களைக் கண்டால் பணிந்தகலப் போமின்கள்
எத்தனையும் சேய்த்தாக என்று.

11.027   11 st/nd Thirumurai   Song # 9   பட்டினத்துப் பிள்ளையார்   திருக்கழுமல மும்மணிக் கோவை  
தொழுவாள் இவள்வளை தோற்பாள்
இவளிடர்க் கேஅலர்கொண்
டெழுவாள் எழுகின்ற தென்செய
வோஎன் மனத்திருந்தும்
கழுமா மணியைக் கழுமல
வாணனைக் கையிற்கொண்ட
மழுவா ளனைக் கண்டு வந்ததென்
றாலொர் வசையில்லையே.

11.033   11 st/nd Thirumurai   Song # 9   நம்பியாண்டார் நம்பி   திருத்தொண்டர் திருவந்தாதி  
தொழுதும் வணங்கியும் மாலயன்
தேடருஞ் சோதிசென்றாங்
கெழுதுந் தமிழ்ப்பழ வாவணங்
காட்டி யெனக்குன்குடி
முழுதும் அடிமைவந் தாட்செ
யெனப்பெற்ற வன்முரல்தேன்
ஒழுகும் மலரின்நற் றாரெம்பி
ரான்நம்பி யாரூரனே.

12.070   12 st/nd Thirumurai   Song # 47   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
தொழுது போற்றிஅத் துலைமிசை நின்றுநேர் துதிக்கும்
வழுவில் அன்பரும் மைந்தரும் மனைவியார் தாமும்
முழுதும் இன்னருள் பெற்றுத்தம் முன்தொழு திருக்கும்
அழிவில் வான்பதங் கொடுத்தெழுந் தருளினார் ஐயர்.
12.080   12 st/nd Thirumurai   Song # 48   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
தொழுந்தகை யன்பின் மிக்கீர்
தொண்டினை மண்மேற் காட்டச்
செழுந்திரு மலரை யின்று
சினக்கரி சிந்தத் திங்கள்
கொழுந்தணி வேணிக் கூத்தர்
அருளினால் கூடிற் றென்றங்
கெழுந்தது பாக ரோடும்
யானையும் எழுந்த தன்றே.
12.210   12 st/nd Thirumurai   Song # 133   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
தொழுந்தகை நாவினுக்
கரசுந் தொண்டர்முன்
செழுந்திருப் பாதிரிப்
புலியூர்த் திங்கள்வெண்
கொழுந்தணி சடையரைக்
கும்பிட் டன்புற
விழுந்தெழுந் தருள்நெறி
விளங்கப் பாடுவார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 182   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
தொழுதணைவுற் றாண்டஅர சன்புருகத்
தொண்டர் குழாத் திடையே சென்று
பழுதில்பெருங் காதலுடன் அடிபணியப்
பணிந்தவர்தங் கரங்கள் பற்றி
எழுதரிய மலர்க்கையால் எடுத்திறைஞ்சி
விடையின்மேல் வருவார் தம்மை
அழுதழைத்துக் கொண்டவர்தாம் அப்பரே
எனஅவரும் அடியேன் என்றார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 369   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
தொழுதெ ழுந்தநற் றொண்டரை
நோக்கிவிண் தலத்தில்
எழுபெ ருந்திரு வாக்கினால்
இறைவர்இப் பொய்கை
முழுகி நம்மைநீ கயிலையில்
இருந்தஅம் முறைமை
பழுதில் சீர்த்திரு வையாற்றிற்
காண்எனப் பணித்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 411   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
தொழுதுபல வகையாலும்
சொற்றொடைவண் டமிழ்பாடி
வழுவில்திருப் பணிசெய்து
மனங்கசிவுற் றெப்பொழுதும்
ஒழுகியகண் பொழிபுனலும்
ஓவாது சிவன்தாள்கள்
தழுவியசிந் தையில்உணர்வுந்
தங்கியநீர் மையிற்சரித்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 78   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தொழுவார்க்கே அருளுவது
சிவபெருமான் எனத்தொழார்
வழுவான மனத்தாலே
மாலாய மாலயனும்
இழிவாகுங் கருவிலங்கும்
பறவையுமாய் எய்தாமை
விழுவார்கள் அஞ்செழுத்தும்
துதித்துய்ந்த படிவிரித்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 342   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தொழுது புறம்பணைந் தங்குநின்
றேகிச் சுரர்பணிவுற்
றெழுதிரு வாலந் துறைதிருச்
செந்துறை யேமுதலா
வழுவில் கோயில்கள் சென்று
வணங்கி மகிழ்ந்தணைவார்
செழுமலர்ச் சோலைத் திருக்கற்
குடிமலை சேரவந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 977   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தொழுது விழுந்து பணிந்தெழுந்து
சொல்மா லைகளால் துதிசெய்து
முழுது மானார் அருள்பெற்றுப்
போந்து வைகி முதல்வர்தமைப்
பொழுது தோறும் புக்கிறைஞ்சிப்
போற்றி செய்தங் கமர்வார்முன்
அழுது வணங்கி ஒரு தொண்டர்
அமணர் திறத்தொன் றறிவிப்பார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1006   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தொழுதுபல முறைபோற்றிச்
சுரர்குருவுக் கிளையமுனி
வழுவில்தவம் புரிந்தேத்த
மன்னினார் தமைமலர்ந்த
பழுதில்செழுந் தமிழ்மாலைப்
பதிகஇசை புனைந்தருளி
முழுதும்அளித் தவர்அருளால்
போந்தனர்முத் தமிழ்விரகர்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1119   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தொழுதுபுறம் போந்தருளித்
தொண்டர்குழாம் புடைசூழப்
பழுதில்புகழ்த் திருமயிலைப்
பதியில்அமர்ந் தருளுநாள்
முழுதுலகுந் தருமிறைவர்
முதல்தானம் பலஇறைஞ்ச
அழுதுலகை வாழ்வித்தார்
அப்பதியின் மருங்ககல்வார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 285   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தொழுது விழுந் தெழுந்தருளாற்
துதித்துப்போய்த் தொல்லுலகம்
முழுதும்அளித் தழித்தாக்கும்
முதல்வர்திரு வேகம்பம்
பழுதில்அடி யார்முன்பு
புகப்புக்குப் பணிகின்றார்
இழுதையேன் திருமுன்பே
என்மொழிவேன் என்றிறைஞ்சி.
12.310   12 st/nd Thirumurai   Song # 20   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தொழுது புனல்மேல் எழுந்தொண்டர்
தூய மலர்க்கண் பெற்றெழுந்தார்
பொழுது தெரியா வகையிமையோர்
12.370   12 st/nd Thirumurai   Song # 147   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
தொழுது திளைத்துப் புறம்போந்து
தோன்றப் பண்ணும் பிடிமேல்பார்
முழுதும் ஏத்த நம்பியைமுன்
பேற்றிப் பின்பு தாம்ஏறிப்
பழுதின் மணிச்சா மரைவீசிப்
பைம்பொன் மணிமா ளிகையில்வரும்
பொழுது மறுகில் இருபுடையும்
மிடைந்தார் வாழ்த்திப் புகல்கின்றார்.
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000