சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பாடி
பாடிய     பாடி     பாடியஅப்     பாடினார்     பாடிமிகப்     பாடியவர்     பாடினை,     பாடினார்,     பாடினர்,     பாடிச்     பாடிப்     பாடிற்றிலேன்;     பாடி,    
2.109   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாடி ஆடும் மெய்ப் பத்தர்கட்கு அருள் செயும் முத்தினை,
பவளத்தை,
தேடி மால் அயன் காண ஒண்ணாத அத் திருவினை,
தெரிவைமார்
கூடி ஆடவர் கைதொழு கோட்டூர் நற்கொழுந்தே! என்று
எழுவார்கள்
நீடு செல்வத்தர் ஆகி, இவ் உலகினில் நிகழ்தரு புகழாரே.

3.003   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாடினை, அருமறை வரல்முறையால்;
ஆடினை, காண முன் அருவனத்தில்;
சாடினை, காலனை; தயங்கு ஒளி சேர்
நீடு வெண்பிறை முடி நின்மலனே!
நினையே அடியார் தொழ, நெடுமதில் புகலி(ந்)நகர்-
தனையே இடம் மேவினை; தவநெறி அருள், எமக்கே!

3.027   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாடினார், அருமறை; பனிமதி சடைமிசைச்
சூடினார், படுதலை துன் எருக்கு அதனொடும்;
நாடினார், இடு பலி; நண்ணி ஓர் காலனைச்
சாடினார்; வள நகர் சக்கரப்பள்ளியே.

3.086   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாடினர், அருமறை முறைமுறை; பொருள் என அரு நடம்-
ஆடினர்; உலகு இடை அலர்கொடும் அடியவர் துதிசெய,
வாடின படுதலை இடு பலி அதுகொடு மகிழ்தரும்
சேடர் தம் வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே.

4.025   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பாடினார், மறைகள் நான்கும்; பாய் இருள், புகுந்து என் உள்ளம்
கூடினார்; கூடல் ஆலவாயிலார்; நல்ல கொன்றை
சூடினார்; சூடல் மேவிச் சூழ் சுடர் சுடலை வெண் நீறு-
ஆடினார்; ஆடல் மேவி;-அதிகைவீரட்டனாரே.

5.005   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பாடிச் சென்று பலிக்கு என்று நின்றவர்
ஓடிப் போயினர்; செய்வது ஒன்று என்கொலோ?
ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ
ஓடிப் போகும், நம் மேலை வினைகளே.

5.050   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பாடிப் பெற்ற பரிசில் பழங் காசு
வாடி வாட்டம் தவிர்ப்பார் அவரைப் போல்-
தேடிக்கொண்டு, திரு வாய்மூர்க்கே எனா,
ஓடிப் போந்து, இங்கு ஒளித்தஆறு என்கொலோ?

7.098   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பாடிய நால்மறையான்; படு பல் பிணக்காடு அரங்கா
ஆடிய மா நடத்தான் அடி போற்றி! என்று அன்பினராய்ச்
சூடிய செங்கையினார் பலதோத்திரம் வாய்த்த சொல்லி
நாடிய-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.

8.106   8 st/nd Thirumurai   Song # 45   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பாடிற்றிலேன்; பணியேன்; மணி, நீ ஒளித்தாய்க்குப் பச்சூன்
வீடிற்றிலேனை விடுதி கண்டாய்? வியந்து, ஆங்கு அலறித்
தேடிற்றிலேன்; சிவன் எவ் இடத்தான்? எவர் கண்டனர்?' என்று
ஓடிற்றிலேன்; கிடந்து உள் உருகேன்; நின்று உழைத்தனனே.

8.128   8 st/nd Thirumurai   Song # 3   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பாடி, மால், புகழும் பாதமே அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்;
தேடி, நீ ஆண்டாய்; சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
ஊடுவது உன்னோடு; உவப்பதும் உன்னை; உணர்த்துவது, உனக்கு, எனக்கு உறுதி;
வாடினேன்; இங்கு வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள்புரியாயே.

11.006   11 st/nd Thirumurai   Song # 90   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
பாடிய வண்டுறை கொன்றையி
னான்படப் பாம்புயிர்ப்ப
ஓடிய தீயால் உருகிய
திங்களின் ஊறலொத்த
தாடிய நீறது கங்கையுந்
தெண்ணீர் யமுனையுமே
கூடிய கோப்பொத்த தாலுமை
பாகமெம் கொற்றவற்கே.

11.034   11 st/nd Thirumurai   Song # 80   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி  
பாடிய செந்தமி ழாற்பழங்
காசு பரிசில் பெற்ற
நீடிய சீர்த்திரு ஞானசம்
பந்தன் நிறைபுகழான்
நாடிய பூந்திரு நாவுக் கரசோ
டெழில்மிழலைக்
கூடிய கூட்டத்தி னாலுள
தாய்த்திக் குவலயமே.

12.280   12 st/nd Thirumurai   Song # 360   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பாடி நின்று பரவிப் பணிந்துபோய்
ஆடும் அங்கணர் கோயில்அங் குள்ளன
மாடு சென்று வணங்கி மகிழ்ந்தனர்
நீடு சண்பை நிறைபுகழ் வேதியர்.
12.280   12 st/nd Thirumurai   Song # 582   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பாடியஅப் பதிகப்பாட் டான பத்தும்
பாடல்நிரம் பியபின்னும் பைம்பொன் வாயிற்
சேடுயர்பொற் கதவுதிருக் காப்பு நீங்காச்
செய்கையினால் வாகீசர் சிந்தை நொந்து
நீடுதிருக் கடைக்காப்பில் அரிது வேண்டி
நின்றெடுக்கத் திருக்காப்பு நீக்கங் காட்ட
ஆடியசே வடியார்தம் அடியார் விண்ணோர்
ஆர்ப்பெழுந்த தகிலாண்டம் அனைத்தும் மூழ்க.
12.280   12 st/nd Thirumurai   Song # 664   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பாடிய பதிகம் பரவியே வந்து
பண்புடை யடியவ ரோடுந்
தேடுமால் அயனுக் கரியவர் மகிழ்ந்த
திருவால வாய்மருங் கணைந்து
நீடுயர் செல்வக் கோபுரம் இறைஞ்சி
நிறைபெரு விருப்புடன் புக்கு
மாடுசூழ் வலங்கொண் டுடையவர் கோயில்
மந்திரி யாருடன் புகுந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 996   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பாடினார் பணிவுற்றார்
பரிவுறுஆ னந்தக்கூத்
தாடினார் அகங்குழைந்தார்
அஞ்சலிதஞ் சென்னியின்மேல்
சூடினார் மெய்ம்முகிழ்த்தார்
சூகரமும் அன்னமுமாய்த்
தேடினார் இருவர்க்கும்
தெரிவரியார் திருமகனார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 57   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பாடி யங்கு வைகியபின்
பரமர் வீழி மிழலையினில்
நீடு மறையான் மேம்பட்ட
அந்த ணாளர் நிறைந்தீண்டி
நாடு மகிழ அவ்வளவும்
நடைக்கா வணம்பா வாடையுடன்
மாடு கதலி பூகநிரை
மல்க மணித்தோ ரணநிரைத்து.
12.290   12 st/nd Thirumurai   Song # 174   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பாடியஅப் பதியின்கண்
இனிதமர்ந்து பணிந்துபோய்
நாடியநல் லுணர்வினொடும்
திருக்கச்சூர் தனைநண்ணி
ஆடகமா மதில்புடைசூழ்
ஆலக்கோ யிலின்அமுதைக்
கூடியமெய் யன்புருகக்
கும்பிட்டுப் புறத்தணைந்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 205   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பாடி அறிவு பரவசமாம்
பரிவு பற்றப் புறம்போந்து
நீடு விருப்பிற் பெருங்காதல்
நிறைந்த அன்பர் பலர்போற்றத்
தேடும் அயனும் திருமாலும்
அறிதற் கரிய திருப்பாதங்
கூடுங் காலங் களில்அணைந்து
பரவிக் கும்பிட் டினிதிருந்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 289   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பாடிமிகப் பரவசமாய்ப்
பணிவார்க்குப் பாவையுடன்
நீடியகோ லங்காட்ட
நிறைந்தவிருப் புடனிறைஞ்சிச்
சூடியஅஞ் சலியினராய்த்
தொழுதுபுறம் போந்தன்பு
கூடியமெய்த் தொண்டருடன்
கும்பிட்டங் கினிதமர்வார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 171   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
பாடியவர் பரவுதலும்
பரம்பொருளாம் அவரருளால்
வேடுவர் தாம் பறித்தபொரு
ளவையெல்லாம் விண்ணெருங்க
நீடுதிரு வாயிலின்முன்
குவித்திடலும் நேரிறைஞ்சி
ஆடுமவர் திருவருளால்
அப்படியே கைக்கொண்டார்.
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000