சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:         (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் நாலு
நாலும்     நாலுங்     நாலுள்நல்ஈ     நாலு    
1.006   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நாலும் குலைக் கமுகு ஓங்கு காழி ஞானசம்பந்தன், நலம் திகழும்
மாலின் மதி தவழ் மாடம் ஓங்கு மருகலில் மற்று அதன்மேல் மொழிந்த,
சேலும் கயலும் திளைத்த கண்ணார் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
சூலம் வல்லான் கழல் ஏத்து, பாடல் சொல்ல வல்லார் வினை இல்லை ஆமே.

4.018   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நாலு கொல் ஆம் அவர்தம் முகம் ஆவன;
நாலு கொல் ஆம் சனனம் முதல்- தோற்றமும்;
நாலு கொல் ஆம் அவர் ஊர்தியின் பாதங்கள்
நாலு கொல் ஆம் மறை பாடினதாமே.

5.072   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நாலு வேதியர்க்கு இன் அருள் நன்நிழல்
ஆலன்; ஆல நஞ்சு உண்டு கண்டத்து அமர்
நீலன் -நீலக்குடி உறை நின்மலன்;
காலனார் உயிர் போக்கிய காலனே.

10.314   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
நாலுங் கடந்தது நால்வரும் நால்ஐந்தும்
பாலங் கடந்தது பத்துப் பதினைந்து
கோலங் கடந்த குணத்தாண்டு மூவிரண்
டாலங் கடந்ததொன் றாரறி வாரே. 

10.701   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும்
கோலின்மேல் நின்ற குறிகள் பதினாறும்
மூலங்கண் டாங்கே முடிந்த முதல்இரண்டும்
காலங்கண் டான்அடி காணலும் ஆமே.

10.704   10 st/nd Thirumurai   Song # 13   திருமூலர்   திருமந்திரம்  
நாலுள்நல்ஈ சானம் நடுவுச்சி தானாகும்
தாணுவின் றன்முகந் தற்புரு டம்மாகும்
காணும்அ கோரம் இருதயம் குய்யமாம்
மாணுறு வாமம் ஆம் சத்திநற் பாதமே.

12.230   12 st/nd Thirumurai   Song # 10   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
நாலு கரணங் களும்ஒன்றாய்
நல்ல அறிவு மேற்கொண்டு
காலும் பிரம நாடிவழிக்
கருத்துச் செலுத்தக் கபாலநடு
ஏல வேமுன் பயின்றநெறி
எடுத்த மறைமூ லந்திறப்ப
மூல முதல்வர் திருப்பாதம்
அடைவார் கயிலை முன்னடைந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1058   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நாலு தந்தமும் என்புறக்
கவர்ந்துநஞ் சுகுத்து
மேலெ ழும்பணம் விரித்துநின்
றாடிவே றடங்க
நீல வல்விடந் தொடர்ந்தெழ
நேரிழை மென்பூ
மாலை தீயிடைப் பட்டது
போன்றுள மயங்கி.
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000