| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter:
( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பாதி
பாதி
பாதியில்
பாதித்
3.115
3 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பாதி ஆய் உடன் கொண்டது மாலையே; பம்பு தார் மலர்க்
கொன்றை நல்மாலையே;
கோது இல் நீறு அது பூசிடும் ஆகனே; கொண்ட நன்
கையில் மான் இடம் ஆகனே;
நாதன் நாள்தொறும் ஆடுவது ஆன் ஐயே; நாடி அன்று
உரிசெய்ததும் ஆனையே;
வேத நூல் பயில்கின்றது வாயிலே; விகிர்தன் ஊர் திரு ஆல நல்வாயிலே.
3.119
3 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பாதி ஓர் மாதர், மாலும் ஓர்பாகர், பங்கயத்து அயனும் ஓர் பாலர்
ஆதிஆய் நடு ஆய் அந்தம் ஆய் நின்ற அடிகளார்,
அமரர்கட்கு அமரர்,
போது சேர் சென்னிப் புரூரவாப் பணி செய் பூசுரர், பூமகன் அனைய
வேதியர், வேதத்து ஒலி அறா வீழிமிழலையான் என,
வினை கெடுமே.
4.042
4 st/nd Thirumurai
Song # 7
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாதியில் உமையாள் தன்னைப் பாகமா வைத்த பண்பன்;
வேதியன் என்று சொல்லி விண்ணவர் விரும்பி ஏத்தச்
சாதி ஆம் சதுமுக(ந்)னும் சக்கரத்தானும் காணாச்
சோதியை, துருத்தியானை, தொண்டனேன் கண்டஆறே!
5.029
5 st/nd Thirumurai
Song # 3
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாதி பெண் ஒருபாகத்தன்; பல்மறை
ஓதி; என் உளம் கொண்டவன்; ஒண் பொருள்
ஆதி-ஆவடுதண்துறை மேவிய
சோதியே! சுடரே! என்று சொல்லுமே.
6.026
6 st/nd Thirumurai
Song # 1
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாதித் தன் திரு உருவில் பெண் கொண்டானை, பண்டு ஒரு கால் தசமுகனை அழுவித்தானை,
வாதித்துத் தட மலரான் சிரம் கொண்டானை,
வன் கருப்புச் சிலைக் காமன் உடல் அட்டானை,
சோதிச் சந்திரன் மேனி மறுச் செய்தானை, சுடர் அங்கித் தேவனை ஓர் கை கொண்டானை,
ஆதித்தன் பல் கொண்ட அம்மான் தன்னை, -ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே!.
6.033
6 st/nd Thirumurai
Song # 3
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாதி ஒரு பெண், முடிமேல் கங்கை யானை, பாசூரும் பரங்குன்றும் மேயான் தன்னை,
வேதியனை, தன் அடியார்க்கு எளியான் தன்னை, மெய்ஞ் ஞான விளக்கானை, விரையே நாறும்
போது இயலும் பொழில் ஆரூர் மூலட்டானம் புற்று இடம் கொண்டு இருந்தானை, போற்றுவார்கள்
ஆதியனை, அரநெறியில் அப்பன் தன்னை, அடைந்து அடையேன் அருவினை நோய் அறுத்த ஆறே!.
7.020
7 st/nd Thirumurai
Song # 3
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பாதி ஓர் பெண்ணை வைத்தாய்; படரும் சடைக் கங்கை வைத்தாய்;
மாதர் நல்லார் வருத்தம்(ம்) அது நீயும் அறிதி அன்றே!
கோது இல் பொழில் புடை சூழ் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்;
ஆதியே, அற்புதனே, அவை அட்டித்தரப் பணியே! .
12.290
12 st/nd Thirumurai
Song # 339
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
பாதி மதிவாழ் முடியாரைப்
பயில்பூ சனையின் பணிபுரிவார்
பாதி யிரவில் இங்கணைந்த
தென்னோ என்று பயமெய்திப்
பாதி உமையாள் திருவடிவிற்
பரம ராவ தறியாதே
பாதி மதிவாள் நுதலாரும்
பதைத்து வந்து கடைதிறந்தார்.
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000