சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பல்
பல்     பல்-நீர்மை     பல்மலர்     பல்லூழி     பல்லுயிர்     பல்லவை     பல்சனமும்     பல்வேறு     பல்லவனும்     பல்பதியும்     பல்வகைத்     பல்பெருநற்     பல்கு     பல்லிய     பல்பதிகள்     பல்மலர்கள்     பல்-நலம்     பல்லாரும்     பல்பல்     பல்லார்     பல்லில    
1.047   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பல் அடைந்த வெண் தலையில் பலி கொள்வது அன்றியும், போய்,
வில் அடைந்த புருவ நல்லாள் மேனியில் வைத்தல் என்னே
சொல் அடைந்த தொல் மறையோடு அங்கம் கலைகள் எல்லாம்
செல் அடைந்த செல்வர் வாழும் சிரபுரம் மேயவனே?

1.051   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பல் இல் ஓடு கையில் ஏந்தி, பல்கடையும் பலி தேர்ந்து,
அல்லல் வாழ்க்கை மேலது ஆன ஆதரவு என்னை கொல் ஆம்?
வில்லை வென்ற நுண் புருவ வேல் நெடுங்கண்ணியொடும்
தொல்லை ஊழி ஆகி நின்றாய்! சோபுரம் மேயவனே!

1.059   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பல்-நீர்மை குன்றி, செவி கேட்பு இலா, படர் நோக்கின் கண் பவளநிற
நன்நீர்மை குன்றி, திரைதோலொடு நரை தோன்றும் காலம் நமக்கு ஆதல் முன்,
பொன் நீர்மை துன்றப் புறம் தோன்றும் நல் புனல் பொதிந்த புன்சடையினான்உறையும்
தொல்-நீர்க் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே!

1.059   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பல் வீழ்ந்து, நாத் தளர்ந்து, மெய்யில் வாடி, பழிப்பு ஆய வாழ்க்கை ஒழியத் தவம்
இல் சூழ் இடம் கருதி நின்றீர் எல்லாம் இறையே பிரியாது எழுந்து போதும்!
கல் சூழ் அரக்கன் கதறச் செய்தான், காதலியும் தானும் கருதி வாழும்,
தொல்சீர்க் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே!

1.101   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பல் இயல் பாணிப் பாரிடம் ஏத்த, படுகானில்
எல்லி நடம் செய் ஈசன் எம்மான் தன் இடம் என்பர்
கொல்லையின் முல்லை, மல்லிகை, மௌவல், கொடி பின்னி,
கல் இயல் இஞ்சி மஞ்சு அமர் கண்ணார்கோயிலே.

1.108   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பல்மலர் வைகு பொழில் புடை சூழ்ந்த பாதாளைச் சேர,
பொன் இயல் மாடம் மல்கு புகலி நகர் மன்னன்-
தன் ஒளி மிக்கு உயர்ந்த தமிழ் ஞானசம்பந்தன்-சொன்ன
இன் இசைபத்தும் வல்லார் எழில் வானத்து இருப்பாரே.

2.063   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பல் ஆர் தலை சேர் மாலை சூடி, பாம்பும் பூண்டு
எல்லா இடமும் வெண் நீறு அணிந்து, ஓர் ஏறு ஏறி,
கல் ஆர் மங்கை பங்கரேனும், காணுங்கால்,
பொல்லார் அல்லர்; அழகியர் புத்தூர்ப் புனிதரே.
2.075   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பல் அயங்கு தலை ஏந்தினான், படுகான் இடை
மல் அயங்கு திரள் தோள்கள் ஆர நடம் ஆடியும்
கல் அயங்கு திரை சூழ நீள் கலிக் காழியுள
தொல் அயங்கு புகழ் பேண நின்ற சுடர் வண்ணனே.

2.079   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பல் இதழ் மாதவி அல்லி வண்டு யாழ் செயும் காழி ஊரன்
நல்லவே நல்லவே சொல்லிய ஞானசம்பந்தன் ஆரூர்
எல்லி அம்போது எரி ஆடும் எம் ஈசனை ஏத்து பாடல்
சொல்லவே வல்லவர், தீது இலார், ஓத நீர் வையகத்தே.

2.091   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பல் இல் ஓடு கை ஏந்திப் பாடியும் ஆடியும் பலி தேர்
அல்லல் வாழ்க்கையரேனும், அழகியது அறிவர்; எம்
அடிகள்
புல்லம் ஏறுவர்; பூதம் புடை செல உழிதர்வர்க்கு இடம்
ஆம்
மல்கு வெண் திரை ஓதம் மா மறைக்காடு அதுதானே.

3.045   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பல் இல் ஓடு கை ஏந்திப் பலி திரிந்து
எல்லி வந்து, இடுகாட்டு எரி ஆடுவான்-
செல்வம் மல்கிய தென்திரு ஆரூரான்;
அல்லல் தீர்த்து, எனை, அஞ்சல்! எனும்கொலோ?

3.065   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பல்மலர்கள் கொண்டு அடிக்கீழ் வானோர்கள் பணிந்து இறைஞ்ச,
நன்மை இலா வல் அவுணர் நகர் மூன்றும், ஒரு நொடியில்,
வில் மலையில் நாண் கொளுவி, வெங்கணையால் எய்து அழித்த
நின்மலனார் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே.

3.083   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பல் வளரும் நாகம் அரை யாத்து, வரைமங்கை ஒருபாகம்
மல் வளர் புயத்தில் அணைவித்து, மகிழும் பரமன் இடம் ஆம்
சொல் வளர் இசைக்கிளவி பாடி மடவார் நடம் அது ஆட,
செல்வ மறையோர்கள் முறை ஏத்த, வளரும் திரு நலூரே.

3.112   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பல் இல் ஓட்டினர், பலி கொண்டு உண்பவர், பட்டினத்து
பல்லவனீச்சுரத்து
எல்லி ஆட்டு உகந்தார், இவர் தன்மை அறிவார் ஆர்?

3.120   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பல்-நலம் புணரும் பாண்டிமாதேவி, குலச்சிறை, எனும் இவர் பணியும்
அந் நலம் பெறு சீர் ஆலவாய் ஈசன் திருவடி ஆங்கு அவை போற்றி,
கன்னல் அம் பெரிய காழியுள் ஞானசம்பந்தன் செந்தமிழ் இவை கொண்டு
இன்நலம் பாட வல்லவர், இமையோர் ஏத்த, வீற்றிருப்பவர், இனிதே.

4.039   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பல் உரைச் சமணரோடே பலபல காலம் எல்லாம்
சொல்லிய சொலவு செய்தேன்; சோர்வன், நான் நினைந்தபோது;
மல்லிகை மலரும் சோலைத் திரு ஐயாறு அமர்ந்த தேனை!
எல்லியும் பகலும் எல்லாம் நினைந்த போது இனியஆறே!

5.005   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பல் இல் ஓடு கை ஏந்திப் பல இலம்
ஒல்லை சென்று உணங்கல் கவர்வார் அவர்,
அல்லல் தீர்க்கும், அண்ணாமலை கைதொழ
நல்லஆயின நம்மை அடையுமே.

5.025   5 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பல் இல் ஓடு கை ஏந்திப் பகல் எலாம்
எல்லி நின்று இடு பெய் பலி ஏற்பவர்,-
சொல்லிப் போய்ப் புகும் ஊர் அறியேன்; சொல்லீர்!
பல்கும் நீற்றினர்-பாசூர் அடிகளே.

5.053   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பல்லாரும் பலதேவர் பணிபவர்,
நல்லாரும் நயந்து ஏத்தப்படுபவன்,
வில்லால் மூஎயில் எய்தவன், வீரட்டம்
கல்லேன் ஆகில், என் கண் துயில் கொள்ளுமே?

5.097   5 st/nd Thirumurai   Song # 23   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பல்பல் காலம் பயிற்றி, பரமனைச்
சொல் பல்-காலம் நின்று, ஏத்துமின்! தொல்வினை
வெற்பில்-தோன்றிய வெங்கதிர் கண்ட அப்
புல்பனி(க்) கெடும் ஆறு அது போலுமே.

6.013   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பல் மலிந்த வெண் தலை கையில் ஏந்தி,-பனி முகில் போல் மேனிப் பவந்த நாதர்-
நெல் மலிந்த நெய்த்தானம், சோற்றுத்துறை, நியமம், துருத்தியும், நீடூர், பாச்சில்,
கல் மலிந்து ஓங்கு கழுநீர்க்குன்றம், கடல் நாகைக்காரோணம், கைவிட்டு, இந் நாள்
பொன் மலிந்த கோதையரும் தாமும் எல்லாம் புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே!

6.047   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பல் ஆர்ந்த வெண்தலை கையில் ஏந்தி, பசு ஏறி, ஊர் ஊரன் பலி கொள்வானே!
கல் ஆர்ந்த மலைமகளும் நீயும் எல்லாம் கரிகாட்டில் ஆட்டு உகந்தீர்; கருதீர் ஆகில்,
எல்லாரும் என் தன்னை இகழ்வர் போலும்; ஏழை அமண்குண்டர், சாக்கியர்கள், ஒன்றுக்கு
அல்லாதார் திறத்து ஒழிந்தேன்; அஞ்சேல்! என்னாய்   ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.

6.058   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பல்லார் பயில் பழனப் பாசூர் என்று, பழனம் பதி பழைமை சொல்லி நின்றார்;
நல்லார் நனி பள்ளி இன்று வைகி, நாளைப் போய், நள்ளாறு சேர்தும் என்றார்;
சொல்லார், ஒரு இடமா; தோள் கை வீசி, சுந்தரராய், வெந்த நீறு ஆடி, எங்கும்
மல் ஆர் வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.

6.089   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பல் ஆர் தலை ஓட்டில் ஊணார் போலும்; பத்தர்கள் தம் சித்தத்து இருந்தார் போலும்;
கல்லாதார் காட்சிக்கு அரியார் போலும்; கற்றவர்கள் ஏதம் களைவார் போலும்;
பொல்லாத பூதப்படையார் போலும்; பொருகடலும் ஏழ்மலையும் தாமே போலும்;
எல்லாரும் ஏத்தத் தகுவார் போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே.

6.092   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பல் ஆடுதலை சடை மேல் உடையான் தன்னை, பாய் புலித்தோல் உடையானை, பகவன் தன்னை,
சொல்லோடு பொருள் அனைத்தும் ஆனான் தன்னை, சுடர் உருவில் என்பு அறாக் கோலத்தானை,
அல்லாத காலனை முன் அடர்த்தான் தன்னை,   ஆலின் கீழ் இருந்தானை, அமுது ஆனானை,
கல் ஆடை புனைந்து அருளும் காபாலி(ய்)யை,   கற்பகத்தை, கண் ஆரக் கண்டேன், நானே.

7.022   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பல் உயிர் வாழும் தெண் நீர்ப் பழமண்ணிப் படிக் கரையை
அல்லி அம் தாமரைத்தார் ஆரூரன் உரைத்த தமிழ்
சொல்லுதல் கேட்டல் வல்லார் அவர்க்கும், தமர்க்கும், கிளைக்கும்,
எல்லியும் நன்பகலும்(ம்) இடர் கூருதல் இல்லை அன்றே! .

7.067   7 st/nd Thirumurai   Song # 2   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பல் அடியார் பணிக்குப் பரிவானை, பாடி ஆடும் பத்தர்க்கு அன்பு உடையானை,
செல் அடியே நெருக்கித் திறம்பாது சேர்ந்தவர்க்கே சித்தி முத்தி செய்வானை,
நல் அடியார் மனத்து எய்ப்பினில் வைப்பை, நான் உறு குறை அறிந்து அருள் புரிவானை,
வல் அடியார் மனத்து இச்சை உளானை, வலி வலம் தனில் வந்து கண்டேனே.

7.081   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பல் இல் வெள்ளைத் தலையன் தான் பயிலும்(ம்) இடம்,
கல்லில் வெள்ளை அருவித் தண் கழக்குன்றினை,
மல்லின் மல்கு திரள்தோள் ஊர வனப்பினால்
சொல்லல் சொல்லித் தொழுவாரைத் தொழுமின்களே!

8.113   8 st/nd Thirumurai   Song # 9   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பல் நாள் பரவிப் பணி செய்ய, பாத மலர்
என் ஆகம் துன்னவைத்த பெரியோன், எழில் சுடர் ஆய்,
கல் நார் உரித்து, என்னை ஆண்டுகொண்டான்; கழல் இணைகள்
பொன் ஆனவா பாடி பூவல்லி கொய்யாமோ!

8.205   8 st/nd Thirumurai   Song # 1   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
பல்லில னாகப் பகலைவென்
   றோன்தில்லை பாடலர்போல்
எல்லிலன் நாகத்தொ டேனம்
   வினாவிவன் யாவன்கொலாம்
வில்லிலன் நாகத் தழைகையில்
   வேட்டைகொண் டாட்டமெய்யோர்
சொல்லில னாகற்ற வாகட
   வானிச் சுனைப்புனமே.

10.831   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
பல்லூழி பண்பிற் பகலோன் இறையவன்
நல்லூழி ஐந்தினுள் ளேநின்ற ஊழிகள்
செல்லூழி அண்டத்துச் சென்றவண் ஊழியுள்
அவ்வூழி உச்சியுள் ஒன்றின் பகவனே.

11.006   11 st/nd Thirumurai   Song # 36   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
பல்லுயிர் பாகம் உடல் தலை
தோல்பக லோன்மறல்பெண்
வில்லியோர் வேதியன் வேழம்
நிரையே பறித்துதைத்துப்
புல்லியுஞ் சுட்டும் அறுத்தும்
உரித்துங்கொண் டான்புகழே
சொல்லியும் பாடியும் ஏத்தக்
கெடும்நங்கள் சூழ்துயரே.

11.033   11 st/nd Thirumurai   Song # 58   நம்பியாண்டார் நம்பி   திருத்தொண்டர் திருவந்தாதி  
பல்லவை செங்கதி ரோனைப்
பறித்தவன் பாதம்புகழ்
சொல்லவன் தென்புக லூரரன்
பால்துய்ய செம்பொன்கொள்ள
வல்லவன் நாட்டியத் தான்குடி
மாணிக்க வண்ணனுக்கு
நல்லவன் தன்பதி நாவலூ
ராகின்ற நன்னகரே.

11.037   11 st/nd Thirumurai   Song # 114   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
பல்சனமும் மாவும் படையும் புடைகிளர
ஒல்லொலியால் ஓங்கு கடல் கிளர மல்லற்

12.100   12 st/nd Thirumurai   Song # 64   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
பல்வேறு வாளிபுதை பார்த்துடன் போத ஏவி
வில்வேட ராயத் துடிமேவி ஒலிக்கு முன்றில்
சொல்வேறு வாழ்த்துத் திசைதோறுந் துதைந்து விம்ம
வல்லேறு போல்வார் அடல்வாளி தெரிந்து நின்றார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 95   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
பல்லவனும் அதுகேட்டுப்
பாங்கிருந்த பாயுடுக்கை
வல்அமணர் தமைநோக்கி
மற்றவனைச் செய்வதினிச்
சொல்லுமென அறந்துறந்து
தமக்குறுதி அறியாத
புல்லறிவோர் அஞ்சாது
நீற்றறையில் இடப்புகன்றார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 343   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
பல்பதியும் நெடுங்கிரியும்
படர்வனமுஞ் சென்றடைவார்
செல்கதிமுன் அளிப்பவர்தந்
திருக்காரிக் கரைபணிந்து
தொல்கலையின் பெருவேந்தர்
தொண்டர்கள்பின் உம்பர்குழாம்
மல்குதிருக் காளத்தி
மாமலைவந் தெய்தினார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 390   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
பல்வகைத் தாண்டகத் தோடும்
பரவுந் தனித்தாண் டகமும்
அல்லல் அறுப்பவர் தானத்
தடைவு திருத்தாண் டகமும்
செல்கதி காட்டிடப் போற்றுந்
திருஅங்க மாலையும் உள்ளிட்
டெல்லையில் பன்மைத் தொகையும்
இயம்பினர் ஏத்தி இருந்தார்.
12.240   12 st/nd Thirumurai   Song # 4   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
பல்பெருநற் கிளைஉவப்பப்
பயில்பருவச் சிறப்பெல்லாம்
செல்வமிகு தந்தையார்
திருப்பெருகுஞ் செயல்புரிய
மல்குபெரும் பாராட்டின்
வளர்கின்றார் விடையவர்பால்
அல்கியஅன் புடன்அழகின்
கொழுந்தெழுவ தெனவளர்வார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 147   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பல்கு தொண்டர்தங் குழாத்தொடும்
உடன்வரும் பயில்மறை யவர்சூழச்
செல்க திப்பயன் காண்பவர்
போல்களி சிந்தைகூர் தரக்கண்டு
மல்கு தேவரே முதலனைத்
துயிர்களும் வணங்கவேண் டினவெல்லாம்
நல்கு தில்லைசூழ் திருவெல்லை
பணிந்தனர் ஞானஆ ரமுதுண்டார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 219   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பல்கு வெண்கதிர்ப் பத்திசேர்
நித்திலச் சிவிகைப்
புல்கு நீற்றொளி யுடன்பொலி
புகலிகா வலனார்
அல்கு வெள்வளை அலைத்தெழு
மணிநிரைத் தரங்கம்
மல்கு பாற்கடல் வளர்மதி
உதித்தென வந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 743   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பல்லிய நாதம் பொங்கப்
படர்திரு நீற்றின் சோதி
நல்லொளி வட்ட மாகி
நண்ணிமேல் வருவ தென்ன
வில்வளர் தரளக் கோவை
வெண்குடை நிழற்றி வெவ்வே
றெல்லையில் முத்தின் காளம்
தாரைசங் கெங்கும் ஊத.
12.280   12 st/nd Thirumurai   Song # 1146   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பல்பதிகள் கடந்தருளிப்
பன்னிரண்டு பெயர்படைத்த
தொல்லைவளப் பூந்தராய்
தூரத்தே தோன்றுதலும்
மல்குதிரு மணிமுத்தின்
சிவிகையிழிந் தெதிர்வணங்கிச்
செல்வமிகு பதியதன்மேல்
திருப்பதிகம் அருள் செய்வார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list