சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பாண
பாண்டிமா     பாண     பாணி     பாண்டுவின்     பாணத்தால்     பாணிகர்    
5.016   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பாணி ஆர் படுதம் பெயர்ந்து ஆடுவர்;
தூணி ஆர் விசயற்கு அருள்செய்தவர்;
மாணியாய் மண் அளந்தவன், நான்முகன்,
பேணியார் அவர் பேரெயிலாளரே.

5.071   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பாண்டுவின் மகன் பார்த்தன் பணி செய்து,
வேண்டும் நல் வரம் கொள் விசயமங்கை
ஆண்டவன்(ன்) அடியே நினைந்து, ஆசையால்
காண்டலே கருத்து ஆகி இருப்பனே.

5.083   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பாணத்தால் மதில் மூன்றும் எரித்தவன்;
பூணத் தான் அரவு ஆமை பொறுத்தவன்;
காணத் தான் இனியான் கடல் நாகைக்கா-
ரோணத்தான் என, நம் வினை ஓயுமே.

8.215   8 st/nd Thirumurai   Song # 3   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
பாணிகர் வண்டினம் பாடப்பைம்
   பொன்றரு வெண்கிழிதஞ்
சேணிகர் காவின் வழங்கும்புன்
   னைத்துறைச் சேர்ப்பர்திங்கள்
வாணிகர் வெள்வளை கொண்டகன்
   றார்திறம் வாய்திறவாய்
பூணிகர் வாளர வன்புலி
   யூர்சுற்றும் போர்க்கடலே.

12.280   12 st/nd Thirumurai   Song # 705   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பாண்டிமா தேவியார் தமது பொற்பிற்
பயிலுநெடு மங்கலநாண் பாது காத்தும்
ஆண்தகையார் குலச்சிறையார் அன்பி னாலும்
அரசன்பால் அபராதம் உறுத லாலும்
மீண்டுசிவ நெறியடையும் விதியினாலும்
வெண்ணீறு வெப்பகலப் புகலி வேந்தர்
தீண்டியிடப் பேறுடைய னாத லாலும்
தீப்பிணியைப் பையவே செல்க என்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 717   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பாண்டிமா தேவி யாரும்
பயமெய்தி அமைச்சர் பாரம்
பூண்டவர் தம்மை நோக்கிப்
புகலியில் வந்து நம்மை
ஆண்டுகொண் டவர்பாற் கங்குல்
அமணர்தாம் செய்த தீங்கு
மூண்டவா றினைய தாகி
முடிந்ததோ என்று கூற.
12.280   12 st/nd Thirumurai   Song # 727   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பாண்டிமா தேவி யாரும்
பரிவுடை அமைச்ச னாரும்
ஈண்டுவந் தணைந்தா ரென்று
விண்ணப்பஞ் செய்யச் சண்பை
ஆண்டகை யாரும் ஈண்ட
அழையுமென் றருளிச் செய்ய
மீண்டுபோந் தழைக்கப் புக்கார்
விரைவுறு விருப்பின் மிக்கார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 36   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
பாண னார்பத் திரனாரும்
பைம்பொன் மௌலிச் சேரலனார்
காணக் கொடுத்த நிதியெல்லாம்
கண்டு மகிழ்வுற் றதிசயித்துப்
பேண எனக்கு வேண்டுவன
அடியேன் கொள்ளப் பிஞ்ஞகனார்
ஆணை யரசும் அரசுறுப்பும்
கைக்கொண் டருளும் எனஇறைஞ்ச.
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000