சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:         (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் நாற
நாற்றமலர்மேல்     நாற     நாற்றம்     நாற்றமலர்     நாற்ற     நாற்றத்தால்     நாறு    
1.023   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நாற்றமலர்மேல் அயனும், நாகத்தில்
ஆற்றல் அணை மேலவனும், காண்கிலா,
கூற்றம் உதைத்த, குழகன்-கோலக்கா
ஏற்றன்-பாதம் ஏத்தி வாழ்மினே!

1.026   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நாற விண்ட நறுமாமலர் கவ்வி,
தேறல் வண்டு திளைக்கும் திருப்புத்தூர்,
ஊறல் வாழ்க்கை உடையார் அவர் போலும்
ஏறு கொண்ட கொடி எம் இறையாரே.

1.051   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நாற்றம் மிக்க கொன்றை துன்று செஞ்சடைமேல் மதியம்
ஏற்றம் ஆக வைத்து உகந்த காரணம் என்னை கொல் ஆம்?
ஊற்றம் மிக்க காலன்தன்னை ஒல்க உதைத்து அருளி,
தோற்றம் ஈறும் ஆகி நின்றாய்! சோபுரம் மேயவனே!

1.116   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நாற்றமலர் மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து,
தோற்றம் உடைய அடியும் முடியும் தொடர்வு அரியீர்!
தோற்றினும் தோற்றும், தொழுது வணங்குதும், நாம் அடியோம்;
சீற்றம் அது ஆம் வினை தீண்டப் பெறா; திரு நீலகண்டம்!

1.135   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நாற்ற மாமலரானொடு மாலும் ஆய்த்
தோற்றமும் அறியாதவர்;
பாற்றினார், வினை ஆன; பராய்த்துறை
ஆற்றல் மிக்க அடிகளே.

2.038   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நாறு கூவிளம், நாகுஇளவெண்மதியத்தோடு
ஆறு, சூடும் அமரர்பிரான் உறை கோயில்
ஊறு தேங்கனி மாங்கனி ஓங்கிய சோலை,
தாறு தண் கதலிப் புதல், மேவு சாய்க்காடே.

2.096   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நாறு கூவிளம் மத்தம் நாகமும் சூடிய நம்பன்,
ஏறும் ஏறிய ஈசன், இருந்து இனிது அமர்தரு மூதூர்
நீறு பூசிய உருவர், நெஞ்சினுள் வஞ்சம் ஒன்று இன்றித்
தேறுவார்கள், சென்று ஏத்தும் சீர் திகழ் காழி நன்நகரே.

3.001   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நாறு பூம்பொழில் நண்ணிய காழியுள் நான்ம றைவல்ல ஞானசம் பந்தன்
ஊறும் இன்தமி ழால்உயர்ந் தார்உறை தில்லைதன்னுள்
ஏறு தொல்புகழ் ஏந்துசிற் றம்பலத் தீச னைஇசை யாற்சொன்ன பத்திவை
கூறு மாறுவல் லார்உயர்ந் தாரொடும் கூடுவரே.

3.047   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நாறு சேர் வயல்-தண்டலை மிண்டிய
தேறல் ஆர் திரு ஆலவாயாய்! செப்பாய்
வீறு இலாத் தவ மோட்டு அமண்வேடரைச்
சீறி, வாது செயத் திரு உள்ளமே?

3.081   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நாற்றம் மிகு மா மலரின்மேல் அயனும், நாரணனும், நாடி
ஆற்றல் அதனால் மிக அளப்பு அரிய வண்ணம், எரி ஆகி,
ஊற்றம் மிகு கீழ் உலகும் மேல் உலகும் ஓங்கி எழு தன்மைத்
தோற்றம் மிக, நாளும் அரியான் உறைவு தோணிபுரம் ஆமே.

5.011   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நாறு மல்லிகை கூவிளம் செண்பகம்
வேறு வேறு விரித்த சடை இடை
ஆறு கொண்டு உகந்தான், திரு மீயச்சூர்,
ஏறுகொண்டு உகந்தார், இளங்கோயிலே.

5.025   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நாறு கொன்றையும் நாகமும் திங்களும்
ஆறும் செஞ்சடை வைத்த அழகனார்,
காறு கண்டத்தர், கையது ஓர் சூலத்தர்,
பாறின் ஓட்டினர்-பாசூர் அடிகளே.

5.070   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நாறு சாந்து அணி நல்முலை, மென்மொழி,
மாறு இலா மலைமங்கை ஓர்பாகமாக்
கூறனார் உறை கொண்டீச்சுரம் நினைந்து
ஊறுவார் தமக்கு ஊனம் ஒன்று இல்லையே.

6.078   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நாறு பூங்கொன்றை முடியார் தாமே; நால்மறையோடு ஆறு அங்கம் சொன்னார் தாமே;
மாறு இலா மேனி உடையார் தாமே; மா மதியம் செஞ்சடைமேல் வைத்தார் தாமே;
பாறினார் வெண்தலையில் உண்டார் தாமே; பழனை பதியா உடையார் தாமே;
தேறினார் சித்தத்து இருந்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.

7.087   7 st/nd Thirumurai   Song # 2   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
நாறு செங்கழு நீர்மலர் நல்ல மல்லிகை சண்பகத்தொடு,
சேறு செய் கழனிப் பழனத் திருப் பனையூர்,
நீறு பூசி, நெய் ஆடி, தம்மை நினைப்பவர் தம் மனத்தர் ஆகி நின்று,
ஆறு சூட வல்லார் அவரே அழகியரே.

11.037   11 st/nd Thirumurai   Song # 18   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
நாற்றத்தால் எண்டிசையும் வந்து நலம் சிறப்ப
ஊற்று மடுத்த உயர்பலவும் மாற்றமரு

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000