சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பரவி
பரவித்     பரவினர்     பரவியகா     பரவி     பரவிவரும்     பரவியப்     பரவியே     பரவின     பரவிப்    
2.050   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பரவி வானவர் தானவர் பலரும் கலங்கிட வந்த கார்விடம்,
வெருவ, உண்டு உகந்த அருள் என்கொல்? விண்ணவனே!
கரவு இல் மா மணி பொன் கொழித்து, இழி சந்து கார்
அகில் தந்து, பம்பை நீர்
அருவி வந்து அலைக்கும் ஆமாத்தூர் அம்மானே!

3.093   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பரவின அடியவர் படு துயர் கெடுப்பவர், பரிவு இலார் பால்
கரவினர், கனல் அன உருவினர், படுதலைப் பலிகொடு ஏகும்
இரவினர், பகல் எரிகான் இடை ஆடிய வேடர், பூணும்
அரவினர், அரிவையோடு இருப்பு இடம் அம்பர்மாகாளம் தானே.

5.008   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பரவி நாளும் பணிந்தவர்தம் வினை
துரவை ஆகத் துடைப்பவர்தம் இடம்,
குரவம் நாறும் குழல் உமை கூறராய்
அரவம் ஆட்டுவர்போல், அன்னியூரரே.

6.042   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பரவிப் பலபலவும் தேடி, ஓடி, பாழ் ஆம் குரம்பை   இடைக் கிடந்து, வாளா
குரவி, குடிவாழ்க்கை வாழ எண்ணி, குலைகை தவிர், நெஞ்சே! கூறக் கேள், நீ;
இரவிக்குலம் முதலா வானோர் கூடி எண் இறந்த கோடி அமரர் ஆயம்
நிரவிக்க(அ)அரியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.

11.029   11 st/nd Thirumurai   Song # 49   பட்டினத்துப் பிள்ளையார்   திருஏகம்பமுடையார் திருவந்தாதி  
பரவித் தனைநினை யக்கச்சி
ஏகம்பர் பண்ணும்மையல்
வரவித் தனைஉள்ள எங்கறிந்
தேன்முன் அவர்மகனார்
புரவித் தனையடிக் கக்கொடி
தாய்விடி யாவிரவில்
அரவித் தனையுங்கொண் டார்மட
வார்முன்றில் ஆட்டிடவே.

12.000   12 st/nd Thirumurai   Song # 266   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
பரவினர் காப்புப் போற்றிப்
பயில்பெருஞ் சுற்றந் திங்கள்
விரவிய பருவந் தோறும்
விழாவணி யெடுப்ப மிக்கோர்
வரமலர் மங்கை யிங்கு
வந்தன ளென்று சிந்தை
தரவரு மகிழ்ச்சி பொங்கத்
தளர்நடைப் பருவஞ் சேர்ந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 465   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பரவியகா தலிற்பணிந்து பாலறா
வாயர்புறத் தணைந்து பண்பு
விரவியநண் புடையடிகள் விருப்புறுகா
தலில்தங்கி மேவும் நாளில்
அரவணிந்தார் பதிபிறவும் பணியஎழும்
ஆதரவா லணைந்து செல்வார்
உரவுமனக் கருத்தொன்றாம் உள்ளம்உடை
யவர்க்குவிடை உவந்து நல்கி.
12.280   12 st/nd Thirumurai   Song # 535   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பரவி ஏத்திஅங் கரிதினிற்
போந்துபார் பரவுசீர் அரசோடு
விரவு நண்புடைக் குங்குலி
யப்பெருங் கலயர் தம் மனைமேவிக்
கரையில் காதல்மற் றவர்அமைத்
தருளிய விருந்தினி தமர்ந்தங்குச்
சிரபு ரத்தவர் திருமயா
னமும்பணிந் திருந்தனர் சிறப்பெய்தி.
12.280   12 st/nd Thirumurai   Song # 966   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பரவி ஏத்திய திருப்பதி
கத்திசை பாடினார் பணிந்தங்கு
விரவும் அன்பொடு மகிழ்ந்தினி
துறைபவர் விமலரை வணங்கிப்போய்
அரவ நீர்ச்சடை அங்கணர்
தாம்மகிழ்ந் துறைதிரு வாமாத்தூர்
சிரபு ரத்துவந் தருளிய
திருமறைச் சிறுவர்சென் றணைவுற்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1124   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பரவிவரும் ஆனந்தம்
நிறைந்ததுளி கண்பனிப்ப
விரவுமயிர்ப் புளகங்கள்
மிசைவிளங்கப் புறத்தணைவுற்
றரவநெடுந் திரைவேலை
அணிவான்மி யூர்அதனுள்
சிரபுரத்துப் புரவலனார்
சிலநாள்அங் கினிதமர்ந்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 85   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பரவியப் பதிகத் திருக்கடைக் காப்புச்
சாத்திமுன் பணிந்தருள் பெற்றுக்
கரவிலன் பர்கள்தங் கூட்டமுந் தொழுது
கலந்தினி திருந்துபோந் தருளி
விரவிய ஈங்கோய் மலைமுத லாக
விமலர்தம் பதிபல வணங்கிக்
குரவலர் சோலை யணிதிருப் பாண்டிக்
கொடுமுடி யணைந்தனர் கொங்கில்.
12.290   12 st/nd Thirumurai   Song # 298   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பரவியே பணிந்தவர்க்குப்
பரமர் திரு வருள்புரிவார்
விரவியஇப் பிணியடையத்
தவிர்ப்பதற்கு வேறாக
வரமலர்வண் டறைதீர்த்த
வடகுளத்துக் குளிஎன்னக்
கரவில்திருத் தொண்டர்தாங்
கைதொழுது புறப்பட்டார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 124   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
பரவியே பரவையார்
பரிவுடனே பணிந்தேத்தி
விரவியபோ னகங்கறிகள்
விதம்பலவா கச்சமைத்துப்
பரிகலமும் பாவாடை
பகல்விளக்கும் உடனமைத்துத்
திருவமுது செய்வித்தார்
திருந்தியதேன் மொழியினார்.
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000