சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பணிந்த
பணிந்தவர்     பணிந்தெண்     பணிந்துநின்     பணிந்தும்     பணிந்தெழுந்து     பணிந்தெ     பணிந்து     பணிந்தாரன     பணிந்த    
1.120   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பணிந்தவர் அருவினை பற்று அறுத்து அருள்செயத்
துணிந்தவன், தோலொடு நூல் துதை மார்பினில்
பிணிந்தவன், அரவொடு பேர் எழில் ஆமை கொண்டு
அணிந்தவன், வள நகர் அம் தண் ஐயாறே.

4.001   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பணிந்தாரன பாவங்கள் பாற்ற வல்லீர்!
படு வெண் தலையில் பலி கொண்டு உழல்வீர்
துணிந்தே உமக்கு ஆட்செய்து வாழல் உற்றால்,
சுடுகின்றதுசூலை தவிர்த்து அருளீர்
பிணிந்தார் பொடி கொண்டு மெய் பூச வல்லீர்!
பெற்றம் ஏற்று உகந்தீர்! சுற்றும் வெண் தலை  கொண்டு
அணிந்தீர்! அடிகேள்! அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!

7.088   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பணிந்த பார்த்தன், பகீரதன், பல பத்தர் சித்தர்க்குப் பண்டு நல்கினீர்!
திணிந்த மாடம்தொறும் செல்வம் மல்கு திரு மிழலை,
தணிந்த அந்தணர் சந்தி நாள்தொறும் அந்தி வான் இடு பூச்சிறப்பு அவை
அணிந்து, வீழி கொண்டீர்!-அடியேற்கும் அருளுதிரே!

10.311   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
பணிந்தெண் திசையும் பரமனை நாடித்
துணிந்தெண் திசையும் தொழுதெம் பிரானை
அணிந்தெண் திசையினும் அட்டமா சித்தி
தணிந்தெண் திசைசென்று தாபித்த வாறே. 

10.927   10 st/nd Thirumurai   Song # 15   திருமூலர்   திருமந்திரம்  
பணிந்துநின் றேன்பர மாதி பதியைத்
துணிந்துநின் றேன்இனி மற்றொன்றும் வேண்டன்
அணிந்துநின் றேன்உடல் ஆதிப் பிரானைத்
தணிந்துநின் றேன்சிவன் தன்மைகண் டேனே.

11.004   11 st/nd Thirumurai   Song # 79   காரைக்கால் அம்மையார்    அற்புதத் திருவந்தாதி  
பணிந்தும் படர்சடையான் பாதங்கள் போதால்
அணிந்தும் அணிந்தவரை ஏத்தத் - துணிந்தென்றும்
எந்தையார்க் காட்செய்யப் பெற்ற இதுகொலோ
சிந்தையார்க் குள்ள செருக்கு.

12.100   12 st/nd Thirumurai   Song # 140   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
பணிந்தெழுந்து தனிமுதலாம்  
பரனென்று பன்முறையால்
துணிந்தமறை மொழியாலே
துதிசெய்து சுடர்த்திங்கள்
அணிந்தசடை முடிக்கற்றை  
அங்கணரை விடைகொண்டு
தணிந்தமனத் திருமுனிவர்
தபோவனத்தி னிடைச்சார்ந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 428   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பணிந்தெ ழுந்துகை தொழுதுமுன்
பனிமலர்ப் பீடத்
தணைந்த ஆடகக் கிழிதலைக்
கொண்டரு மறைகள்
துணிந்த வான்பொருள் தரும்பொருள்
தூயவாய் மையினால்
தணிந்த சிந்தைஅத் தந்தையார்க்
களித்துரை செய்வார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 511   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பணிந்து வீழ்ந்தனர் பதைத்தனர்
பரவிய புளகம்
அணிந்த மேனியோ டாடினர்
பாடினர் அறிவில்
துணிந்த மெய்ப்பொரு ளானவர்
தமைக்கண்டு துதிப்பார்
தணிந்த சிந்தையின் விரைந்தெழு
வேட்கையில் தாழ்ந்தார்.
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000