சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் நன்
நன்றா     நன்று     நன்மணி     நன்மைவல்     நன்றறிவார்     நன்றைக்     நன்னுத     நன்னக     நன்றும்     நன்மை     நன்றி     நன்மைபெரு     நன்னீர்ப்     நன்     நன்மையால்     நன்றியால்     நன்றாக    
1.054   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நன்றா நால் மறையானொடு மாலும் ஆய்ச்
சென்றார் போலும், திசை எலாம்
ஒன்றாய்! உள் எரி ஆய் மிக, ஓத்தூர்
நின்றீரே! உமை நேடியே!

1.062   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நன்று நகு நாள்மலரால், நல் இருக்கு மந்திரம் கொண்டு,
ஒன்றி வழிபாடு செயல் உற்றவன் தன் ஓங்கு உயிர்மேல்
கன்றி வரு காலன் உயிர் கண்டு, அவனுக்கு அன்று அளித்தான்-
கொன்றைமலர் பொன் திகழும் கோளிலி எம்பெருமானே.

1.064   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நன்று தீது என்று ஒன்று இலாத நால்மறையோன், கழலே
சென்று பேணி ஏத்த நின்ற தேவர்பிரான், இடம் ஆம்
குன்றில் ஒன்றி ஓங்க மல்கு குளிர் பொழில் சூழ் மலர்மேல்
தென்றல் ஒன்றி முன்றில் ஆரும் தென் திருப்பூவணமே.

1.098   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நன்று உடையானை, தீயது இலானை, நரை-வெள் ஏறு
ஒன்று உடையானை, உமை ஒரு பாகம் உடையானை,
சென்று அடையாத திரு உடையானை, சிராப்பள்ளிக்-
குன்று உடையானை, கூற, என் உள்ளம் குளிருமே.

2.040   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நன் நெஞ்சே! உனை இரந்தேன்; நம்பெருமான் திருவடியே
உன்னம் செய்து இரு கண்டாய்! உய்வதனை வேண்டுதியேல்,
அன்னம் சேர் பிரமபுரத்து ஆரமுதை, எப்போதும்
பன், அம் சீர் வாய் அதுவே! பார், கண்ணே, பரிந்திடவே!

2.042   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நன்மையால் நாரணனும் நான்முகனும் காண்பு அரிய
தொன்மையான், தோற்றம் கேடு இல்லாதான், தொல்
கோயில்
இன்மையால் சென்று இரந்தார்க்கு, இல்லை என்னாது,
ஈந்து உவக்கும்
தன்மையார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.

2.072   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நன்று ஆங்கு இசை மொழிந்து, நன்நுதலாள் பாகம் ஆய், ஞாலம் ஏத்த,
மின் தாங்கு செஞ்சடை எம் விகிர்தர்க்கு இடம்போலும் விரை சூழ் வெற்பில்,
குன்று ஓங்கி வன் திரைகள் மோத, மயில் ஆலும் சாரல்,செவ்வி
சென்று ஓங்கி வானவர்கள் ஏத்தி அடி பணியும் திரு நணாவே.

2.075   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நன்றி ஒன்றும் உணராத வன்சமண், சாக்கியர்,
அன்றி அங்கு அவர் சொன்ன சொல் அவை கொள்கிலான்
கன்று மேதி இளங் கானல் வாழ் கலிக் காழியுள
வென்றி சேர் வியன்கோயில் கொண்ட விடையாளனே.

3.057   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நன்றியால் வாழ்வது உள்ளம், உலகுக்கு ஒரு நன்மையாலே,
கன்றினார் மும்மதிலும் கருமால்வரையே சிலையா,
பொன்றினார் வார் சுடலைப் பொடி-நீறு அணிந்தார் அழல் அம்பு
ஒன்றினால் எய்த பெம்மான் உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.

4.059   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நன்மை தான் அறியமாட்டான், நடு இலா அரக்கர் கோமான்
வன்மையே கருதிச் சென்று, வலி தனைச் செலுத்தல் உற்றுக்
கன்மையால் மலையை ஓடி, கருதித் தான் எடுத்து, வாயால்
அம்மையோ! என்ன வைத்தார்-அவளி வணல்லூராரே.

5.019   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நன் கடம்பனைப் பெற்றவள் பங்கினன்,
தென் கடம்பைத் திருக்கரக்கோயிலான்
தன் கடன்(ன்) அடியேனையும் தாங்குதல்;
என் கடன் பணி செய்து கிடப்பதே.

5.036   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நன்றி நாரணன், நான்முகன், என்று இவர்
நின்ற நீள் முடியோடு அடி காண்பு உற்றுச்
சென்று காண்பு அரியான் செம்பொன்பள்ளியான்,
நின்ற சூழலில் நீள் எரி ஆகியே.

5.042   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நன்று நாள்தொறும் நம் வினை போய் அறும்;
என்றும் இன்பம் தழைக்க இருக்கல் ஆம்;
சென்று, நீர், திரு வேட்களத்துள்(ள்) உறை
துன்று பொன்சடையானைத் தொழுமினே!

5.099   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நன்று நோற்கில் என்? பட்டினி ஆகில் என்?
குன்றம் ஏறி இருந் தவம் செய்யில் என்?
சென்று நீரில் குளித்துத் திரியில் என்?
என்றும், ஈசன் என்பார்க்கு அன்றி இல்லையே.

6.028   6 st/nd Thirumurai   Song # 11   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நன்றாக நடைபலவும் நவின்றார்போலும்; ஞானப்பெருங்கடற்கு ஓர் நாதர்போலும்;
கொன்றாகிக் கொன்றது ஒன்று உண்டார்போலும்; கோள் அரக்கர்கோன் தலைகள் குறைத்தார்போலும்;
சென்று ஆர் திரிபுரங்கள் எய்தார்போலும்; திசை அனைத்தும் ஆய், அனைத்தும் ஆனார்போலும்;
அன்று ஆகில், ஆயிரம் பேரார்போலும்- அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.

6.030   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நன்று அருளி, தீது அகற்றும் நம்பிரான்காண்;
நால் மறையோடு ஆறு அங்கம் ஆயினான்காண்;
மின் திகழும் சோதியான்காண்; ஆதிதான்காண்; வெள் ஏறு நின்று உலவு கொடியினான் காண்;
துன்று பொழில் கச்சி ஏகம்பன் தான்காண்; சோற்றுத்துறையான்காண்-சோலை சூழ்ந்த
தென்றலால் மணம் கமழும் திரு ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன் தானே.

8.112   8 st/nd Thirumurai   Song # 16   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை,
அன்று, ஆலின் கீழ் இருந்து, அங்கு, அறம் உரைத்தான், காண்; ஏடீ!
அன்று, ஆலின் கீழ் இருந்து, அங்கு, அறம் உரைத்தான், ஆயிடினும்,
கொன்றான், காண், புரம் மூன்றும் கூட்டோடே; சாழலோ!

10.413   10 st/nd Thirumurai   Song # 85   திருமூலர்   திருமந்திரம்  
நன்மணி சூலம் கபாலம் கிளியுடன்
பன்மணி நாகம் மழுகத்தி பந்தாகும்
கன்மணி தாமரை கையில் தமருகம்
பொன்மணி பூணாரம் பூசனைக் கானவே.

10.843   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
நன்மைவல் லோனை நடுவுறை நந்தியைப்
புன்மைபொய் யாதே புனிதனை நாடுமின்
பன்மையில் யாதென நும்மைப் பரிசுசெய்
தொன்மையின் உண்மை தொடர்ந்து நின்றானே

11.008   11 st/nd Thirumurai   Song # 98   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
நன்றறிவார் சொன்ன நலந்தோற்றும் நாண்தோற்றும்
நின்றறிவு தோற்றும் நிறைதோற்றும் நன்றாகக்

11.021   11 st/nd Thirumurai   Song # 18   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை  
நன்றைக் குறும்இரு மல்பெரு மூச்சுநண் ணாதமுன்னம்
குன்றைக் குறுவது கொண்டழி யாதறி வீர்செறிமின்
கொன்றைக் குறுநறுங் கண்ணியி னான்றன்கொய் பூங்கயிலைக்
குன்றைக் குறுகரி தேனும்உள் ளத்திடைக் கொள்மின்களே.

11.029   11 st/nd Thirumurai   Song # 79   பட்டினத்துப் பிள்ளையார்   திருஏகம்பமுடையார் திருவந்தாதி  
நன்னுத லார்கருங் கண்ணுஞ்செவ்
வாயுமிவ் வாறெனப்போய்
மன்னித ழார்திரு நீலமும்
ஆம்பலும் பூப்பவள்ளை
என்னவெ லாமொப்புக் காதென்று
வீறிடும் ஏகம்பனார்
பொன்னுத லார்விழி யார்கச்சி
நாட்டுள்இப் பொய்கையுளே.

11.033   11 st/nd Thirumurai   Song # 59   நம்பியாண்டார் நம்பி   திருத்தொண்டர் திருவந்தாதி  
நன்னக ராய விருக்குவே
ளூர்தனில் நல்குரவாய்ப்
பொன்னக ராயநல் தில்லை
புகுந்து புலீச்சரத்து
மன்னவ ராய வரற்குநற்
புல்லால் விளக்கெரித்தான்
கன்னவில் தோளெந்தை தந்தை
பிரானெம் கணம்புல்லனே.

11.040   11 st/nd Thirumurai   Song # 11   நம்பியாண்டார் நம்பி   திருநாவுக்கரசு தேவர் திருஏகாதசமாலை  
நன்றும் ஆதரம் நாவினுக் கரைசடி
நளினம்வைத் துயினல்லால்
ஒன்றும் ஆவது கண்டிலம் உபாயம்மற்
ருள்ளன வேண்டோமால்
என்றும் ஆதியும் அந்தமும் இல்லதோர்
இகபரத் திடைப்பட்டுப்
பொன்று வார்புகும் சூழலில் புகேம்புகில்
பொறியில்ஐம் புலனோடே.

12.070   12 st/nd Thirumurai   Song # 32   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
நன்று சாலவென் றன்பரும் ஒருதுலை நாட்டக்
குன்ற வில்லியார் கோவணம் ஒருதட்டில் இட்டார்
நின்ற தொண்டருங் கையினி னெய்தகோ வணந்தட்
டொன்றி லேயிட நிறைநிலா தொழிந்தமை கண்டார்.

12.190   12 st/nd Thirumurai   Song # 2   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
நன்மை நீடிய நடுநிலை ஒழுக்கத்து நயந்த
தன்மை மேவிய தலைமைசால் பெருங்குடி தழைப்ப
வன்மை ஓங்கெயில் வளம்பதி பயின்றது வரம்பின்
தொன்மை மேன்மையில் நிகழ்பெருந் தொண்டைநன் னாடு.
12.200   12 st/nd Thirumurai   Song # 12   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
நன்றி புரியும் அவர்தம்பால்
நன்மை மறையின் துறைவிளங்க
என்றும் மறையோர் குலம்பெருக
ஏழு புவனங் களும்உய்ய
மன்றில் நடஞ்செய் பவர்சைவ
வாய்மை வளர மாதவத்தோர்
வென்றி விளங்க வந்துதயம்
செய்தார் விசார சருமனார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 195   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
நன்மைபெரு கருள்நெறியே
வந்தணைந்து நல்லூரின்
மன்னுதிருத் தொண்டனார்
வணங்கிமகிழ்ந் தெழும்பொழுதில்
உன்னுடைய நினைப்பதனை
முடிக்கின்றோம் என்றவர்தம்
சென்னிமிசைப் பாதமலர்
சூட்டினான் சிவபெருமான்.
12.260   12 st/nd Thirumurai   Song # 2   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
நன்மை சாலும்அப் பதியிடை
நறுநுதல் மடவார்
மென்ம லர்த்தடம் படியமற்
றவருடன் விரவி
அன்னம் முன்துறை ஆடுவ
பாடுவ சாமம்
பன்ம றைக்கிடை யுடன்பயிற்
றுவபல பூவை.
12.280   12 st/nd Thirumurai   Song # 784   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நன்மை உய்க்கும்மெய்ப் பதிகத்தின்
நாதனென் றெடுத்தும்
என்னை ஆளுடை ஈசன்தன்
நாமமே என்றும்
மன்னும் மெய்ப்பொரு ளாமெனக்
காட்டிட வன்னி
தன்னி லாகெனத் தளிரிள
வளரொளி பாடி.
12.290   12 st/nd Thirumurai   Song # 44   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நன்று மகிழுஞ் சம்பந்தர்
நாவுக் கரசர் பாட்டுகந்தீர்
என்று சிறப்பித் திறைஞ்சிமகிழ்ந்
தேத்தி யருள்பெற் றெழுந்தருளி
மன்றி னிடையே நடம்புரிவார்
மருவு பெருமைத் திருவாரூர்
சென்று குறுகிப் பூங்கோயிற்
பெருமான் செம்பொற் கழல்பணிந்து.
12.680   12 st/nd Thirumurai   Song # 4   சேக்கிழார்   மன்னிய சீர்ச் சருக்கம்  
நன்றும் இழைத்த சிலம்பிவலைப்
பரப்பை நாதன் அடிவணங்கச்
சென்ற யானை அநுசிதம்என்
றதனைச் சிதைக்கச் சிலம்பிதான்
இன்று களிற்றின் கரஞ்சுலவிற்
றென்று மீள இழைத்துஅதனை
அன்று கழித்த பிற்றைநாள்
அடல்வெள் ளானை அழித்ததால்.
12.720   12 st/nd Thirumurai   Song # 4   சேக்கிழார்   வெள்ளானைச் சருக்கம்  
நன்னீர்ப் பொன்னித் திருநாட்டு
நாதர் மகிழுந் திருப்பதிகள்
முன்னி இறைஞ்சி அகன்றுபோய்
முல்லைப் படப்பைக் கொல்லைமான்
துன்னி உகைக்குங் குடக்கொங்கில்
அணைந்து தூய மதிவான்நீர்
சென்னி மிசைவைத் தவர்செல்வத்
திருப்புக் கொளியூர் சென்றடைந்தார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list